Apr 28, 2011

ராசபட்சேவுக்கான உச்சகட்ட தண்டனை தனிஈழம்

போர்குற்றம் புரிந்த ராசபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் ஒலித்துள்ளது.

திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இ.கம்யூனிசுட்டு, வி.சி, கொமுக, பாரதிய சனதா உட்பட சிறிய பெரிய என அனைத்து கட்சிகளும் தனிஈழம் தான் தீர்வு என்பதை வலியுறுத்த துவங்கியுள்ளன.


காங்கிரசு, மா.கம்யூனிசுட்டு ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பழைய பாடலையே இன்னும் இழுந்துப்பாடி வருகின்றன.  இந்த கட்சிகளும் தங்கள் நிலையை மாற்றியாக வேண்டும்.

இலங்கை என்ற குட்டி நாட்டின் அரசியலில் தலையிட இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தார்மீக உரிமை உள்ளது. 

தமிழருக்கும் சிங்களருக்கும் சமஉரிமை என்ற ஒற்றை கோட்பாடில் தான் இலங்கைக்கு பிரிட்டீசு அரசாங்கம் சுதந்திரத்தை தந்தது. அதே பாணியில் தான் இந்தியாவும் இலங்கையை செல்லப்பிள்ளையாக வளர்த்தது.

ஆனால் இலங்கையோ இனப்படுகொலையில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது. 


சிங்களருக்கு தேவை ஏக சிங்கள நாடு. அதற்காக தமிழகர்கள் சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக இருக்க முடியுமா? 

தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள் உரக்க சொல்கிறார்கள். இதை இன்றைய காங்கிரசாருக்கும் மா.கம்யூனிசுட்டுகளுக்கும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்கள் போரில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படித்துள்ளோம். ஆனால் இன்றைய 21நூற்றாண்டு தலைமுறையினர் நாம் நேரடியாக அதை பார்க்கிறோம். 

மனிதஉரிமைகளை பற்றி பெருமைபேசும் சர்வதேச சமுதாயம் இலங்கை என்ற குட்டி நாட்டில் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்தது. 

போரில் லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த பின்னர் மனித உரிமைகள் பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

சர்வதேச சமதாயத்திற்கு உண்மையில் மனிதஉரிமைகள் குறித்த அக்கறை இருக்குமானால் பழிக்குபழி அல்ல நிரந்தர தீர்வை தான் வலியுறுத்த வேண்டும். 

தனிஈழம் ஒன்று தான் மனித உயிர்களை குடித்த ராசபட்சேவுக்கு கொடுக்கும் உச்சகட்ட தண்டனையாக இருக்க முடியும். அதே தனிஈழம் தான் விடுதலைப்புலிகளின் ஆன்மாக்களை சாந்தியடையச்செய்யும் கருவாகவும் அமையும்.

1 comment:

  1. தனி நாடு வேண்டுமென்கிறீர்கள். நாடில்லாது மக்கள் சொல்லொனாத்துன்பம் அனுபவிக்க, இன்றைக்கு ஈழத் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஒரு பொதுக் கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். சரி. உங்களது கோரிக்கைக்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமெங்கிறீர்கள். சரி. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள தமிழனை உசுப்பேற்றி பிரிவினை கிளப்பி அவன் ஒரு இந்தியன் என்கிற உணர்வே இல்லாது செய்ய பல சதி செய்கிறீர்களே.. இது நியாயமா..? நாட்டின் பெருமையை அவன் உணர வேண்டாமா. நாடிழந்த உங்களது கதை அவனுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டாமா.. அண்ட வந்த வீட்டிலே அண்ணன் தம்பியரிடையே கலகமூட்டி ஆதாயம் காண்பது முறையா..?எல்லா பிரிவினைகளையும் மீறி நாட்டுப் பற்றைக் காட்டிய அப்துல் கலாமை ஒரு துரோகியாக சித்தரிப்பது அடுக்குமா..? வைகோ வாய் கிழிய பேசலாம் ஆனால் மக்களது ஆதரவு அவருக்கு கிடைக்காது. அவர் ஒரு துரோகி..இந்தியத் தலைவனை அவனது மண்ணிலேயே சாய்த்த ஒரு இயக்கத்திற்கு துணை போகும் ஒரு தீவிர வாதியே ஒழிய மணிதனே அல்ல..

    இந்திய மண்ணில் மண்ணின் தலைவனைச் சாய்த்தது மாபெரும் மண்ணிக்க முடியாத குற்றம். அதுவும் தமிழ்நாட்டில் சாய்த்தது அதைவிடப் பெரும் குற்றம். உங்களால் ராச பக்சேவை நெருங்க முடியவில்லை மாறாக எங்களது நாட்டின் அமைதியையும் ஒவ்வொரு தமிழனில் ஒரு குற்ற உணர்வையும் உண்டாக்கி விட்டீர்கள். இதனை சரித்திரம் மண்ணிக்காது..இன்னமும் அதே தொணியில்தான் பிரிவினை வாதம் பேசிக்கொண்டிருகிறீர்கள்..இது அடுக்காது..

    ReplyDelete

Popular Posts