Apr 22, 2011

ஈழம் எட்டாக்கனியாகுமா? மலையாள ஊடகங்கள்


இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் கசப்பான உண்மையாகவே தெரிகிறது. 

ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது உலக தமிழர்கள் சக்திக்கு மீறி போரட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் ஒன்றுபட்ட போராட்டம் இல்லை என்பதால் அத்தனை போராட்டங்களும் வீணாக முடிந்தது.

ஆளுக்கு ஒரு போராட்டம். தமிழகத்தில் ஒன்றுக்கு ஒன்றான போட்டி போராட்டங்களே உண்மையான நோக்கத்தை சீர்குலைத்தது. 

பத்திரிக்கையாளர்கள் நடத்திய போராட்டத்தில் கூட சங்கத்துக்கொரு போராட்டம் நடத்தினரே தவிர ஒன்றுபட்டு ஒட்டுமொத்தமாக யாரும் போராடவில்லை. இது ஈழத்துக்கான போராட்டமே தவிர நம்மில் யார் பெரியர் என்பதற்கான போராட்டம் அல்ல என்று யாரும் நினைக்கவில்லை.

தமிழகத்தில் போராட்டம் தோற்றதற்கு ஒற்றுமை இல்லை என்பது தான் கராணம். அதுதான் ஈழத்திலும் நடந்தது.

இலங்கை அரசாங்கத்தின் போர்குற்றத்திற்கான ஐ.நா அறிக்கையை எதிர்த்து ஈழத்தமிழர்களே(கருணா குழு)போராடுகிறார்கள் என்றால் எங்கே தனிஈழம் அமையும்?

நேரடியாக சம்மந்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரே நாங்கள் பாதிக்கப்படவில்லை, விடுதலை அடைந்துள்ளோம் என்று உரக்க கூவுவது கொஞ்சம் யோசிக்க வைக்கிறதே.

விடுதலைப்புலிகளின் தோல்வியை விரும்புகிறவர்கள் தனிஈழத்தின் தோல்வியையும் ஊக்குவிக்கலாமா? அப்படியானால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

மலையாள தொலைகாட்சி ஏசியனெட் செய்திகள் இப்படி முடித்திருந்தது

ராசபட்சேவின் நோக்கம் விடுதலைபுலிகளை ஒழிப்பது அல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிப்பது தான். அதற்கு இலங்கை தமிழர்களே துணை நிற்பது தான் சர்வதேச சமுதாயத்தின் மவுனத்திற்கு காரணம். என்று கூறி வாழ்க ஈழ தமிழகம் என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். 

கேரளாவில் பெரிய மக்கள் ஊடங்களில் தனிஈழம் பாடல்கள் கம்பீரமாக ஒலிக்கின்றன. ஆனால் நமது தமிழக ஊடகங்களோ விடுதலைபுலிகள், தனிஈழம் குறித்து பேசவே பயப்படுகின்றன. 

மலையாள ஊடகத்திற்கு தெரிகிறது தனிஈழத்தின் அவசியம்.  நாமோ ?

3 comments:

  1. ஒவ்வொரு முறையும் மலையாளிகளை நம்மவர்கள் நக்கலாக பேசும் போது நான் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். அவர்களிடம் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஆனாலும் நம்மவர்கள் எந்த காலத்திலும் கற்றுக் கொள்ளத்ததான் விரும்ப மாட்டார்களே?

    ReplyDelete
  2. கருணா குழுவில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றதற்கு காரணங்கள்பல உண்டு. அதில் பங்கு பற்றும் மக்கள் உண்மையான விருப்புடனா பங்கு பற்றுகின்றானர் என்பதனை பார்க்க வேண்டும். ஒரு சிலரை பணம் கொடுத்தும், மற்றசிலரை தொழில் வாய்ப்பு போன்றவற்றை காட்டியும், மேலும் பலரை துப்பாக்கி முனையிலுமே எதிர்ப்பை தெரிவிக்கவுமே உபயோகப்படுத்துகின்றனர் இந்த கூலிக்ககுழுக்கள்.

    ReplyDelete
  3. மலையாளிகள் 13 - ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களே ! கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தினமணி நாளிதழைப் படிக்கும்போது எடுத்த புகைப் படத்தை தினமணியில் வெளியிட்டார்கள். பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். பிறவற்றை அரசியலாக்கப் பிரித்துப் பார்க்க நம்மால் முடியுமா ? ஐயமே ! குறை களையே பார்த்துப் பார்த்து நிறைகளை எப்போது காணப் போகி றோம் ? குணம் நாடி குற்றம் நாடி நிறை நாடி .......

    ReplyDelete

Popular Posts