ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சூழ்நிலை கைதியானால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அரசியல் சூழ்நிலைகளுக்கு நீதிமன்றங்கள் பயப்படுமானால் நீதிமன்றம் எதற்கு? எல்லா அதிகாரங்களையும் அரசியல்வாதிகளிடமே கொடுத்து விடலாமே!
ராசீவ் கொலை வழக்கில் சூழ்நிலை காரணமாக தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நீதிபதி கே.டி தாமசு பதவி ஓய்வுக்கு பின்னர் கூறுகிறார். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குற்றத்தின் மையத்தை தான் பார்த்தோமே தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தன்மையை பார்க்கவில்லை, என்று இன்று கூறுகிறார் கே.டி.தாமசு. இன்றாவது மனசாட்சியை வெளிப்படுத்தினாரே என்று ஆறுதல் பட்டுக்கொள்ளாமல் வெறு என்ன சொல்வது?
இதே போல இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் நிச்சயமாக பதவி ஓய்வுக்கு பின்னர் மனசாட்சியை வெளிப்படுத்தலாம். தேர்தல் நேரம் அரசியல் சூழ்நிலை அதனால் இப்பட்டிப்பட்ட தீர்ப்பை வழங்க நிர்பந்திக்கப்பட்டேன் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வழக்கு விசாரனையின் போது அரசியல் அமைப்பு சாசனத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற நீதிபதி சதாசிவம், இன்று அதே தீர்ப்பை வழங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது.
தேர்தல் நேரம், பதவி ஓய்பு பெறும் இறுதி நாள், தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட புகார். இந்த நிர்பந்தம் மாண்புமிகு நீதிபதி சதாசிவம் அவர்களை சூழ்நிலை கைதியாகக்கி இருக்கிறது.
அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி தாமசு செய்த அதே தவறை இப்போதைய நீதிபதி சதாசிவம் செய்திருப்பது காலத்தின் கொடுமை.
நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. நீதித்துறையை சீர்திருந்த இன்னும் புரட்சியாளர் தேவைப்படுகிறார்கள் என்று தான் முடிக்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment