Dec 19, 2011

கூடம்குளம் முல்லைப்பெரியாறு ஒரே தீர்வு

தினமலர் சன்டிவி, நக்கீரன் போன்ற ஊடகங்களுக்கு கூத்தடித்து கும்மாளம் அடிக்க இந்த இரண்டு விசயங்கள் கிடைத்து விட்டது. ஆனால் தென்மாவட்ட மக்களுக்கு உயிர்/உயிர் ஆதாரம் இரண்டும் கொலைநடுங்க வைத்திருக்கிறது.

கூடங்குளம், முல்லைப்பெரியாறு பிரச்சனைகள் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி, சிலருக்கு குடித்துவிட்டு கடங்காரன் கடையில் கல் எறிய கிடைத்த வரப்பிரசாதம். அந்த கயவர்களை பற்றி எழுதி நேரத்தை வீணடிப்பதை விட நல்ல விசயத்தையே எழுதுவோம்...

முல்லைப்பெரியாறில் தற்போது உள்ளதை விட ஆழத்தில் கூடுதலாக குழாய்கள் அமைத்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இந்த திட்டம் எங்கள் திட்டம் அல்ல. 1889ல் தென் மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கடவுளாக அவதாரம் எடுத்த பென்னி குயிக் அவர்களின் கனவு திட்டம்.
அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கம்பம் தேனி, மதுரை இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்கள் ஆண்டாண்டு காலம் போராடி வருகிறார்கள். அனால் எந்த ஊடகங்களும் அதை கண்டு கொள்வது இல்லை. காரணம் அதைபற்றி எழுதினால் பிரச்சனை ஏதும் வெடிக்காதே,    

கூடுதல் குழாய்கள் மூலம் தண்ணீரை கூடலூர் பகுதிக்கு கொண்டு வருதல் முல்லைபெரியாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இந்த திட்டம் கூடங்குளம் பிரச்சனைக்கும் தீர்வை தரும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 104 அடியில் அதிகபட்சமாக 2000 கன அடி தண்ணீரை தமிழகம் எடுத்து வருகிறது. இதோடு புதிதாக 50 அடி ஆழத்தில் கூடுதலாக ஒரு சுரங்கம் அமைத்து தண்ணீரை தமிழகம் எடுக்கலாம். இதனால் கேரள மக்களின் பயத்தை போக்கி அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிபடுத்த முடியும். 

கூடுதலாக தமிழகம் எடுக்கும் தண்ணீரை கொண்டு கூடலூர், கம்பம், ராயப்பட்டி புதிய வைகை அணை போன்ற பகுதிகளில் 10.டி.எம்.சி வரை தண்ணீரை தேக்கலம். இவற்றில் இருந்து 1 முதல் 10 மெகாவாட் மின் உற்பத்தி பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட நீர் மின் நிலையங்களை ஏற்படுத்த முடியும்.

தற்போது முல்லை பெரியாற்று நீரில் நான்கு குழாய்கள் வழி 140 மெகா வாட் மின்சாரம் பெறப்படுகிறது. கூடுதலாக 4 குழாய்கள் அமைப்பதன் மூலம் இதை இரட்டிப்பாக்க முடியும். மேலும் தற்போதைய நவீன மேம்பட்ட கய்ப்ரீட் தொழில்நுட்பத்தில் ஒரே குழாயில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும். 

இந்த திட்டங்கள் மூலம் குறைந்த பட்சம் 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யமுடியும். கூடங்குளத்தில் ஒரு அணு உலை மூலம் 1000 மெகாவாட் திட்டமிடப்பட்டுள்ளது. இதை யூரேனியம், மத்திய அரசு, ரசியா, கதிர்வீச்சு என்ற எந்த செலவும் இல்லாமல் முல்லைப்பெரியாற்றில்
இயற்கையாகவே எடுக்கலாமே. 

தற்போது 5 லட்சம் ஏக்கர் திட்டத்தில் இருந்தாலும் வெரும் ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே நீர்பாசனம் பெருகிறது. ஆனால் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் நீர்பாசணம் அளிக்க முடியும். 

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பொன்னு விளையும் பூமியாகும். தமிழகத்தின் மின்தேவையையும் மத்திய அரசு உதவி இன்றி சுயமாகவே பூர்த்தி செய்ய முடியும்.

இத்தனை நல்ல விசயங்கள் இருக்கும்போது அதை பற்றி விவாதிக்காமல் மலையாளியை அடித்து விரட்டு, தமிழனை அடித்து விரட்டு என இருமாநில ஊடகங்களும் ஆட்டம் போட்டு வருகின்றன. 

இவர்கள் ஆட்டம் அடங்க மீண்டும் ஒரு செயலட்சுமியோ, புவனேசுவரியோ வரவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு நடிகை எதையாவது செய்ய வேண்டும். அப்போது இந்த கருமம் பிடித்த மீடியாக்கள் அந்த பக்கம் ஒடிவீடும். 

பின்னர் இருமாநில மக்களும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் அந்த நன்னாள் சீக்கிரம் வர மனதுக்குள் வேண்டிக்கொள்வோம்....

1 comment:

Popular Posts