Dec 6, 2011

முல்லைபெரியாறு : மீடியா ஆட்டம் அடக்க புதிய வைகைஅணை


முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமாநில மீடியாக்கள்

ஆனால் சத்தம் இல்லாமல் சமரச பேச்சுக்கு தயாராகிவிட்டார்கள் இருமாநில போராட்ட குழுவினரும். 

கேரளாவில் போராடும் முல்லை பெரியாறு பாதுகாப்பு போராட்டகுழுவினர் எளிமையான ஒரு தீர்வை முன்வைத்தார்கள். அந்த தீர்வை நாங்கள் நூற்றாண்டுகளாக எதிர்பார்த்திருக்கிறோம் என்று இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் தமிழக போராட்ட குழுவினர்.

முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழகம் தண்ணீர் எடுக்கும் பகுதியில் மேலும் கூடுதலாக இரு சுரங்கபாதைகளை ஏற்படுத்துதல். இந்த சுரங்கபாதைகள் மூலம் முழுமையாக தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டு வருதல் அதாவது (அணையில் நீரை தேக்காமல் நேரடியாக தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு வருதல்).

இந்த திட்டம் தான் விரைவில் தீர்வாக அமைய இருக்கிறது.

இதற்காக மதுரை வைகை அணை அருகே புதிய வைகை என்ற பெயரில் 4 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அணையை கட்டி முடித்து விட்டார்கள் தமிழக விவசாயிகள்.
இந்த திட்டத்தை தமிழகம் முதலில் முன்வைத்தால் கேரள அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே கேரள போராட்ட குழுவே முன்வைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைக்குமேல் இருக்கும் உயிர்பயத்தை போக்க வந்த கடவுளாக இந்த திட்டத்தை கேரள போராட்ட குழு காண்கிறது. 

கேரள போராட்ட குழுவை பொருத்தவரை கேரளாவின் புதிய அணை திட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் கேரள மீடியாக்கள் இதை வெளியிடுவதில்லை. அதே போல தமிழக விவசாயிகள் கூடுதல் கால்வாய் திட்டத்தை வரபிரசாதமாக நினைக்கிறார்கள். ஆனால் தமிழக மீடியாக்களுக்கு இது பிடிக்கவில்லை. 

பிரச்சனைக்கு சுமூக தீர்வு இருக்கும்போது இருமாநில மீடியாக்களும் போடும் ஆட்டம் விரைவில் அடங்க இருக்கிறது. இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தமிழக கேரள போராட்டக்குழுவினர் சந்தித்துபேசும் சூழலை ஏற்படுத்தியுள்ளேன்.

நாளை கம்பத்தில் நடக்கும் வைகோ உண்ணாவிரத பந்தலில் இது குறித்து பேச உள்ளேன். தமிழர்கள் பச்சைகொடி காட்டி விட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கேரள போராட்டக்குழுவை தமிழகத்துக்கு அழைத்துவந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.  

No comments:

Post a Comment

Popular Posts