திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இ.கம்யூனிசுட்டு, வி.சி, கொமுக, பாரதிய சனதா இத்தனை கட்சிகளும் தனிஈழம் அமைக்கவேண்டும் என்று சொல்கின்றன.
காங்கிரசு, மா.கம்யூனிசுட்டு ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பழைய பாடலையே இன்னும் இழுந்துப்பாடி வருகின்றன.
இலங்கை என்ற குட்டி நாட்டின் அரசியலில் தலையிட இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தார்மீக உரிமை உள்ளது.
தமிழருக்கும் சிங்களருக்கும் சமஉரிமை என்ற ஒற்றை கோட்பாடில் தான் இலங்கைக்கு பிரிட்டீசு அரசாங்கம் சுதந்திரத்தை தந்தது. அதே பாணியில் தான் இந்தியாவும் இலங்கையை செல்லப்பிள்ளையாக வளர்த்தது.
ஆனால் இலங்கையோ இனப்படுகொலையில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது.
இலங்கையில் தனிஈழம் தான் தீர்வு என்று கம்பீரமாய் முழங்கினார் இந்திராகாந்தி. இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்ததை மறந்துவிடக்கூடாது.
தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள் உரக்க சொல்கிறார்கள். இதை இன்றைய காங்கிரசாருக்கும் மா.கம்யூனிசுட்டுகளுக்கும் புரிந்துகொள்ள மறுப்பது தான் வேதனையாக உள்ளது.
மிச்சம் இருக்கும் மனிதஉயிர்களை காக்கவாவது தனிஈழத்துக்கு ஒருமித்த குரல்கொடுங்கள்.
No comments:
Post a Comment