Jun 22, 2012

அமைதியை கெடுத்த ரசினியின் சின்னவீடு

அமைதி தேடி ரசினிகாந்த் கோவையில் குடியேறப்போகிறார். இந்த செய்தியை படித்ததும் எங்கள் ஊர் சலூன் கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார். உங்களுக்கு புழுகுவதற்கும் ஒரு அளவு இல்லையா என்று!

கோவையில் உள்ள எனது பத்தரிக்கை நண்பர்களும் தொலைபேசியில் அழைத்தார்கள். என்ன உங்க ஊரைப்பத்தி தப்புதப்பா செய்தி அடிபடுகிறே என்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் பகுதி பத்திரிக்கை நண்பர்களுக்கு இனி 2 வாரத்துக்கு அட்டப்பாடி தான் பொழுதுபோக்கு தளம் என்பதை அப்போதே யூகித்துக்கொண்டேன்.

ஆண்டுக்கு ஒரு முறை அட்டப்பாடியில் ஆனைகட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்துக்கு ரசினி வந்து செல்வது வழக்கம். ரசினிக்கு சாலையில் நடைப்பயிற்சி செய்ய பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று. காரணம், பத்திரிக்கை, ரசிகர்கள் கூட்டம் என எந்த இடையூறும் இல்லாமல் சாலையில் நடக்கலாம். இங்குள்ள ஆதிவாசி மக்களும் ரசினியை அவ்வளவு தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆசிரமத்தில் ரசினிக்கு என்று தனி வீடு உள்ளது. இரண்டு அறைகள் மட்டுமே உள்ள மிகச்சிறிய வீடு அது. இங்குள்ளவர்கள் செல்லமாக ரசினியின் சின்னவீடு என்று அழைப்பார்கள். இங்குள்ள 90% மக்கள் ரசினியின் சின்னவீட்டிற்கு சென்று வந்துள்ளார்கள். 

இது தவிர ரசினிக்கும் அட்டப்பாடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் ஆசிரமத்திற்கு அருகே உள்ள ஒரு மிகப்பெரிய பங்களாவை படம் பிடித்து பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். எதார்த்தத்தில் அந்த கட்டிடம் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது. ரசினி குடியேறப்போகும் பெரிய வீடு என்ற பேச்சு இப்ப ஊர் முழுவதும். பத்தா குறைக்கு உளவு துறை அதிகாரிகளின் தொடர் மோப்பம் பிடித்தல்கள் இன்னும் சந்தேகத்தை கிளப்பி விட்டது. 

உளவுத்துறை நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார். ரசினி கோவைக்கு குடிவருவது உண்மையா? பத்தரிக்கைகள் பற்ற வைக்கும் வதந்தியை உளவுத்துறை விசாரணை என்ற பெயரில் கொழுந்துவிட்டு எரியவிடுகிறது. 

பத்திரிக்கைள் எழுதுவதை எந்த பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற அதிகாரிகளால் வரும் விசாரனை பொதுமக்களை குழப்பி விட்டுவிடுகிறது. 

ரசினியின் சின்னவீடு குடியேற்ற பரபரப்பில் துவங்கிய எங்கள் ஊர் இப்போது சிறுவாணி அணை விவகாரத்தில் உச்சத்தில் இருக்கிறது. அமைதிக்காக ரசினி குடிவரவில்லை. அமைதியை கெடுக்க எல்லையில் இரு புறமும் போலீசு காவல் தான் மிச்சம்.

ரசினி அட்டப்பாடிக்கு குடிவருவது எல்லாம் பத்திரிக்கை பரபரப்பு பித்தலாட்டம் என்பது இப்போது தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் புரிந்திருக்கும். 

இதே போல தான் சிறுவாணி அணை பித்தலாட்டங்களும். சிறுவாணியில் அணை கட்ட கேரளா எந்தவிதத்திலும் முற்படவில்லை. இது தெரியாத முட்டாள்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம், தந்தி, என்று பிரபலம் தேடி அலைகிறார்கள். பத்திரிக்கை செய்தி அடிப்படையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் செயலலிதாவின் செயல் ஆச்சரியப்பட வைக்கிறது. செயலலிதாவின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று.

பத்திரிக்கைகள் எழுதுவது எல்லாம் உண்மை அல்ல என்று நம்பும் ரசினி ரசிகர்கள் அறிவாளிகளா? பத்திரிக்கை எழுதுவதே வேத வாக்கியம் என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல்வாதிகள் அறிவாளிகளா?

ரசினியின் பிரபல வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

தினமலர் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. வாழ்க தினமலரின் தமிழ் சேவை, வளர்க தினமலரின் தமிழக விசுவாசம்.

அவசர செய்தி: சிறுவாணி ஆற்றை காக்க சீமான் ஆனைகட்டிக்கு வருகிறாராம். பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து பிரச்சனை நடப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்ப உத்தரவு. மீதியை வந்து எழுதுகிறேன்.

1 comment:

  1. ரஜினி நிம்மதி தேடி போனா அங்கும் தொல்லை தானோ?

    ReplyDelete

Popular Posts