Dec 9, 2011

ஊடகங்கள் முகத்தில் கரிபூசும் காணொளி - முல்லைப்பெரியாறு

இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்



அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள

இருவரும் சொல்வது :-

திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் : ( இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய்களின் ஆழத்தை கூட்டி அல்லது புதிய கால்வாய் வெட்டி கூடுதலான தண்ணீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். இதனால் அணையின் பயன்பாடு இல்லாமலும் தமிழகம் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.

திரு. கம்பம் அப்பாசு தமிழக போராட்டக்குழு தலைவர் ( இவர்தான் தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.)

முல்லைபெரியாறு அணையில் கூடுதாலான தண்ணீரை தேக்குவது கேரள மக்களுக்கு அச்சத்தை தருகிறது. இதற்கு மாற்றாக தாழ்வான கால்வாய்களை அமைத்து தமிழகம் 34 அடியில் இருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இதற்கு கேரள அரசும் கேரள மக்களும் சம்மதம் தருவார்களானால் அதை தமிழக அரசும் தமிழக மக்களும் முழு மனதாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த திட்டம் எங்களுக்கு ழுழு திருப்தி.

இந்த திட்டம் தான் திரு. பென்னிகுயிக் அவர்களினவ் கனவு திட்டம் அப்போது நிதி இல்லாததால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. இதை திரு.பென்னிக்குயிக் தமது டைரி குறிப்புகளில் எழுதியுள்ளார். இந்த டைரி திரு.கம்பம் அப்பாசு அவர்களிடம் உள்ளது.

சக வலைபதிவர்களே இந்த முயற்சிக்கு தமிழக கேரள ஊடகங்கள் ஒத்துழைப்பது இல்லை. தமிழக கேரள அரசியல்வாதிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் பிரச்சனை தீர்வதில் விருப்பம் இல்லை. இந்த இருவரின் பேட்டியை ஒளிபரப்ப எந்த ஊடகமும் தயாரில்லை. எந்த பத்திரிக்கையும் தயாரில்லை. கேரளாவின் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களில் கேரள தமிழக போராட்டக்குழுக்கள் சந்தித்து பேசி சுமூக முடிவை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


தேனி உண்ணாவிரதப்பந்தலில் திரு.கொள்த்தூர் மணி, திரு.கம்பம் அப்பாசு, திரு. வைகோ, திருவிசயகுமார், திரு.கு.ராமகிருசுணன் உள்ளிட்டோர்.

திரு. வைகோ, திரு.கொளத்தூர் மணி, திரு.விசயகுமார்(தமிழக பொதுப்பணித்துறை ஓய்வுபெற்ற பொறியாளர்கள் சார்பில் முல்லைப்பெரியாறு காணொளியில் பேசுபவர்). ஆகியோர் இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு பின்னர் பேசுவதாக கூறியுள்ளனர்.

எங்களது இந்த முயற்சிக்கு கேரளாவின் பிரபல எழுத்தாளர் சி.ஆர்.நீலகண்டன் அவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நன்றி.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 9787678939. 

2 comments:

  1. Pls read ...
    http://www.vandhemadharam.com/2011/12/blog-post_8588.html

    ReplyDelete
  2. இது வரை அறியாத தகவல்கள்.

    நலமா?

    ReplyDelete

Popular Posts