கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
லஞ்சம் வாங்காத அதிகாரிகளையே லஞ்சம் வாங்கவைத்த பத்திரிக்கையாளர் குறித்த பதிவு மாவட்ட ஆட்சியர் வரை பார்வையிடப்பட்டது குறித்து பெருமிதப்பட்டுக்கொண்டார்.
ஆனால் அடுத்து அவர் பொதுமக்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு நியாயமாகவே பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர், போக்குவரத்து உட்பட பல அரசு அலுவலகங்களுக்கு சிறு சிறு விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் வருகின்றனர். சாதாரன மக்கள் தாமாகவே முன்வந்து சிறிய தொகையை லஞ்சமாக கொடுக்கின்றனர். சில அதிகாரிகள் கமுக்கமாக வாங்கிக்கொண்டு கூடுதலாக கேட்கின்றனர். சில நேர்மையான அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை.
ஆனால் லஞ்சம் வாங்காத அதிகாரியை பொதுமக்கள் நம்புவதில்லை. லஞ்சம் வாங்கினால் நிச்சயமாக காரியம் நடந்துவிடும் என மக்கள் நம்புகின்றனர். லஞ்சம் வாங்காவிட்டால் அவர்கள் சந்தேக பார்வையுடனேயே செல்கின்றனர். நியாயமான காரணங்களுக்காக ஒரு சில நாட்கள் கோப்பை ஒத்திவைத்தால் கூட அதிகாரியை நம்புவதில்லை, புலம்பி தீர்க்கின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
லஞ்சம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முறையாக சரியான ஆவணங்களை கொண்டுவருவதில்லை.
99% மக்கள் தங்கள் காரியங்களை விரைவில் சாதித்துக்கொள்ள தானாக முன்வந்து லஞ்சம் கொடுக்கின்றனர். இதில் நடக்கும் பேரத்தில் தான் பிரச்சனையே வருகிறது.
லஞ்சம் வாங்காத அதிகாரியை 1% மக்கள் கூட நம்புவதில்லை, பாரட்டுவதில்லை. இது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை...
-
ஒரு கனவு கண்டால், தினம் முயன்றால் ஒருநாள் நிசமாகும் . இந்த வரிகளுக்கான அர்த்தம் சரியா தவறா என்பதற்கு உதாரணமாக ஒரு பதிவர் வலம்வந்துகொண்டிரு...
-
பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு: வலைபதிவர்கள் ...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சி...
No comments:
Post a Comment