Jun 29, 2012

ஆனந்த் குழு ஊடகங்களின் இருட்டடிப்பு

முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தமிழக கேரளாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் தரப்பட்டது. ஆனால் ஒரு தமிழ் ஊடகத்தில் கூட உண்மை நிலை எழுதப்படவில்லை. விவாதிக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் கேரள பிரதிநிதியாக ஆனந்த குழுவில் இடம்பெற்றிருந்த கே.டி தாமசை சந்தித்து முழுமையான அறிக்கையை கேட்டுப்பெற்றேன்.

அதில் இறுதி வரிகள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

In Case This Suggestion Finds Favour With The Hon`Ble Supreme Court, The Safety Concerns Of The Sok(So Kerala) And The Requirements Of The So Tn( So Tamil Nadu) Would Be Met From The Existing Dam After Completing The Left Over Strengthening Measures And Construction A New Tunnel For Evacuation Of Reservoir Water 

The Empowered Committee Humbly Suggests That For An Amicable Resolution Of The Long Pending Dispute Between The Two Neighbouring States The Alternatives Are Worth Exploring With The Party States



இந்த வரிகளுக்கு கீழ் தான் நீதிபதி ஆனந்த், கே.டி தாமசு, லட்சுமணன், நிபுணர்கள் தட்டே, மேத்தா ஆகிய ஐந்து பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

8 பக்கங்களில் இந்த திட்டம் குறித்து வரவேற்று எழுதியுள்ளனர். இரு மாநிலங்களும் இதை தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு குழுவில் இருந்த 5 பேரும் கூடுதல் வரவேற்பை பதிவு செய்துள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த திட்டம் குறித்து தமிழ் ஊடகங்கள் ஒரு வரி கூட எழுதாதது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு.

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் உச்சநீதிமன்றம் இதை தீவிரமாக பரிசீலிக்கிறது. ஒரு ஆண்டுக்குள் இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வறிக்கை தரும்படி தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை உலகத்தில் எந்த நதிநீர் பிரச்சனையும் நீதிமன்றம் வாயிலாக தீர்க்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. எனவே தான் மக்கள் மன்றத்தில் இதை வைத்திருக்கிறோம். வரும் 7ம் தேதி கேரள தமிழக மக்கள் சந்தித்து பேசும் ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளோம். 

தமிழக ஊடகங்கள் எங்களை புறக்கணித்தாலும், நிச்சயம் ஒரு நாள் எங்கள் குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். இந்த நம்பிக்கையில் தொடர்கிறது எங்கள் முயற்சி...

2 comments:

  1. //தமிழக ஊடகங்கள் எங்களை புறக்கணித்தாலும், நிச்சயம் ஒரு நாள் எங்கள் குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். இந்த நம்பிக்கையில் தொடர்கிறது எங்கள் முயற்சி...//

    உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்! பிரச்சனைகளை உருவாக்கி அதை வைத்தே பணம்,புகழ் தேடும் பல நபர்கள் ஊருக்கு ஊர் பெருகி வருகின்றார்கள் இதை ஊடகவும் பயண்படுத்தி கொள்கின்றது.

    ReplyDelete

Popular Posts