முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கான எளிமையான தீர்வுகளை கோவை பத்திரிக்கையாளர்களுக்கு இன்று விளக்கம் அளித்தோம்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மதியம் 2.30 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. எனது கணவரும் பத்திரிக்கையாளருமான ஆனந்த்துடன் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினேன்.
தினமலர், தினதந்தி, தினகரன், தினமணி போன்ற தமிழ்பத்திரிக்கை நிருபர்கள் வரவில்லை. சன் டிவி, கேப்டன் டிவி, டெக்கன் கிரானிக்கல், எ.என்.ஐ, உட்பட ஒரு சில பத்திரிக்கையாளர்களே நட்பு ரீதியாக வந்திருந்தார்கள்.
பின்னர் மாலை 5 மணி அளவில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். இந்த தீர்வுகள் குறித்த முகாந்திர ஆய்வுகளை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்படி கேட்டுக்கொண்டோம். உளவுத்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக தமிழக முதல்வர் செயலலிதாவின் பார்வைக்கும் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக நாளை பாலக்காடு மாவட்ட பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்க உள்ளோம். பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
பாலக்காடு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெரும் கூட்டத்தில் தமிழக மூத்த பொரியாளர்கள் தயாரித்த 40 நிமிட குறும்படத்தை வெளியிட்டு காட்ட உள்ளோம்.
இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள். மேலதிக ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment