தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் இப்படி பல கட்டங்களை கட்சிகள் சந்திக்க வேண்டி உள்ளது.
முன்னதாக இன்னும் 2 மாதத்தில் தமிழக சட்டமேலவை தேர்தல் வேற இருக்கு. அதற்குள் கூட்டணியை முடிவுசெய்யவெண்டிய கட்டாயத்தில் கட்சிகள் உள்ளன.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரசு கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து விட்டன. தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, கம்யூனிசுட்டுகளுக்கு கூட்டணியில் இடம் இல்லாத நிலையில் இருதலைகொள்ளியாக தவித்து வருகின்றன.
காங்கிரசு போய்விட்டால் திமுகவிடம் இருக்கும் ஒரே கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான். கூட்டணி தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை செயலலிதாவும், கருணாநிதியும் உறுதியாக நம்புகின்றனர்.
திமுக கூட்டணியில் கம்யூனிசுட்டுகளை இழுக்கும் முயற்சியை கருணாநிதி தொடங்க அது எளிதிலேயே முடிந்தது.
காங்கிரசு போனால் அடுத்த நிமிடம் திமுக கூட்டணியில் இரு இடதுசாரிகட்சிகளும் இருக்கும் என்ற உறுதியை உயர்மட்ட தலைவர்களே கொடுத்து விட்டனர்.
அதே போல பாமகவும் திமுக பக்கம் சாய்கிறது.
அதிமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காது என்பதை முன்னரே யூகித்துக்கொண்டனர். ஆனாலும் விசயகாந்த், காங்கிரசு, பாமக, கொமுக, இதரம் உட்பட கட்சிகளை இணைத்து மூன்றாம் அணி உருவாக்கும் முயற்சியை பாமக இன்னும் கைவிடவில்லை. இது நடக்காத பட்சத்தில் சேர்ந்த உதிரி கட்சிகளோடு திமுகவிடம் சரணடைவது என்பது என பாமக முடிவு செய்துள்ளது.
காலங்கள் செல்ல கோலங்களின் மாற்றம் வேகமாகவே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தமிழ்மணம் வலைபதிவுகளை இணைக்க கட்டணம் கேட்பதை ஏற்க முடியாது. தமிழ்மணம் நிதிசேகரிப்பது தவறு இல்லை. அதற்கு விளம்பர யுக்தியை கையாளலாம். அதற்கா...
-
ஈழம், முல்லைபெரியாறு, சேதுசமுத்திர திட்டம், உட்பட பல விடயங்களில் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் ஒரே தமிழக தலைவர் வைகோ. (எனக்கு தெரிந்தவரை...
-
திமுக இந்த அளவுக்கு சுயமரியாதை இழந்தது இல்லை. இலவச திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்ததோடு ஐந்து ஆண்டுகளும் இலவசத்தை வாரிவழங்கிய கட்சி திம...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அ...
-
முழு பூசணிக்காயை எவ்வளவு நாள் தான் சோற்றில் மறைக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப தினமலரில் தமிழ்மலரின் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகி உள்...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம...
No comments:
Post a Comment