நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா?
உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா?
இது சன் டையரக்டுடைய சொத்தாம்.
ஆமா உங்களுக்கு இலவசமாக தானே கொடுத்தாங்க, அப்புறம் எப்படி அது உங்க சொத்தாகும். 2000 ரூபாய் கொடுத்து இலவசத்தை வாங்கிவிட்டு இப்ப அதற்கு உரிமை கொண்டாட முடியுமா என்ன?
செல்போன் எண்ணை மாற்றாமல் செல்போன் சேவை( என்ன சேவையோ?) வழங்கும் நிறுவனங்களை மாற்றலாம் என்ற புதிய தொழில்நுட்பம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
அதே போல ரிசீவரை மாற்றாமல் விரும்பிய டி.டி.எச் சேவைக்கு மாறும் திட்டத்தை அமல்படுத்துதல் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டம் வந்தால் எந்த டி.டி.எச் ரிசீவர் வைத்திருந்தாலும் சுலபமாக நாம் விரும்பிய சேவைக்கு மாறிவிடலாம். புதிதாக ரிசீவர், உட்பட உபகரணங்கள் வாங்க தேவையில்லை.
ஆனால் சன் டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு
மட்டும் ஊ.. ஊஊஊஊஊ.... (கவுண்டமணி செந்திலை நினைச்சுக்கங்க..)
ஏனா அது இலவசமா கொடுத்த சொத்தாம்.
உடனே உங்க ரீசீவரை பாருங்கள் அது உங்க சொத்தா இல்லா அவங்க சொத்தானு தெரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...

சன் டையரக்டின் உலகமாகா சேவையில் பூரித்துபோன கிராமத்து பெரியவர் நேரக செட்டப் பாக்சுடன்
ReplyDeleteடீலர் கடைக்கு வந்தார்.
இலவசமா வந்து மாற்றி தர முடியாது, 200 ரூபாய் கொடுத்தால் பிரைவெட் டெக்னீஷன் மாற்றி தருவார் என்றிருக்கின்றனர்.
நீ ஆணியே புடுங்க வேண்டாம் என்று கோபத்தின் உச்சத்துக்கு போன பெரியவர் கடைக்கு முன்னால் வந்து செட்டப் பாக்சை ரோட்டில் போட்டு உடைத்துள்ளார்.
உடனே அவரை சூழ்த டீலர்கள். யாருடை சொத்துனு இதை இப்படி போட்டு உடைக்கிற பெருசு. உனக்கு இது இலவசமா கொடுத்த சன்டையரக்டினுடைய சொத்து. பிடிக்கலைனா இப்படி உடைக்க கூடாது. திருப்பி பத்திரமா தரனம். போலீசுல பிடிச்சு கொடுத்திடுவோம். சத்தம் போடாம வீடுபோயிசேரு என்றுள்ளனர்.
1800 ரூபாய் கொடுத்து இலவசத்தை வாங்கிய பெரிசு வேலியில போறதை வேட்டிக்குள் விட்ட எனக்கு இதுவும் வேனும் இதுக்கு மேலயும் வேனும்னு உடைச்ச ரிசீவரை துண்டில் பத்திரமாக பொதிந்து எடுத்து வீடு போய் சேர்ந்தது.
என்ன கொடுமையடா இது.