Jun 10, 2012

கூடங்குளத்திற்காக பணம் வாங்கிய தினமலர்-2


இந்த பதிவு 3.3.2012 அன்று எழுதியது. இன்றைய தினமலர் தலைப்பு செய்தியை படிங்கள். தமிழர்களை எவ்வளவு முட்டள்களாக தினமலர் எடை போட்டுள்ளது என்பது புரியும்    

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்காக அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது.ஆப்பிரிக்காவில் இருந்து பணம் வாருகிறது. உதயகுமார் பணம் வாங்கியதற்கு இதோ ஆதாரம் கிடைத்து விட்டது. உதயகுமார் இன்று கைது, நாளை கைது, சி.பி.ஐ செக், பீதி, மீதி, சீரியல் என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியது தினமலர். 

உதயகுமார் பணம் வாங்கினார் என நாராயணசாமி சொல்கிறார், பிரதமர் சொல்கிறார், ரசியா சொல்லிவிட்டது. ஆரம்பத்தில் மக்கள் நம்பினார்கள். ஆனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற தினமலரின் கூப்பாடு மக்களிடையே வேறுவிதமான சந்தேகத்தை எழுப்பியது.

கூடங்குளம் அணு உலைக்காக உண்மையில் பணம் வாங்கியது யார்? வாசகர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர். இப்போது அவசரஅவசரமாக ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தினமலர்.

1988ல் கூடங்குளம் அணுமின்நிலைய அடிக்கல் நாட்டவிழா மக்களின் கடும் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் எந்த பணியும் சட்டபூர்வமாக நேர்மையாக நடக்கவில்லை. முறையாக கட்டுமானம் நடக்கவில்லை. திருட்டுதனமாக மறைந்து மறைத்து கட்டப்பட்ட சட்டவிரோத கூடாரம் தான் கூடங்குளம் அணுமின் நிலையம்.

அன்று மக்கள் போராடத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது தினத்தந்தி, தினகரன், பத்திரிக்கைகள் தான். தமிழகம் கூண்டோடு அழியும் என தலைப்பு செய்தி வெளியிட்டன. இதனால் வெகுன்டெழுந்த மக்கள் இன்று வரை போராடி வருகிறார்கள். இதை நன்கு உணர்ந்த மத்திய அரசு பத்திரிக்கை வாயிலாகவே தமிழர்களை முட்டாள்களாக்க நரித்தந்திரம் தீட்டியது.

கூடங்குளம் திறக்கப்படாமல் இருக்க உதயகுமார், பட்டினி போராட்டம் எல்லாம் ஒரு காரணமே அல்ல. மத்திய அரசு நினைத்தால் இரவோடு இரவாக போராட்ட கூடாரத்தை காலி செய்துவிட முடியும். ஆனால் பிரச்சனை அது அல்ல. 

அணு உலையை திறக்கும் முன்னராக தேசிய பேரிடர் மேலாண்மையை திட்டத்தை சுற்றுவட்ட 30 கி.மீ மக்களுக்கு செயல்படுத்த வேண்டும். இதற்கு முதல்கட்டமாக அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது திடீர் என அணு உலை விபத்து ஏற்பட்டால் ஏற்படும் கதிர்வீச்சுகளில் இருந்து எப்படி உயிர்தப்பிப்பது என்ற தற்காப்பு முறைகளை மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கு அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு கையொப்பம் இட்டு ஆவணம் தயார் செய்ய வேண்டும்.

அந்த காலத்தில் மக்களின் வருமையை பயன்படுத்தி கோதுமை மூட்டை தருகிறோம் என்று ஏமாற்றி கையொப்பம் பெற்று விட்டனர். ஆனால் இன்று அது நடக்காது. விபத்து குறித்து விளக்க சென்றால் விளக்கமாத்து (சீமாறு) அடி தான் விழும். இது மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. இதற்காக தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பயன்படுத்த முடிவு செய்தது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

கூடங்குளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மையை செயல்படுத்தாமல் இருக்கவும், மக்கள் எண்ணங்களை திசை திருப்பவும் தினமலர் பணம் வாங்கி உள்ளது, இதற்காக மத்திய அரசிடம் தினமலர் பேரம் பேசி முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளது. 

தினமலரில் தினமும் 2 முழு பக்கத்தில் கூடங்குளத்தில் அணு உலை திறப்பதற்கான ஆதரவு செய்தியை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் கோவை, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தொழில்துறையிரை தூண்டி விட்டு போராட்டம் நடத்துவதாகவும் உறுதிகொடுத்துள்ளனர். 

கோவை, புதுச்சேரி பகுதிகளில் தினமலரே பல அமைப்புகளை போராட்டம் நடத்த தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் லெட்டர் பேடு கட்சிகள், அமைப்புகள் என்று செய்தி வெளியிட்டது தினமலர். இன்று அதே அமைப்புகளை அழைத்து போராட்டம் நடத்துங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடுகிறோம். காவல்துறை அனுமதி வாங்கித்தருகிறோம் என்றுள்ளனர். 

கோவையில் மற்ற பத்திரிக்கைளில் வெளிவராது தினமலரில் மட்டும் தினமும் முன்று போராட்ட செய்திகள் வருகிறது. செய்தி வெளியான பத்திரிக்கைகளை உடனுக்கு உடன் டெல்லிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அலுவகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மின்வெட்டு, வெளிநாட்டு சதி என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் அணுஉலைக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்துவது. 

உதயகுமார் மீது அவதூறு, தேசியபாதுகாப்பு என்று அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்கள் மீது தமிழர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவது. 

- இந்த இரண்டு பணிகளை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளது தினமலர்.

இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமலே அணுஉலையை திறக்கும் சூத்தரத்தை வெற்றிகரமாக நிறைவேற்றப்போகிறது மத்திய அரசு.

சங்கரன்கோவில் இடைதேர்தல் முடிந்ததும் அணுஉலை திறக்கப்பட உள்ளது. தங்கள் முழு சக்தியையும் திரட்டி போராடும் மக்களை ஒடுக்க எந்த எல்லைக்கும் தாயராக உள்ளது ராணுவம். செத்துமடியும் மக்கள் தேசதுரோகிகளாவும், பணம்வாங்கிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதும் தினமலர் தேசிய நாளிதழாகவும் பட்டம் சூட்டப்போகிறது.

இறுதியாக தமிழர்களே உங்கள் மனசாட்சியிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்
தற்போதைய மின்வெட்டுக்கு கூடங்குளம் திறக்கப்படாதது தான் காரணமா?

1 comment:

  1. ஆகா...இப்படியான வேலையும் தினமலர் செய்கின்றதா?

    ReplyDelete

Popular Posts