நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை. சமுதாய அக்கறையுடன் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் என்பது பல பதிவர்களின் எண்ணம்.
வலைபதிவர்கள் முதற்கட்டமாக என்ன செய்யலாம் எனது ஆலோசனைகள்
முதலில் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.
இன்று தமிழ்வலைபதிவர்களின் எண்ணிக்கை மிககுறைவாகவே உள்ளது. பல நல்ல படைப்பாளிகளுக்கு வலைப்பூ இலவச சேவை இன்னும் அறிமுகமாகவில்லை. தமிழக கல்லூரிகளில் 98%பேருக்கும் பள்ளிகளில் 99% பேருக்கும் வலைபூ பற்றி தெரியாது.
இன்று எல்லா பள்ளி கல்லூரிகளிலும் கணிணி உள்ளது. வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கணிணி இருக்கும். ஏன் அடுத்த தேர்தலில் கணிணி தான் முக்கிய இலவச பொருளாக கூட அறிவிக்கப்படலாம்.
பள்ளிக்கு குறைந்தது ஒரு வலைப்பூவை ஏற்படுத்துவோம். மேட்டுபாளையம் நகரவை மகளிர் மேல்நிலைபள்ளியின் ரோசா பூந்தோட்டம் போல, இன்னும் உலகெங்கும் உள்ள தமிழ் பள்ளிகளின் மல்லிகை, செம்பருத்தி, கனகாம்பரம், செங்காந்தழ், என பல பூந்தோட்டங்களை வரவேற்போம்.
ஒவ்வொரு பள்ளியிலும் வலைபூவை அறிமுகப்படுத்தலாம். தங்கள் படைப்புகளை வெளிப்படுத்த முடியாமல் தட்டுதடுமாறும் சின்னஞ்சிறு கொடிகளுக்கு முல்லைக்கு தேர்கொடுத்த பாரி போல ஒரு துணைமரமாய் நிற்போம்.
இது போன்ற ஏராளமான நற்பணிகளை வலைபதிவர்களால் செய்ய முடியும்
அதற்கு நாம் செய்யவேண்டிது ஒன்றிணைவது.
எப்படி
1. முதலில் நாம் இணையத்தில் (வலைபூவில்) ஒன்றிணைய வேண்டும். இதற்கான தனி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதை செயல்படுத்த தனி ஒரு பொது வலைபூ ஏற்படுத்த வேண்டும். உறுப்பினராகும் பதிவர்களுக்கு அனைவருக்கும் இது பொதுவானதாக இருக்க வேண்டும். அது தான் நமது முதல் தலைமை அலுவலகம்
2. அரசியல், மதம், சாதி, நாடு இந்த வேறுபாடுகள் அந்த சங்கமத்தில் இருக்ககூடாது
3. மாதம் ஒரு முறையாவது ஆலோசனை கூட்டம் (பதிவு) நடைபெற வேண்டும்
4. சனநாயக நாட்டில் தனிமனித போராட்டத்திற்கு விலை இல்லை. குழுவாக சனமாக போராடினால் அதற்கு விலையே தனி.
5. இந்த சங்கமம் சமுதாய அக்கறையோடு மட்டும் அல்லாமல் இதில் உறுப்பினராகும் வலைபதிவர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
6. சட்ட ஆலோசகர்கள், பத்திரிக்கையாளர்கள், மருத்துவ நிபுணர்கள், ஆட்சிபணி அதிகாரிகள், அறிவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள், இப்படி அனைத்து சக்தியும் கொண்ட சர்வ வல்லமையுள்ள சங்கமமாக வலைபதிவு சங்கமம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
7. ஆத்மார்த்தமாக இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால் வலைபதிவர்கள் சனநாயகத்தை தாங்கும் நான்காம் தூணாக மாறமுடியும் என்பது எனது நம்பிக்கை.
யோசியுங்கள் ஆலோசனைகளை பகிருங்கள், நானும் எனக்கு தெரிந்த பிரபல பதிவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கடிதம் எழுதுகிறேன். நீங்களும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்குங்கள். விரைவில் ஒன்றிணைவோம்.
இதுகுறித்த உங்களது ஆலோசனைகளை பகிருங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமா...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல யுனிக்கோடு எழுத்துரு...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
எந்திரன் கதை திருடப்பட்டதா? அமுதா தமிழ்நாடன் கதையை படித்துவிட்டு நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்... ( 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய இந்...
-
கோவை, திருப்பூர், வலைபதிவர் கவனத்திற்கு.... கோவையில் இருந்து தற்போது வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மலர் வாரசெய்தி இதழ், வரும் தை திங...
-
இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்...
இது நல்லாயிருக்கே... !!
ReplyDelete//முதலில் நாம் இணையத்தில் (வலைபூவில்) ஒன்றிணைய வேண்டும்.//
ReplyDeleteசுபஸ்ய சீக்கிரம். ஒடனே ஆரம்பிச்சுருங்க
// இதற்கான தனி நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.//
வகுத்துருங்க .. உறுப்பினர்கள் கருத்தின் அடிப்படையில் திருத்திக்கிடலாம்
// அதை செயல்படுத்த தனி ஒரு பொது வலைபூ ஏற்படுத்த வேண்டும்.//
ஒடனே ஏற்படுத்துங்க பாஸ். சாதி மத மொழி அடையாளமில்லாத பெயரா இருக்கட்டும்.
காதுல நுழையறதா இருக்கனும் (அதுக்குனு ஜான்சன் பட்ஸ்னு வச்சுரப்போறிங்க
// உறுப்பினராகும் பதிவர்களுக்கு அனைவருக்கும் இது பொதுவானதாக இருக்க வேண்டும்.//
100 பேரைதான் ஆத்தரா இன்வைட் பண்ண முடியும் பாஸ்.
// அது தான் நமது முதல் தலைமை அலுவலகம்//
சூப்பர்
//2. அரசியல், மதம், சாதி, நாடு இந்த வேறுபாடுகள் அந்த சங்கமத்தில் இருக்ககூடாது//
அப்போ அவாளை கூட இன்வைட் பண்ணுங்க. இங்கன யாரும் அவாளை எதிர்க்கலை. அவாளோட பழைய நினைப்புகளைதான் எதிர்க்கிறோம்
என் யோசனை:
பொதுவலைப்பூவை ஃபார் மெம்பர்ஸ் ஒன்லினு வச்சுக்கிட்டா எந்த சட்டமும் பிடுங்க முடியாது.
கொஞ்சம் போல ஸ்டாண்டர்ட் ஆன பிறவு அச்சுவடிவம் கொண்டுவரனும்.
அதுக்கான வேலைய இப்பமே ஸ்டார்ட் பண்ணிருங்க தலை
அனைவரூக்கும் வணக்கம். கோவை மாவட்டத்தில் யாரேனும் வலைப்பூ உருவாக்க விரும்பினால், உருவாக்கி , நேரில் மேலதிக தகவல்கள் வழங்க தயார்..
ReplyDeleteபுதியவர்கள் மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்.
bharathphysics2010@gmail.com
நல்ல சிந்தனை!! தொடருங்கள் செயல்படுத்துங்கள்!
ReplyDeletefollow up
ReplyDeleteகருத்துகளை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteவிரைவில் வலைபதிவர் சங்கமம் குறித்து வரிவான கருத்துக்களை பகிர்கிறேன்.
நன்றி.
நாம் மொத்தம் எத்தனை வலைப்பதிவர்கள் உண்டு யார் யார் என்ற புரிதல் அவசியம் வேண்டும்.
ReplyDeleteநெறிமுறிகள், என கூறி தனி சுதந்திரத்தை பறி போகாது வண்ணம் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும்.
வலைப்பதிவர் பாதுகாப்புக்கு உறுதி அளிப்பதே மிக தேவையான் பிரச்சனை.
ஒரு கூட்டம் ஏற்ப்பாடு செய்யலாம்.
விரைவில் நிறைவேற்றுவோம்
ReplyDelete