தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் கட்டணசேவை அடிப்படையில் உங்கள் இடுகைகள் காட்டப்படும். இதுகுறித்து புகார்கள் இருந்தால் தமிழ்மணத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்பது தான் மின்னஞ்சலின் சுருக்கம்.
என்ன கொடுமை இது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் என் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
பத்திரிக்கைகளில் எழுத முடியாததை வலைபதிவில் எழுதுகிறோம். இந்த எழுத்தை வைத்து நாங்கள் ஒன்றும் பணம் சம்பாதிப்பதில்லை. விளம்பரம் செய்துகொள்வதில்லை. தமிழ்மலர் என்ற எனது இணையதளத்துக்கு கூட இணைப்பு கொடுக்கவில்லை.
பதிவர்களிடம் இருந்தே பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற தமிழ்மணத்தின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
உங்கள் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றப்போகிறோம். இதுகுறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் என எனக்கு முன்அறிவிப்பு செய்திருக்கலாம். அதை செய்யாமல் திடீர் என என் வலைபதிவை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்மணத்தின் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. இனிமேல் நான் தமிழ்மணத்தில் இணைக்கபோவதில்லை.
தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்.
இனியாவது வேறு யாருக்காவது இதை செய்யும் முன்னர் தயவு செய்து ஒரு முன் அறிவிப்பை கொடுங்கள். அதுதான் பண்பாடு நாகரீகம்.
Showing posts with label அனுபவம். Show all posts

Dec 23, 2010
Dec 17, 2010
கோவை பத்திரிக்கையாளர்களை குலுக்கிய குலுக்கல் லாட்டரி
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்கையாளர்கள் கூட்டுகளவானிகளாகும்போது அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா?
நான் எழுத தயங்கியதை நண்பர் ரா.வேலுசாமி எழுதிவிட்டார். அந்த நிகழ்வை நானும் கொஞ்சம் படம்பிடித்து காட்டிவிடுகிறேன்.
கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை ஒதுக்கும் அரசு உத்தரவுக்கான அடிதடி தான் அது.
விண்ணப்பித்ததில் 162 பத்தரிக்கையாளர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 130 பேருக்கு தான் இடமாம். இந்த 130 பேரை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தினர். எதற்காக இந்த குலுக்கல்?
தகுதியான 162 பேருக்கும் இடம் தருவது தான் சரியான வழிமுறை. ஆனால் திடீர் என 130 பேருக்கு என ஒரு வட்டம் போட்டார்கள். இதற்கான காரணம் கேட்ட போது அவ்வளவு தான் இடம் இருக்கிறதாம். ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.
162 பேரில் இருந்து 130 பேரை தேர்ந்தெடுக்க தகுதிமுதிர்ச்சி அடிப்படையை கையாளலாம் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வேடிக்கையான குலுக்கல் நடந்தது.
குலுக்கல் முடிவில் குலுக்கல் நடத்திய மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒரு கேள்வியை கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் தான் எல்லோரையும் தூக்கிவாரி போட்டது.
இன்னும் இடமே தேர்வு செய்யவில்லையாம்!
இடமே தேர்வு செய்யாமல் எப்படி 130 பேருக்கு தான் இடம் என்றார்கள்? எதற்காக இந்த குலுக்கலை நடத்தினார்கள்? இதன் பின்னால் இருக்கும் உந்து சக்தி என்ன?
இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் ஒரு நபருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நில அளவை கூடுதலாக கேட்கும் பத்திரிக்கையாளர்கள், இருக்கும் இடத்தை தகுதியான அனைத்து சக பத்திரிக்கையாளர்களுக்கும் பகிர்ந்துஎடுக்க மறுக்கிறார்கள்.
இருக்கும் இடத்தை தகுதியானவர்களுக்கு பகிர்ந்துகொடுத்தால் எதற்கு இந்த குலுக்கல் அசிங்கம்?
குலுக்கல் நடத்தியது தவறு. இடமே தெரிவுசெய்யாமல் குலுக்கல் நடத்தியது மிகப்பெரிய தவறு. மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு குலுக்கலுக்கு பத்திரிக்கையளார்கள் கைதட்டி ஆர்ப்பரித்தது உண்மையில் கேவலமாக இருந்தது.
எடிசனே இன்னும் வெளிவராத டைம்சு ஆப் இந்தியா, கோவையில் நிருபராக ஒரு நாள் கூட பணிபுரியாத பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்களே அல்லாத வடிவமைப்பு துறையாளர்கள், பெயருக்கு கூட வெளிவராத பத்திரிக்கையில் பணிபுரிவதாக சொல்வோர். பத்திரிக்கை முதலாளிகள். மாதம் ஒரு முறை வெளிவரும் இதழ்கள். இவர்கள் எல்லாம் எப்படி கோவையில் உழைக்கும் பத்திரிக்கையாளர்களானார்கள்?
இன்னும் ஏராளம் இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு டாசுமார்க் பார் நண்பர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் என்றால் உண்மையாக உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு என்ன விலைஇருக்கப்போகிறது?
பத்திரிக்கையாளர்களுக்கு சமுதாயம் உச்ச கவுரவத்தை தந்துள்ளது. இதை இப்படி கேவலப்படுத்திக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் கோவை பத்திரிக்கையாளர்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டுள்ளோம். வரட்டும் அப்புறம் இருக்கிறது வேடிக்கை.
உண்மையில் பெரிய தமிழ் பத்திரிக்கைகளில் பணிபுரியும் நிருபர்களுக்கு குறைந்த சம்பளம் தான் கிடைக்கிறது. அன்பளிப்பு வாங்காத நேர்மையான நிருபர்கள் இன்றைய விலைவாசியில் எவ்வளவு கடினப்படுகிறார்கள் என்பது சக பத்திரிக்கையாளர்களு தெரியமால் இல்லை.
ஊருக்கெல்லாம் போனசு கிடைக்க குரல்கொடுக்கும் பத்திரக்கையாளர்கள், தங்களுக்கு போனசு கேட்டால் பணியே இல்லை. தங்கள் நிர்வாகத்தை எதிர்த்து எதற்குமே போராட முடியாத நிலையில் தான் உள்ளனர் பத்திரிக்கையாளர்கள். கிடைக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேர்மையாக பணியாற்றும் நிருபர்கள் உண்மையில் நாட்டின் தலைசிறந்த சமூக சேவகர்கள். இவர்களுக்கு அரசு தரும் சலுகையை கூட சிலர் தட்டிப்பறிப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?
தனக்கு கிடைத்தால் போதும் மற்றவை எப்படியோ நடந்துவிட்டு போகட்டும் என்று இருப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் சாதாரண பொதுமக்கள் அல்ல.
தங்களுக்கு கிடைப்பது நேர்மையாக கிடைக்கவேண்டும். இன்னொருவனுக்கு கிடைக்கவேண்டியதை தட்டி பறிக்ககூடாது. அதே நேரத்தில் நேர்மையற்ற முறையில் கிடைப்பதை ஏற்க கூடாது. அதை நேர்மையாக தரும்படி போராட வேண்டும் இது தான் உண்மையான பத்திரிக்கையாளனுக்கு அழகு.
அரசும், அதிகாரிகளும் செய்யும் ஊழலுக்கு சுயநலனுக்காக பத்திரிக்கையாளர்களே துணை போனால் பத்திரிக்கை தர்மத்தை மூட்டைகட்டி வைக்கவேண்டியது தான்.
Dec 3, 2010
பின்னூட்ட சிரிப்புகள் - 2
ரகீம் கசாலியின் பதிவு அலுவலகத்தில் ஏற்படுத்திய சிரிப்பு அதிர்வுக்கு பின் ‘‘அலுவலக நேரத்தில் வலைபூ எழுது படிக்க கூடாது’’ என்ற விதி நடைமுறைக்கு வந்திடுச்சு
பரவாயில்லை.... முன்பே எதிர்பார்த்தது தான் என்பதால் அதிக பாதிப்பு இல்லை.
ஆனாலும் திருட்டு தனமாக வாசிப்பு தொடர்கிறது. என்னை இன்னும் வாய்விட்டு சிரிக்கவைத்த பதிவு
துபாயிக்கு வேலைக்கு சென்ற அகமது இர்சாத்தின் நேர்முகதேர்வு அனுபவம்.
என் சி.வி.யில தெரிந்த மொழிகளில் ஆங்கிலமும், தமிழும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.. இதையெல்லாம் விட்டுப்புட்டு அவன் கேட்ட கேள்வி இதான்..
கேள்வி : "உனக்கு அரபி தெரியுமா?"
பதில் : "எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"
குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தோம்.

Nov 30, 2010
சோறு கிடைக்குமா?... நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்களா?
இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?
சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.
சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.
தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.
திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?
இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?
இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்
*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.
*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?
ஆண்டவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?

பாவம் அந்த இளைஞர் : மக்கள் தலைவருக்காக மவுனம் காக்கிறார்.
நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப்படாததால் இதுவரை மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றதில்லை.
இன்று ஏதேசயாக சென்றேன். சட்ட மன்றம் போன்ற கம்பீரம் எல்லம் இருந்தது.
70 உறுப்பினர்கள் வருகையுடன் கலைகட்டியது.
மேயர் நடுவே அங்கியுடன் அமர்ந்திருக்க இடபுறம் துணைமேயரும், வலது புறம் மாநகராட்சி ஆணையரும் அமர்ந்திருந்தார்.
கூட்டம் துவங்கிய ஒருசில நிமிடங்களில் வழக்கம் போல கூச்சல் குழப்பம் என அமர்களப்பட்டது. வயதில் பெரிய உறுப்பினர்களின் வாக்குவாதம் கொஞ்சம் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனாலும் ரகளை மட்டும் எரிச்சலை தந்தது.
மக்கள் பிரச்சனைகளை எப்படி அழகாக அமைதியாக விவாதிக்கலாம், ஆனால் இப்படி கூச்சல் போட்டுக்கொள்கிறார்களே என அருகில் இருந்த சக பத்திரிக்கையாளரிடம் கேட்டேன்.
தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் மாநகராட்சி கூட்டம் இவ்வளவு அமைதியாக நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்றார். ஓ இது தான் சிறந்த அமைதியோ என சிலாக்கித்துக்கொண்டேன்.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்வையிட்டேன். ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களுமே பல முறை எழுந்து நின்று பேசி கூச்சல்போட்டனர். ஒரே ஒருவர் மட்டும் அமைதியாகவே இருந்தார். என்ன நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
அவர் வேறு யாரும் இல்லை மேடையில் அமர்ந்திருந்த மாநகராட்சி ஆணையர் தான்.
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் கூச்சல் குழப்பத்தை 2 மணிநேரம் வேடிக்கை பார்ப்பது தான் இவரது பணி. (வேறு என்ன செய்ய முடியும் குறுக்க பூந்து சண்டையை தடுக்கவா முடியும்).

Nov 29, 2010
பெண்போகத்தில் குளிர்காயும் பத்திரிக்கைகள்
விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது.
சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது.
அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை.
அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது.
அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே.
அதே போல தான்.
நடிகைகளின் அந்தரங்களை வெளியிடுவதால் எந்த பொதுசனத்துக்கும் ஒரு பருக்கை சோறுகிடைக்கப்போவதில்லை. ஆனால் வெளியிடும் பத்திரிக்கை முதலாளி குறைந்தது பத்து வட்டல் சோறாவது திண்ணலாம்.
விசயகுமார் - வனிதா குடும்பத்தில் நடக்கும் சண்டை இந்தியாவில் வேறு எந்த குடும்பத்திலும் நடக்காத சண்டை அல்ல. அது பொதுநோக்கு சண்டையும் அல்ல. அப்படி இருக்க இந்த பத்திரிக்கைக்கு மட்டும் அதில் என்ன அலாதி பிரியம்.
தங்கள் குடும்பத்தில் சொத்து சண்டை இல்லை என்று கூறும் மனசாட்சி உள்ளவர்கள் விசயகுமார் - வனிதா சண்டையை விமர்சித்து எழுதட்டும்.
பின்குறிப்பு: தன் வீட்டு சொத்து சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் அதை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று 10 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும்.

Nov 28, 2010
செயலலிதா , கருணாநிதி யார் அதிக சொத்து சேர்த்தார்கள்
3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக மொத்தம் யார் அதிகமான சொத்து சேர்த்தது என்று பொதுமக்களே எளிதில் எடைபோட்டுக்கொள்ளலாம்.
அதே நேரத்தில் திருக்குவளையில் இருந்து திருட்டு ரயில் ஏறிவந்தவருக்கு இன்று பல ஆயரம் கோடி சொத்து வந்தது எப்படி என்று ஏற்கனவே செயலலிதா கேட்டுவைத்துள்ளார்.
ஆக மொத்தம் யார் அதிகமான சொத்து சேர்த்தது என்று பொதுமக்களே எளிதில் எடைபோட்டுக்கொள்ளலாம்.
Nov 27, 2010
இந்த பெண் குழந்தைகளுக்கு உடனடி தேவை செருப்பு
இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர்.
அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த ஏழைகளின் வலி தெரியாது.
ஒரு கோப்பையை விட இந்த பிஞ்சுகளுக்கு உடனடி தேவை செருப்பு.
ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு நடக்கும் வறுமையின் கொடுமையை பார்க்க சொல்லுங்கள். அப்புறம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஊர் பணத்தை மனசாட்சி இருந்தால் திண்ணட்டும். அப்படி அவர்கள் திண்பது எதுவென்று அவர்களுக்கே தெரியட்டும்.
சமுதாய அவலங்களை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. வேறு என்ன செய்ய வலைபதிவு தான் ஒரே வடிகால். அதுதான் கொட்டி தீர்க்கிறோம்.
தமிழ் வலைபதிவர் சங்கம் : வாருங்கள் ஒன்றிணைவோம்
நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை. சமுதாய அக்கறையுடன் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் என்பது பல பதிவர்களின் எண்ணம்.
வலைபதிவர்கள் முதற்கட்டமாக என்ன செய்யலாம் எனது ஆலோசனைகள்
முதலில் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.
இன்று தமிழ்வலைபதிவர்களின் எண்ணிக்கை மிககுறைவாகவே உள்ளது. பல நல்ல படைப்பாளிகளுக்கு வலைப்பூ இலவச சேவை இன்னும் அறிமுகமாகவில்லை. தமிழக கல்லூரிகளில் 98%பேருக்கும் பள்ளிகளில் 99% பேருக்கும் வலைபூ பற்றி தெரியாது.
இன்று எல்லா பள்ளி கல்லூரிகளிலும் கணிணி உள்ளது. வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கணிணி இருக்கும். ஏன் அடுத்த தேர்தலில் கணிணி தான் முக்கிய இலவச பொருளாக கூட அறிவிக்கப்படலாம்.
பள்ளிக்கு குறைந்தது ஒரு வலைப்பூவை ஏற்படுத்துவோம். மேட்டுபாளையம் நகரவை மகளிர் மேல்நிலைபள்ளியின் ரோசா பூந்தோட்டம் போல, இன்னும் உலகெங்கும் உள்ள தமிழ் பள்ளிகளின் மல்லிகை, செம்பருத்தி, கனகாம்பரம், செங்காந்தழ், என பல பூந்தோட்டங்களை வரவேற்போம்.
ஒவ்வொரு பள்ளியிலும் வலைபூவை அறிமுகப்படுத்தலாம். தங்கள் படைப்புகளை வெளிப்படுத்த முடியாமல் தட்டுதடுமாறும் சின்னஞ்சிறு கொடிகளுக்கு முல்லைக்கு தேர்கொடுத்த பாரி போல ஒரு துணைமரமாய் நிற்போம்.
இது போன்ற ஏராளமான நற்பணிகளை வலைபதிவர்களால் செய்ய முடியும்
அதற்கு நாம் செய்யவேண்டிது ஒன்றிணைவது.
எப்படி
1. முதலில் நாம் இணையத்தில் (வலைபூவில்) ஒன்றிணைய வேண்டும். இதற்கான தனி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதை செயல்படுத்த தனி ஒரு பொது வலைபூ ஏற்படுத்த வேண்டும். உறுப்பினராகும் பதிவர்களுக்கு அனைவருக்கும் இது பொதுவானதாக இருக்க வேண்டும். அது தான் நமது முதல் தலைமை அலுவலகம்
2. அரசியல், மதம், சாதி, நாடு இந்த வேறுபாடுகள் அந்த சங்கமத்தில் இருக்ககூடாது
3. மாதம் ஒரு முறையாவது ஆலோசனை கூட்டம் (பதிவு) நடைபெற வேண்டும்
4. சனநாயக நாட்டில் தனிமனித போராட்டத்திற்கு விலை இல்லை. குழுவாக சனமாக போராடினால் அதற்கு விலையே தனி.
5. இந்த சங்கமம் சமுதாய அக்கறையோடு மட்டும் அல்லாமல் இதில் உறுப்பினராகும் வலைபதிவர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
6. சட்ட ஆலோசகர்கள், பத்திரிக்கையாளர்கள், மருத்துவ நிபுணர்கள், ஆட்சிபணி அதிகாரிகள், அறிவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள், இப்படி அனைத்து சக்தியும் கொண்ட சர்வ வல்லமையுள்ள சங்கமமாக வலைபதிவு சங்கமம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
7. ஆத்மார்த்தமாக இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால் வலைபதிவர்கள் சனநாயகத்தை தாங்கும் நான்காம் தூணாக மாறமுடியும் என்பது எனது நம்பிக்கை.
யோசியுங்கள் ஆலோசனைகளை பகிருங்கள், நானும் எனக்கு தெரிந்த பிரபல பதிவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கடிதம் எழுதுகிறேன். நீங்களும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்குங்கள். விரைவில் ஒன்றிணைவோம்.
இதுகுறித்த உங்களது ஆலோசனைகளை பகிருங்கள்...

Nov 25, 2010
பிரபல வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு:
வலைபதிவர்கள் சமுதாய அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யவேண்டும் என்பது தான் அந்த பதிவின் சாராம்சம்
நான் கூட பலமுறை யோசித்திருக்கிறேன். சமுதாய அக்கறையுடைய நல்ல பதிவுக்கு நம்மால் பின்னூட்டம் என்ற ஒரு சிறு ஊக்குவிப்பு கூட கொடுக்கமுடிவதில்லையே ஏன்?
உன் எழுத்துக்களை நீ மட்டும் படித்தால் அது உனது வாழ்க்கை குறிப்பேடு. உன் எழுத்துக்களை நான்குபேர் படிக்க நீ படைத்தாலே நீ ஒரு சமுதாய பொறுப்பாளன் ஆகிறார். உன் கருத்துக்களை நான்கு பேர் படிக்கவேண்டும் என்றால் உனக்கு முதலில் வரவேண்டிய தகுதி சமுதாய பொறுப்பு.
இது தான் இதழியல் கல்வியில் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். இது ஏதோ அச்சுத்துறைக்கு மட்டும் வகுக்கப்பட்ட இலக்கணம் அல்ல. எழுதும், கருத்தை பகிரும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் உள்ள இலக்கணம் தான்.
வலைபதிவுகளில் 2 விடயங்களுக்காக நான் பெருமை படுகிறேன்.
1 ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர்கள் காட்டிய உலகளவிய இணைப்பு,
2. தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்ச்சியை தடுப்பதில் காட்டும் அக்கறை.
இன்றும் பல கல்லூரிகளில் உள்ள தமிழ்துறைக்கு கூட தமிழ் ஒருங்குறி - கிரந்தம் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. பல தமிழ்ஆர்வலர்களுக்கு இந்த விடயம் சென்று சேரவில்லை.
தினசரி பல பத்திரிக்கைகளை படிக்கும் ஒரு பத்திரிக்கையாளனான எனக்கே வலைபூக்கள் வழியாக தான் தமிழ் ஒருங்குறியில் கிரத்தம் சேர்க்கும் முயற்சிகள் தெரியவந்தது. அதன் பின்னர் தான் பத்திரிக்கைகளில் எழுதினோம். ஆனால் அதை எத்தனை பத்திரிக்கைகள் வெளியிட்டன. இணைய தொடர்ப்பு இல்லாத எத்தனை தமிழ்ஆர்வலர்களை இந்த விடயம் சென்று சேர்ந்தது?
இன்று வெகுசன ஊடகங்கள் வியாபாரத்தின் பிடியில் சிக்கி விட்டன. இவற்றிற்கு சில வியாபார கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வட்டத்தை தாண்டி வெளியில் வந்தால் அவர்கள் அந்த தொழிலில் தோற்றுப்போவார்கள். இது தான் நிதர்சன உண்மை.
இதற்கு மிகச்சிறந்த மாற்றாக நான் வலைப்பதிவுகளை காண்கிறேன்.
என்னால் பத்திரிக்கை துறையில் வெளிப்படுத்த முடியாத எண்ணங்களை வலைப்பூவில் வெளிப்படுத்த முடிகிறது. அந்த ஒரு காரணம் போதும் நான் வலைப்பதிவர்களுக்கு தலைவணக்கம் செலுத்த.
ஆனால் அதையும் தான்டி, வலைப்பதிவர்கள் சமுதாய அக்கறையுள்ளவர்களாக மாறினால் அதைவிட மிகச்சிறந்த ஆக்க சக்தி வேறு இல்லை என்றே தோன்றுகிறது.
கையெழுத்து பிரதியை எழுதி தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட ரயில் நண்பர்கள் ஒன்றினைந்து சமுதாயத்திற்கு சேவை செய்திருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது வலைபதிவர்களால் சமுதாய அக்கறையுடன் செயல்பட முடியாத என்ன?
எல்லாவற்றையும் விட நான் தமிழ்பதிவுலகுக்கு வைக்கும் முதல் வேண்டுகோள்
புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களின் கன்னி எழுத்துக்களுக்கு நாம் ஒரு பின்னூட்டமாவது எழுதி கரம்பிடித்து தூக்கிவிடவேண்டும். அதுவும் கன்னி வலைப்பதிவுகளுக்கு பிரபல வலைபதிவர்களின் பின்னூட்டம் தரும் ஊக்கசக்திக்கு அளவே கிடையாது. நான் அதை உணர்ந்திருக்கிறேன்.
வலைபதிவர்கள் ஆக்கப்பூர்வமாக, ஆத்மார்ததமாக ஒரு பணியை செய்யலாம் அதுகுறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். ( தற்போது அலுவலக பணி நெருக்கடி. மன்னிக்கவும்.)

தமிழ் வலைபதிவர் சங்கம்
Nov 23, 2010
சித்தூர் முருகேசனும் - சீதை சித்தப்பாக்களும்
ஒரு கனவு கண்டால், தினம் முயன்றால் ஒருநாள் நிசமாகும்.
இந்த வரிகளுக்கான அர்த்தம் சரியா தவறா என்பதற்கு உதாரணமாக ஒரு பதிவர் வலம்வந்துகொண்டிருக்கிறார்.
அப்துல்கலாம் போல திட்டம் தீட்டுவது எல்லாம் எளிது தான். அறைஎடுத்து யோசித்தால் உலகுக்கே நிதிநிலை அறிக்கை தயாரித்துவிடலாம். ஆனால் அதை செயல்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதை இவரிடம் தெரிந்துகொள்ளலாம்.
ஆயிரம் கதவுகளை தட்ட வேண்டும் ஒன்றாவது திறக்கும் என்ற நம்பிக்கையில். இந்திய அரசியல்வாதிகளிகளின் கதவை 24 வருடங்களாக தட்டி வரும் இந்த போரளிக்கு எப்போது கதவுதிறக்குமோ?
1986ல் ஆப்பரேசன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினார் இந்த இளைஞர்.
1. பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்தல்
2. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கொண்ட சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3. சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்தல்
4. கூட்டுரவு பண்ணை விவசாய முறையை அமல்படுத்துதல்
5. தற்போது உள்ள கரண்சியை ரத்து செய்து, பழைய கரண்சி உள்ளவர்கள் அது சட்டபடியான வருவாயே என நிரூபித்த பின்னர் புதிய கரண்சி வழங்குதல்
இது தான் அந்த இளைஞரின் கனவு.
இதில் முக்கியமான இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லைகள் மட்டுமல்ல, உள்நாட்டு உற்பத்தி, பொருளாத வளர்ச்சி, வருமையின்மை இவைகள் தான் ஒரு நாட்டின் உண்மையான பாதுகாப்பு.
அதே போல ராணுவம் என்பது ஆயுத பயிற்சி பெற்று எல்லையில் போர்புரிவதற்கா மட்டுமல்ல, உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பதற்கும் ஒரு ராணுவம் தேவை.
இந்த பாதுகாப்பை வழங்க ஏன் சிறப்பு ராணுவத்தை ஏற்படுத்த கூடாது? இந்த பெருமை மிகு ராணுவத்தில் சேர எத்தனை எத்தனை இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.
என் மகன் நாட்டுக்காக சாகிறான் என்பதை விட, நாட்டுக்காக உழைக்கிறான் என்பதில் எவ்வளவு பெருமை இருக்கிறது?
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதை விட வேறு என்ன தீர்வு இருக்கப்போகிறது?
சாராயம் விற்கும் வேலையை இளைஞர்களுக்கு அரசுபணியாக தரும்போது, விவசாயத்தை ஏன் அரசுபணியாக தரக்கூடாது?
சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தால் வரட்சி என்பது இருக்குமா?
கிராமங்கள் தோறும் கூட்டுரவு பண்ணைகள் மூலம் விவசயாம் செய்வதால் வருமையும், பட்டினி சாவுகளும் இருக்குமா?
அரசுபணி என்றால் சாராயம் விற்கவும் தயாராக இருக்கும் இளைஞர்கள் , உலகுக்கே சோறுபோடும் உழவுபணியை எவ்வளவு உணர்வுபூர்வமாக செய்வார்கள்!
இதை ஏன் அரசியல்வாதிகள் யோசிக்க மறுக்கிறார்கள்?
இந்தியா 2020ல் வல்லரசு நாடகா வேண்டும் என்று முழங்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த சித்தூர் முருகேசின் சிந்தனை ஏன் கண்ணில்படவில்லை?
2 வருடங்களுக்கு முன்பு வரை அப்துல்கலாம் அப்துல்கலாம் என்று குதித்துகொண்டிருந்த அரசியல்வாதிகளும் இளைஞர்களும், அதிகாரிகளும், ஆசிரியர்களும் இப்போது எங்கே போனார்கள்?
நதிகளை இணைக்க தேவை வெறும் 1000 கோடி ரூபாய். இது இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தொகையாக இருந்தது. ஆனால் இன்று அலைகற்றை வரிசை ஒதுக்கீட்டில் இழந்தது ரூ.1.73 லட்சம் கோடி ?
தனது தாய்நாடு குறித்து ஒரு கனவு கண்டு, தினம் முயன்றால், ஒருநாள் நிசமாகும் என்ற நம்பிக்கையில் 24 வருடங்களாக சித்துர் முருகேசனின் முயற்சி தொடர்கிறது.
இந்திய குடியரசு தலைவர், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர், ஆளும்கட்சி தலைவர், அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா ஆட்சிபணி அதிகாரிகள், மாநில முதலமைச்சர், அரசியல்கட்சி தலைவர்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றம், காவல்துறை, உண்ணாவிரதம், நடைபயணம், தெருமுனை பிரச்சாரம், (இதுக்கமேல எதாவது போரட்டம் இருந்தால் சித்தூர் முருகேசனுக்கு தெரியப்படுத்துங்க)
ஒரு கதவு கூட திறக்கப்படவில்லை இளைஞர்கள் தான் பலம் என்ற இந்த இந்திய திருநாட்டில்.
தன் போராட்ட வரலாற்றை சித்தூர் முருகேசனே இங்கு விளக்கியிருக்கிறார். சக வலைப்பதிவரின் போராட்டதிற்கு நம்மால் முடிந்த ஊக்குவிப்பு ஒரு பின்னூட்டம். அதை வழங்கும் நல்ல மனசுகளுககு என் சிரம்தாழ் வணக்கங்கள்...
நன்றி.

Nov 20, 2010
மனித உயிர்கொல்லி என்டோ சல்ஃபான்
என்டோ சல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து மனிதர்களை கொன்று திண்னும் கொடூரத்தை கேரள மாநிலம் உணர்ந்துவிட்டது.
இதற்கு தடை விதித்து விழித்துக்கொண்டாலும், விடிவுவரவில்லை. காரணம் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மறைமுகமாக கேரளாவுக்குள் நுழையும் என்டோ சல்ஃபானால் இன்றும் தொடர்கிறது மனித உயிர் இழப்புகள்.
மனித கொல்லியாக உருவெடுத்துள்ள என்டோசல்ஃபானுக்கு இந்தியா முழுவுதும் தடை வேண்டும் என கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நாளை பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கிறார். தனது மாநிலத்தில் என்டோ சல்ஃபோனால் நிகழ்ந்த கொடூரத்தை ஆதாரத்துடன் எடுத்து சென்றுள்ளார்.
அப்படி என்ன கொடூரம் ?
இந்த வலைபதிவர் (ஜோசபின் கதைக்கிறேன்) இன்னும் விரிவாக விளக்கியிருக்கிறார். சென்று படித்துபாருங்கள். உங்களால் முடிந்த எதிர்ப்பை தெரிவியுங்கள். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது.

தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்
கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.
அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :

தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்
இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.
முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.
என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12.
மெய் எழுத்துக்கள் 18.
உயிர்மெய் எழுத்துக்கள் 216.
ஆயுத எழுத்து 1.,
மொத்த எழுத்துக்கள் 247.
இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன்.
இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?
தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது.
தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.
உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.
கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.
தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள்
1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது
நியாயமான காரணங்கள் தான்.
இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.
இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.
தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.
ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.
இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.
ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்
இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், என்பது சாத்தியப்படுகிறது.
ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.
உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.
ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
அடுத்து ஷ
ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை,
ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்
எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.
அடுத்து ஜ
இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.
இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே
ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..
அடுத்து ஹ
ஃக, ... இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.
இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும்.
இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும்.
வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?
தமிழர்கள் சிந்திப்பார்களா?
பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள்.
கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.

Nov 19, 2010
இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்
கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.
அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :
அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :
......................................
இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்
ஒரு நாட்டுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுபவர்கள் தீவிரவாதிகள் என்றால், ஒரு மொழிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை என்னவென்று சொல்வது?
சமீபத்தில் சில வலைப்பதிவுகளில் தமிழ் எழுத்துக்களில் சிலவற்றை சேர்ப்பது விலக்குவது குறித்த விவாதங்களை காண முடிந்தது. அந்த பதிவர்களின் ஒருசார் கருத்துக்கள் எனக்குள் கொதிப்பை மட்டுமல்ல சமசுகிருதத்தின் பால் இன்னும் வெறுப்பையும் கூட்டியது.

அந்த பதிவருக்கு மட்டுமல்ல அவரை போலவே எதற்கெடுத்தாலும் சமசுகிருதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் வரிந்து கட்டும் சில பிரபல எழுத்தாளர்களுக்குமான கண்டிப்பும், ஏமாளி தமிழர்களுக்கான எச்சரிக்கையும் தான் இந்த பதிவு.
தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் உள்ள சிறப்பு வேறுபாடே எழுத்துஅமைப்பும், உச்சரிப்பு நடையும் தான.
உச்சரிப்பு என்பது வெவ்வேறு மொழியினருக்கு மட்டுமல்ல, ஒரே மொழினருக்கு கூட வேறுபடும். அத்துனை ஏன் ஒரு மனிதனுக்கே குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பும், வெயில்காலத்திலும் வேறு உச்சரிப்பும் வரும். கனேசன் என்ற சொல்லை குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பிலும், வெயில் காலத்தில் ஒரு உச்சரிப்பிலும் சொல்வோம்.
அதற்காக குளிர்காலத்தில் க என்பதற்கு ka.. என்றும் வெயில்காலத்தில் ga.. இடைபட்ட காலத்தில் ca.. என்றும் எழுத்துக்கள் கேட்பது மொழி பண்பாட்டுக்கு அழகு அல்ல.
ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்து கொடுத்தால் எந்த மொழிக்கும் எழுத்துக்கள் போதாது. எழுத்துக்கு ஏற்ப உச்சரிப்பு தான் பண்பட்ட மொழியே தவிர, உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்தை ஏற்பது பண்பட்ட மொழி அல்ல.
தமிழ் என்பது ஒரு பழமையான மொழி அதேநேரத்தில் பண்பட்ட மொழி. இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக தமிழ் எழுத்துக்களே திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் இருந்து தமிழ் எழுத்துஅமைப்பு தனித்து நிற்கிறது. பிறமொழி எழுத்துக்களை சேர்த்து தான் வாழவேண்டும் என்ற நிலை தமிழுக்கு இல்லை.
தமிழ் தவிர இந்தியாவின் மற்ற மொழிகளின் எழுத்துநடைகள் எல்லாமே உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்துக்களை சுமந்துகொண்டிருக்கும். தமிழ் அப்படி அல்ல. எழுத்தை ஒட்டியே உச்சரிப்புகளையும் அமைத்துக்கொண்டது. இதற்காக தான் தமிழை இயல் இசை நாடகம் என தனித்தனியே பிரித்துள்ளார்கள்.
திருநெல்வேலி தமிழும், கோவை தமிழும், சென்னை தமிழும், ஈழத் தமிழும். சிங்கை தமிழும் இன்னும் உலகெங்கும் ஓங்காரமாய் ஒலிக்கும் ஒவ்வொரு தமிழும் மேற்சொன்ன இயல் இசை நாடகத்தில் ஒன்றிணைந்துவிடும்.
ஒரு மொழியினர் மற்ற மொழியினரோடு தொடர்பு கொள்ளும்போது இருமொழியிலும் சொற்கள், உச்சரிப்புகள் கலப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்மொழியில் வந்து கலக்கும் பிறமொழிகளின் சொற்களையும் உச்சரிப்பையும் எப்படி ஒலிபெயர்ப்பு செய்யவேண்டும் என தொல்காப்பியர் காலத்திலேயே தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது.
பிறமொழி சொற்களையோ எழுத்துக்களையோ தாங்கிதான் தமிழ் வளரவேண்டும் அல்லது வாழவேண்டும் என்ற நிர்பந்தம் தமிழுக்கு கிடையாது. பிறமொழி ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தமிழை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு இன்றும் தமிழ் தன் இயல்பு மாறாமல் மிளிர்கிறது.
வடமொழியோடு ஒன்றிப்போவதை நாகரீகமாக நினைத்த சமுதாய போக்கால் தான், இன்று மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் வடமொழி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழிடம் வடமொழி ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை.
பிரபல தமிழ் வார இதழ்களில் வாசகர் கேள்வி பதில் சொல்லும் சில எழுத்தாளர்கள் எதற்கெடுத்தாலும் இந்த தமிழ் சொல்லினுடைய வேர் சமசுகிருதத்துடையது. இந்த தமிழ் சொல் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. என தூய தமிழ்சொற்களை கூட சமசுகிருத சொறகளாக குறிப்பிடுகிறார்கள். அதே போல தான் தமிழில் இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கக்கூடாது என துள்ளுகிறார்கள்.
இவர்களது துள்ளலை பார்க்கும் போது தான் சமசுகிருத மொழியையே வெறுத்து தனித்தமிழ் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.
தெரியாமல் கேட்கிறேன். தமிழில் இருந்து வடமொழி சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கவேண்டும் என்றால் சமசுகிருதவாதிகளுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? நாங்கள் என்ன சமசுகிருதத்தில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கவா சொல்கிறோம்? உங்கள் மொழியை காப்பாற்ற தமிழனின் முதுகுதான் கிடைத்ததா? ஏன் தனியாக நடக்க திறன் இல்லாத முடத்தன மொழியா சமசுகிருதம்?
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியும், கரையான் அரித்துக்கொண்டிருந்த தமிழ் ஓலைசுவடிகளை எல்லாம் மீட்டு தந்த வ.வே.சு ஐயரும்., சமசுகிருதத்தின் கடுமையை நேரடியாக விமர்சித்த விவேகானந்தரும் சமசுகிருதம் தெரியாதவர்கள் அல்ல என்பது ஏன் துக்கடா எழுத்தாளர்களுக்கு புரிவதில்லை.
பலநூற்றாண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனித்தமிழுக்கு மிகச்சரியான இலக்கணத்தை வகுத்துத்தந்திருக்கிறார். ஆனாலும் இன்றுவரையும் வடமொழி எழுத்துக்களை தமிழோடு இழுத்துவரும் தமிழர்களின் ஏமாளி தனத்தை என்னவென்று சொல்வது.
வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.
போலி சமசுகிருதவாதிகளே சமசுகிருதத்தை வளர்ப்பதாக எண்ணி இன்னும் அதை குழிதோண்டி புதைக்காதீர்கள். ஒரு மொழி அழிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
தனித்தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சிக்கும் இனி நானும் துணைநிற்பேன்

Nov 17, 2010
லஞ்சம் : பொதுமக்களே இது உண்மையா?
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
லஞ்சம் வாங்காத அதிகாரிகளையே லஞ்சம் வாங்கவைத்த பத்திரிக்கையாளர் குறித்த பதிவு மாவட்ட ஆட்சியர் வரை பார்வையிடப்பட்டது குறித்து பெருமிதப்பட்டுக்கொண்டார்.
ஆனால் அடுத்து அவர் பொதுமக்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு நியாயமாகவே பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர், போக்குவரத்து உட்பட பல அரசு அலுவலகங்களுக்கு சிறு சிறு விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் வருகின்றனர். சாதாரன மக்கள் தாமாகவே முன்வந்து சிறிய தொகையை லஞ்சமாக கொடுக்கின்றனர். சில அதிகாரிகள் கமுக்கமாக வாங்கிக்கொண்டு கூடுதலாக கேட்கின்றனர். சில நேர்மையான அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை.
ஆனால் லஞ்சம் வாங்காத அதிகாரியை பொதுமக்கள் நம்புவதில்லை. லஞ்சம் வாங்கினால் நிச்சயமாக காரியம் நடந்துவிடும் என மக்கள் நம்புகின்றனர். லஞ்சம் வாங்காவிட்டால் அவர்கள் சந்தேக பார்வையுடனேயே செல்கின்றனர். நியாயமான காரணங்களுக்காக ஒரு சில நாட்கள் கோப்பை ஒத்திவைத்தால் கூட அதிகாரியை நம்புவதில்லை, புலம்பி தீர்க்கின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
லஞ்சம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முறையாக சரியான ஆவணங்களை கொண்டுவருவதில்லை.
99% மக்கள் தங்கள் காரியங்களை விரைவில் சாதித்துக்கொள்ள தானாக முன்வந்து லஞ்சம் கொடுக்கின்றனர். இதில் நடக்கும் பேரத்தில் தான் பிரச்சனையே வருகிறது.
லஞ்சம் வாங்காத அதிகாரியை 1% மக்கள் கூட நம்புவதில்லை, பாரட்டுவதில்லை. இது ஏன்?

சன் டையரக்ட் வாடிக்கையாளர்கள் கணிவான கவனத்திற்கு...
நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா?
உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா?
இது சன் டையரக்டுடைய சொத்தாம்.
ஆமா உங்களுக்கு இலவசமாக தானே கொடுத்தாங்க, அப்புறம் எப்படி அது உங்க சொத்தாகும். 2000 ரூபாய் கொடுத்து இலவசத்தை வாங்கிவிட்டு இப்ப அதற்கு உரிமை கொண்டாட முடியுமா என்ன?
செல்போன் எண்ணை மாற்றாமல் செல்போன் சேவை( என்ன சேவையோ?) வழங்கும் நிறுவனங்களை மாற்றலாம் என்ற புதிய தொழில்நுட்பம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
அதே போல ரிசீவரை மாற்றாமல் விரும்பிய டி.டி.எச் சேவைக்கு மாறும் திட்டத்தை அமல்படுத்துதல் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டம் வந்தால் எந்த டி.டி.எச் ரிசீவர் வைத்திருந்தாலும் சுலபமாக நாம் விரும்பிய சேவைக்கு மாறிவிடலாம். புதிதாக ரிசீவர், உட்பட உபகரணங்கள் வாங்க தேவையில்லை.
ஆனால் சன் டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு
மட்டும் ஊ.. ஊஊஊஊஊ.... (கவுண்டமணி செந்திலை நினைச்சுக்கங்க..)
ஏனா அது இலவசமா கொடுத்த சொத்தாம்.
உடனே உங்க ரீசீவரை பாருங்கள் அது உங்க சொத்தா இல்லா அவங்க சொத்தானு தெரியும்.

Nov 16, 2010
கலாநிதிமாறனிடம் இருந்து தமிழகத்தை காப்பது யார்?
கலாநிதிமாறன் தொழில்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். என்ன கொடுமை சாதாரன பாமரன், கிராமத்தான், கூட கலாநீதிமாறனால் தினம் தினம் நொந்துகொண்டிருக்கிறானே. இவர்கள் சாபம் பலிக்குமானால் கலாநிதி( வேறு என்ன சொல்ல)
2 ரூபாயுக்கு 12 பக்க செய்திதாள் என்பது மகிழ்ச்சி தான். ஆனால் அதில் 1 பக்கம் கருணாநிதிக்கு, 1 பக்கம் சோனியாகாந்திக்கு, 1 பக்கம் தயாநிமாறனுக்கு, 1 பக்கம் சன் பிக்சர்சுக்கு, 1 பக்கம் மத்திய அரசு விளம்பரத்துக்கு 1 பக்கம் மாநில அரசு விளம்பரத்துக்கு, 1 பக்கம் சுய விளம்பரத்துக்கு. பின்ன என்ன மிச்சம் இருக்கு? செய்தி பத்தலைனா தமிழ்முரசை வாங்கி படியுங்க இதுக்கு மேலையுமா நீங்க படிச்சிறப்போறீங்க...
செய்திதாளை விடுங்க விருப்பம் இருந்தா வாங்குறோம். இல்லாட்டி ஒதுங்கி ஓடறோம்.
கேபிள் பிரச்சனையை சொல்லவே வேண்டாம்:
இலவசம் இலவசம் இலவசம். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இதை தவிர வேற ஒன்னுமே தெரியாது. ஆனா ஒரு நையா பைசா கூட இலவசமாக தரமாட்டார்கள்.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடுமாம். இது தான் கலாநிதிமாறனின் தொழில் ரகசியம்.
இலவசம் என்றவர்கள் பிட்டிங் சார்சு என ரூ.1200., 9 மாத சந்தா என ரூ.900., அப்புறம் பொருத்த வரும் டீலருக்கு ரூ.150 ஆக மொத்தம் 2250 இலவசம். என்ன அற்புதமான கணக்கு !!!
சரி போன போகுது
5 மாதத்தில் 9 மாத சந்தா முடிந்துவிட்டது. இவர்களுக்கு மட்டும் மாதத்தின் 31ம் நாள் இல்லை.
மாத சந்தா ரூ.75 என்றவர்கள் ரூ.110 கூப்பன் தந்தார்கள். அந்த 110 த்தை ரீசார்சு செய்ய ரூ.30 செலவு செய்ய வேண்டும். இதில் இன்னொரு கொடுமை நேட்வொர்க் பிசி என்பதற்கு கூட காசுபிடுங்குகிறார்கள்.
கால்சென்டர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்கூட்டியே டியூசன் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் கேட்கும் ஒரு கேள்விக்கும் பதில்சொல்லமாட்டார்கள்
எல்லா கொடுமைகளையும் சகித்தாயிற்று என்ன செய்ய டி.வி பார்த்தே ஆகவேண்டுமே.
திடீர் என எந்த முன்னறிவிப்பும் இல்லை. சிக்னல் கட்.
கால்சென்டருக்கு போன் போட்டால் ரூ.20 காலி.
2 மணி நேரத்தில் சரியாகிவிடும் என்றார்கள் 2 மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.
மீண்டும் இலவசம் இலவசம் பாட்டு... இப்போது கூட இன்போ சேனலில் அதுதான் ஓடுது.
தமிழா எப்படிடா இதை இன்னமும் நம்புற? முடியலை.
வேறு வழியில்லாமல் சண்டை போட, ஓரு டீலர் 150 கொடுத்தால் வந்து சரி செய்வதாக சொன்னார்.
ஆணியை பிடுங்கி தூக்கி வீசிவிட்டு கேபிள் எடுத்தால் அங்கும் அவர்கள் ஆதிக்கம் தான். (சுமங்கலி கேபிள்) ஏற்கனவே கேபிள் போடப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க ஆக்டிவேசனுக்கு ரூ. 500 வேனும் என்கிறார்கள்.
போதுமட சாமி
நல்ல கம்பனி, நல்ல சேவை...
வெளிநாட்டில் உள்ளவர்கள் கவனத்துக்கு தப்பி தவறிகூட கலாநிதிமாறனின் குறைந்த கட்டண விமானத்தில் ஏறிஅமர்ந்துவிடாதீர்கள்
உங்கள் சட்டையை விமான சன்னல்களின் தகரம் கிழிக்கலாம், அப்புறம் நடுவானில் ரூட் மாறினாலும் கேட்கமுடியாது.
எவ்வளவு சம்பாதிக்கிறார்கள். செயற்கைகோள் மாற்றினால் அதை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டாமா? சரி அதை முறையே உடனடியாக சரிசெய்ய வேண்டாமா? டி.டி.எச் அப்படி தான் தெரியும் பேசாம கேபிள் எடுத்துக்கங்க என சுமங்களி கேபிள் பணியாட்களே சொல்லலாமா? இதெல்லாம் கலாநிதிமாறனின் காதுக்கு கேட்காததால் தான் காதுகேட்கலை விளம்பரமோ? இந்த செவிடன் காதில் செவிட்டில் அறைந்து சொல்லும் தமிழனுக்கு நான் கரம்தூக்கி தலைவணக்கம் செய்கிறேன்.
கருணாதியிடம் இருந்து கூட தமிழக்தை காப்பாற்றிவிடலாம் ஆனால் கலாநிதிமாறனிடம் இருந்து தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.

ராசா vs சுப்பிரமணியசாமி : அய்யகோ தமிழகம்?
சுபெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசா மீது வழக்குதொடர வேண்டும் என சுப்பிரமணியசாமி குதித்து வருகிறார்.
இது சுப்பிரமணியசாமியின் பொதுநல நோக்கு என யாராவது நினைத்தால் அது தவறு.
செயா டி.வி யில் காண்பிக்கப்பட வேண்டும் எனபத்தாக தான் இப்படி குதிக்கிறாரா என்றால் அது ஒரு காரணம் மட்டுமே.
செயா டி.வி.யில் சுப்பிரமணியசாமியின் ஏளனமான பேட்டி சுபெக்ட்ரம் விவகாரத்தை மட்டும் சுற்றி வரவில்லை. தனது ஏளனமான பேச்சு மற்றும் சைகைகள் மூலம் எதோ ஒரு பிரச்சனையை தமிழகத்தில் கிளப்ப நினைக்கிறார்.
அதே நேரத்தில் சுபெக்ட்ரம் விவகாரத்தில் ராசா குற்றம் செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம். ஆனால் 1 லட்சம் கோடிக்கு மேல் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது தெரிந்த அடுத்த கணமே ராசா பதவிவிலகி இருந்தால் நிச்சயம் அவரை பாரட்டியிருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகள் என்னென்ன நாடகங்கள்....
இப்போது தமிழகத்தில் ராசாவுக்கு ஆதரவாக சாதிசாயம் பூசி வரும் விளம்பரங்கள், போராட்டங்கள் மிகமிக கேவலமானதாகவே இருக்கிறது.
ஆனால் கொஞ்சம் ஆழமாக நோக்கும் போது இந்த போராட்டங்களில் எங்கோ ஒரு மூலையில் சின்ன நியாயமும் இருக்கிறது.
சுப்பிரமணிய சாமி போன்ற சாதிவெறி பிடித்தவர்களின் ஆதிக்கம் இன்னமும் அதிகாரமையத்தில் அப்படியே இருப்பது தான் இந்த போராட்டங்களை நியாயப்படுத்துகிறது.
தமிழகத்தில் சாதிப்பிரச்சனையை அவ்வப்போது தூண்டி விடும் சக்தியாக சில சாமிகள் வலம் வருவதை தடுக்க எந்த சாமி வருவாரோ? (சாமியே இல்லை என்பவர்களும் இதையே செய்யும்போது சாமியை தானே கூப்பிட முடியும்.)
ராசா விவகாரத்தில் சுப்பிரமணியசாமியின் தலையீட்டை குறைப்பது தமிழகத்துக்கு நல்லது. சுப்பிரமணிசாமி இல்லை என்றால் சுபெக்ட்ரம் ஊழல் ஒன்றும் மூடிமறைக்கப்பட்டுவிடாது. பொதுநல நோக்கத்தோடு பல புத்திசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வழக்கு தொடரட்டும். சுப்பிரமணியசாமி ஒதுங்கி இருக்கட்டும்.
ஆமாம் இடதுசாரி கட்சிகள் வெளிக்கொண்டு வந்த சுபெக்ட்ரம் ஊழக்கு சுப்பிரமணியசாமி எதற்காக உரிமைகொண்டாடிக்கொண்டு அலைகிறார்?
யார் என்ன வழக்கு தொடர்ந்தாலும் அதில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என குதிக்கும் இந்த கோமாளியின் நோக்கம் என்ன ?

Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
அதிமுக அணியில் இருந்து வைகோ பிரிந்து தனித்துபோட்டியிட உள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 4% வாக்குகளை மதி...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...