திமுக உயர்நிலை கூட்டம் என்றால் இந்தியா முழுவதும் அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு ஊடகங்ளும் முன்பின் அரசியலை அலசிக்கொண்டிருக்கும். இதற்கு காரணம் அவ்வவு சக்திவாய்ந்தது திமுக உயர்நிலை குழு கூட்டத்தால் விளையும் அரசியல் மாற்றம் .
ஆனால் இன்றோ உப்புசப்பு இல்லாத குப்பையாகி நிற்கிறது திமுக உயர்நிலை குழு. எந்த ஊடகமும் இதை கண்டுகொள்வதில்லை. அரசியல் மட்டத்திலும் கவனிப்பார் இல்லை.
அலைகற்றை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறதாம் திமுக. நல்லது. ஆனால் எதிர்க்கட்சியானால் இதே நிலைபாட்டை கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறி.
திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க அலைகற்றை ஊழல் வழக்கு பயன்படுத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றசாட்டு யார் மிதானது என்று தான் தெரியவில்லை.
இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். கொடூரன் ராசபட்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியா முன்வரவேண்டும் என்று தீர்மானம் போட திமுகவுக்கு தைரியம் அற்றுபோனதுதான் கேவலத்தின் உச்சம்.
மே 6 தேதி கனிமொழி நீதிமன்ற கூண்யல் ஏற வேண்டும். அது முடியாது என்று சிப்பாலிக்காக சொல்லியுள்ளார் கருணாநிதி. கனிமொழியை கைது செய்ய நீதிமன்ற ஆணை வந்தால் மீண்டும் கூடும் திமுக உயர்நிலை குழு.
அன்றும் இதே உப்பு சப்பு இல்லாத கூட்டம் தானா?
ஆம் என்பது தான் பதில்.....
ஒரு வேளை மே.13 க்கு பின் திமுக எதிர்க்கட்சியானால் நிலைமை தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment