Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Feb 12, 2011

அஞ்சாம்படை : கலையான டி.வி யாருக்கு


கலையான தொலைக்காட்சியின் ஆதிக்கம் யார்கைவசம் வரும் என்பதில் உச்சபிரச்சனை எழுந்துள்ளது. 

2க்கு 60%, 3னின் வாரிசுக்கு 20% கொடுத்ததோடு இன்னாரு 20%தை 3க்கு சாதகமாகவே சரம்போட்டுள்ளார் விஞ்ஞான ஊழல்வாதி. ஆரம்பத்தில் 60% தன்குடும்ப வசம் தான் உள்ளது. ஊழல் காலம் சென்றதும் சூரியகுழுமம் போல 20% பிரித்துக்கொடுத்து பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்ற கணக்கில் இருந்தது மதுரை வட்டம். ஆனால் ஊழல் காலம்போனாலும் பிரச்சனை அலைகற்றை வடிவில் வந்துநிற்கும் என்ற அச்சம் வந்துள்ளது 2ம் தரகுடும்பத்துக்கு.

மேலும் தாயின் சொந்த சம்பாதியத்தை விருப்பம் உள்ளவருக்கு கொடுக்கும் சட்டம் உள்ளதால், தனக்கு கலை டி.வியில் கடுகளவு பங்கும் வரவரவாய்ப்பில்லை என்பது இப்போது தான் புரிந்துள்ளது மதுரைவட்டத்திற்கு.

அதுமட்டுமல்ல 60 தை நான்காக பிரித்தால் 15 தான் வருகிறது. இதில் 20% 3ம்தரத்திடம் இருப்பது கவலை அளித்துள்ளது 2ம் தர வாரிசுகளுக்கு.

கலையான டி.வியையே ஊழல்கற்றையில் இருந்து மீட்பதோடு, 3ம் தர வாரிசுடன் சரத்தையும் உருவி தன்பங்கில் தனிக்கணக்கு துவங்க வேண்டும் என்பது மதுரைவட்டத்தின் நெருக்கடி.

3ம் தரம் கம்பி எண்ணுவதை தவிர்க்க இந்தாலி சனியனே சரணம் என்றிருக்கும் இந்த நிலையில் மதுரை வட்டத்தின் அதிரடியும் ஊழல் விஞ்ஞானிக்கு புதுநெருக்கடி.

Dec 18, 2010

கருணாநிதியின் துணைவி வீட்டில் ரத்தன் டாட்டா. ஆதாரத்துடன் த.பாண்டியன் (காணொளி)

தாயநிதிமாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக வரக்கூடாது என்பதற்காக ரத்தன்டாடா, ராசாத்தியம்மாளுக்கு செய்த கைமாறை த.பாண்டியன் விளக்கியுள்ளார்.  

 சென்னையில் ராசாத்தியம்மாள் வீட்டுக்கு நேரடியாக வந்த  ரத்தன் டாடா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். சென்னையில் தனக்காக வாங்கப்பட்ட இடத்தை ரத்தன் டாட்டா ராசாத்தியம்மாளுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆதாரபூர்வமாக இந்திய கம்யூனிச தோழர் த.பாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.
  

Dec 17, 2010

அதிமுக காங்கிரசு கூட்டணி பேச்சு முறிந்தது

2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை கருணாநிதி முழு வீச்சாக செய்து வருகிறார். ஆனால் எந்த முயற்சியும் முழுமையான பலனை தருவதில்லை.

காங்கிரசை வெளியேற்றினால் மட்டுமே கூட்டணிக்குள் வருவோம் என இடதுசாரிகள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன. அதே நேரத்தில் பாமக ஒரே ஒரு நிபர்ந்தனையுடன் அணிசேர தயாராகிவிட்டது. தேர்தலுக்கு பின் மத்தியில் அன்புமணி ராமதாசை மேலவை உறுப்பினராக்கி அமைச்சர் பதவியை பெற்றுதரவேண்டும்.

விசயகாந்த் முழுமையாக அதிமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார். இதனால் காங்கிரசு வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டது. காங்கிரசு வராவிட்டால் மதிமுக, இடதுசாரிகள், கூடவே கொங்கு முன்னேற்ற கழகத்தையும் சேர்த்துக்கொள்வது என அதிமுக முடிவுசெய்துள்ளது.

அதிமுகவுக்கு சீமான் மற்றும் சனவரியில் கட்சி துவங்க இருக்கும் நடிகர் விசய் ஆகியோர் அதரவு தெரிவிக்ககூடும்.

தற்போதைய நிலவரப்படி

திமுக - காங்கிரசு - பாமக - விடுதலைசிறுத்தைகள் - சில இசுலாமிய கட்சிகள்

அதிமுக - தேமுதிக - மதிமுக - இடதுசாரிகள் - கொ.மு.க - புதிய தமிழகம் - சில இசுலாமிய கட்சிகள்

என்ற நிலையில் கூட்டணி நிலவரம் உள்ளது.

சமக பாரதியசனதா போன்றவையும் அதிமுக பக்கம் சாய தாயாராகியுள்ளன.

காலங்கள் மாற கட்சிகளின் கோலங்கலும் மாறலாம்.

Dec 16, 2010

ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதி போட்ட நாய்பிசுகெட்

அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம்.

இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி.

ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது.

இந்த கேவலத்தை எப்படி சமாளிப்பது? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க என்ன செய்வது?

நீண்ட யோசனையின் விளைவாக விடுதலைபுலிகள் நினைவு பொறிதட்டியிருக்கிறது.

பிரதமர், சோனியா, அப்புறம் நம்ம முத்தமிழ் வி.... களை விடுதலைபுலிகள் கொல்ல திட்டம் போட்டுள்ளனர் என்ற அறிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டது. ஊடகங்கள் இந்த நாய்பிசுகெட்டை கவ்விக்கொண்டு சி.பி.ஐ சோதனையை விட்டுவிடுவார்கள் என்பது தான் திமுக தலைமையின் எதிர்பார்ப்பு

ஆனால் ஊடகங்கள் சும்மாவா?

அதையும் கவ்விக்கொண்டது. அப்புறம் இதையும் விடவில்லை. இப்போதும் விடுதலைபுலிகள் ஊடுருவல் என்பதை விட கருணாநிதியின் வீட்டில் சோதனை என்ற பிசுகெட்தான் அதிக சுவையாக உள்ளது என்கிறன ஊடகங்கள்.

பாவம் தாத்தா தான் ஏமாந்துவிட்டார்.

காங்கிரசு சி.பி.ஐயை வைத்து திமுகவை மிரட்டுகிறது. திமுக விடுதலைப்புலிகளை காட்டி காங்கிரசை மிரட்டுகிறது.

இவர்கள் பங்கு பிரச்சனைக்கு சி.பி.ஐயும் விடுதலைப்புலிகளையும் பகடைகாயக்கியது தான் காலத்தின் கொடுமை.

குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம் - கனிமொழி பேட்டி

அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். 

இது குறித்து கனிமொழி கூறியதாவது :  அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ., தனது பணியை செய்கிறது. இதற்கு நாங்கள் எதிராக இருக்க மாட்டோம். இந்த விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும். குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம். இந்த சோதனை மூலம் நாங்கள் திறந்த மனதாக இருக்கிறோம் என்பது புலப்படுகிறது.  சி.பி.ஐ சோதனை காரணமாக எங்கள் கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்றுள்ளார்.

கனிமொழி வீட்டில் இன்னமும் சி.பி.ஐ சோதனை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மிகுந்த மூளைசலவைக்கு பின் கனிமொழி சி.பி.ஐ சோதனைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்தே இந்த பேட்டி. விரைவில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடக்கலாம்.

Dec 15, 2010

நீராராடியா வீட்டில் சி.பி.ஐ சோதனை-கனிமொழிக்கு திக்திக்

அலைகற்றை ஊழல் தொடர்பாக நீரா ராடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.  டெல்லி பாரகம்பாவில் உள்ள நீரா ராடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்திவருகின்றது.

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் வீட்டிலும் சோதனை நடக்கிறது. டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் சிபிஐ சோதனை நடக்கிறது.

ராசாவி வீட்டில் நடந்த சோதனையை அடுத்து கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு திமுக தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பால் காங்கிரசு நிலைகுலைந்தது. அதனால் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐக்கு காங்கிரசு மறைமுக தடைவிதித்தது.

காங்கிரசின் இந்த செயலுக்கு பிரதமர் தன் மவுன கண்டனத்தை தெரிவித்தார். சி.பி.ஐ கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவதில் குறுக்கிடக்கூடாது என்பதை தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை நேற்று தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்த பேச்சில் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்தே கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ புது திட்டம் போட்டுள்ளது.

ராசா வீட்டில் சோதனை நடந்த கையோடு கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் செயலுக்கே திமுக கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு மாற்றாக நீராராடியாவின் வீட்டில் நடந்த சோதனைக்கு பின், அதன் அடிப்படையில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இது ஓரளவு கவுரவம் காக்கும் என திமுக எதிர்பார்க்கிறது. அதற்கு அதிக எதிர்ப்பு இருக்காது என்றும் சி.பி.ஐ நம்புகிறது. 

நடக்கட்டும் சி.பி.ஐ சோதனைநாடகங்கள். இவர்களின் நாடகத்தை வேடிக்கை பார்ப்பதை தவிர இந்திய குடிமகன் வேறு என் செய்ய முடியும்?

Dec 13, 2010

கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு

அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி.

கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது.

ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்கள் என்று கருணாநிதி டெல்லிக்கு போட்ட குண்டு காங்கிரசை மூச்சடைக்க வைத்துள்ளது. அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.

50 எம்.பிக்கள் பட்டியலை தொலைபேசியிலேயே கடகடவென வாசித்து ஒரு காட்டம் காட்டிவிட்டது திமுக. உசாரான சோனியா காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கலைஞரின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்ற கருத்து சோனியாவைவின் படபடப்பை கூட்டிவிட்டது. அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக காங்கிரசு எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோனியா.

திமுக எதிராளியாக மாறிவிட்டால் காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை தமிழக காங்கிரசு தலைவர்களோடு பலரும் சோனியாவை மூளை சலவை செய்து வருகின்றனர்.

திமுகவை கழட்டி விடாவிட்டால் பிரதமர் பதவியில் தொடரமாட்டடேன் என்று காட்டமாகவே சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் மன்மோகன்சிங்.

தேசிய அரசியலை பொருத்தவரை அதிமுகவுக்கு மட்டுமே திமுக எதிரி. ஆனால் பாரதிய சனதா, இடதுசாரிகளுக்கு காங்கிரசு தான் குறி. திமுகவை கழட்டிவிட்டால் அலைகற்றை ஊழலின் முழு கல்லடியும் காங்கிரசு மீதே விழும் என்பதையும் சோனியா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளர்.

மொத்தத்தில் அலைகற்றை ஊழலால் காங்கிரசு திமுக என்ற புலிவாலை பிடித்துவிட்டது. விட்டால் காங்கிரசுக்கு தான் அதிக ஆபத்து.

ஆமாம். ஊழல் நடந்தது. பிரதமரும் சோனியாவும் தான் ஊழலுக்கு தூண்டினர். ஊழலில் பெரும் பங்கு காங்கிரசுக்கு சென்றுள்ளது என திமுக அறிக்வை விட தயங்காது என்பது காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை.

இப்பாதைக்கு செயலலிதா என்ற நரிவாலை பிடிப்பதைவிட, திமுக என்ற புலிவாலை விடாமல் இருப்பது தான் காங்கிரசுக்கு நல்லது.

தற்போது வெளியில் நடமாடுவது போல பவ்லா செய்தாலும், நேற்று முதல் கைது செய்யப்படாத குறையாக சி.பி.ஐ விசாரனை பிடியில் இறுகியுள்ளார் ராசா.

அந்த நாடகம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாக தெரியவில்லை.

கனிமொழி வீட்டில் சோதனை நடக்குமா நடக்காதா? அங்கே இருக்கிறது அரசியல் சூடும் பரபரப்பு பொறியும்.

Dec 12, 2010

ரசினிகாந்தின் அரசியல் வருகை ரகசியம்

ரசினியின் மீது படியப்பட்டுள்ள ஒரு கறை அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்று மக்களை குழப்பியது.

பாபா திரைபடத்தின் இறுதி காட்சியில் ஆன்மீகத்துக்கு செல்ல முயன்று பின்னர் அரசியலுக்கு திரும்பும் திருப்புமுனை. குசேலனில் அரசியலுக்கு வருவேன் என்று நான் சொல்லவே இல்லை. திரைப்படத்தில் இயக்குனர்கள் எழுதும் வசனத்தை பேசுகிறேன் அவ்வளவு தான் என்ற மலுப்பல். சிவாசியில் மீண்டும் அரசியல்வாதிகளை சுளுக்கெடுக்கும் காட்சிகள். எந்திரனில் எதுவுமே இல்லாத புதுமுகம்.

உண்மையில் ரசினிக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அவரது பல பொது பேச்சுகளிலேயே தெளிவாக தெரிகிறது.

எம்.சி.ஆருக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் தலைவராக ரசினியை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பது நிதர்சன உண்மை.

எம்.சி.ஆருக்கு முன்னர் இருந்த தமிழக அரசியல் வேறு. எம்.சி.ஆருக்கு பின்னர் இருக்கும் தமிழக அரசியல் வேறு.

எம்.சி.ஆருக்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட இரு பெரும் கட்சிகளின் சரிசம போட்டியில் உதிரி கட்சிகள் எல்லாம் உதிர்ந்துபோயின.

எம்.சி.ஆருக்கு பின்னர் கருணாநிதியை எதிர்க்கும் போட்டியில் செயலலிதா செயித்துக்காட்டினார். அதற்கு பின்னர் கருணாநிதியும் செயலலிதாவும் இருபெரும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.

தமிழகத்தில் ஒன்று செயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். அல்லது கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். அது அல்லாமல் இந்த இருவரையுமே ஒருசேர எதிர்த்து அரசியல் செய்யவது கடினம்


வைகோ, மூப்பனார், விசயகாந்த் இவர்கள் தோற்றதும் இதனால் தான்.


அதிமுக, திமுக என்பதை தான்டி செயலலிதா கருணாநிதி இவர்களை ஒருசேர எதிர்க்கும் மூன்றாம் சக்திக்கு கடைசிவரைக்கும் வாய்ப்பே இல்லை.

செயலலிதாவுக்கு பணம், எம்.சி.ஆர்(கருணாநிதி எதிர்ப்பு அலை) இதை வைத்து மட்டும் தான் அரசியல் செய்ய தெரியும். ஆனால் கருணாநிதிக்கு சாதி, மொழி, இனம், மதம், பணம், சட்டம், நட்பு, அழுகை, கண்ணீர், வயது, எழுத்து என எதைவைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்ய தெரியும்.

13 ஆண்டுகள் எம்.சி.ஆரை எதிர்த்து அரசியல் செய்ததில் கருணாநிதிக்கு கிடைத்த மனபலம் சாதாரணமானது அல்ல. அது மிகப்பெரிய மனோசக்தி. அதனால் தான் இன்றளவும் கருணாநிதியால் இன்றும் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. 

சரி ரசினி விடயத்துக்கு வருவோம்.

ரசினியின் குழப்பம் மவுனத்திற்கும் அது தான் காரணம்.

தமிழகத்தின் அந்த மூத்த அரசியல் தலைவரின் ஓய்வு தான் ரசனியின் அரசியல் ஆரம்பம்.

கருணாநிதிக்கு பின்னர் செயலலிதாவை எதிர்க்க சரியான நபர் ரசினியாக தான் இருக்க முடியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டால் வைகோவை போல விசயகாந்தும் நீர்த்துப்போவது உண்மை. கூட்டணிக்கு பின்னர் வெளியே வந்து செயலலிதாவை எதிர்த்தால் அதை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதே நேரத்தில் இந்த முறை ஏதாவது ஒரு கூட்டணியை அமைக்காவிட்டால் தேமுதிக கூடம் காலியாகிவிடும் என்பது விசயகாந்தின் அச்சம்.

கருணாநிதிக்கு பின்னர் திமுகவை சிதறாமல் கட்டுக்குள் வைக்கும் தலைவர்கள் இல்லை. 45 வருடங்கள் ஒரு தலைவரின் கட்டுக்குள் இருக்கும் கட்சி அந்த தலைவருக்கு பின்னர் சிதறிப்போகும் என்பது நிதர்சனம். அதை விட குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி உடையமால் இருந்தால் அது உலகமாக அதிசயமே. அப்படி ஒரு அதிசயம் நடக்காது என்பது சதாரண குடிமகனுக்கு கூட தெரியும்.

கருணாநிதிக்கு பின்னர் தமிழக அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சிதறல்களை சிந்தாமல் சேர்த்துக்கொள்ளும் சாணக்கியம் இருந்தால் ரசினி அரசியலில் செயிப்பது நிச்சயம்.


அந்த தருணத்திற்காக தான் ரசினி காத்திருக்கிறார் என யூகிப்பது சரியானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இன்று இரவு ராசா கைது ? : மத்திய அரசு கவிழும் சூழல்



ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் 

செய்தி படிக்க இங்கு க்ளிக் ...

அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது



இன்று இரவு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்படலாம். அடுத்த கனமே மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பபெற திமுக தயாராகிவருகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் - உளவுதுறை அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டுவரும் செய்தியின் அடிப்படையிலேயே அமைகிறது இந்த செய்தி.

இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திடீர் என நேற்று மாலையே முதல்வர் வருகை ரத்துசெய்யப்பட்டது. இதற்கு முதல்வரின் உடல்நிலை சரியில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் மனநிலை தான் காரணம் என்பது இலைமறை செய்தி.

ராசா கைது குறித்து நேற்று காலையே முதல்வருக்கு பிரணாப் முகர்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த கருணாநிதி, ராசா கைது செய்யப்பட்டால் உடனடியாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திமுக திரும்ப பெரும். அதே போல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், திமுகவுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் விபரத்தையும் கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

கருணாநிதியின் இந்த அதிரடி காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் என்பதை போட்டு உடைத்துள்ளார் பிரணாப் முகர்சி.

கனிமொழி தற்கொலை செய்துகொள்வதாக சொன்ன நீராராடியாவின் தொலைபேசி பேச்சால் கனிமொழி தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அதையும் மீறி கனிமொழி வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்த திட்டமிட்டிருப்பது தான் திமுக வை உச்ச கோபத்திற்கு கொண்டுபோயுள்ளது.

இந்த பிரச்சனையை தன்மான பிரச்சனையாக கருதி மத்திய அரசை கவிழ்க்கும் முயற்சியில் தீவீரமாகியுள்ளார். அதே நேரத்தில் செயலலிதாவின் ஆதரவை நம்பவும் காங்கிரசு தயங்குகிறது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு காங்கிரசு வந்துள்ளதாக தெரிகிறது.

இன்று நள்ளிரவு முதல் மத்திய மாநில அரசியல் சூடு அனல்பறக்கபோகிறது.

Dec 9, 2010

இது எந்தநாட்டு கதை: கண்டுபிடிப்பவர்களுக்கு பம்பர் பரிசு

ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல்படும் ஒரு பெண்ணை வைத்து வளைத்துபோட்டனர். திருமணம் முடிந்து எதிர்பார்த்தது போல அரசரும் கொள்ளையர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்.

நாட்டின் சொத்து வண்டி வண்டியாய் கொள்ளை போனது. இதை பார்த்த நாட்டுமக்கள் கொந்தளித்தனர். அயல்நாட்டு கொள்ளையர்களை பிடித்து தண்டிக்கவேண்டும் என கோசமிட்டனர். அரசரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையர்கள் தங்கள் கைபாவையிடம் முறையிட்டனர்.

உடனே அரசனான தன் கணவரை மிரட்டினார் அந்த பெண். எங்கள் ஊர்காரர்களை சிறையில் அடைத்தால் நான் இந்த நாட்டைவிட்டே ஓடிவிடுவேன். இந்த நாட்டுகுடியுரிமையை இன்னும் நான் தற்காலிகமாக தான் வைத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துவிடுவேன். அப்புறம் உங்கள் நிலை அவ்வளவு தான். என்று மிரட்டியுள்ளார்.

மனைவியின் மிரட்டல்களால் மனஉழைச்சலுக்கு ஆளான ராசாவும் கொள்ளையர்களின் கைபாவையாக நடித்தார். என்றிருந்தாலும் ராசா நம்மை காட்டிக்கொடுத்துவிடுவான். ராசாவை விட நம்நாட்டு பெண்ணே ராணியானால் வசதியாக இருக்குமே என கொள்ளைகூட்டம் திட்டம் போட்டது. இதற்கு ராசாவின் கூட்டாளிகளில் சிலரும் விலைபோனார்கள்.

அப்போதைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த பக்கத்துநாட்டு உயிர்போராட்டத்தை இதற்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். பலபல பேரங்கள். பக்கத்து நாட்டில் ராசாவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து சிலரை மூளை சலவை செய்தார்கள். அவர்களை வைத்து கச்சிதமாக ராசாவை கொன்றார்கள்.

ராசா கொல்லப்பட்டதும் பழியை தூக்கி பக்கத்துநாட்டு போராளிகள் மீது போட்டார்கள். நாடே கொந்தளித்து நாசமானது.

ஆனால் ராசா இறந்ததும் கொள்ளை கூட்டத்திற்குள் பங்கு பிரச்சனை வந்தது. ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்போம் என ஒருவருக்கு ஒருவர் மிரட்டிக்கொன்டனர். இதனால் கொள்ளை கும்பலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்காலிகமாக திட்டத்தை ஒத்திவைத்தனர்.

உடனடியாக ராசாவுக்கு பின் மனைவியை ராணிக்கினால் சந்தேகம் வந்துவிடும். எனவே ராசாவின் மனைவிக்கு மனஉளைச்சல் வந்தது போல நடிக்கவைத்தார்கள். அதற்கு மாற்றாக நன்றாக பேசக்கூடிய ஆனால் வாயே திறக்காத ஒருவரை ராசாவாக்கினார்கள்.

காலம் கனிந்ததும் திட்டம் போல தங்கள் நாட்டு பெண்னை ராணியாக்க பார்த்தார்கள். ஆனால் நாட்டின் சட்டம் சில சந்தேகம் எழுப்ப உடனடியாக சுதாகரித்தது கொள்ளை கும்பல்.

மீண்டும் ஒரு வாய்திறக்காத பூம்பூம் மாட்டை ராசாவாக்கினார்கள். அவர் பேருக்கு தான் ராசா. ஆட்சி அதிகாரம் எல்லாம் இவர்கள் எதிர்பார்த்தது போல ராணியிடம் தான்.

மீண்டும் அதிகப்படியான கொள்ளை நடந்தது. ஆனால் ராணி மகுடம் சூடும் நாள் தான் தள்ளிக்கொண்டே போனது.

உங்கள் விருப்பபடி ராசாவையே கொன்றுவிட்டீர்கள் பரவாயில்லை. ஆனால் என்னால் இன்னும் ராணியாகமுடியவில்லையே. அதற்கு எதாவது செய்யுங்கள் என்று கொள்ளை கும்பலிடம் அந்த பெண் முறையிட்டார்.

இதற்கும் ஒரு திட்டம் போட்டது கொள்ளை கும்பல். ராசா என்ற பெயருடைய ஒரு எதிர்ஆடு கூட்டத்திற்குள் இருந்தது. இந்த ஆட்டை பலிகடாவாக்கி காரியத்தை சாதிக்க திட்டம் தீட்டினார்கள்.

நினைத்தபடியே கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டார்கள். பலியாடும் பலியிடப்பட்டு விட்டது. இனி ராணி மகுடம் சூடவேண்டியது மட்டும் பாக்கி.

ராணி மகுடம் சூட்ட வேண்டும். இயன்றவரை நாட்டை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கவேண்டும். இறுதியில் ராணியின் தற்காலிக குடியுரிமையையும் ரத்து செய்து விட்டு ராணியோடு தங்கள் சொந்தநாட்டில் செட்டிலாகிவிடவேண்டும். இதுதான் கொள்ளை கும்பலின் திட்டம்.

நாட்டுமக்கள் அப்போதும் சொல்வார்கள் ‘‘வாழவந்த மருமகளுக்கு இப்படி ஒரு நிலமையா? என்ன இருந்தாலும் ஒரு பொண்னுக்கு பொறந்த வீடு தான் தஞ்சம்.’’

இது கதையல்ல நிசம்...

தொடரும்...  

அலைகற்றை ஊழலும் ராசீவ் கொலையும்

‘‘நான் ஊழலை பொறுக்காதவள்’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா.

இந்திய வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய ஊழல்கள் நாட்டையே உலுக்கியது.

1. போபர்சு ஊழல்
2. அலைகற்றை ஊழல்

இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு, இந்த இரண்டு ஊழலிலும் நிழல்உலகமான இத்தாலியா நாட்டுக்கு தொடர்பு உண்டு.

இந்தியா இத்தாலி நாடுகள் நட்பை தாண்டி இத்தாலியா என்றொரு நிழல்உலக நாடு இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

போபர்சு ஊழலில் முக்கிய குற்றவாளி குவோட்ரோசியை எல்லோருக்கும் தெரியும். சர்வதேச போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் இந்த குற்றவாளி பலமுறை பிடிபட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த குற்றவாளியை காப்பாற்றுவதில் தன் கணவனை கூட தூக்கிவீசிவிட்டார் ஒருபெண். இதனால் பலமுறை கணவரின் கண்டிப்புக்குள்ளானது தனி கதை.

போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசியை காப்பாற்ற ராசீவ், நரசிமராவ், மன்மோகன் என்ற மூன்று பிரதமர்களை ஆட்டி படைத்த சோனியாவுக்கும் குவாட்ரோசிக்கும் உள்ள தொடர்பை சுவிடன் புலனாய்வு போலீசார் ஏற்கனவே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

சர்வதேச போலீசாரே குற்றவாளி என அறிவித்த தலைமறைவு குவாட்ரோசியை அப்பழுக்கற்ற அப்பாவி என சோனியா வெளிப்படையாக சொன்னபோது உலகமே மூக்கில் விரல்வைத்தது.  

எப்படியோ ராசீவை கொன்றதோடு போபர்சு ஊழல் மர்மங்களையும் அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டனர். ஆனால் உண்மை பலகாலம் தூங்காது. எதாவது ஒரு விதத்தில் விழித்து உயிர்த்து வரும்.

இப்போது அலைகற்றை ஊழல் வடிவில் மீண்டும் உண்மை உயிர்த்துள்ளது.

நாட்டை உலுக்கிய போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசிக்கு அலைகற்றை ஊழலிலும் தொடர்பு இருப்பதை யூகிக்க தேவையில்லை.

காரணம் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் தான் அலைகற்றை ஊழலின் ஆணிவேர்கள். ராசா, மன்மோகன் திமுக இவர்கள் எல்லாம் வெறும் பகடைகாய்கள் மட்டுமே.


அலைகற்றை ஊழல் வழக்கும், விசாரணையும் இத்தாலியா என்ற நிழல்உலக நாட்டை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.


அது நடந்தால் ‘‘சோனியா, ராசீவ் மாமியார், சில நிழல்உலக தொழில்அதிபர்கள் இவர்களிடம் விசாரித்தால் ராசீவை கொன்றது யார் என்ற உண்மை வெளியில் வரும்’’ என்று சுப்பிரமணியசுவாமி சொன்னது மீண்டும் யோசிக்க வைக்கும்.

Dec 8, 2010

அலைகற்றை ஊழல் : சோனியா + தாமசு (தப்பித்தார் ராசா)

அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. 

நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா செய்வேன் என்ற மன்மோகன்சிங்கின் அதிரடி முடிவு சோனியாவுக்கு உள்ளுர மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய தலைவராக உள்ள பி.செ.தாமசுவுக்கு உச்சநீதிமன்றம் தரும் தொடர் கண்டணங்கள் தான் சோனியாவுக்கு அடிமேல் இடியாக விழுகிறது.

மன்மோகன்சிங் ராசினாமா செய்தால் அடுத்து வீரமங்கையாக பிரதமர் பதவியில் அமர்வது தான் சோனியாவின் திட்டம். அதற்காக சனாதிபதி மாளிகை, சபாநாயகர் மட்டம் என அனைத்து தரப்பிலும் வழி ஒதுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே எழுந்த குடியுரிமை பிரச்சனைக்கும் முற்றுபுள்ளி வைத்தாயிற்று. 

எல்லாம் சரியாக அமையும் நேரத்தில் தான் தாமசு பிரச்சனை வெடிக்கிறது.

கேரளாவை சேர்ந்த தாமசுவுக்கும் காங்கிரசுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கெட்டிக்காரர். இவரை போன்ற ஆட்சிபணி அதிகாரிகளால் தான் ஒன்றும் தெரியாத அமைச்சர்கள் ஊழலுக்குள் தள்ளப்படுகின்றனர். அமைச்சர்களுக்கு ஊழல்செய்ய வழிகாட்டுவது, வற்புறுத்துவது என இவர்மேல் ஏற்கனவே பல குற்றசாட்டுகள் உள்ளது.

கேரளாவில் பாமாயில் இறக்குமதியில் வெளிப்படையாக ஊழல்குற்றசாட்டுக்கு உற்படுத்தப்பட்டார் தாமசு. இவரின் அசாதிய திறமை தான் இவரை மத்திய தொலைதொடர்பு துறை செயலராக மாற்ற உதவியது. தாமசுவின் சேவை தொலைதொடர்புதுறைக்கு மிகவும் தேவைப்பட்டது. 10 ஆயிரம் கோடி லாபத்தில் இருந்த பி.எசு.என்.எல் நிறுவனத்தை 5 ஆயிரம் கோடி நட்டத்திற்குள் தள்ள இவர் கடும்பணி ஆற்றினார். அதை விட 2ம் தலைமுறை அ¬லைக்கற்றை ஊழலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த அனைத்து பெருமையும் தாமசுவை சாரும். 

சில சர்வதேச தொழில்அதிபார்களின் செல்லபிள்ளையான தாமசு சோனியாவின் செல்லமானது தனிக்கதை.

தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள், தான் செய்த ஊழல்கள் இவற்றை மூடிமறைக்கவும். தப்பிக்கவும் தாமசுவுக்கு சென்ற ஆண்டு ஊழல்தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பதவி கொடுக்கப்பட்டது.

எதிர்கட்சி தலைவர் சுசுமாசுவராசுவின் கடும் எதிர்ப்பை மீறி பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் தாமசுவை ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்தனர். காரணம் சோனியாவின் சிபாரிசு.

தாமசுவுக்கு சோனியா(ஆன்டோனியா) ஏன் சிபாரிசு செய்யவேண்டும்? இங்கு மதம் இனம் என ஏதாவது ஒரு சாயம் பூசினால் அது தவறு. மாறாக ஊழலின் பங்கு அதுதான் முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இனங்க தாமசு ராசினாமா செய்யபோவதாக சென்ற வாரம் செய்தி வந்தது. தாமசுவும் மவுனம் சாதித்தார். சோனியா&தாமசு சந்திப்புக்கு பின்னர், இறுதியாக உறுதியாக ராசினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுவிட்டார் தாமசு. ஆனால் நேற்று நீதிமன்றம் கடுமையாக கண்டித்துவிட்டது. தாமசுவின் நியமனத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சோனியா என்ற ஒற்றை நபர் இந்திய நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆட்சிமன்றம் ஆகியவற்றிற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கிறார். 

ஆனால் சாமனியர்கள் ஐய்யோ பாவம் நம்நாட்டை நம்பி வந்த மருமகள், கணவனை நாட்டுக்காக இழந்தவர், நாட்டுக்காக பேரையே மாற்றிக்கொண்ட காந்தி என்றெல்லாம் இன்னமும் உச்சு கொட்டுகின்றனர்.

நடகட்டும்... நடக்கட்டும்....

அரசியல்வாதிகளும் அரசுஅதிகாரிகளும் கைகோர்த்துவிட்டால் இந்த நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.

Dec 7, 2010

அலைகற்றை ஊழல் : பிரதமர் மன்மோகன்சிங் ராசினாமா?

அலைகற்றை ஊழலில் திமுகவை விட காங்கிரசுக்கு அதிகபங்கு இருப்பது தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்பட்சத்தில் பிரதமர் மன்மோகன்சிங் ராசினாமா செய்யகூடும் என தெரிகிறது.

நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை தேவை என எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இதற்கு காங்கிரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

நாடாளுன்ற கூட்டுகுழு விசாரணைக்கு ஒத்துக்கொண்டால் பிரதமர்மன்மோகன் சிங்குக்கு நெருக்கடி அதிகமாகிவிடும். கூட்டுக்குழு முன் விசாரணை கூண்டில் ஏறவேண்டி கட்டாயத்துக்கு பிரதமர் தள்ளப்படுவார். அப்போது ஊழலில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பை காட்டிக்கொடுக்கவேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு உள்ளது.

மேலும் இதில் காங்கிரசை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினால் திமுக கூட்டணி முறியும். அப்படி ஒன்று சம்பவித்தால் எதிர்கட்சிகள் யாரும் தேவை இல்லை திமுகவே போதும் காங்கிரசை வறுத்தெடுக்க.

இப்படி பல பல சிக்கலில் சிக்கி தவிக்கிறது காங்கிரசு. என்னை விட்டுவிடுங்கள் நான் ஒதுங்கிகொள்கிறேன் என பல முறை சோனியாவிடம் மன்மோகன்சிங் சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஆனால் அடுத்து தானோ அல்லது ராகுலோ பிரதமர் பதவியில் அமரும்வரை அமைதிகாக்க கேட்டுள்ளார் சோனியா.

இன்று அல்லது நாளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரசு ஒத்துக்கொள்ளும். அப்போது நாடுமுழுவதும் மன்மோகன்சிங் மீது ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தும் வேலையில் காங்கிரசு இறங்கும். இந்த அலையோடு மன்மோகன்சிங் ராசினாமா செய்வார். அந்த அலையைபயன்படுத்தி இத்தாலியா அன்னையோ, ராகுலோ பிரதமர் நாட்காலியில் அமரலாம்.

ராசா ராசினாமா அதை தொடர்ந்து நடக்கும் அத்துனை நாடகங்களுக்கும் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் இயக்குனர்களாக இருக்கின்றனர்.


எப்படியோ பலனடைந்தது திமுக, பலனடைவது அதிமுக, பலியானது மன்மோகன்சிங்+ராசா

இதுதான் இறுதியில் மிச்சமடையும்.

Dec 5, 2010

தனிஈழம் அமைவது தமிழக அரசியல் தலைவர்கள் கையில் உள்ளது.

‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 6 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.

சொற்பம் லண்டன் தமிழர்கள் ராசபட்சேவுக்கு தண்ணிகாட்டினார்கள் என்றால் அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் உணர்வை மதித்திருக்கிறது. ஆனால் இங்கோ ?

ஒன்றும் இல்லை, நேற்று கோவையில் இலங்கை எம்.பி விரட்டியடிக்கப்பட்டதே லண்டம் சம்பவம் நடந்ததால் தான். அத இல்லாமல் இருந்திருந்தால் போராட்டகாரர்கள் சிறையி, இலங்கை எம்.பி போலீசு மரியாதையுடன் விழாவிலும் கலந்திருப்பார் என்பது தான் நிதர்சன உண்மை.

இங்கு போராட்டங்கள் ஒடுக்கப்படுகிறது. ஒவ்வொரு போராட்டமும் விலையற்றதாக்கப்படுகிறது. முத்துகுமார் போன்ற பலர் உயிரை மாய்த்தாலும் ஒன்றும் சம்பவிப்பதில்லை. காரணம் அரசியல் நாடகங்கள்.

இதை மாற்ற வேண்டும். இந்தியாவில் ஈழத்துக்கான ஆதரவு வந்துவிட்டால் போதும் ஈழம் மலர்ந்துவிடும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது விடுதலைபுலிகள் அமைதிகாப்பதும் இந்த காரணங்களுக்காக தான். சென்ற மாவீரர் நாள் அறிக்கையும் அதை தான் வலியுறுத்தி உள்ளது.

தற்போது மீண்டும் ஈழக்குரூரங்களை உலகம் கவனிக்க துவங்கியுள்ளது. இதை நீர்த்துப்போசெய்ய முயற்சிகள் நடக்கலாம். அதைவிட அரசியலாக்கி தேர்தலில் ஆதாயம் தேடும் அவலங்கள் அரங்கேரலாம்.

தயவு செய்து தமிழர்களே அதை அனுமதித்துவிடாதீர்கள்.

வெருக்கப்படக்கூடியவர்கள் என்றாலும் வேறு வழி இல்லை, தமிழ் ஈழம் அமைய ஒரே வழி தமிழக அரசியல் தலைவர்கள் மட்டும் தான்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் மனமாற்றம் தான் மிக முக்கியம். இது அரசியல்வாதிகளின் கையில் சிக்கியுள்ள போலிசனநாயகநாடு.

இங்கு நாம் என்ன செய்தாலும் ஆட்சியாளர்களை தாண்டி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. ஆட்சியாளர்கள் அனுமதித்தால் மட்டுமே நம் போராட்டங்கள் வெற்றிபெறும்.

ஈழம் அமைய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? ஆட்சியாளர்கள் மனதில் ஈழகொடூரங்களை எப்படி பதியவைப்பது. அவர்கள் கல்நெஞ்சை எப்படி இளக செய்வது?

Dec 4, 2010

லண்டன் துவக்கம், கோவை தொடர்ந்து அடுத்து டெல்லி

ராசபட்சேவுக்கு லண்டன் மக்கள் கொடுத்த அடிக்கு தொடர் பலன் கிடைத்துள்ளது.

இன்று கோவையில் மேலும் ஒரு இலங்கை எம்.பி பின்வாசல் வழி தப்பித்து ஓடினர்.

இலங்கையை புறக்கணிக்கும் அமைதி போராட்டம் தொடரட்டும். அடுத்து நாம் சாதிக்வேண்டியது ஒன்று உள்ளது. அது டெல்லி தமிழர்கள் கையில் உள்ளது.


தற்போது விழுந்த அடிக்கு வலியாற்றவும், உலக அரங்கில் எற்பட்ட அவமானத்தை சரிகட்டவும் அடுத்து உடனடியாக இத்தாலியா அன்னையிடம் வருவான் ராசாபட்சே.

இந்திய சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுதேவானந்தா இந்தியாவின் ஈடுஇணையில்லா அன்னையின் உயிர் தோழர் ராசபட்சேவின் நண்பர் என்ற ஒரே காரணத்தை வைத்து, அரசமரியாதையுடன் வருகிறார், போகிறார். இந்திய சட்டமேதைகள் எல்லம் கேனப்பயல்கலாக இளித்துக்கொண்டிருக்கின்றனர்.

பேசாமல் பேரை மாற்றிவைத்துக்கொள்ளலாம் இத்தாலி அன்னையின் நாடு என. சுருக்கமாக எழுதினால் இத்தாலியா என்று வரும்.

அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.

அலைகற்றை ஊழல் : வீரப்பமொய்லி ராசினாமா?

அலைகற்றை ஊழல் விவகாரத்தில் சட்டஅமைச்சர் வீரப்பமொய்லியும் ராசாவும் இணைந்து கூட்டுசதியில் ஈடுபட்ட விவரங்கள் நேற்று அம்பலமானது.

நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில் ராசாவுக்கு ஆதரவாக வாதாடிய சட்டஅமைச்சகம் நீதிபதிகளின் கண்டிப்புக்கு உள்ளானது.

பிரதமரின் ஆலோசனைகளை ராசா மதிக்கவில்லை என்ற பிரதமரின்(வழக்கறிஞர்) வாதத்திற்கு, ராசாவின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். அப்போது ராசாவுக்கு ஆதரவாக சட்ட அமைச்சகமும் வாதிட்டது. இது பிரதமருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. 

இதை தொடர்ந்தே அலைகற்றை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனையை மீறி ராசாவுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்படது. இன்று இதுகுறித்த மேலும் சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அலைகற்றை ஊழலில் பெரும்தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து வீரப்பமொய்லி ராசினாமா செய்யக்கூடும் எனதெரிகிறது.

ஆட்டம் சூடுபிடித்து விட்டது.

1.76 லட்சம் கோடியை இழந்ததற்கு இந்தியமக்களுக்கு அலைகற்றை ஊழல் மற்றும் 5 அமைச்சர்கள் ராசினாமா என்ற நாடகம் பொழுதுபோக்காக அமைவது தான் மிச்சம்.

ஆகா... ராசா, வீரப்பமொய்லி அப்புறம் மீதி 3 பேரு யாரு?....

பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரசு அரசே கூண்டோடு ராசினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அந்த கட்சியின் தத்து அன்னைக்கு பங்கு இருக்காம்.

 எப்படியோ நம்ம ராசா தப்பிச்சுட்டாரு !!!
ராசா தனிமரம் இல்லை, அது ஒரு தோப்பு

Dec 3, 2010

அலைகற்றை ஊழல் : ராசா & வீரப்பமொய்லி கூட்டுசதி அம்பலம்

திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி பலமாக உள்ளது என்பதை கருணாநியை விட வீரப்பமொய்லி அடிக்கடி நினைவூட்டி வந்தார்.

வீரப்பமொய்லியின் அக்கறை எங்களை போன்ற ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் வியப்பை தந்தது. ஆனால் அதற்கு காரணம் இப்போது தான் புறிகிறது.

வேறு ஒன்றும் இல்லை அலைக்கற்றை ஊழலில் அவருக்கு கனமான பங்கு இருந்திருக்கிறது. கூட்டணி உடைந்தால் குட்டுவெளியில் வந்துவிடும் என்ற பயத்தில் தான் வீரப்பமொய்லியின் பேட்டிகள் பறந்துவந்திருக்கிறது.

அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ராசாவின் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே மத்திய சட்ட அமைச்சகம் தான். வீரப்பமொய்லியின் பரிந்துரையை தான் அப்படியே பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார் ராசா. 


2.த.,அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவரச வீதிகளுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  

இந்த ஆவணங்கள் நேற்று(3.4.2010) நாடாளுமன்றத்திலும் பின்னர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.

இரு தினங்களுக்கு முன் ராசாவுக்கு துணையாக பிரதமர் மன்மோகன்சிங் விசாரணை வட்டத்திற்குள் வந்தார். இன்று வீரப்பமொய்லியும் வந்துள்ளார். விரைவில் எல்லோரும் எதிர்பார்க்கும் சோனியாவும் வருவார்.

விஞ்ஞானரீதியில் ஊழல் செய்யும் தலைவரை இந்த வட்டத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம். ஆனால் அவரின் கருத்து வாரிசுக்கு நிச்சயம் ராசாவுக்கு பக்கத்தில் இடம் உண்டு.

Dec 2, 2010

இந்தியன் என்பதில் கேவலப்படுகிறேன்.

அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.

உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள். 

ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.

இந்தியர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பள்ளிகூடம் படிக்கும்போதிருந்தே உறுதிமொழி எடுத்த அப்பாவி இந்தியர்கள் 100 கோடி பேரில் நானும் ஒருவள்.

இந்தியர் என்பவர்கள் யார்?

மனிதநேயத்துக்கு மதிப்பளிப்பவர்கள் தான் இந்தியர்கள். இது ஒரு ஆன்மீக பூமி. அகிம்சை என்பதற்கான அர்த்தம் இந்தியர்களிடம் இருக்கும். இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அப்பாவி இந்தியரும் உறுதிமொழி எடுக்கின்றனர்.

ஆனால் இன்று ?

இந்த 21ம் நூற்றாண்டில் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய ராசபட்சேவுக்கு லண்டன் தமிழர் பாடம் புகட்டினர். இங்கிலாந்து மக்கள் அதற்கு முழு ஆதரவு அளித்தனர்.

ஆனால் அதே ராசபட்சேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
மனித உயிர்களை குடித்தவனுக்கு இந்தியர்கள் ராச மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் நான் இந்தியன் என்பதில் மிகவும் கேவலப்படுகிறேன்.

ராசாவை சாதி காப்பாற்றாது, சட்டம் காப்பாற்றும்!

அலைகற்றை ஊழலில் சிக்கியுள்ள ராசாவை காப்பாற்ற திமுக உட்பட சில கட்சிகள் சாதியை கையில் எடுத்திருப்பது கேவலமானதாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியமான தொலைதொடர்பு மேம்பாட்டில் சில நெறிமுறைகளை தளர்த்தி கையான்டிருக்கிறார் ராசா.

ராசாவின் செயல்பாட்டால் நாட்டு இழப்பு ஏற்பட்டது தெளிவாக இருக்கிறது. அதே நேரத்தில் இழப்புக்காக ராசாவை குற்றவாளியாக சித்தரிக்க முடியுமா? இதுதான் கேள்வி.

ராசா ஏன் விதிமுளைகளை தளர்த்தினார்? ஏன் சந்தை மதிப்பை குறைத்து கொடுத்தார்? இதனால் ராசாவுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது? இந்த கேள்விகளை பொருத்து தான் ராசா குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

தவறு செய்த ராசாவை குற்றவாளி அல்ல என நிரூபிக்க சாதியை கையில் எடுப்பதில் எந்த பலனும் இல்லை. அது மட்டமான அரசியல் ஆதாயத்துக்கு வேண்டுமானால் பயன்படும்.

சட்டப்படி பிரதமர் வழிகாட்டுதல் மற்றும் ஒப்புதல் படி தான் ராசா செயல்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிக்பெரிய பொருளாதார மேதை மன்மோகன்சிங் ஒப்புதலுடன் நடந்த அலைகற்றை உரிமம் ஒதுக்கீட்டில் எப்படி இழப்பு வரும்? 


தைரியமாக இந்த அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருக்கலாம். ஆனால் கூட்டணி?

பிரதமரின் ஆலோசனைகளை ராசா கேட்கவில்லை, அதை மீறி சுயமாக செயல்பட்டுள்ளார் என மன்மோகன்சிங் நீதிமன்றத்தில் வாதாடலாம்.

ஆனால் எதார்த்தமாக வரும் இந்த கேள்விகளுக்கு மன்மோகன்சிங் என்ன பதில் சொல்லப்போகிறார்.

1. அப்போதே ராசாவின் செயல்பாட்டால் மிகப்பெரிய இழப்பு என்பது பிரதமருக்கு தெரிந்துள்ளது. எச்சரித்துள்ளார். நன்று


2. ஆனால் பிரதமரின் ஆலோசனை மீறி சுயமாக செயல்பட்டு நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய அமைச்சரை  பிரதமர் ஏன் உடனடியாக பதவிநீக்கம் செய்யவில்லை?


3. இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூட்ட இழப்புக்கு காரணமான அமைச்சரை பிரதமர் ராசினாமா செய்ய கோராதது ஏன்? மீண்டும் அமைச்சரவையில் அதே துறையை ஒதுக்கியது ஏன்? 


4. இறுதியில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பிறகு தன் தலைவர் கருணாநிதியின் ஆணைக்கு இணங்க ராசா சுயமாக ராசினாமா செய்தாரே தவிர பிரதமர் ராசினாமா செய்ய கோரவில்லையே ஏன்?

(இதெல்லாம் சட்டப்படி நடந்தது).

ஆக ஒரு பொருளாதார மேதையான பிரதமரே இந்த விடயத்தில் தன் பதவியை தக்க வைக்க சுயநலமாக செயல்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது சாதாரண அமைச்சர் ராசாவின் மீது எப்படி குற்றம் சாட்ட முடியும்?

இந்த இழப்புக்கு முழு பொருப்பு இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங் தான்.

இது தான் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணையின் இறுதி முடிவாக இருக்கபோகிறது. அதே கோணத்தில் தான் நீதிமன்றத்தில் வாதங்களும் முன்வைக்கப்பட இருக்கிறது.

எனவே சாதியை கொண்டு ராசாவை காப்பாற்ற நினைக்கும் சாதி அறிவாளிகளே. ராசாவை உங்கள் சாதி காப்பாற்றாது, சட்டம் தான் காப்பாற்றும். ஆதலால் சட்டபுத்தகத்தை படியுங்கள்.., சாதிபித்தை தூக்கி எறியுங்கள்...

Dec 1, 2010

அலைகற்றை ஊழல் : பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு என்ன?

இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோன்சிங்கின் பங்கு தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

மன்மோகன் சிங்கின் பங்கை வைத்து தான் இனி அடுத்தடுத்த அரசியல் நாடகங்கள் அரங்கேறப்போகிறது. குறிப்பாக காங்கிரசில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் காயாக அலைகற்றை ஊழல் பயன்படுத்தப்பட இருக்கிறது.

நாடளுமன்ற கூட்டு குழுவிசாரணை தேவை என எதிர்கட்சிகள் கேட்பதும், முடியாது என காங்கிரசு நடிப்பதற்குமான பின்னனி மன்மோன் சிங் என்ற பூம்பூம்... தான். 

அது குறித்து விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்

தற்போது அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கின் பங்கு என்ன என்பதை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே எடுக்கலாம் என்ற உரிமையை வம்புக்கு கேட்ட தயாநிதிமாறன் கடிதம் தான் மன்மோகன் சிங்குக்கு முதல் செக்.

வேறு வழியில்லாமல் தலையாட்டிய பூம்பூம் , அடுத்தடுத்த கேள்விகளுக்கும் தலையாட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.

பிரதமர் வழிகாட்டுதலில் தொலைதொடர்பு துறை அமைச்சர் முடிவுசெய்து கொள்ளலாம் என்ற நெறிமுறையின் அரசியல் சாணக்கியம் இந்த பொருளாதார மேதைக்கு தெரியவில்லை.?

தயாநிதிமாறன் பதவி பறிபோனது, ராசா பதவிக்கு வந்தார்.

தயாநிதிமாறன் வகுத்துவைத்திருந்த வழியில் ராசா செயல்பட்டார். ஆனால் என்ன கொஞ்சம் அவசரப்பட்டு அதிகஅடி தாண்டி விட்டார்.

தற்போது விழுந்துவிட்ட ராசாவுக்கு தைரியம் சொல்வது, எதிரியானாலும் தயாநிதிமாறன் செய்துவைத்த நெறிமுறை தான்.

அதென்ன நெறிமுறைகள்

1. பிரதமர் மற்றும் டிராய் வழிகாட்டுதலில் துறை அமைச்சர் இறுதி முடிவு எடுக்கலாம்.


2. பாரதிய சனதா ஆட்சி காலத்திலேயே வகுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க தரும் சலுகை விதி

இந்த இரண்டையும் சரியாக பயன்படுத்தி ராசா சாதித்துவிட்டார். ( குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஊழல்)

ஒவ்வொரு அடியிலும் உள்ள ஆபத்து மன்மோகன் சிங்குக்கு தெரியமல் இல்லை. ஆனால் சிலரின் கடைகண் அசைவில் அத்தனைக்கும் பூம்பூம் மாகவே வேசம் போட்டார்.

ஏலம் முடிந்தது. அப்படி ஒன்றும் எளிதில் ஊழலை கண்டுபிடித்துவிட முடியாது என்ற தைரியம் ராசவை விட மன்மோகன் சிங்குக்கு நிறையவே இருந்தது.

ஆனால் அடுத்த 6 நாளில் காத்திருந்தது பேராபத்து.

தொழில்தொடர்பை ஊக்குவிக்கும் சலுகையில் கொடுக்கப்பட்ட 100 ரூபாய் பொருள் உலக சந்தையில் ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டதும் பிரச்சனை தொடங்கியது.

100 ரூபாய் எங்கே.. ஆயிரம் கோடி எங்கே ?

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது. ஏலம் பெறும் வரை மன்மோகன்சிங்கின் பேச்சை கேட்ட எல்லோரும் அடுத்த நாளே தன் சுயரூபத்தை காண்பித்துவிட்டனர்.

அன்று முதல் இனி பிரதமர் பதவியை ராசினாமா செய்யும் வரை மன்மோகன் சிங் நிம்மதியாக உறங்கவில்லை, உறங்கப்போவதில்லை.

நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதை என்ற பெயர் எடுத்தவர் மன்மோகன்சிங்

ஆனால் நாட்டின் சுதந்திர வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் 1.76 லட்சம் கோடி இழப்பீடு இந்த பொருளாதார மேதை பிரதமராக இருக்கும் போது எப்படி சாத்தியமாயிற்று ?

சட்டப்படி எல்லாம் பிரதமர் வழிகாட்டுதல் படிதான் நடந்திருக்கிறது. அப்படி என்றால் 1000 ரூபாய் பொருளை 100 ரூபாயுக்கு விற்பது தான் மன்மோகன்சிங் படித்த பொருளாதாரமா?

அடிமாட்டு விலைக்கு விற்க பொருளதார மேதை தேவை இல்லை. 

எல்லாவற்றிக்கும் பூம்பூம் மாக தலையாட்டியது தான் அலைகற்றை ஊழலில் மன்மோகன்சிங்கின் பங்கு. ஆனால் இந்த பங்குதான் இனி இந்திய அரசியலை புரட்டிப்போடும் விடயமாக மாறப்போகிறது.

தொடர்ந்து பார்ப்போம்...

Popular Posts