Jan 8, 2011

அடிமைத்தனம் தான் இந்தியாவின் இறையாண்மையா?

இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை காப்பி குடிப்பது முதற்கொண்டு இரவு தூங்கி அடுத்தநாள் விழிக்கும் வரை சுரண்டப்படுகிறேன். 21ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு அடிமை வம்சம் தமிழனாக தான் இருக்க முடியும்.

இந்தியா என்ற நாட்டுக்கு அடிமையானாலும் பரவாயில்லை என பல்வேறு இன கலாச்சார மக்கள் தலைவணங்கினார்கள். எதற்காக? சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேருவின் சுயநலனுகளுக்காகவா? அம்பேத்கார் என்ற மனிதரின் அரசியல் சாசனத்துக்காக தான். 

ஆனால் இன்று அந்த அரசியல் சாசனம் தான் பின்பற்றப்படுகிறதா? இல்லை அரசியல் கட்சிகளின் சாசனம் பின்பற்றப்படுகிறதா? 

இந்தியாவின் முதல் குடிமகன்(சனாதிபதி) எப்படி ஒரு தலையாட்டு பொம்மையாக இருக்கிறாரோ அதே போலதான் அத்தனை குடிமகக்களும் இருக்கிறார்கள்.

நானும் என் அடுத்தடுத்த தலைமுறையும் தொடர்ந்து அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்பது தான் இந்த இந்தியாவின் இறையாண்மையா?

இதுல எதபத்தி வேணும்னாலும் பேசு என் இந்தியாவை பற்றி பேசினா அழுதுருவேனு ஒரு கூட்டம் வேர.

இந்தியா இந்தியா எனும் அறிவிலிகளே அப்படி என்ன உங்கள் இந்தியாவில் இப்போது உள்ளது. பழம் பெருமையை விட்டு நடப்பு உலகை பேசுங்கள்.

உலகில் ரத்தவெறி கொண்ட நாற்றம் பிடித்த நாடாகதானே இந்தியா இருக்கிறது.

இறையாண்மை என்ற ஒற்றை சொல்லில் அடிமையாக இரு என்றால் அப்படி ஒரு நாடே எனக்கு தேவை இல்லை.

என் உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பாவது இருக்க வேண்டும். அது இல்லாதபோது இந்த நாட்டிற்கு நான் மட்டும் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்.

ஓட்டுபோட மட்டும் தான் மக்கள். மசோத சட்டம் இதெல்லாம் அவர்கள் தலையெழுத்து என்றால் தூக்கி எரியுங்கள் உங்கள் குப்பை இந்தியாவை.

ஒரு பண்டிட் குடும்பத்துக்காக 60 ஆண்டுகளாகியும் நான் இன்னும் வருமைகோட்டுக்கு கீழே தான் இருக்க வேண்டுமா?

குடியேற்ற நாடு காசுமீருக்காக மூன்றில் 2 பங்கு நிதியை செலவு செய்யும் இந்தியா ஏன் சொந்த குடிமக்களின் பசிக்கு சோறுபோட கூட மறுக்கிறது.

இதே நிலை நீடித்தால் தமிழ்நாடும் ஒரு குடியேற்ற நாடு தான் என்ற உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டி இருக்கும்.

புரியாதவர்கள் அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனம் 370 பிரிவை படித்து தெளிந்துகொள்ளுங்கள்

சுயராசியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் தேசத்தியாகி. ஆனால் அதே முழுக்கத்தை இன்று நான் பேசினால் தேசதுரோகி. அப்படி என்னட உங்க மண்ணாங்கட்டி இறையாண்மை கொள்கை.

அரசியல் தூய்மை, அதிகார நேர்மை, ஆட்சியில் சமநிலை அப்படி ஒரு இந்தியாவை காட்டுங்கள். நான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படுகிறேன். அதை விட்டுவிட்டு நாங்க இப்படி தான் ரத்த வெறிபிடித்து அலைவோம். அதற்கு நீ அடிபணிந்தேயாகவேண்டும் என்றால் அதற்கு சாவு மேல்.

இந்தியா என்றால் இறையாண்மை மிக்க நாடு என்றுதானே மதிப்பளித்தோம். ஆனால் இன்று என்ன இறையாண்மை இந்தியாவில் உள்ளது.

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்ககூடாது, இந்திய போர்குற்றங்களை விசாரிக்ககூடாது, குவோட்ரோசியை விசாரிக்ககூடாது, அலைகற்றை ஊழலில் சனியனின் தங்கைகளை விசாரிக்க கூடாது. ஒரு பண்டிட் குடும்பம் காசுமீரில் நடத்தும் அட்டூழியங்களை விசாரிக்கக்கூடாது. இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பவனை மட்டும் தேசபாதுகாப்பு சட்டத்தில் விசாரிக்க வேண்டும். இதுதான் உங்கள் இறையாண்மை கொள்கையா?

முதலில் இந்த 60 ஆண்டு காலங்களாக நாடாளுமன்றத்தில் முறைகேடாக நிறைவேற்றப்பட்ட அத்தனை மசோதாக்களையும் ரத்து செய்யுங்கள். அத்தனை வெளியுறவு கொள்கைகளையும் அடியோடு நீக்குங்கள். மக்களுக்கு தெரியாமல் இயற்றப்பட்ட அத்தனை அரசியல் சட்டங்களையும் கிழித்து எரியுங்கள். நேர்மையான புதிய சட்டங்களை இயற்றுங்கள். புதிய இந்தியாவை உருவாக்குங்கள் அதற்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அது முடியாது என்றால் எனது சுயராசியத்தை அமைக்க எனக்கு உரிமை இருக்கிறது. நான் அமைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் ஊழல் இந்தியாவை இன்னும் பொத்தி வைத்து பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.

அடிமை தமிழனே(இந்தியனே) இன்னும் எத்தனை சந்ததிகள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பது உன் கனவு?

11 comments:

  1. இதே எல்லோரும் படிக்கணும் சாமிகளா.... என் பக்கத்ல இணைப்பும் தருகிறேன். அனுமதிக்கவும்.

    ReplyDelete
  2. நன்றி கக்கு-மாணிக்கம். தாராளமாக இணைப்பு கொடுங்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. திரு.தொப்பிதொப்பி

    நீங்கள் குறிப்பிட்டு மறைமுகமாக எழுதியுள்ள சீமான் ஒருவருக்காக எழுதப்பட்டதல்ல இந்த பதிவு. எனக்காக என்னை போன்று ஆதங்கம் உள்ளவர்களுக்காக எழுதியது.

    சீமான் முட்டாளா நீங்கள் முட்டாளா என்பது பொதுசனத்துக்கு தெரியவில்லை என்று நடிக்கவேண்டாம்.

    நான் தலையாட்டி பொம்மையாக இருந்து கண்டவனுக்கு ஓட்டுபோட விரும்பவில்லை என்பதால் தான் இந்த பதிவு.

    உங்கள் வாதப்படி வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் இந்தியாவின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுங்கள் உங்களுக்கு ஆதரவாக இலவசமாகவே பிரச்சாரம் செய்கிறேன்.

    உங்களை போன்று தேசபக்தி முத்தியவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிட பயந்தால் அப்புறம் இந்த நாசமா போன நாட்டில் கண்டவனுக்கு ஓட்டுபோடாமல் எவனுக்கு ஓட்டுபோடுவது?

    வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டும் அல்லது நல்லவரை அடையாளம் காட்ட வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் இனிமேல் நீங்கள் தேசபக்தி பத்தி பேசக்கூடாது. சாவாலை ஏற்க தயாரா?

    நீங்கள் எல்லாம் இந்திய அரசை போலவே வெத்துவாய்தான். இப்படியே எத்தனைகாலம் ஏமாற்றுவீர்கள்.

    உங்கள் ஒரு குடும்பத்துக்கு சாப்பாடு கிடைத்ததும் நீங்கள் விசுவாசம் காட்டுகிறீர்கள். எத்தனை குடும்பங்கள் பட்டினிகிடந்து சாகிறது என்பது தெரியுமா? அவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா? இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? அவர்கள் உழைப்பதில்லை என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

    தயவு செய்து உங்கள் போலி தேசபக்திக்காக உண்மையான உழைப்பையும் பட்டினிசாவுகளையும் கேவலப்படுத்தாதீர்கள்.

    மக்கள் உழைப்பை சுரண்டிவிட்டு மக்களையே பிச்சையெடுக்க வைக்கும் கேவலம் இந்தியாவில் இருக்கிறதா இல்லையா? இலவசமும் பிச்சையும் எவனும் எவன் அப்பன் வீட்டு சொத்தையும் வித்து தருவதில்லை.

    ஒரு பட்செட் என்றால் என்ன? அரசாங்க நிதி எங்கிருந்து வருகிறது? மக்களின் அடிப்படை வசதிகள் என்றால் என்ன? ஏன் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மசோத என்றால் என்ன? சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? இலவசங்கள் எல்லாம் எங்கிருந்து கொடுக்கிறார்கள்? என்பது பற்றி உங்களுக்கு போதுமான அறிவு இல்லை. அதனால் தான் இலவசத்தை பிச்சை என்கிறீர்கள்.

    தமிழ்மணம்தின் தவறை சுட்டிகாட்டினேன். அவர்கள் பதில் தந்தார்கள். அவர்களை பதில்சொல்ல வைக்கவேண்டும் என்பதற்காகவே சிலவார்த்தைகளை தெரிந்தே கையாண்டேன். அவர்களும் முறையான பதிலை தந்தார்கள். அப்படி இருக்கும்போது எனது தவறான வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது தான் முறை. அதுதான் பக்குவம்.

    உங்களுக்கு அந்த பக்குவம் இருக்கிறதா? அப்படியானால் பட்டினிகிடந்து சாகும் இந்தியர்கள் எல்லாம் உழைக்காதவர்கள் என்பதை நிரூபியுங்கள்.

    ReplyDelete
  5. திரு.தொப்பிதொப்பி

    உங்கள் பின்னூட்டத்தை ஏன் நீக்கிவிட்டீர்கள்?
    காரணம் சொல்லலாமே?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. திரு. தொப்பி தொப்பி

    ஈழம் பற்றி பேசினால் ராசீவ்கொலையை பற்றி பேசுவார்கள், அந்த ஊழலை பேசினால் இந்த ஊழலைபேசுவார் இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசி மக்களை குழப்புவது தான் இன்றைய அரசியல்வாதிகள். அதையே நீங்களும் கையாண்டுள்ளீர்கள்

    இந்தியாவின் போலி தேசபக்தியை பற்றி பதிவிட்டால் தமிழ்மணத்தை பற்றி கேட்டுள்ளீர்கள். இதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம்?

    உங்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றால் போட்டியிடும் நல்லவர்களை அடையாளம் காட்ட வேண்டியது தானே. அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லையே?

    நாட்டு பற்று தேவை தான். உங்களை போல நானும் எனது பள்ளி கல்லூரி பருவத்தில் நாட்டுபற்றுக்காக வாதிட்டவள் தான்.

    ஆனால் ஒரு நாட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் நம்மீது திணிக்கப்பட நாட்டுபற்று தவறானது. அதுதான் கூடாது என்கிறேன்.

    உங்களுக்கு தற்போது 22 வயது ஆகிறது. 18 வயது கடந்ததும் உங்களுக்கு இந்த நாட்டின் மிகப்பெரிய அதிகாரமான வாக்குரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அதே 18 வயதில் இந்திய அரசியல், நிர்வாகம், கட்டமைப்பு, தேர்தல், வாக்குசெலுத்துதல், கண்காணித்தல் குறித்த அறிவு கொடுக்கப்பட்டதா?

    அது கொடுக்கப்படாமல் பெறப்படும் ஒவ்வொரு வாக்கும் குருட்டு வாக்கு தானே. அந்த குருட்டு வாக்கில் நிர்ணயிக்கப்படும் அரசியல் தேவையா? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

    தேசபக்தி என்பது தேசத்துக்கு எதிராக பேசுபவர்களை கோபித்துக்கொள்வது அல்ல. அவர்கள் பேச்சில் உள்ள ஆதங்கத்தை புரிந்துகொள்வது. அவர்களையும் இந்த நாட்டு இறையாண்மையில் திருப்தி அடைய செய்வது தான் உண்மையான நாட்டுபற்று.

    இந்தியாவை அரசியலை கொண்டு திருத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அரசியல் அல்லாத மாற்று வழியை யோசித்து வருகிறேன். அதற்கான வழிவகை இந்திய அரசில் சாசனத்தில் உள்ளது.

    நான் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை உயர்வாக மதிக்கிறேன். அதை நடைமுறை படுத்தாத சில அரசியல் கட்சிகளின் தான்தோன்றி தனத்தை தான் எதிர்க்கிறேன். கிழித்து எரிய சொன்னதும் அதை தான்.

    இப்போதைய இந்தியா நிச்சயம் திருத்தப்பட வேண்டியது. இதை புரிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சில நாட்கள்/மாதங்கள் என்னால் உங்கள் வலைத்தளத்துக்கு வர இயலாது. மீண்டும் எப்போதாவது வந்தால் பின்னூட்டம் இடுகிறேன்./// ஏதும் அரசியல் கட்ச்சி ஆரம்பிக்க போகிறாரோ?.

    ReplyDelete
  10. திரட்டிJanuary 8, 2011 at 9:17 PM

    TAMILMALAR

    ஹலோ உங்க பேர் தெரிஞ்சிக்கலாமா?
    சரியான காமடியனா இருப்பிங்க போல?
    எப்ப பார்த்தாலும் காமடி பதிவா போடுறிங்க.

    ReplyDelete
  11. சரியான காமடியனா இருப்பிங்க போல?
    எப்ப பார்த்தாலும் காமடி பதிவா போடுறிங்க.

    ReplyDelete

Popular Posts