Jun 19, 2012

முல்லைப்பெரியாறு புதிய நீர்வழி சுரங்கம்


முல்லைப்பெரியாறு அணை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி வடகிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. வடகிழக்கே குமுளி தேக்கடி அருகே பூமிக்கு அடியில் சுரங்க கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகம் கூடலூருக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த சுரங்க கால்வாய் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தில் 104 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 104 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் இந்த சுரங்க கால்வாழ் வழி தண்ணீர் கொண்டு வர முடியாது. 104 அடிக்கு மேலுள்ள தண்ணீரை தமிழகம் நோக்கி கொண்டு வரலாம். 104 அடியில் இருந்து 136, 142, 152 அடி வரை உயரும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்தி வருகிறது. 

பிரச்சனை என்னவென்றால் : அணை பலவீனமாக உள்ளது 136 அடிக்கு மேல் தண்ணிரை உயர்த்தினால் அணையில் கூடுதல் நீர்கசிவு ஏற்படுகிறது. இது அணை உடைய வழிவகுக்கும் என கேரள கூறியது. இதை தொடர்ந்து அணை பலப்படுத்தும் பணிகளுக்காக 152 அடியில் இருந்து நீர் மட்டத்தை 136 அடியாக தமிழகம் குறைத்துக்கொண்டது. பின்னர் அணை பலப்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்தது. அணை பலப்படுத்தப்பட்ட பின்னரும் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த கேரளா அனுமதிப்பது இல்லை. தொடர்ந்து அணை உடைந்துவிடும் என்ற பீதியை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறது.

அணை உடைந்துவிடுமா? அணை பலமாக உள்ளதா? என்ற விவாதத்தை கடந்து நாங்கள் ஒன்றை வலியுறுத்துகிறோம். அது மனிதநேயம் அடிப்படையிலானது. அணைக்கு கீழ் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். ஒரு அணை உடைந்துவிடும் என்ற பீதியை கிளப்பி விட்டால் அந்த அச்ச உணர்வை போக்குவது கடினம். அதற்கு அவர்களை முழுமையாக சமாதானப்படுத்தும் வழிமுறைகளை காண்பாது தான் மனிதநேயம். அத்தகு மனிதநேயம் தமிழர்களுக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

மாற்று தீர்வாக தற்போது 104 அடியில் உள்ள சுரங்க கால்வாயின் ஆழத்தை 50, 34 அடியாக தாழ்த்துவது. அல்லது இதற்கு நிகராக புதிய சுரங்கம் ஏற்படுத்துவது என்பதை வலியுறுத்துகிறோம். இது இப்போது நாங்கள் சொல்லும் திட்டம் அல்ல. அணையை கட்டிய பென்னி குயின் தனது டைரி குறிப்பில் எழுதிவைத்துள்ள திட்டம்.

இந்த பணியை செய்தால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை தேக்கவேண்டிய ஆவசியம் இருக்காது. நேரடியாக ஆற்றை திருப்பி தமிழகத்துக்கு கொண்டுவர முடியும். இதனால் தற்போது கிடைக்கும் நீரின் அளவை விட 5 மடங்கு தண்ணீர் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்கும்.

அணையில் தேக்கும் தண்ணீரின் அளவை மேலும் குறைப்பதன் மூலம் கேரள மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும். இது இரு மாநில மக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சம் ரூ. 1 கோடி ரூபாய் இருந்தால் போதும். தமிழகத்தை பொருத்தவரை இந்த தொகை பெரியது அல்ல.

இந்த திட்டம் குறித்து தமிழகத்தின் ஐந்து மாவட்ட பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் திரு கம்பம் அப்பாசு, கேரள முல்லைப்பெரியாறு போராட்டக்குழு தலைவர் திரு. சி,பி ரோய் ஆகியோர் கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.


இந்த திட்டம் குறித்து விவாதிக்க தமிழக கேரள விவசாயிகள் சந்திப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. வரும் சூலை 7 தேதி கோட்டயத்தில் வைத்து இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் கேரளாவை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அன்பார்களே கேரள தமிழக நல்லுரவுக்காக உங்களால் இயன்ற குரல்கொடுங்கள்.

No comments:

Post a Comment

Popular Posts