Jul 9, 2012

கூச்சல் கலவரம் அமைதியுடன் உயிர்த்தது உயிர்

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு சுமூக தீர்வுகளை அலசும் மக்கள் மேடையை அமைத்திருந்தோம். இந்த உயிர் கூட்டமைப்பு கோட்டயம் நூலக அரங்கில் 7தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. கேரள தமிழகத்தில் இருந்து சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் பலர் வந்திருந்தனர்.

பாதுகாப்பு கருதி கம்பம் அப்பாசு அவர்கள் கேரள செல்ல தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். தடையும் செய்துவிட்டனர். கம்பம் அப்பாசு அவர்களின் வாழ்த்து செய்தியுடன் தமிழ்மலர் குழு துணிவுடன் கேரளா சென்றது. 


கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கம்பம் அப்பாசு தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இது ஒரு நல்ல முயற்சி, இது வெற்றிபெற வேண்டும். அடுத்த கூட்டம் மதுரையில் நடத்தலாம். அதில் நிச்சயம் நான் கலந்துகொள்வேன் என்று கம்பம் அப்பாசு அவர்கள் தெரிவித்தார்.

கூட்டம் துவங்கி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆளும் காங்கிரசு கட்சியின் எம்.எல்.ஏ.,பல்ராமின் அறிக்கை வாசிக்கப்பட்டது. புதிய அணை என்பது கேரள மக்களை ஏமாற்றும் வேலை. இது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட ஒன்று. அரசிலுக்கும் வியாபாரத்துக்குமாக முல்லைப்பெரியாறு பிரச்சனையைய அரசியல்வாதிகள் கையாள்கிறார்கள். புதிய அணை ஒருபோதும் தேவை இல்லை. என்பதை பல்ராமன் பதிவு செய்தார்.  கேரளாவின் பல எழுத்தாளர்களும் புதிய அணை ஒரு ஏமாற்று வேலை என்று பேசினர்.

12 மணியளவில் கேரள மீடியாக்கள் முல்லைப்பெரியாறு போரட்டக்குழு என்ற பெயரில் 20 பேருடன் வந்தார்கள்.

மேடைக்கு பின்னும், சுற்றிலும் கேமராக்களை உயர்த்திப்பிடித்து நின்றார்கள். கேமராக்கள் தயாரானதும் வந்த 20 பேரும் கூட்டத்திற்கு எதிராக கோசம் எழுப்பினார்கள். சி.பி.ரோய் ஒழிக, ஆனந்த் வெளியேறுக. கேரள மக்களுக்கு எதிரான இந்த கூட்டத்தை தடை செய்க என்று கூச்சலிட்டார்கள். தமிழ்மலர் குழுவை முற்றுகையிட்டு தாக்க முற்பட்டார்கள். பல மலையாள தோழர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றார்கள். 

சமயம் பார்த்து காத்திருந்த காவல்துறையினர் கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதியை தடை செய்தார்கள். பிரச்சனை பெரிதாகமல் இருக்க ஆனந்தை வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்க சொன்னார்கள். ஆனால் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கூட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தோம். 2 மணி நேரம் கூச்சல் நீடித்தது. தங்கள் தேவை முடிந்ததும் மீடியாக்கள் அவரவர் அலுவலகம் நோக்கி புறப்பட்டன. மீடியாக்கள் போன பின்பு அந்த 20 பேரும் நடையை கட்டினர்.

பின்னர் ஒலிப்பெருக்கி இல்லாமலே எங்கள் கூட்டம் தொடர்ந்தது.
சி.பி.ரோய்
சி.பி.ரோய் தன் கருத்தை அழமாக பதிவு செய்தார். உடனடி மற்றும் நிரந்தர தீர்வு புதிய சுரங்கம் மட்டுமே என்று வலியுறுத்தினார். ஆனந்த் பேசும்போது மீண்டும் அரங்குக்குள் நுழைந்த சிலர் தொடர்ந்து கூச்சல் இட்டுக்கொணடே இருந்தார்கள். உரத்த குரலில் பேசிய ஆனந்த் எதிர்ப்பாளர்களை நேரடி விவாதத்தில் எதிர்கொண்டார்.


பின்னர் தமிழ் மலர் ஆசிரியர் உமாமகேசுவரி பேசியது ;
அணை  பலமாக உள்ளது. 142 அடியாக நீரை உயர்த்திக்கொள்ளலாம்  என 2002ல் சி.டபிள்யு.சி 2006ல் உச்சநீதிமன்றம். 2012ல் உயர்மட்ட குழுவும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகம் தாராளமாக 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள முடியும். தமிழக காவல்துறையை அனுப்பி இதை செயல்படுத்தவும் நீதிமன்றத்தின் அனுமதி உள்ளது. ஆனால் தமிழகம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்துகொள்கிறது. கேரள மக்களின் பய உணர்வுக்கு மதிப்பளிக்கிறது. அதனால் தான் மாற்று தீர்வான சுரங்க கால்வாய் திட்டத்தை பரிசீலிக்கிறது. இதை கேரளா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு ஈகோ பிரச்சனையாக பார்க்காமல் இரு மாநில நல்லுரவை மட்டுமே பார்க்க வேண்டும்.

இன்று இடுக்கி அணைக்கு 50 வயது. இந்த அணைக்கும் 100 வயது ஆகும். அப்போது அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவீகளா அல்லது தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்துவீர்களா? அதையே தான் முல்லைபபெரியாறு விசயத்திலும் தமிழகம் செய்கிறது.

தமிழ் மலர் ஆசிரியர் உமாமகேசுவரி
புதிய சுரங்க திட்டத்தை வலியுறுத்தும் எங்களை தமிழக மக்கள் தங்களுக்கு எதிரானவர்களாக தான் பார்க்கிறார்கள். காரணம் அவர்களுக்கு 142 அடி நீரை உயர்த்திக்கொள்ள உரிமை இருக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சனையை உணர்ச்சிபூர்வமாக அணுகும் திரு. வைகோ, நெடுமாறன், கம்பம் அப்பாசு போன்றவர்கள் கூட புதிய சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செயலலிதா தலைமையிலான தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இந்த சந்தர்ப்பத்தை கேரள அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


எங்களை தாக்குவதாலோ, எங்களுக்கு எதிராக கோசம் எழுப்புவதாலோ, சரியான தீர்வை மறைத்துவிட முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ஈகோ பார்ப்பதை விட்டுவிட்டு. மக்கள் மன்றத்தில் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம். இன்று வரை எந்த நதிநீர் பிரச்சனையும் நீதிமன்றம் வாயிலாக தீர்க்கப்பட்டதில்லை. மக்கள் மேடை பல நதிநீர் பிரச்சனைகளை தீர்த்துள்ளது. அதற்கான ஒரு துவக்கம் தான் இந்த உயிர். இது நிச்சயம் உயிரித்து உயர்ந்து நிற்கும்.

நன்றி.

ஆனந்த் பேசியது அடுத்த பதிவில்.

times of india

deccan chronicle

The hindu

tamil.oneindia

newindianews



Jul 3, 2012

உயிர் தமிழ் மலையாள மக்கள் கூட்டமைப்பு


அரசாங்கங்கள் புறம்திருப்பி நிற்கின்றன!...
அரசியல்கட்சிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதே இல்லை!...
பொதுமக்கள் நாம் ஓரு மேசையின் முன்பு இருந்து 
பேசித்தீர்த்துக்கொள்வது அல்லாமல் வேறு என்ன வழி?...
பொதுமக்கள் தமக்குள் பேச துவங்கும்போது
இயல்பாகவே பிறக்கிறது மக்கள் தீர்வு!

அறிவுக்களஞ்சியமான கோட்டயம் பொது நூலகத்தில்
‘‘உயிர்’’ என்ற அறிமுகத்தில்
தமிழ், மலையாள எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும்
ஒரு பகல் ஒன்று கூடுகிறார்கள்.

இது ஒரு போர் அல்ல!..
அதனால் இங்கு எதிராளிகள் இல்லை!..
கிழக்குக்கு மேற்கு எதிராளி என்று யார் சொன்னது?..
ஆனாலும் நாம் பிரிந்து நின்று சவால் விட்டோம்!..
பரசுபரம் மோதிக்கொள்ள கொம்பு சீவிக்கொண்டோம்!
இரத்ததின் நிறத்தை கூட காண முற்பட்டோம்!
அப்போதும் கூட ஒரு மேசையும்,
அதனை சுற்றிலும் பல நாற்காலிகளும் ஆளில்லாமல் கிடந்தது...

ஒரு வம்சத்தின் வேர்களாய் இருந்தோம் நாம்!...
மொழியிலும், பண்பாட்டிலும், வாழ்க்கையிலும்
பொதுநிலையை பங்கிட்டுக்கொண்டவர்கள்.,
இங்கே வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்போம்.

ஒரு மேசையின் சுற்றும் இருந்து
தமிழ் மலையாள எழுத்தாளர்களும்
சிந்தனையாளர்களும், விவசாயிகளும் பேச துவங்குகிறார்கள்!
எவ்வளவு முயன்றும் தீராத முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு
சுமூகமான தீர்வுகளை அலசுகிறார்கள்!

கேரள மக்களுக்கு உயிர் பயம்!
தமிழக மக்களுக்கு உயிர் ஆதாரம்!
இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு
சுமூக தீர்கவுகளை அலசிப்பார்ப்போம்...

நமது பசுமை கனவுகளுக்கு நிகழ்காலம் கொடுப்போம்!
கேரள மக்கள் பயப்பீதியில் இருந்து மீள நம்பிக்கை தருவோம்!

இந்த சந்திப்பு ஒரு துவக்கம் மட்டுமே...

கருகிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உயிர்கொடுப்பதால்,
இந்த சந்திப்பு ‘உயிர்’ என்று அறியப்படுகிறது!!

எவ்வளவு வாழ்த்தினாலும் தீராத இந்த சந்திப்பு,
வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும்!.

முதல் சந்திப்பு

கோட்டயம் பொது நூலகத்தின்
கே.வி.எசு. மேனன் அரங்கம்
2012 சூலை 07 சனிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
நாம் ஒரு மக்கள் மேடையை கட்டமைப்போம்...

தொடர்புக்கு :
சிவிக்சந்திரன் : 09633751353
சி.பி. ரோய் : 09447200707
சி.ஆனந்த் : 09787678939

Jun 29, 2012

ஆனந்த் குழு ஊடகங்களின் இருட்டடிப்பு

முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தமிழக கேரளாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் தரப்பட்டது. ஆனால் ஒரு தமிழ் ஊடகத்தில் கூட உண்மை நிலை எழுதப்படவில்லை. விவாதிக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் கேரள பிரதிநிதியாக ஆனந்த குழுவில் இடம்பெற்றிருந்த கே.டி தாமசை சந்தித்து முழுமையான அறிக்கையை கேட்டுப்பெற்றேன்.

அதில் இறுதி வரிகள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

In Case This Suggestion Finds Favour With The Hon`Ble Supreme Court, The Safety Concerns Of The Sok(So Kerala) And The Requirements Of The So Tn( So Tamil Nadu) Would Be Met From The Existing Dam After Completing The Left Over Strengthening Measures And Construction A New Tunnel For Evacuation Of Reservoir Water 

The Empowered Committee Humbly Suggests That For An Amicable Resolution Of The Long Pending Dispute Between The Two Neighbouring States The Alternatives Are Worth Exploring With The Party States



இந்த வரிகளுக்கு கீழ் தான் நீதிபதி ஆனந்த், கே.டி தாமசு, லட்சுமணன், நிபுணர்கள் தட்டே, மேத்தா ஆகிய ஐந்து பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

8 பக்கங்களில் இந்த திட்டம் குறித்து வரவேற்று எழுதியுள்ளனர். இரு மாநிலங்களும் இதை தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு குழுவில் இருந்த 5 பேரும் கூடுதல் வரவேற்பை பதிவு செய்துள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த திட்டம் குறித்து தமிழ் ஊடகங்கள் ஒரு வரி கூட எழுதாதது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு.

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் உச்சநீதிமன்றம் இதை தீவிரமாக பரிசீலிக்கிறது. ஒரு ஆண்டுக்குள் இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வறிக்கை தரும்படி தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை உலகத்தில் எந்த நதிநீர் பிரச்சனையும் நீதிமன்றம் வாயிலாக தீர்க்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. எனவே தான் மக்கள் மன்றத்தில் இதை வைத்திருக்கிறோம். வரும் 7ம் தேதி கேரள தமிழக மக்கள் சந்தித்து பேசும் ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளோம். 

தமிழக ஊடகங்கள் எங்களை புறக்கணித்தாலும், நிச்சயம் ஒரு நாள் எங்கள் குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். இந்த நம்பிக்கையில் தொடர்கிறது எங்கள் முயற்சி...

Jun 22, 2012

அமைதியை கெடுத்த ரசினியின் சின்னவீடு

அமைதி தேடி ரசினிகாந்த் கோவையில் குடியேறப்போகிறார். இந்த செய்தியை படித்ததும் எங்கள் ஊர் சலூன் கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார். உங்களுக்கு புழுகுவதற்கும் ஒரு அளவு இல்லையா என்று!

கோவையில் உள்ள எனது பத்தரிக்கை நண்பர்களும் தொலைபேசியில் அழைத்தார்கள். என்ன உங்க ஊரைப்பத்தி தப்புதப்பா செய்தி அடிபடுகிறே என்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் பகுதி பத்திரிக்கை நண்பர்களுக்கு இனி 2 வாரத்துக்கு அட்டப்பாடி தான் பொழுதுபோக்கு தளம் என்பதை அப்போதே யூகித்துக்கொண்டேன்.

ஆண்டுக்கு ஒரு முறை அட்டப்பாடியில் ஆனைகட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்துக்கு ரசினி வந்து செல்வது வழக்கம். ரசினிக்கு சாலையில் நடைப்பயிற்சி செய்ய பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று. காரணம், பத்திரிக்கை, ரசிகர்கள் கூட்டம் என எந்த இடையூறும் இல்லாமல் சாலையில் நடக்கலாம். இங்குள்ள ஆதிவாசி மக்களும் ரசினியை அவ்வளவு தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆசிரமத்தில் ரசினிக்கு என்று தனி வீடு உள்ளது. இரண்டு அறைகள் மட்டுமே உள்ள மிகச்சிறிய வீடு அது. இங்குள்ளவர்கள் செல்லமாக ரசினியின் சின்னவீடு என்று அழைப்பார்கள். இங்குள்ள 90% மக்கள் ரசினியின் சின்னவீட்டிற்கு சென்று வந்துள்ளார்கள். 

இது தவிர ரசினிக்கும் அட்டப்பாடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் ஆசிரமத்திற்கு அருகே உள்ள ஒரு மிகப்பெரிய பங்களாவை படம் பிடித்து பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். எதார்த்தத்தில் அந்த கட்டிடம் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது. ரசினி குடியேறப்போகும் பெரிய வீடு என்ற பேச்சு இப்ப ஊர் முழுவதும். பத்தா குறைக்கு உளவு துறை அதிகாரிகளின் தொடர் மோப்பம் பிடித்தல்கள் இன்னும் சந்தேகத்தை கிளப்பி விட்டது. 

உளவுத்துறை நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார். ரசினி கோவைக்கு குடிவருவது உண்மையா? பத்தரிக்கைகள் பற்ற வைக்கும் வதந்தியை உளவுத்துறை விசாரணை என்ற பெயரில் கொழுந்துவிட்டு எரியவிடுகிறது. 

பத்திரிக்கைள் எழுதுவதை எந்த பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற அதிகாரிகளால் வரும் விசாரனை பொதுமக்களை குழப்பி விட்டுவிடுகிறது. 

ரசினியின் சின்னவீடு குடியேற்ற பரபரப்பில் துவங்கிய எங்கள் ஊர் இப்போது சிறுவாணி அணை விவகாரத்தில் உச்சத்தில் இருக்கிறது. அமைதிக்காக ரசினி குடிவரவில்லை. அமைதியை கெடுக்க எல்லையில் இரு புறமும் போலீசு காவல் தான் மிச்சம்.

ரசினி அட்டப்பாடிக்கு குடிவருவது எல்லாம் பத்திரிக்கை பரபரப்பு பித்தலாட்டம் என்பது இப்போது தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் புரிந்திருக்கும். 

இதே போல தான் சிறுவாணி அணை பித்தலாட்டங்களும். சிறுவாணியில் அணை கட்ட கேரளா எந்தவிதத்திலும் முற்படவில்லை. இது தெரியாத முட்டாள்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம், தந்தி, என்று பிரபலம் தேடி அலைகிறார்கள். பத்திரிக்கை செய்தி அடிப்படையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் செயலலிதாவின் செயல் ஆச்சரியப்பட வைக்கிறது. செயலலிதாவின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று.

பத்திரிக்கைகள் எழுதுவது எல்லாம் உண்மை அல்ல என்று நம்பும் ரசினி ரசிகர்கள் அறிவாளிகளா? பத்திரிக்கை எழுதுவதே வேத வாக்கியம் என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல்வாதிகள் அறிவாளிகளா?

ரசினியின் பிரபல வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

தினமலர் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. வாழ்க தினமலரின் தமிழ் சேவை, வளர்க தினமலரின் தமிழக விசுவாசம்.

அவசர செய்தி: சிறுவாணி ஆற்றை காக்க சீமான் ஆனைகட்டிக்கு வருகிறாராம். பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து பிரச்சனை நடப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்ப உத்தரவு. மீதியை வந்து எழுதுகிறேன்.

Jun 20, 2012

சிறுவாணி, பவானி சக்கீலா புவனேசுவரி பின்ன தினமலர்


ஆண்டுக்கு ஒரு முறை தினமலரும் தினகரனும் அட்டப்பாடியில் ஒரு அணையை கட்டுவார்கள். அப்புறம் என்ன வழக்கம் போல கோவையில் மதிமுகவின் 10 பேர் கூடி ஒரு ஆர்ப்பாட்டம், தொடர்ந்து மேட்டுபாளையம், ஈரோட்டில் மனித சங்கலி. தமிழ் அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மலையாளியை கண்டபடி திட்டி தீர்த்தல், இது போதும். இனி மீதியை அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம்.

முட்டாள் பயலுகளே சிறுவாணி ஆறு எங்கு இருக்கு, பவானி ஆறு எப்படி பாய்கிறது என்ற அடிப்படை அறிவாவது உங்களுக்கு இருக்கிறதா?


தமிழர் வரலாற்றில் நீங்கள் எல்லாம் ஒரு அவமான சின்னங்கள்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. கேரளாவுக்கு உரிமையான 6 டி.எம்.சி தண்ணீரை கேரளா அட்டப்பாடியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. அப்போது தமிழகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் முடியாது. 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் முதலில் அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

அட்டப்பபாடி புவியல் அமைப்பு ரீதியில் தமிழகத்தின் ஒரு பகுதியே. உங்கள் சுய லாபத்துக்காக கேரளாவுக்கு தாரைவார்த்தீர்கள். இப்போது எப்போதுமே அட்டப்பாடி முன்னேற கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்.

அட்டப்பாடியில் 90% இருப்பது தமிழர்களும் ஆதிவாசிகளும் தான். ஆனால் கோவையில் 50% தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையாவது கணக்கிட்டு பாருங்கள்.

அட்டப்பாடியில் கேரளா அணை கட்ட திட்டமிடவில்லை. தடுப்பணை தான் கட்ட திட்டமிடுகிறது. இந்த தடுப்பணையால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு வரப்போவது இல்லை.

சிறுவாணி, பவானி ஆறுகளின் குறுக்கே அட்டப்பாடியல் 64 இடங்களில் தடுப்பணை உள்ளது. இதனால் கூடுதல் பயனை அனுபவிப்பது தமிழக விவசாயிகள் தான். மலைப்பகுதியில் தேக்கும் தண்ணீர் கீழான சமவெளி பகுதிக்கு எவ்வளவு பயனை தரும் என்பது விவசாயிகளுக்கு தெரியும். 

அதனால் தினமலர் தினகரன் பத்திரிக்கைகளுக்கு சிறு ஆலோசணை.

பத்திரிக்கை பரபரப்புக்கு கேரளாவின் புனிதமான பவானி சிறுவாணியை விட சக்கீலா, அப்புறம் உங்க புவனேசுவரி, இன்னும் பலர் இருக்கிறார்கள். வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை ட்ரை பண்ணிப்பாருங்க.. தயவு செய்து எங்கள் மீது கல் எறியாதீர்கள். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு.

Jun 19, 2012

முல்லைப்பெரியாறு புதிய நீர்வழி சுரங்கம்


முல்லைப்பெரியாறு அணை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி வடகிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. வடகிழக்கே குமுளி தேக்கடி அருகே பூமிக்கு அடியில் சுரங்க கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகம் கூடலூருக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த சுரங்க கால்வாய் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தில் 104 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 104 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் இந்த சுரங்க கால்வாழ் வழி தண்ணீர் கொண்டு வர முடியாது. 104 அடிக்கு மேலுள்ள தண்ணீரை தமிழகம் நோக்கி கொண்டு வரலாம். 104 அடியில் இருந்து 136, 142, 152 அடி வரை உயரும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்தி வருகிறது. 

பிரச்சனை என்னவென்றால் : அணை பலவீனமாக உள்ளது 136 அடிக்கு மேல் தண்ணிரை உயர்த்தினால் அணையில் கூடுதல் நீர்கசிவு ஏற்படுகிறது. இது அணை உடைய வழிவகுக்கும் என கேரள கூறியது. இதை தொடர்ந்து அணை பலப்படுத்தும் பணிகளுக்காக 152 அடியில் இருந்து நீர் மட்டத்தை 136 அடியாக தமிழகம் குறைத்துக்கொண்டது. பின்னர் அணை பலப்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்தது. அணை பலப்படுத்தப்பட்ட பின்னரும் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த கேரளா அனுமதிப்பது இல்லை. தொடர்ந்து அணை உடைந்துவிடும் என்ற பீதியை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறது.

அணை உடைந்துவிடுமா? அணை பலமாக உள்ளதா? என்ற விவாதத்தை கடந்து நாங்கள் ஒன்றை வலியுறுத்துகிறோம். அது மனிதநேயம் அடிப்படையிலானது. அணைக்கு கீழ் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். ஒரு அணை உடைந்துவிடும் என்ற பீதியை கிளப்பி விட்டால் அந்த அச்ச உணர்வை போக்குவது கடினம். அதற்கு அவர்களை முழுமையாக சமாதானப்படுத்தும் வழிமுறைகளை காண்பாது தான் மனிதநேயம். அத்தகு மனிதநேயம் தமிழர்களுக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

மாற்று தீர்வாக தற்போது 104 அடியில் உள்ள சுரங்க கால்வாயின் ஆழத்தை 50, 34 அடியாக தாழ்த்துவது. அல்லது இதற்கு நிகராக புதிய சுரங்கம் ஏற்படுத்துவது என்பதை வலியுறுத்துகிறோம். இது இப்போது நாங்கள் சொல்லும் திட்டம் அல்ல. அணையை கட்டிய பென்னி குயின் தனது டைரி குறிப்பில் எழுதிவைத்துள்ள திட்டம்.

இந்த பணியை செய்தால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை தேக்கவேண்டிய ஆவசியம் இருக்காது. நேரடியாக ஆற்றை திருப்பி தமிழகத்துக்கு கொண்டுவர முடியும். இதனால் தற்போது கிடைக்கும் நீரின் அளவை விட 5 மடங்கு தண்ணீர் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்கும்.

அணையில் தேக்கும் தண்ணீரின் அளவை மேலும் குறைப்பதன் மூலம் கேரள மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும். இது இரு மாநில மக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சம் ரூ. 1 கோடி ரூபாய் இருந்தால் போதும். தமிழகத்தை பொருத்தவரை இந்த தொகை பெரியது அல்ல.

இந்த திட்டம் குறித்து தமிழகத்தின் ஐந்து மாவட்ட பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் திரு கம்பம் அப்பாசு, கேரள முல்லைப்பெரியாறு போராட்டக்குழு தலைவர் திரு. சி,பி ரோய் ஆகியோர் கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.


இந்த திட்டம் குறித்து விவாதிக்க தமிழக கேரள விவசாயிகள் சந்திப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. வரும் சூலை 7 தேதி கோட்டயத்தில் வைத்து இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் கேரளாவை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அன்பார்களே கேரள தமிழக நல்லுரவுக்காக உங்களால் இயன்ற குரல்கொடுங்கள்.

Jun 13, 2012

முல்லைப்பெரியாறு கேரள-தமிழக விவசாயிகள் சந்திப்பு


தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த விவசாயிகள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் சந்தித்து ஆலோசனைகளை பகிரும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்

வரும் சூலை மாதம் 7 தேதி கொச்சியில் வைத்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கேரளாவில் இருந்து முல்லைப்பெரியாறு போராட்டக்குழு முன்னாள் தலைவர் சி.பி.ரோய், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி தாமசு (நீதிபதி ஆனந்த் குழுவில் கேரள பிரதிநிதியாக இருந்தவர்) எழுத்தாளர்கள் சிவிசங்கரன், நீலகண்டன், வழக்கறிஞர் காளிங்கராசு, திருவனந்தபுரம் தமிழ் சங்கம் உட்பட பலரும் கலந்துகொள்கின்றனர். 

தமிழகம் சார்பில் ஐந்து மாவட்ட பெரியார் நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு, தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், இயக்குனர் அரவிந்த், இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்

திரு.நெடுமாறன், திரு கு.ராமகிருசுணன், திரு.கொளத்தூர் மணி உள்ளிட்டோரையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த கூட்டத்தில் கேரள தமிழக மக்களுக்கு முழுமையான பயனை தரும் புதிய நீர்வழி சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளோம்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனை முடிவுகளை கேரள தமிழக அரசுகளுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளோம். 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் வலைப்பதிவர்கள் உள்ளிட்டோர் தொடர்பு கொள்ளவும். 

ஆக்கபூர்வமான சிந்தனைகள் நிச்சயம் நல்ல தீர்வை தரும்.

தொடர்புக்கு தமிழ்மலர் :9787678939      tamilmalarnews@gmail.com

நன்றி...

Jun 12, 2012

மரம் ‘வெட்டியான’ கோவை வலைபதிவர் சந்திப்பு

முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. 

வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்டியாக அரட்டை அடிக்கும் கூட்டமாக மட்டும் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வலைப்பதிவர் குழுமம் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட வேண்டும். அதற்கான அத்தனை தகுதிகளும் கோவை வலைப்பதிவர்களுக்கு இருக்கிறது. இங்கு பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கணிபொறியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள், வங்கியாளர்கள், தொழில்முனைவோர், அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் பதிவர்களாக உள்ளனர்.  

இவர்களை முறையாக இணைத்து, நிச்சயம் ஒரு மாற்று ஊடகமாக  கோவை வலைப்பதிவர் குழுமம் செயல்பட முடியும்.

ஒரு குழுமம் என்றால் முதலில் திட்டமிடுதல் வேண்டும். ஆனால் திட்டமிடுதலுக்கு முன்னர் சந்திப்பை முதன்மைப்படுத்தி இருக்க கூடாது. இருந்தாலும் சங்கவி மற்றும் சக பதிவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கோவை மண்ணின் வலைப்பதிவர் என்ற முறையில் எனது சில ஆலோசனைகளை இங்கு பகிர்கிறேன். ஏற்பதும் விலக்குவதும் பெரும்பாண்மை பதிவர்களின் விருப்பம்.

1. முதலில் கோவை வலைப்பதிவர் குழுமத்தின் வலைதளத்தை முறையாக பாராமறியுங்கள். ஏனெனில் அது தான் நமது தலைமை அலுவலகம்.

2. குழுவின் செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்து அரசாங்கத்தில் பதிவு செய்யுங்கள். (பதிவு செய்யாமல் செயல்படுவதும் கூடுவதும் சட்ட விரோதம்) பதிவு செய்வதால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும்.

3. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை நல்குங்கள் (மின்னனு மூலமாகவும் செய்யலாம்)

4. ஒட்டல் எடுத்து விவாதிப்பது எல்லாம் வீண். வலைப்பதிவிலோ, முகநூல் வாயிலாகவோ அனைத்து உறுப்பினரின் கருத்துக்களை கேட்டறியுங்கள். ( மாதம் ஒரு முறை இணையத்திலேயே தாராளம் விவாதிக்கலாம்)

5. குழுமத்திற்கான கொள்கை, செயல்திட்டங்கள், விதிமுறைகளை வகுத்து செயல்படுத்துங்கள்.

6. உறுப்பினர்களின் முழு விபரங்களையும் சேகரித்து பதிவு செய்யுங்கள்.

7. குழுமத்திற்கான செயல்பாட்டு நிதி ஆதாரத்திற்கான வழிமுறைகளை கண்டறியுங்கள்.

8. ஒரு சங்கம் எப்படி செயல்படவேண்டும் என விதிமுறைகள் இருக்கிறதோ அதை முழுமையாக பின்பற்றுங்கள்.

9. சேவை எல்லாம் அப்புறம் முதலில் நமது தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

10. ஆண்டுக்கு ஒரு முறை சரியாக திட்டமிட்டு ஆண்டுவிழா கொண்டாடுங்கள். இது தனிபட்ட வலைப்பதிவர் சந்திப்பாக மட்டும் இல்லாமல் குடும்பம் குழந்தைகளோடு கொண்டாடும் ஒரு திருவிழாவாக திட்டமிடப்படட்டும். 

இதுபோன்று ஒவ்வொருவருக்கும் பல கருத்துக்கள் இருக்கும் அவற்றை கேட்டறிய முதல்கட்டமாக கோவை வலைபதிவர் குழும தளத்தில் ஒரு விவாதம் வைக்கவும். 

நன்றி.

Jun 11, 2012

கோவை வலைபதிவர் சில சுவாரசியங்கள்


எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர நிழ்வுடன் துவங்கியது கோவை வலைப்பதிவர் குழுமம். எப்படா முடியும் என்று மனதுக்குள் அளுத்துக்கொண்டேன். ஆனால் புரியாமல் 1.30 மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்துக்கு உலக சினிமா ரசிகன் தந்த 2 நிமிட விளக்கம் மிக அருமை. இப்போது மீண்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.  

மரம் வளர்ப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு உதவுதல் இந்த மூன்றும் தான் எந்த சந்திப்பிலும் விவாத பொருள். ஆனால் என்னை பொருத்தவரை இது அளுத்துபோய் விட்டது. கோவை சந்திப்பிலும் அதுதான் பேசப்பட்டது. 

இரண்டாவதாக மைக் பிடித்த பேராசிரியர் திரு. பழனி கந்தசாமி அவர்கள் ரத்தின சுருக்கமாக தன் கருத்தை முன்வைத்தார். பதிவர்கள் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாது. பதிவு, இணையம் மூலமாக இயன்றதை செய்யலாம் என்றார். 

மீண்டும் மரம் வளர்ப்பு பாதுகாப்பு விவாதங்கள் தொடர்ந்தது. வின்செண்ட் ஐயா என் பக்கத்து தோட்டக்காரர் என்பது அப்போது தான் தெரிந்தது. இணையத்தில் 4 ஆண்டுகள் பின்னூட்டம் ஏழுதி பரசுபரம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். ஆனால் நேரில் சந்தித்தித்த இப்போது தான் இந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது. 

சரியாக பெயர் தெரியவில்லை (மன்னிக்கவும்) முகநூல் தோழி ஒருவர் முகநூல் பயன்பாட்டில் பெண்களின் தயக்கத்தையும் பிரச்சனைகளையும் தெளிவாக பகிர்ந்து கொண்டார். பாராட்டுக்கள்.  அடுத்து கோவை மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் அறிமுகம் கிடைத்து. 

அடுத்து பேசிய தோழியின் கருத்து எனக்குள் புது கருத்து தெளிவை தந்தது. தோழி அகிலா என்று நினைக்கிறேன். மாதம் ஒருமுறை பெரியார் பற்றி பதிவு எழுதுவேன். காரணம் அவர் இல்லாவிட்டால் இன்று இந்த அளவுக்கு நாம் சமுய ரீதியில் முன்னேறி இருப்போமா என்று தெரியாது.
கடவுள் மறுப்பு என்ற ஒற்றை வரியில் மட்டுமே பெரியார் அவர்களை பார்க்கக்கூடாது. கடவுள் மறுப்பை தாண்டி சமுதாய சீர்திருத்தத்திற்காக பெரியார் செய்த பணிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாமல் போவது வேதனை என்பதை பகிர்ந்துகொண்டார். ( பெயர் சரியாக தெரியவில்லை அகிலா என்றே நினைக்கிறேன்) பெரியார் அவர்ளை எனக்குள் மிகச்சரியாக புரிய வைத்த தோழி அகிலா அவர்களுக்கு மீண்டும் ஒரு தலைவணக்கம்

அடுத்து பேசிய தோழி கோவை மு சரளா அவர்கள் அன்பை பற்றி பேசினார். மரங்களை பற்றி பேசாமல் மனிதர்களின் அன்பை பற்றி பேசியதற்கு பாராட்டுக்கள். அவரின் வலைப்பதிவு கவிதைகளிலும் அன்பு கொட்டிக்கிடக்கிறது. அடுத்து முக்கிய நபரான சங்கவி எந்த முக்கிய கருத்தையும் சொல்லவில்லை. மாற்றாக ஒவ்வவொரு பதிவரின் சிறப்பை அவ்வப்போது அறிமுகப்படுத்தினார். நன்று.

முகநூல் மூலம் மனிதர்களை பாதுகாக்கும் அரும்பணி செய்யும் ஒரு அன்பரின் பணி உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது. அவரது பணிகளை பற்றி தனிப்பதிவாக எழுத திட்டமிட்டுள்ளேன். அடுத்து மீண்டும் சில நண்பர்கள் மரங்கள் பாதுகாப்பு பற்றி பேசினார்கள். 

அடுத்து பின் வரிசையில் அமர்ந்திருந்த என் பக்கம் மைக் வந்ததும் முக்கிய அறிவிப்பு வந்தது. மசுகட்டில் இருந்து நண்பர் மனசாட்சி மைக்கை பிடிங்கிக்கொண்டார். கோவை வலைப்பதிவர் சந்திப்பு தித்திப்பாக செல்பேசி வழி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நன்றிகள் பல.

நான் என்ன பேசியிருப்பேன் என்று எனது வலைதளத்தை தொடர்ந்து படிப்பவர்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

வேரென்ன? விதண்டாவாதம் தான்.

சாலை ஒர மரங்களையம், சிட்டுக்குருவிகளையும் பாதுகாப்பதாக கூறுபவர்கள் மீது கோபத்தை பகிர்ந்துகொண்டேன். நகரத்தில் உள்ள மரத்துக்காக போராடும் இவர்கள் வனத்திலும் கிராமங்களிலும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட முக்கிய காரணமாகின்றனர். சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. அதே போல செல்போன் டவர் தவிர்க்க முடியாதது. சிட்டுக்குருவிக்காக உச்சு கொட்டுகிறவர்கள் தயவு செய்து தங்கள் செல்போன்களை தூக்கி எறியுங்கள் என்றேன். யாரும் தயாரில்லை. 

(செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது ஒரு கட்டுக்கதை. செல்போன் நிறுவனங்களிடம் பேரம்பேசி பணம்பறிப்பதற்காக எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்பதை புறிந்து கொள்ளுங்கள்.)

விரிவாக்கப்பணிகள் நடக்கும் சாலையில் வெட்டப்படும் 150 மரங்களுக்காக கண்ணீர் வடிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு வனத்தில் அதிகாரப்பூர்வமாக வெட்டப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் தெரியாதது வேடிக்கை.

சாலை ஓரங்களில் வெட்டப்படவேண்டிய மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும். அதை தடுக்க தயவு செய்து யாரும் நேரம் ஒதுக்க வேண்டாம். உங்களால் அது இயலாது.  

அடுத்து மரக்கன்றுகளை தயவு செய்து விவசாயிகளுக்கு கொடுங்கள். சாலை ஓரத்தில் நட்டி வீணடிக்காதீர்கள். சாலை ஓரத்தில் மரத்தை நட்டினால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் பொருப்பு இருக்கிறது. அது உங்களால் முடியுமா? 

வலைப்பதிவர்கள் நாம் பொருளாதார ரீதியாக யாருக்கும் உதவி செய்ய முடியாது. அதே போல மரங்களை நடவோ, பாதுகாக்கவோ நிச்சயமாக முடியாது. அதனால் இதுபோன்ற சேவைகளில் எனக்கு உடன்பாடில்லை. 

வலைப்பதிவு, இணையம் மூலமாக என்ன உதவிகள் செய்ய முடியுமோ அவைகளை வலைப்பதிவர்களால் நிச்சயமாக செய்ய முடியும். எனது கருத்தாக மலைகிராமத்தில் உள்ள 8,&10, 12ம் வகுப்பு மாணவ&மாணவியருக்கு இணையம், வலைப்பதிவு குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தி தருவோம். அவர்களின் படைப்புகளை வலைப்பதிவுக்கு கொண்டு வருவோம் என்றுள்ளேன். அதற்கான அரசாங்க அனுமதியும் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளேன்.

விவசாயத்தை அரசாங்க பணியாக அறிவிக்க கோரி சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேம். அதற்கான ஆதரவை தரும்படி கேட்டுக்கொண்டேன்.

இறுதியில் பல நண்பர்களும் வந்தார்கள். குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நேரம் 6.30 கடந்துவிட்டது. இதற்கு மேலும் நான் வீட்டுக்கு புறப்படாவிட்டால் காட்டுயானைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் புறப்பட்டு விட்டேன். 

அனைவரையும் எங்க ஊரு அட்டப்பாடிக்கு சுற்றுலா வர அழைப்பு விடுத்துள்ளேன். வருக வருக....

மீதி அடுத்த பதிவில்... 

Jun 10, 2012

கூடங்குளத்திற்காக பணம் வாங்கிய தினமலர்-2


இந்த பதிவு 3.3.2012 அன்று எழுதியது. இன்றைய தினமலர் தலைப்பு செய்தியை படிங்கள். தமிழர்களை எவ்வளவு முட்டள்களாக தினமலர் எடை போட்டுள்ளது என்பது புரியும்    

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்காக அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது.ஆப்பிரிக்காவில் இருந்து பணம் வாருகிறது. உதயகுமார் பணம் வாங்கியதற்கு இதோ ஆதாரம் கிடைத்து விட்டது. உதயகுமார் இன்று கைது, நாளை கைது, சி.பி.ஐ செக், பீதி, மீதி, சீரியல் என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியது தினமலர். 

உதயகுமார் பணம் வாங்கினார் என நாராயணசாமி சொல்கிறார், பிரதமர் சொல்கிறார், ரசியா சொல்லிவிட்டது. ஆரம்பத்தில் மக்கள் நம்பினார்கள். ஆனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற தினமலரின் கூப்பாடு மக்களிடையே வேறுவிதமான சந்தேகத்தை எழுப்பியது.

கூடங்குளம் அணு உலைக்காக உண்மையில் பணம் வாங்கியது யார்? வாசகர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர். இப்போது அவசரஅவசரமாக ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தினமலர்.

1988ல் கூடங்குளம் அணுமின்நிலைய அடிக்கல் நாட்டவிழா மக்களின் கடும் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் எந்த பணியும் சட்டபூர்வமாக நேர்மையாக நடக்கவில்லை. முறையாக கட்டுமானம் நடக்கவில்லை. திருட்டுதனமாக மறைந்து மறைத்து கட்டப்பட்ட சட்டவிரோத கூடாரம் தான் கூடங்குளம் அணுமின் நிலையம்.

அன்று மக்கள் போராடத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது தினத்தந்தி, தினகரன், பத்திரிக்கைகள் தான். தமிழகம் கூண்டோடு அழியும் என தலைப்பு செய்தி வெளியிட்டன. இதனால் வெகுன்டெழுந்த மக்கள் இன்று வரை போராடி வருகிறார்கள். இதை நன்கு உணர்ந்த மத்திய அரசு பத்திரிக்கை வாயிலாகவே தமிழர்களை முட்டாள்களாக்க நரித்தந்திரம் தீட்டியது.

கூடங்குளம் திறக்கப்படாமல் இருக்க உதயகுமார், பட்டினி போராட்டம் எல்லாம் ஒரு காரணமே அல்ல. மத்திய அரசு நினைத்தால் இரவோடு இரவாக போராட்ட கூடாரத்தை காலி செய்துவிட முடியும். ஆனால் பிரச்சனை அது அல்ல. 

அணு உலையை திறக்கும் முன்னராக தேசிய பேரிடர் மேலாண்மையை திட்டத்தை சுற்றுவட்ட 30 கி.மீ மக்களுக்கு செயல்படுத்த வேண்டும். இதற்கு முதல்கட்டமாக அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது திடீர் என அணு உலை விபத்து ஏற்பட்டால் ஏற்படும் கதிர்வீச்சுகளில் இருந்து எப்படி உயிர்தப்பிப்பது என்ற தற்காப்பு முறைகளை மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கு அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு கையொப்பம் இட்டு ஆவணம் தயார் செய்ய வேண்டும்.

அந்த காலத்தில் மக்களின் வருமையை பயன்படுத்தி கோதுமை மூட்டை தருகிறோம் என்று ஏமாற்றி கையொப்பம் பெற்று விட்டனர். ஆனால் இன்று அது நடக்காது. விபத்து குறித்து விளக்க சென்றால் விளக்கமாத்து (சீமாறு) அடி தான் விழும். இது மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. இதற்காக தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பயன்படுத்த முடிவு செய்தது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

கூடங்குளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மையை செயல்படுத்தாமல் இருக்கவும், மக்கள் எண்ணங்களை திசை திருப்பவும் தினமலர் பணம் வாங்கி உள்ளது, இதற்காக மத்திய அரசிடம் தினமலர் பேரம் பேசி முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளது. 

தினமலரில் தினமும் 2 முழு பக்கத்தில் கூடங்குளத்தில் அணு உலை திறப்பதற்கான ஆதரவு செய்தியை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் கோவை, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தொழில்துறையிரை தூண்டி விட்டு போராட்டம் நடத்துவதாகவும் உறுதிகொடுத்துள்ளனர். 

கோவை, புதுச்சேரி பகுதிகளில் தினமலரே பல அமைப்புகளை போராட்டம் நடத்த தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் லெட்டர் பேடு கட்சிகள், அமைப்புகள் என்று செய்தி வெளியிட்டது தினமலர். இன்று அதே அமைப்புகளை அழைத்து போராட்டம் நடத்துங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடுகிறோம். காவல்துறை அனுமதி வாங்கித்தருகிறோம் என்றுள்ளனர். 

கோவையில் மற்ற பத்திரிக்கைளில் வெளிவராது தினமலரில் மட்டும் தினமும் முன்று போராட்ட செய்திகள் வருகிறது. செய்தி வெளியான பத்திரிக்கைகளை உடனுக்கு உடன் டெல்லிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அலுவகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மின்வெட்டு, வெளிநாட்டு சதி என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் அணுஉலைக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்துவது. 

உதயகுமார் மீது அவதூறு, தேசியபாதுகாப்பு என்று அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்கள் மீது தமிழர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவது. 

- இந்த இரண்டு பணிகளை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளது தினமலர்.

இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமலே அணுஉலையை திறக்கும் சூத்தரத்தை வெற்றிகரமாக நிறைவேற்றப்போகிறது மத்திய அரசு.

சங்கரன்கோவில் இடைதேர்தல் முடிந்ததும் அணுஉலை திறக்கப்பட உள்ளது. தங்கள் முழு சக்தியையும் திரட்டி போராடும் மக்களை ஒடுக்க எந்த எல்லைக்கும் தாயராக உள்ளது ராணுவம். செத்துமடியும் மக்கள் தேசதுரோகிகளாவும், பணம்வாங்கிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதும் தினமலர் தேசிய நாளிதழாகவும் பட்டம் சூட்டப்போகிறது.

இறுதியாக தமிழர்களே உங்கள் மனசாட்சியிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்
தற்போதைய மின்வெட்டுக்கு கூடங்குளம் திறக்கப்படாதது தான் காரணமா?

Jun 8, 2012

கோவையில் இனிய உதயம் இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல்


கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள்.

நண்பர் சங்கவி மூலம் கோவை வலைப்பதிவர் குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது. எங்களது நீண்டநாள் ஆவலாக இருந்த கோவை வலைப்பதிவர் குழும சந்திப்பு நாளை நடைபெருகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

இந்த இனிய சந்திப்பிற்கு முதல் மற்றும் முழு முயற்சி எடுத்துவரும் அனைத்து இணைய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.


ஆக்கப்பூர்வமானதாக செயல்பட 
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கூடுதல் தகவல் :http://www.sangkavi.com/2012/06/blog-post_07.html

May 5, 2012

முல்லைப்பெரியாறு முயற்சிக்கு வெற்றி


முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வாக புதிய சுரங்கம் அமைக்கும் திட்டத்தை வலியுறுத்தி இருந்தோம். இது தொடர்பாக கேரள தமிழக விவசாய மற்றும் போராட்டக்குழு தலைவர்களை சந்தித்து அவர்களின் சம்மதத்தையும் வெளியிட்டிருந்தோம். திரு கம்பம் அப்பாசு, மற்றும் சி.பி ரோய் ஆகியோர் முழு மனதுடன் சம்மதித்து பேசிய சி.டியை வெளியிட்டிருந்தோம்.


இரு மாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய சுரங்க கால்வாய் திட்டம் குறித்து நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவிடமும் அறிக்கை கொடுத்திருந்தோம். அதன் பயனாக தற்போது அந்த திட்டத்தை உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வாக 2 திட்டங்களை உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. 1. புதிய அணை. 2. புதிய சுரங்க கால்வாய். இதில் இரண்டாம் திட்டமான புதிய சுரங்க கால்வாய் திட்டம் இரு மாநிலத்தவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகவும் அமையும் என்று உயர்மட்ட குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு படிப்படியான வெற்றி கிடைத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Mar 22, 2012

கேவலமான தமிழ் இனமாகும் தமிழ்நாட்டு தமிழர்கள்


ஐயா மனசாட்சியுள்ள தமிழர்களே குறைந்தபட்சம் பேரிடர் மேலாண்மையையாவது செயல்படுத்த சொல்லுங்கள். 

பசித்தால் பிள்ளையையும் கொன்று தின்ன தயங்கமாட்டான் தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.  அன்று இந்தியன் என்பதற்கு கேவலப்பட்டேன். இன்று தமிழன் என்பதற்கே கேவலப்படுகிறேன். போதுமடா உங்கள் தமிழ்உண்ர்வு.

எனக்கு தெரிந்து உலகில் இவ்வளவு கேவலமான இனத்தை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்களுக்கு சிங்களவர் எவ்வளவோ மேல்.

கூடங்குளத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவே போராடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டும் போராட்டக்காரர்கள் தேசதுரோகிகளாக தெரிகிறார்கள். 

கூடங்குளத்தை திறக்க வேண்டும் என்று கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில், வடஇந்தியாவில் எங்காவது ஒரு மாநிலத்தில் போராட்டம் நடக்கிறதா? ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அத்தனை ஒரு ஆத்திரம். வாய் கொஞ்சம் நீளமானாலும் நல்ல அடிமைகள் தமிழர்கள் என்பதை 21ம் நூற்றாண்டிலும் நிரூபித்து விட்டீர்கள். 
தினமலர் பத்திரிக்கை எவ்வளவு கொச்சைப் படுத்தியுள்ளது பார்த்தீர்களா? ஏசி அறையில் இருந்துகொண்டு எதை எழுதினாலும் சூத்திர தமிழன் நம்பாமலா இருப்பான். எத்தனை பெரியார் வந்தாலும் என்றுமே நீங்கள் பார்ப்பணர்களுக்கு அடிமைகள் தனடா! 
அணு உலை திறக்கப்படுவதற்கு முன்பு அதை சுற்றியுள்ள 30.கி.மீ பகுதியில் பேரிடர் மேலான்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விதி. அது செயல்படுத்தபடவில்லை. இந்தியாவில் அணு சக்தி மூலம் 3% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. கூடங்குளம் மூலம் தமிழகத்துக்கு அதிகபட்சமாக 150 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதே ஆச்சரியம் தான். இத்தனையும் தெரிந்தும் கூடங்குளம் திறக்க வேண்டும் என்றும். அதற்கு எதிரானவர்கள் தேசதுரோகிகள் என்றும் கூறுவது எவ்வளவு கொடூரமானது. கூடங்குளத்தில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே. அவர்களும் மனிதர்கள் தானே.

தினமலர் போன்ற பத்திரிக்கைகள் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழர்களை அடகுவைக்கிறது. அதுதெரியாத இந்த அடிமை தமிழர்கள், ஆமாம் போட்டே தன் சொந்த இனத்தையும் அழிக்க துடிக்கின்றனர்.

ஐயா தமிழர்களே கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். சொற்பம் மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களின் உணர்வை கொல்வதற்கும் தயாரான நீங்கள் நிச்சயம் கொடியவர்களே. 

பசித்தால் உணவை தான் சாப்பிட வேண்டும் மலத்தை அல்ல. வளர்க்கும் ஆடுமாடுகளை தான் அடித்து தின்ன வேண்டும். சொந்த குழந்தையையும் சகோதரரையும் அல்ல. 

தமிழ்நாட்டு தமிழர்களே உங்கள் இதயம் கல் அல்ல என்றால் கூடங்குளம் அணு உலையை திறக்கும் முன்னர் பேரிடர் மேலாண்மையை செயல்படுத்த சொல்லுங்கள். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லுங்கள். 

மின்வெட்டு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவு தெரிவித்தீர்களானால் நீங்கள் மனதநேயம் அற்ற அற்ப இனம் என்பது மட்டும் உண்மை. 

Mar 3, 2012

கூடங்குளத்திற்காக பணம் வாங்கிய தினமலர்


யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். 

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்காக அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது.ஆப்பிரிக்காவில் இருந்து பணம் வாருகிறது. உதயகுமார் பணம் வாங்கியதற்கு இதோ ஆதாரம் கிடைத்து விட்டது. உதயகுமார் இன்று கைது, நாளை கைது, சி.பி.ஐ செக், பீதி, மீதி, சீரியல் என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியது தினமலர். 

உதயகுமார் பணம் வாங்கினார் என நாராயணசாமி சொல்கிறார், பிரதமர் சொல்கிறார், ரசியா சொல்லிவிட்டது. ஆரம்பத்தில் மக்கள் நம்பினார்கள். ஆனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற தினமலரின் கூப்பாடு மக்களிடையே வேறுவிதமான சந்தேகத்தை எழுப்பியது.

கூடங்குளம் அணு உலைக்காக உண்மையில் பணம் வாங்கியது யார்? வாசகர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர். இப்போது அவசரஅவசரமாக ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தினமலர்.

1988ல் கூடங்குளம் அணுமின்நிலைய அடிக்கல் நாட்டவிழா மக்களின் கடும் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் எந்த பணியும் சட்டபூர்வமாக நேர்மையாக நடக்கவில்லை. முறையாக கட்டுமானம் நடக்கவில்லை. திருட்டுதனமாக மறைந்து மறைத்து கட்டப்பட்ட சட்டவிரோத கூடாரம் தான் கூடங்குளம் அணுமின் நிலையம்.

அன்று மக்கள் போராடத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது தினத்தந்தி, தினகரன், பத்திரிக்கைகள் தான். தமிழகம் கூண்டோடு அழியும் என தலைப்பு செய்தி வெளியிட்டன. இதனால் வெகுன்டெழுந்த மக்கள் இன்று வரை போராடி வருகிறார்கள். இதை நன்கு உணர்ந்த மத்திய அரசு பத்திரிக்கை வாயிலாகவே தமிழர்களை முட்டாள்களாக்க நரித்தந்திரம் தீட்டியது.

கூடங்குளம் திறக்கப்படாமல் இருக்க உதயகுமார், பட்டினி போராட்டம் எல்லாம் ஒரு காரணமே அல்ல. மத்திய அரசு நினைத்தால் இரவோடு இரவாக போராட்ட கூடாரத்தை காலி செய்துவிட முடியும். ஆனால் பிரச்சனை அது அல்ல. 

அணு உலையை திறக்கும் முன்னராக தேசிய பேரிடர் மேலாண்மையை திட்டத்தை சுற்றுவட்ட 30 கி.மீ மக்களுக்கு செயல்படுத்த வேண்டும். இதற்கு முதல்கட்டமாக அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது திடீர் என அணு உலை விபத்து ஏற்பட்டால் ஏற்படும் கதிர்வீச்சுகளில் இருந்து எப்படி உயிர்தப்பிப்பது என்ற தற்காப்பு முறைகளை மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கு அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு கையொப்பம் இட்டு ஆவணம் தயார் செய்ய வேண்டும்.

அந்த காலத்தில் மக்களின் வருமையை பயன்படுத்தி கோதுமை மூட்டை தருகிறோம் என்று ஏமாற்றி கையொப்பம் பெற்று விட்டனர். ஆனால் இன்று அது நடக்காது. விபத்து குறித்து விளக்க சென்றால் விளக்கமாத்து (சீமாறு) அடி தான் விழும். இது மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. இதற்காக தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பயன்படுத்த முடிவு செய்தது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

கூடங்குளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மையை செயல்படுத்தாமல் இருக்கவும், மக்கள் எண்ணங்களை திசை திருப்பவும் தினமலர் பணம் வாங்கி உள்ளது, இதற்காக மத்திய அரசிடம் தினமலர் பேரம் பேசி முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளது. 

தினமலரில் தினமும் 2 முழு பக்கத்தில் கூடங்குளத்தில் அணு உலை திறப்பதற்கான ஆதரவு செய்தியை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் கோவை, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தொழில்துறையிரை தூண்டி விட்டு போராட்டம் நடத்துவதாகவும் உறுதிகொடுத்துள்ளனர். 

கோவை, புதுச்சேரி பகுதிகளில் தினமலரே பல அமைப்புகளை போராட்டம் நடத்த தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் லெட்டர் பேடு கட்சிகள், அமைப்புகள் என்று செய்தி வெளியிட்டது தினமலர். இன்று அதே அமைப்புகளை அழைத்து போராட்டம் நடத்துங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடுகிறோம். காவல்துறை அனுமதி வாங்கித்தருகிறோம் என்றுள்ளனர். 

கோவையில் மற்ற பத்திரிக்கைளில் வெளிவராது தினமலரில் மட்டும் தினமும் முன்று போராட்ட செய்திகள் வருகிறது. செய்தி வெளியான பத்திரிக்கைகளை உடனுக்கு உடன் டெல்லிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அலுவகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மின்வெட்டு, வெளிநாட்டு சதி என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் அணுஉலைக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்துவது. 

உதயகுமார் மீது அவதூறு, தேசியபாதுகாப்பு என்று அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்கள் மீது தமிழர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவது. 

- இந்த இரண்டு பணிகளை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளது தினமலர்.

இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமலே அணுஉலையை திறக்கும் சூத்தரத்தை வெற்றிகரமாக நிறைவேற்றப்போகிறது மத்திய அரசு.

சங்கரன்கோவில் இடைதேர்தல் முடிந்ததும் அணுஉலை திறக்கப்பட உள்ளது. தங்கள் முழு சக்தியையும் திரட்டி போராடும் மக்களை ஒடுக்க எந்த எல்லைக்கும் தாயராக உள்ளது ராணுவம். செத்துமடியும் மக்கள் தேசதுரோகிகளாவும், பணம்வாங்கிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதும் தினமலர் தேசிய நாளிதழாகவும் பட்டம் சூட்டப்போகிறது.

இறுதியாக தமிழர்களே உங்கள் மனசாட்சியிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்
தற்போதைய மின்வெட்டுக்கு கூடங்குளம் திறக்கப்படாதது தான் காரணமா?

Feb 24, 2012

என்கவுண்டரும் ஈழப்போரும் என்ன வேறுபாடு


உலகிலேயே மிகவும் கோழைத்தனமான காவல்துறை என்ற பெயரை எடுத்துள்ளது தமிழக காவல்துறை. சாதாரண வங்கிக்கொள்ளையர்களை சுட்டு தான் பிடிக்கவேண்டும் என்ற பயந்தாங்கோலிகளா தமிழர்கள். தமிழ்நாடு என்பது மனிதநேயம் உள்ள மக்கள் வாழும் நாடா இல்லை காட்டுமிராண்டிகள் வாழும் நாடா? 

என்கவுண்டர் செய்தால் தமிழக மக்கள் ஆகா ஓகோ என்பார்கள் என்ற தைரியத்தில் தானே இத்தனை அக்கிரமத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஒருவனை கூட விட்டுவைக்ககூடாது என்ற கொலைவெறி தமிழக போலீசாருக்கு எங்கிருந்து வந்தது? கொலைவெறி பாடலை தமிழர்கள் உள்ளூர ரசித்திருக்கிறார்கள் என்பதை இப்படி தான் வெளிக்காட்ட வேண்டுமா? 

தமிழக போலீசார் யார்? சைகோவா?, கொலைகார எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்தவர்களா? கொடூர கொலைகாரர்களுக்கும் தமிழக போலீசாருக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. அதிகாரம், ஆயுதம், தொழில்நுட்பம் இத்தனையும் கொடுத்தும், கொன்று தான் பிடிக்க வேண்டும் என்றால் இந்த கொலைகார காவல்துறை தமிழர்களுக்கு தேவையா? 
இங்கு என்கவுண்டரை ஆதரித்து பேச சிலர் முன்வரலாம். ஒரு வருடத்திற்கு முன்னர் கோவையில் நடந்த என்கவுண்டரை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட மோகன்ராசு தான் குற்றவாளி என போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. 

என்கவுண்டரை ஆதரித்து பேசும் தமிழர்களே உலக அரங்கில் இரக்க குணம் அற்ற மிருகங்கள் தான் தமிழர்கள் என்ற பெயரை எடுத்து விடாதீர்கள். மனித உரிமைகள் பற்றி பேச உங்களுக்கு துளியும் யோக்கியதை இல்லை. உங்கள் தலைசிறந்த காவல்துறையால் இன்று நீங்கள் தலைகுனித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்கவுண்டர் என்பது வீரம் என்று யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. கோழைகளே இனியாவது திருந்துங்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?

இலங்கையின் மனித உரிமை பற்றி பேச உங்களுக்கு என்னடா யோக்கியதை இருக்கிறது? 

என்கவுண்டர் நடந்த இடத்துக்கு 10 மணி நேரம் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. எதற்காக? எதை மூடி மறைக்க? உங்கள் துக்கடா போலீசுக்கே இந்த புத்தி இருக்கும்போது இலங்கை ராணுவத்துக்கு எவ்வளவு புத்தி இருக்கும். நீங்கள் பேசுகிறீர்கள் இலங்கை ராணுவம் மனிதஉரிமைகளை மீறியது என்று. 

தமிழ் நாட்டினரே இனியும் என்கவுண்டரை ஆதரித்து தமிழரின் பாரம்பரிய நற்குணத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

Feb 22, 2012

முல்லைப்பெரியாறு கொலைநடுங்க வைக்கும் படுபாதகம்


மிகவும் வருத்தத்துடனும், பீதியுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை புதிய கால்வாய் என்ற திட்டத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக கேரள தமிழக மக்கள், அரசியல்வாதிகள், நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து பேசி வருகிறோம். பல மகிழ்சியான கருத்துரைகளை கடந்து சில வேதனையான கருத்துக்களையும் பகிராமல் இருக்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு என்ற பிரச்சணைக்கு சிலர் மறுமுகம் கொடுத்து வருகின்றனர். இதை இருமாநில மக்களும் எப்படி முறியடிப்பார்கள் என்ற பீதி இப்போதே கொலைநடுங்க வைக்கிறது.

தங்கள் இலக்கை அடைய உயிர்பலிக்கும் தாயாரக இருக்கும் சில குரூர எண்ணக்காரர்களை பற்றி தான் இங்கு எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் சில இனவெறியர்கள் ஒரு இலக்கை சாதிக்க துடிக்கின்றனர். 

திருவிதாங்கூர் அரசர் செய்த வரலாற்று பிழையை திருத்துகிறோம் என்ற பேரில் எந்த பிரச்சனைக்கும் தாயர் என்ற மனநிலையில் உள்ளனர்.

பெரியாறு முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆங்கிலேய அரசு திரவிதாங்கூர் மன்னரை மிரட்டி நதியை அணை கட்டி திருப்பி விட்டது. அதை நாங்கள் மீட்டெடுபோம் என்று விசமத்தை பரப்பி வருகிறார்கள். இதற்கு கேரளாவின் முக்கிய பத்திரிக்கையும் உடந்தையாக கொம்பு சீவி வருகிறது. எவ்வளவு உயரிபலி கொடுத்தேனும் நதியை மீட்பது ஒன்று எங்கள் குறிக்கோள் என்கின்றனர். 

அதே பாணியில் தமிழகத்திலும் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உள்ளன. பீர்மேடு, தேவிகுளம் பகுதியை மீட்டுவிட வேண்டும் என கொலைவெறி பிடித்து அலைகிறார்கள். இதற்காக இன கலவரத்தை ஏற்படுத்தவும் தயாராகி வருகிறார்கள். (அபாயகரமான உண்மை என்பதால் அந்த அரசியல்வாதிகள், பத்திரிக்கைகள் பெயரை குறிப்பிடவில்லை)  

கேரள ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்து ஒற்றை கேள்வியை முன் வைத்தோம்.

2006ல் தண்ணீரை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் அதை கேரளா மதிக்கவில்லை. அதே போல 2012 ல் கேரளாவுக்கு சாதகமாக புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தால் அதை தமிழகம் ஏற்றுக்கொள்ளுமா? 

ஒருவர் சட்டென உச்சசநீதின்றம் தீர்ப்பளித்தால் மதித்து தானே ஆக வேண்டும் என்றார். பின்னர் ஏன் 2006ல் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு மவுனம் மட்டுமே பதில்.

நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிக்கப்போவதில்லை பின்னர் எதற்கு இவ்வளவு பொருட்செலவில் விவாதங்கள்?    நிபுணர் குழுவையும் பத்திரிக்கைகளையும் வாழ வைக்கவா?

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னனியில் ஒரு இனக்கலவரத்தை தூண்டி தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள இரு பிரிவினரும் தயாராக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொம்பு சீவிக்கொண்டு இருக்கிறார்கள். 

தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் கலவரம் வெடிக்க காத்திருக்கிறது. இரு பிரிவினரும் வரலாற்று பிழையை திருத்தி தங்கள் ஆற்றையும், பகுதியையும் மீட்டெடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த போருக்கு துவக்கம் இட நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வரும் நாள் போருக்கான மணி அடித்துவிடும். ( எத்தனை மக்களுக்கு மரண மணியோ?) 

பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகம் மீட்கப்போவதும் இல்லை, பெரியாற்றை கேரளம் மீட்கப்போவதும் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை கலவரக்காரர்களும் இராணுவமும் கொன்று குவிப்பது மட்டும் உண்மை. 

கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப்பெரியாறு, பீர்மேடு, மூணாறு பகுதியில் வாழும் அப்பாவி மக்களுக்கு சமாதி கட்டும் அந்த கோரத்தை அரங்கேற்ற நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதை மானுடம் பேசும் நல்லுலகம் எப்படி முறியடிக்கும் என்று தெரியவில்லை....

வருத்தங்களுடன்...

Feb 21, 2012

மீனவனாக இறந்தாலும் கேரளாவில் இருக்க வேண்டும்.


தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்படுவது இது புதிது அல்ல. ஆனால் இந்தமுறை ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஆம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை சுட்டுக்கொன்றனர் இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள். சம்பவத்தை அறிந்ததும் இந்திய கடற்படைக்கு காத்திருக்காமல் விரைந்து செயல்பட்டனர் கேரள போலீசார்.  கப்பலை சுற்றி வளைத்து கொச்சிதுறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். 

சர்வதேச சட்டம், இந்திய கடற்படை என தப்பிக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் கேர ள அரசும், போலீசாரும் குற்றவாளிகளை தங்கள் மாநில சட்டப்படி கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு கேரள ஊடகங்களும், மக்களும் ஒருமித்த குரலில் உறுதுணையாக இருந்தன. 

இரண்டே நாளில் கப்பல் கேப்டன் உட்பட 7 பேரையும் விசாரனை வட்டத்துக்குள் கொண்டு வந்தனர். மீனவர்கள் அடையாளம் காட்டிய இந்தாலி கப்பல் காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கேரள சட்டப்படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, போலீசு காவலிலும் எடுத்து விட்டனர். விசாரனையை இரு வாரத்துக்குள் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கித்தருவோம் என்கின்றனர் கேரள போலீசார்.  

இது ஒரு சாதாரன நிகழ்வு தான். கேரள போலீசார் பெரிய சாதனை ஒன்றும் செய்திடவில்லை. ஆனால் பக்கத்து மாநிலம் தமிழகத்தை ஒப்பிடும் போது இது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே தெரிகிறது. இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மீனவர்கள் எத்தனை பேர்? 

இம்முறை தமிழ்மீனவர்களாக இருந்தாலும் கேரள மீனவர்களாக இறந்துள்ளனர். இதற்கு முன்னர் தமிழ்மீனவர்கள் தான் ஆனால் தமிழக மீனவர்களாக இறந்துள்ளனர் அவ்வளவு தான் வேறுபாடு. 

தமிழக மீனவரும் சுட்டுக்கொல்லப்பட்ட போது மீனவர்களுக்கு பேராசை என்று அறிக்கை விட்டார்கள் தமிழக அரசியல்வாதிகள். தமிழக மீனவர்களை சுட்ட குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்பட்டதாக கேள்விப்பட்டதில்லை. 

மிருகத்தனமாக நடந்துகொண்ட இத்தாலியர்களை கொடூரர்கள் என கேரள ஊடகங்கள் எழுதின. சோனியாக காந்தியை விமர்சித்தன. இங்கு எந்த காங்கிரசாரும் இறையான்மை என்று வாய்சவடால் விடலில்லை. ஆனால் தமிழகத்தில் சோனியாகாந்தி என்றாலே எதோ மாரியாத்தாவையும், மரியன்னையையும் பேசியது போல தமிழக காங்கிரசார் குதிக்கின்றனர். உங்களுக்கு மட்டும் அப்படி எப்படிடா சோனியா தெய்வமானார்?

தமிழக போலீசாருக்கு இது ஒரு நல்ல வழிகாட்டுதல். இந்திய இறையாண்மை, இலங்கை நற்புறவு என மீனவர்படுகொலையை நியாயப்படுத்தாமல்  இனிமேலாவது தமிழக மீனவர்கள் காக்கப்படட்டும்.

Feb 16, 2012

சுடாலின், விசயகாந்த், வைகோ ஓர் ஒப்பீடு



கருணாநிதிக்கு பின்னர் செயலலிதாவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அடுத்து முதல்வர் நாற்காலியில் அமரும் திறனும் யோகமும் யாருக்கு இருக்கிறது என்ற ஆய்வை சென்ற பதிவில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி தான் இந்த பதிவு


யோகம்(பாக்கியம்) என்று பார்த்தால் அது சுடாலின் மற்றும் விசயகாந்த் கதவை தான் தட்டுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த திறன் பெற்ற தகுதியானவர் யார் என்றால் பட்டென சொல்லிவிடலாம் வைகோ என்று. 

தமிழகம் ழுழுவதும் உள்ள மக்கள் மன ஓட்டமும் அப்படியே இருக்கிறது. 

எம்.எல்.ஏ., தேர்தலில் சுடாலினும் விசயகாந்தும் வெற்றிபெருவார்கள் வைகோ தோற்றுவிடுவார். அதே நேரத்தில் எம்.பி தேர்தலில் சுடாலினும் விசயகாந்தும் தோற்றுவிடுவார்கள் வைகோ வெற்றிபெற்றுவிடுவார். இதை அனைத்து அரசியல் நோக்கர்களும் சரிவைக்கிறார்கள்.

டெல்லியில் தமிழகத்துக்காக குரல்கொடுக்கும் கம்பீரம் வைகோவிடம் மட்டுமே உள்ளது. இந்த விசயத்தில் விசயகாந்த் 0 வாகவே உள்ளார். 

பிரதமரை நேரடியாக சந்திக்கும் திறனும், உடனே அனுமதி கிடைக்கும் கம்பீரமும் வைகோவிடம் மட்டுமே உள்ள என்பது ஊர் அறித்த விசயம்.

தமிழ்நாடு தோன்றி 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. இனி வரும் தலைமுறைக்கு கம்பீரமும் திறமையும் உள்ள முதல்வர் தான் தேவை என்பதில் இளம் தலைமுறை தெளிவாக உள்ளது.

இதன் அடிப்படையில் இளைஞர்கள் மத்தியில் எடுத்த ஆய்வு தான் அடுத்து நீங்கள் படிக்க இருப்பது. மறக்காமல் உங்கள் கருத்தையும் பதிவு செய்து செல்லுங்கள்

1. அரசியல் அனுபவம்

சுடாலின் ...........30%
விசயகாந்த் ......10%
வைகோ............ 60%

2. கல்வி அறிவு


சுடாலின்.......... 35%
விசயகாந்த்...... 05%
வைகோ........... 60%

3. அரசியல் அறிவு


சுடாலின் ................. 40%
விசயகாந்த் ............. 05%
வைகோ .................  55%


4. நிர்வாக திறன்


சுடாலின் ................. 45%
விசயகாந்த் ............. 10%
வைகோ .................  45%




5. மக்கள் தொடர்பு


சுடாலின் .............. 40%
விசயகாந்த் ...........15%
வைகோ ............... 45%


6. வெளியுலக தொடர்பு


சுடாலின் ................... 38%
விசயகாந்த் ............... 02%
வைகோ .................... 65%


7. சட்ட அறிவு


சுடாலின் ......................  24%
விசயகாந்த் ................... 01%
வைகோ ........................ 75%


8. தமிழகம் குறித்த அறிவு


சுடாலின்...............  25%
விசயகாந்த் ........... 05%
வைகோ ...............  70%


9 டெல்லி செல்வாக்கு


சுடாலின் .............. 20%
விசயகாந்த் .......... 01%
வைகோ ............... 74%


10 உலகளாவிய தமிழர் பார்வை


சுடாலின் ................. 15%
விசயகாந்த் .............. 01%
வைகோ ................... 86%


11. திராவிட கோட்பாடு


சுடாலின் ................. 25%
விசயகாந்த் ............. 10%
வைகோ .................. 65%


12. இறையாண்மை


சுடாலின் .................... 40%
விசயகாந்த் ................ 35%
வைகோ ..................... 25%


13. மேடை பேச்சு


சுடாலின் ............ 15%
விசயகாந்த் ........ 25%
வைகோ ............  60%


14. மக்கள் செல்வாக்கு


சுடாலின் ........... 35%
விசயகாந்த் ....... 45%
வைகோ............ 20%


15. கம்பீரம்


சுடாலின் .......... 30%
விசயகாந்த் .......15%
வைகோ............ 55%


16. சமையோசித புத்தி


சுடாலின்...............  30%
விசயகாந்த் ........... 10%
வைகோ................. 60%


17. ஆளுமை திறன்


சுடாலின் ............... 30%
விசயகாந்த் ........... 10%
வைகோ ................ 60%


18. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு


சுடாலின் ................ 30%
விசயகாந்த் ............ 10%
வைகோ ................. 60%


19.செயலலிதாவை எதிர்கொள்ளும் திறன்


சுடாலின் .............. 30%
விசயகாந்த்........... 30%
வைகோ............... 40%


20. கட்சி, கூட்டணி செல்வாக்கு


சுடாலின்................ 35%
விசயகாந்த்............ 35%
வைகோ ................ 30%


Popular Posts