Oct 13, 2014

மனிதஉரிமை கழகங்களை இழுத்து மூடுங்கள்

தமிழ்நாட்டில் மனித உரிமை கழகங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூலைக்கு மூலை பெட்டிக்கடை போல மனித உரிமை கழகங்கள் உள்ளன. ஆனால் செயலலிதா விசயத்தில் பேச்சும் காணோம்! மூச்சும் காணோம்!!
செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீரல் நடந்துள்ளது. அதை கேள்வி கேட்க எந்த அமைப்பும் இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கீழ்நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவித்தால் உடனே அவர் தண்டிக்கப்படுவது மிகப்பெரிய மனித உரிமை மீரல். ஒருவரை தண்டித்து விட்டு மேல்முறையீட்டு வாய்ப்பு தருவது எந்தவிதத்தில் நீதியாகும்?. 

மனித உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. ஒரு மாநில முதல் அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரன குடிமகனின் நிலை? 

மனித உரிமை கழகங்கள் நிதிவாங்கும் அமைப்புகளாக மட்டும் செயல்படலாமா? மனித உரிமையை கழகம் என்ற பெயரில் நிதிவாங்குவக்கி ஏப்பம் விடுவது தான் உச்சகட்ட மனிதஉரிமை மீரல். உலகை ஏமாற்றும் மனித உரிமை கழங்களை இழுத்து மூடவேண்டும். இவர்களால் யாருக்காவது துளியேனும் பயன் உள்ளதா? 

ஒருவரை குற்றவாளி என்று தண்டித்து விட்டு, பின்னர் எதற்கு மேல் முறையீடு? - இந்த கேள்விக்கு யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!

3 comments:

  1. சகோதரி, தனது ஆட்சியில் நீங்கள் குறிப்பிட்ட அரசியல்வாதி, எவ்வளவு மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஊழலை எதிர்த்து எழுதியதற்காக இரண்டு பத்திரிகை நிருபர்களைக் கொலை செய்தது.

    ஒரு பத்திரிகை அலுவலகத்தை அடித்து உடைத்தது.

    வழக்கறிஞர் ஒருவரின் கைகால்களை ரவுடிகளை வைத்து உடைத்தது.

    ஊழலுக்கு துணையாக இல்லாத காரணத்தால் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசி, அலங்கோலமாக்கியது

    ஒரு நீதிபதியை பொது இடத்தில் வைத்து மிரட்டியது

    இன்னொரு நீதிபதியை வீட்டுச் சிறை வைத்து, கொலைமிரட்டல் விடுத்தது

    என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ஒருவேளை இந்த அரசியல்வாதியை பதவியைத் தொடர விட்டிருந்தால், நீதிபதியின் முகத்திலேயே ஆசிட் வீசியிருப்பார்கள்


    ReplyDelete
    Replies
    1. திரு.பெயரிலி

      தாங்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்கு எல்லாம் 1996 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டார்கள். அதற்கு பின்னர் செயலலிதாவின் பொது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வந்துவிட்டது. அதனால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் செயலலிதாவால் ஆட்சிக்கு வர முடிந்தது.

      செயலலாதா செய்த மனிதஉரிமை மீரல்கள் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது தான். ஆதே போல தான் செயலலிதாவுக்கு எதிரான மனித உரிமை மீரல்களையும் கண்டிக்க வேண்டும்.

      அன்று செய்தார் அதற்காக இன்று வேறு வழியில் பலிதீர்த்தோம் என்று நினைப்பது எவ்வளவு குரூரமான எண்ணம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

      செயலலிதா ஊழல் செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் தான். அதற்காக மனித உரிமை மீரல்களை கட்டவிழ்த்து விடக்கூடாது.

      செயலலிதாவுக்கு ஆதரவான பதிவு என்ற கோணத்தில் அல்லாமல் மனித உரிமை மீரல்களுக்கு எதிரான பதிவு என்று படித்துப்பாருங்கள். நான் குறிப்பிடும் நியாயம் புறியும்.

      நன்றி.

      Delete
  2. T-shirt with gold bands - titanium band rings
    T-shirt with gold band rings. titanium flask T-shirt with ford fusion titanium for sale gold band rings. I wear the black on หาเงินออนไลน์ black and gold band rings, and I wear schick quattro titanium it. - T-shirt with mens titanium earrings gold band

    ReplyDelete

Popular Posts