தமிழகத்தில் பல முனை போட்டி நிலவினாலும் அதிமுக திமுக பாசக கூட்டணி இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
காங்கிரசு, இடதுசாரி மற்றும் உதிரிகட்சிகள் ஓட்டை பிரிக்கும் பணியை முழு வீச்சில் செய்கின்றன. இத்தகு நிலையில் பொதுமக்களின் வாக்கு எந்த அணிக்கு அதிகம் கிடைக்கிறதோ அந்த அணியே வெற்றி அணியாகும்.
வாக்கு வங்கி அடிப்படையில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது என்றாலும் பாசக கூட்டணி வாக்கு வங்கியும் அதிமுக வாக்கு வங்கியும் ஏரத்தாள இணையாகவே உள்ளன.
அதிமுக வாக்கு வங்கி
கட்சி உறுப்பினர்கள் 7 %
கட்சி அனுதாபிகள் 10 %
ஆதரவு கட்சிகள் 2 %
மொத்தம் 19 %
திமுக வாக்கு வங்கி
கட்சி உறுப்பினர்கள் 5 %
கட்சி அனுதாபிகள் 8 %
வி.சி, + பு.த 1 %
மமக + மு.லீ 1 %
மொத்தம் 15 %
பாரதிய சனதா கூட்டணி வாக்கு வங்கி
தேமுதிக கட்சி உறுப்பினர்கள் 2 %
தேமுதிக கட்சி அனுதாபிகள் 2 %
பாமக கட்சி உறுப்பினர்கள் 2 %
பாமக கட்சி அனுதாபிகள் 2 %
மதிமுக கட்சி உறுப்பினர்கள் 1 %
மதிமுக கட்சி அனுதாபிகள் 4 %
பாசக கட்சி உறுப்பினர்கள் 1 %
பாசக கட்சி அனுதாபிகள் 1.5 %
இ.ச.க + புநீக + கொமதேக 1.5 %
மொத்தம் 17 %
அதிமுக 19 %
பாசக 17 %
திமுக 15 %
இடதுசாரி, காங்கிரசு, இதர கட்சிகள், சுயேட்சைகள் போன்றவை 4 % வாக்குகளை பிரித்து விடுகின்றன.
அனுதாபிகள் போக மீதமுள்ள 45 % பொதுமக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதை பொருத்தே வெற்றி நிர்ணயிக்கப்பட உள்ளது.
காங்கிரசு அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பு, மின்வெட்டு, மத்தியில் அடுத்த ஆட்சி, புதிய மாற்றம், ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவை பாசக அணிக்கு பொதுமக்கள் வாக்குகளை 10% கொண்டு சேர்க்கிறது.
அடுத்த பிரதமர் வாய்ப்பு, துணிச்சலான நிர்வாகம், சிறுபான்மையினரின் பாசக எதிர்ப்பு வாக்கு ஆகியவை அதிமுகவுக்கு 7 % பொது மக்கள் வாக்கு வந்து சேர்கிறது. அதிமுகவுக்கு மாற்று திமுக என்ற விதத்தில் 3 % பொதுமக்கள் வாக்குகள் திமுகவுக்கு வருகிறது. 20-25 % வாக்குகள் வாக்குசாவடிக்கு வராதவர்கள் பக்கம் செல்கிறது.
75 % வாக்கு பதிவு நடந்தால் கீழ் கண்டபடி தேர்தல் வெற்றிகள் அமைய வாய்ப்பு உள்ளது.
பாசக 17 + 10 = 27%
அதிமுக 19 + 7 = 26%
திமுக 15 + 3 = 18%
பாசக கூட்டணியில் பாமக, கொமதேக, இசக, புநீக கட்சிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாக்கு வங்கியை பெற்றிருப்பது அந்த அணிக்கு கணிசமான தொகுதிகளை இழக்க வழி செய்கிறது.
தனிப்பட்ட வேட்பாளர் செல்வாக்கு, தொகுதிக்கு உட்பட்ட வாக்கு வங்கி அடிப்படையில் பாசக அணியும் அதிமுகவும் சமநிலையில் உள்ளன
மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால்
பாசக அணி 18
அதிமுக 18
திமுக 4
இடங்களை பெற வாய்ப்புள்ளது.
பாமகங்கற கட்சிக்கு 2% உறுப்பினர்களும் 2% அனுதாபிகளும் இருப்பதாகச் சொல்லும் கணிப்பை நோக்குங்கால் இஃதை எழுதியவர் நிச்சயம் பாமக உறுப்பினராகத்தானிருப்பார்!
ReplyDeleteபாமகங்கற கட்சிக்கு 2% உறுப்பினர்களும் 2% அனுதாபிகளும் இருப்பதாகச் சொல்லும் கணிப்பை நோக்குங்கால் இஃதை எழுதியவர் நிச்சயம் பாமக உறுப்பினராகத்தானிருப்பார்!
ReplyDelete