கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.
அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :
தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்
தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்
இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.
முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.
என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12.
மெய் எழுத்துக்கள் 18.
உயிர்மெய் எழுத்துக்கள் 216.
ஆயுத எழுத்து 1.,
மொத்த எழுத்துக்கள் 247.
இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன்.
இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?
தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது.
தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.
உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.
கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.
தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள்
1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது
நியாயமான காரணங்கள் தான்.
இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.
இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.
தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.
ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.
இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.
ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்
இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், என்பது சாத்தியப்படுகிறது.
ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.
உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.
ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
அடுத்து ஷ
ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை,
ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்
எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.
அடுத்து ஜ
இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.
இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே
ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..
அடுத்து ஹ
ஃக, ... இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.
இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும்.
இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும்.
வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?
தமிழர்கள் சிந்திப்பார்களா?
பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள்.
கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமா...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல யுனிக்கோடு எழுத்துரு...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
எந்திரன் கதை திருடப்பட்டதா? அமுதா தமிழ்நாடன் கதையை படித்துவிட்டு நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்... ( 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய இந்...
-
கோவை, திருப்பூர், வலைபதிவர் கவனத்திற்கு.... கோவையில் இருந்து தற்போது வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மலர் வாரசெய்தி இதழ், வரும் தை திங...
-
இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்...
மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் .வாழ்த்துக்கள் .
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎனக்கு உங்கள் கூற்று மிகவும் சரியானதாகவே தோன்றுகின்றது.
வடமொழி எழுத்துக்களை புறக்கணிக்க உங்களது உத்தி மிகவும் அருமை. ஆயுதத்தின் அருமையை தமிழக அரசுக்கும் புரியும்படி செய்ய வேண்டும். தமிழக அரசு சகோதர சண்டையில் இருந்து வெளியில் வந்து தமிழர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும்.
ReplyDeleteசிந்திக்க வேண்டிய ஒரு சிறந்த பதிவு. நிச்சயமாய் தமிழைக்காக்க ஆயுதம் மறுபடியும் ஏந்தவேண்டிய நிலை நிர்க்கதியான ஈழத்தமிழருக்கு.யாழ்
ReplyDelete