கேரள மாநிலத்தில் ஏப்.13ல் வாக்குபதிவு நடந்துமுடிந்துள்ளது. கேரள தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மிக எளிது. கண்ணை மூடிவிட்டு சொல்லிவிடலாம் எதிர்கட்சி தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என. 50 ஆண்டு கால வரலாற்றில் அது தான் நடந்து வருகிறது.
ஆளும் கம்யூனிசுட்டு கூட்டணி அடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்பது வழக்கமான அரசியல் ஆருடம். ஆனால் இம்முறை இதற்கு மாற்றம் வரும் என்கின்றனர் பல அரசியல் நோக்கர்கள்.
தென்னிந்தியாவில் அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது கேரளா. இலவச வண்ண தொலைகாட்சி தவிர தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் கேரளாவில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவை பொருத்தவரை கூட்டணி வெற்றிக்கு அவ்வளவாக உதவாது. பொதுமக்கள் வாக்களிப்பே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.
விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் கொலைகள் இடதுசாரி ஆட்சிமீது எதிர்ப்பை பதிவு செய்கிறது. இதை ஈடுகட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்ற தேர்ந்த பிரச்சாரத்தை விதைத்துள்ளது இடதுசாரி கூட்டணி.
இம்முறை தங்களுடைய சுற்று என்ற தைரியத்தில் காங்கிரசார் தேர்தல் வேலையில் சுனக்கம் காட்டியது யோசிக்க வைக்கிறது. பெரிய அதிருப்தி இல்லை, நலதிட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரலாற்றை மாற்ற இடதுசாரி தீவிரம் காட்டியுள்ளது. தேர்தல் யுக்தியாக அச்சுதானந்தன் என்ற ஒற்றை மனிதரை வைத்து கொஞ்சம் ஆதரவை திரட்டியது கம்யூனசுட்டுக்கு கூடுதல் பலம்
பாலக்காடு, திருவனந்தபுரம், ஆழப்புழா, வயநாடு, உட்பட மாவட்டங்களில் இடதுசாரி கொடி உயர பறக்கிறது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் வெற்றிபெற வேண்டும்.
இடதுசாரி கூட்டணி ....60-71
காங்கிரசு கூட்டணி .....69-80
என்ற இழுபறி நிலையிலேயே வெற்றிவாய்ப்பு அமையக்கூடும் என்று கணிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
காங் வராமல்இருந்தால் மகிழ்ச்சியே.
ReplyDelete