கலாநிதிமாறன் தொழில்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். என்ன கொடுமை சாதாரன பாமரன், கிராமத்தான், கூட கலாநீதிமாறனால் தினம் தினம் நொந்துகொண்டிருக்கிறானே. இவர்கள் சாபம் பலிக்குமானால் கலாநிதி( வேறு என்ன சொல்ல)
2 ரூபாயுக்கு 12 பக்க செய்திதாள் என்பது மகிழ்ச்சி தான். ஆனால் அதில் 1 பக்கம் கருணாநிதிக்கு, 1 பக்கம் சோனியாகாந்திக்கு, 1 பக்கம் தயாநிமாறனுக்கு, 1 பக்கம் சன் பிக்சர்சுக்கு, 1 பக்கம் மத்திய அரசு விளம்பரத்துக்கு 1 பக்கம் மாநில அரசு விளம்பரத்துக்கு, 1 பக்கம் சுய விளம்பரத்துக்கு. பின்ன என்ன மிச்சம் இருக்கு? செய்தி பத்தலைனா தமிழ்முரசை வாங்கி படியுங்க இதுக்கு மேலையுமா நீங்க படிச்சிறப்போறீங்க...
செய்திதாளை விடுங்க விருப்பம் இருந்தா வாங்குறோம். இல்லாட்டி ஒதுங்கி ஓடறோம்.
கேபிள் பிரச்சனையை சொல்லவே வேண்டாம்:
இலவசம் இலவசம் இலவசம். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இதை தவிர வேற ஒன்னுமே தெரியாது. ஆனா ஒரு நையா பைசா கூட இலவசமாக தரமாட்டார்கள்.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடுமாம். இது தான் கலாநிதிமாறனின் தொழில் ரகசியம்.
இலவசம் என்றவர்கள் பிட்டிங் சார்சு என ரூ.1200., 9 மாத சந்தா என ரூ.900., அப்புறம் பொருத்த வரும் டீலருக்கு ரூ.150 ஆக மொத்தம் 2250 இலவசம். என்ன அற்புதமான கணக்கு !!!
சரி போன போகுது
5 மாதத்தில் 9 மாத சந்தா முடிந்துவிட்டது. இவர்களுக்கு மட்டும் மாதத்தின் 31ம் நாள் இல்லை.
மாத சந்தா ரூ.75 என்றவர்கள் ரூ.110 கூப்பன் தந்தார்கள். அந்த 110 த்தை ரீசார்சு செய்ய ரூ.30 செலவு செய்ய வேண்டும். இதில் இன்னொரு கொடுமை நேட்வொர்க் பிசி என்பதற்கு கூட காசுபிடுங்குகிறார்கள்.
கால்சென்டர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்கூட்டியே டியூசன் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் கேட்கும் ஒரு கேள்விக்கும் பதில்சொல்லமாட்டார்கள்
எல்லா கொடுமைகளையும் சகித்தாயிற்று என்ன செய்ய டி.வி பார்த்தே ஆகவேண்டுமே.
திடீர் என எந்த முன்னறிவிப்பும் இல்லை. சிக்னல் கட்.
கால்சென்டருக்கு போன் போட்டால் ரூ.20 காலி.
2 மணி நேரத்தில் சரியாகிவிடும் என்றார்கள் 2 மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.
மீண்டும் இலவசம் இலவசம் பாட்டு... இப்போது கூட இன்போ சேனலில் அதுதான் ஓடுது.
தமிழா எப்படிடா இதை இன்னமும் நம்புற? முடியலை.
வேறு வழியில்லாமல் சண்டை போட, ஓரு டீலர் 150 கொடுத்தால் வந்து சரி செய்வதாக சொன்னார்.
ஆணியை பிடுங்கி தூக்கி வீசிவிட்டு கேபிள் எடுத்தால் அங்கும் அவர்கள் ஆதிக்கம் தான். (சுமங்கலி கேபிள்) ஏற்கனவே கேபிள் போடப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க ஆக்டிவேசனுக்கு ரூ. 500 வேனும் என்கிறார்கள்.
போதுமட சாமி
நல்ல கம்பனி, நல்ல சேவை...
வெளிநாட்டில் உள்ளவர்கள் கவனத்துக்கு தப்பி தவறிகூட கலாநிதிமாறனின் குறைந்த கட்டண விமானத்தில் ஏறிஅமர்ந்துவிடாதீர்கள்
உங்கள் சட்டையை விமான சன்னல்களின் தகரம் கிழிக்கலாம், அப்புறம் நடுவானில் ரூட் மாறினாலும் கேட்கமுடியாது.
எவ்வளவு சம்பாதிக்கிறார்கள். செயற்கைகோள் மாற்றினால் அதை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டாமா? சரி அதை முறையே உடனடியாக சரிசெய்ய வேண்டாமா? டி.டி.எச் அப்படி தான் தெரியும் பேசாம கேபிள் எடுத்துக்கங்க என சுமங்களி கேபிள் பணியாட்களே சொல்லலாமா? இதெல்லாம் கலாநிதிமாறனின் காதுக்கு கேட்காததால் தான் காதுகேட்கலை விளம்பரமோ? இந்த செவிடன் காதில் செவிட்டில் அறைந்து சொல்லும் தமிழனுக்கு நான் கரம்தூக்கி தலைவணக்கம் செய்கிறேன்.
கருணாதியிடம் இருந்து கூட தமிழக்தை காப்பாற்றிவிடலாம் ஆனால் கலாநிதிமாறனிடம் இருந்து தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமா...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல யுனிக்கோடு எழுத்துரு...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
எந்திரன் கதை திருடப்பட்டதா? அமுதா தமிழ்நாடன் கதையை படித்துவிட்டு நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்... ( 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய இந்...
-
கோவை, திருப்பூர், வலைபதிவர் கவனத்திற்கு.... கோவையில் இருந்து தற்போது வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மலர் வாரசெய்தி இதழ், வரும் தை திங...
-
இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்...
ரொம்ப கோவமா இருக்கு பதிவு என்ன செய்ய இந்தமாதிரி எழுதி தான் நம்ம கோவத்தை தணிச்சிகவேண்டியுள்ளது.
ReplyDeleteஅருமையான கட்டுரை.
ReplyDeleteசன் டி.வி., பற்றிய என்னோட கட்டுரைகளை படிக்கவும்
இவைகளை சன் டி.வி.,நிறுவனம் வாங்கினால்.....
சன் டி.வி-க்கு சில கேள்விகள்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா சன் நிறுவனமும், எந்திரனும்?
திரு. ராஜவம்சம்
ReplyDeleteபத்திரிக்கைகளில் வெளிப்படுத்தமுடியாத கோபத்துக்கு வலைப்பூ மிகசிறந்த வடிகாலாக இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு.ரஹீம் கஸாலி
நன்று. சன் டி.வியை ஒரு பிடி பிடித்திருக்கிறீர்கள். என்ன செய்ய தமிழக மக்கள் இலவசத்துக்கும், அழுகை சீரியல்களுக்கும் மயங்கிவிட்டார்களே... அப்புறம் அந்த மந்திரவாதிகளின் மாயங்கள் பலிக்காமலா இருக்கும்?
என் உறவினர் ஒருவர் புதிதாக LCD டிவி வங்கினார். Sun Direct கூடவே கொடுத்தார்கள். அதற்கு 800 ரூபாய் என்று சொல்லி வரி வட்டி கிஸ்தி எனக் கணக்கிட்டு 1300 ஆக்கிவிட்டார்கள். பொருத்தி 1 மாதத்தில் ஏதோ பிரச்சினை. கால் செண்டருக்குப் போன் போட்டுக் கேட்டால் முகவரி சொல்லுங்கள் என்றனர். சொன்னதும் அவர்கள் கேட்ட கேள்வி "Which district this Mylapore is in, Sir?"
ReplyDeleteஉறவினர் கடுப்பாகி "தயாநிதி மாறனைத் தெரியுமா? அவர் எங்க எம்பியாக்கும்" என்று எகிர, எந்த மாவட்டம் என்று அவரைப் போய்க் கேட்க முடியாது சார் என்றார் கால் செண்டர் நபர். மயிலாப்பூர் சென்னையில் இருக்கிறது என்றதும், அது சென்னை நகரத்தில் இருக்கிறதா புறநகரா என்றாராம்.
இவர் கடுப்பாகி "வேணும்னே வெறுப்பேத்தரான்" என்று குதிக்க, போனை வாங்கி "உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது, நான் நேரில் வந்து புகார் தருகிறேன்" என்று சொன்னதும் "நீங்கள் தமிழ்நாட்டில் எங்கோ(!!) மைலாப்பூரில் இருக்கிறீர்கள், நான் புனேக்கு அருகில் இருக்கிறேன், நான் கேட்கும் கேள்விகள் உங்களுக்கு உதவி செய்யத்தான். ஒத்துழைப்புக் கொடுங்கள், பிரச்சினையை விரைந்து தீர்க்கப் பார்க்கிறேன்" என்று கால் சென்டர் பாடத்தை ஒப்பித்தார்.
அடக் கொடுமையே! கால் சென்டர் தமிழகத்தில் இல்லையா என்று நொந்து கொண்டோம்.
அருமையான கலந்துரையாடல் , தொடர்க
ReplyDelete