Dec 6, 2011

தமிழக தமிழர்கள் இரக்க குணம் அற்றவர்களா?


தமிழர்கள் உலகம் முழுவதும் பல பிரச்சனைகளுக்காக பல்வேறு பட்டினி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்று தமிழனை நோக்கி ஒரு பட்டினி போராட்டம் போராட்ட நடக்கிறது. அந்த பட்டினி பாராட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் குறைந்தபட்சம் காதுகொடுத்தாவது கேட்க வேண்டாமா? காதுகொடுத்து கூட கேட்க மறுக்கும் மனித தன்மையற்றவனா தமிழன்?
உண்மையில் முல்லைப்பெரியாறு அணை பலமுடன் உள்ளதா பலவீனமாக உள்ளதா அது இரண்டாம் பட்சம். ஆனால் அணைக்கு கீழ்பகுதியில் உள்ள 70 லட்சம் மக்கள் மரணபயத்தில் இருக்கிறார்களே? இவர்கள் மரண பயத்திற்கு தமிழக மக்கள் இன்று வரை மதிப்பளிக்காதது ஏன்?

முல்லைப்பெரியாறு போராட்ட குழுவினரின் போராட்டத்திலும் கோரிக்கையிலும் முழுமையான நியாயம் இருக்கிறது. அது ஏன் தமிழர்களுக்கு புரியவில்லை?

வழவழவென கட்டுரையை நீட்டவில்லை சுருங்க சொல்கிறேன்.

முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என போராடும் கேரள குழுவினர் ஒரு எளிமையான தீர்வை முன்வைத்து கடந்த 6 ஆண்டுகளாக போராடுகின்றனர். 

அணையை உடைக்கவோ புதிய அணை கட்டவோ நாங்கள் சொல்லவில்லை. அணையின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.

தமிழகம் தற்போது நீர் எடுக்கும் பகுதியில் ஏற்கனவே பென்னி குயிக் மற்றும் எம்.சி.ஆர் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட மாற்று தீர்வுகளை செயல்படுத்த தயாராக வேண்டும்.

தற்போது உள்ள சுரங்கபாதைகளை போல கூடுதலாக மேலும் 2 சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் பிரதான அணைக்கான அழுத்தத்தை குறைக்க முடியும். தமிழகத்துக்கும் முழுமையாக தண்ணீரை எடுத்து செல்ல முடியும். இதற்கு கூடுதல் நிதி செலவுகளோ, ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த திட்டத்தைதான் நிரந்தர தீர்வாக கேரள போராட்ட குழுவினர் வலியுறுத்துகின்றனர். இதை தமிழக விவசாயிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். 

இது குறித்து பெரியாறு நீர்பாசன போராட்டக்குழு தலைவர் கம்பம் அப்பாசு அவர்களை சந்தித்து பேசினேன். இந்த திட்டம் தமிழர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றார். இந்த திட்டம் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக்காலத்திலேயே பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை கூறினார்.

கேரள போராட்ட குழுவும் , தமிழக போராட்ட குழுவும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக & கேரள ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மட்டும் ஏற்றுக்கொள்வது இல்லை.

எதனால் இவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை? முல்லைபெரியாறு இவர்களுக்கு ஒரு வியாபாரம். கொழுத்த லாபம் தரும் இந்த வியாபாரத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.

இது தொடர்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றம், பாலக்காடு பத்திரிக்கையாளர் மன்றம், கோவை&பாலக்காடு மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கம் அளித்தேன். தீர்வை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களது மேலிடம் அதை பிரசுரிக்க விரும்பவில்லை என்கிறார்கள்.

கூடங்குளம் மக்களின் மரண பயத்திற்கு மதிப்பளிக்கும் திரு வைகோ, திரு. நெடுமாறன், திரு. கொளத்தூர் மணி, திரு. கு ராமகிருசுணன் போன்ற தலைவர்கள் கேரள தமிழர்களின் மரண பயத்தை காதுகொடுத்து கூட கேட்காதது தான் உச்ச கட்ட வேதனை.
  
இறுதி முயற்சியாக நாளை திரு வைகோ, திரு. நெடுமாறன், திரு. கொளத்தூர் மணி, திரு. கு ராமகிருசுணன் ஆகியோரை சந்தித்து பேசுகிறேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றால் நிச்சயம் சுமூக தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகிறேன்.

2 comments:

  1. நடுநிலையான நல்ல பதிவு. நான் அந்தபகுதியில் வசித்து இருந்தாலும் பயப்படத்தான் செய்வேன். உங்களது இந்தபதிவுக்கு என் வலைப்பக்கத்தில் லிங்க் கொடுத்துள்ளேன். ப(பி)டித்த பதிவுகள் பகுதியில்...

    ReplyDelete
  2. தங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் தோழி. நெல்லை வந்தால் நாம் சந்திப்போம்.

    ReplyDelete

Popular Posts