இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?
சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.
சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.
தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.
திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?
இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?
இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்
*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.
*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?
ஆண்டவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
-
இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர். ...
நன்றி நண்பா..
ReplyDeleteபகிர்ந்து கொண்டதுக்கு...