Dec 12, 2011

முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு


முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு.ரோய், இதை அறிவித்துள்ளார். 

இடுக்கி மாவட்டம் சப்பாத்துவில் போராட்ட பந்தலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய் மற்றும் சுரங்கங்களின் ஆழத்தை கூட்டி , அல்லது புதிய சுரங்கங்கள் வெட்டி தமிழகம் முழுமையாக தண்ணீரை எடுக்கலாம். இதன் மூலம் தற்போது உள்ள அணையை சமாதான சின்னமாக நிலைநிறுத்தலாம். புதிய அணை தேவை இல்லை. இந்த திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என்று திரு ரோய் பேட்டியில் அறிவித்துள்ளார். 

தாழ்வாக புதிய சுரங்கங்கள் வெட்டி தமிழகம் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு போராட்டக்குழ தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்களும் வரவேற்று உள்ளார். 

திரு பென்னிகுயிக் டைரிக்குரிப்பில் உள்ள கூடுதல் கால்வாய்கள் வெட்டும் திட்டத்தை தமிழ்மலரில் எழுதி இருந்தோம். இது தொடர்பாக திரு. கம்பம் அப்பாசு, திரு ரோய் ஆகியோரை சந்தித்து பேசினோம். 

இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இருவரும் ஒரே தீர்வை வலியுறுத்தும் பேட்டி அடங்கிய சி.டியை தமிழ்மலர் ஆசிரியர் திருமதி.உமாமகேசுவரி திரு ரோய் அவர்களிடம் அளித்தார்.

இடுக்கி சப்பாத்துவில் இன்று மாலை இந்த நிகழ்வு நடந்தது. போராட்ட பந்தலில் பட்டினி போராட்டம் நடத்திவரும் அத்தனை பேரும் மகிழ்ச்சி பொங்க சி.டியை பெற்றுக்கொண்டர். திரு.கம்பம் அப்பாசு அவர்களின் பேட்டிக்கு பலத்த கர ஒலி எழுப்பி மலையாளி தமிழர் இனபேதம் இன்றி அத்தனை மக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு.ரோய் இது வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்டனர். பல ஆண்டுகள் தொடரும் எங்கள் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்த வந்த இந்த ஆதரவு குரலை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறோம் என்றனர். 

இன்று இரவு 8.30 க்கு நடந்த இந்த சந்திப்பு நாளை கேரளாவின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் என்று நம்புகிறோம்.

தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் உரக்க சொல்வோம்...

திரு.ரோய் (கேரள போரட்டகுழு தலைவர்) :  09447200707
திரு கம்பம் அப்பாசு (தமிழக போராட்ட குழு தலைவர்) :  9597844100
தமிழ்மலர் :  9787678939]

எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் தீர்க்கலாம்.

3 comments:

  1. மிக்க சந்தோசம், இனி வானம் வசப்படும்...!!!

    ReplyDelete
  2. மகிழ்ச்சியான செய்தி விவசாய மக்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சிதானே.....

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி தமிழ்மலர் ஆசிரியர்

    ReplyDelete

Popular Posts