Showing posts with label அட்டப்பாடி. Show all posts
Showing posts with label அட்டப்பாடி. Show all posts

Jun 22, 2012

அமைதியை கெடுத்த ரசினியின் சின்னவீடு

அமைதி தேடி ரசினிகாந்த் கோவையில் குடியேறப்போகிறார். இந்த செய்தியை படித்ததும் எங்கள் ஊர் சலூன் கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார். உங்களுக்கு புழுகுவதற்கும் ஒரு அளவு இல்லையா என்று!

கோவையில் உள்ள எனது பத்தரிக்கை நண்பர்களும் தொலைபேசியில் அழைத்தார்கள். என்ன உங்க ஊரைப்பத்தி தப்புதப்பா செய்தி அடிபடுகிறே என்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் பகுதி பத்திரிக்கை நண்பர்களுக்கு இனி 2 வாரத்துக்கு அட்டப்பாடி தான் பொழுதுபோக்கு தளம் என்பதை அப்போதே யூகித்துக்கொண்டேன்.

ஆண்டுக்கு ஒரு முறை அட்டப்பாடியில் ஆனைகட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்துக்கு ரசினி வந்து செல்வது வழக்கம். ரசினிக்கு சாலையில் நடைப்பயிற்சி செய்ய பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று. காரணம், பத்திரிக்கை, ரசிகர்கள் கூட்டம் என எந்த இடையூறும் இல்லாமல் சாலையில் நடக்கலாம். இங்குள்ள ஆதிவாசி மக்களும் ரசினியை அவ்வளவு தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆசிரமத்தில் ரசினிக்கு என்று தனி வீடு உள்ளது. இரண்டு அறைகள் மட்டுமே உள்ள மிகச்சிறிய வீடு அது. இங்குள்ளவர்கள் செல்லமாக ரசினியின் சின்னவீடு என்று அழைப்பார்கள். இங்குள்ள 90% மக்கள் ரசினியின் சின்னவீட்டிற்கு சென்று வந்துள்ளார்கள். 

இது தவிர ரசினிக்கும் அட்டப்பாடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் ஆசிரமத்திற்கு அருகே உள்ள ஒரு மிகப்பெரிய பங்களாவை படம் பிடித்து பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். எதார்த்தத்தில் அந்த கட்டிடம் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது. ரசினி குடியேறப்போகும் பெரிய வீடு என்ற பேச்சு இப்ப ஊர் முழுவதும். பத்தா குறைக்கு உளவு துறை அதிகாரிகளின் தொடர் மோப்பம் பிடித்தல்கள் இன்னும் சந்தேகத்தை கிளப்பி விட்டது. 

உளவுத்துறை நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார். ரசினி கோவைக்கு குடிவருவது உண்மையா? பத்தரிக்கைகள் பற்ற வைக்கும் வதந்தியை உளவுத்துறை விசாரணை என்ற பெயரில் கொழுந்துவிட்டு எரியவிடுகிறது. 

பத்திரிக்கைள் எழுதுவதை எந்த பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற அதிகாரிகளால் வரும் விசாரனை பொதுமக்களை குழப்பி விட்டுவிடுகிறது. 

ரசினியின் சின்னவீடு குடியேற்ற பரபரப்பில் துவங்கிய எங்கள் ஊர் இப்போது சிறுவாணி அணை விவகாரத்தில் உச்சத்தில் இருக்கிறது. அமைதிக்காக ரசினி குடிவரவில்லை. அமைதியை கெடுக்க எல்லையில் இரு புறமும் போலீசு காவல் தான் மிச்சம்.

ரசினி அட்டப்பாடிக்கு குடிவருவது எல்லாம் பத்திரிக்கை பரபரப்பு பித்தலாட்டம் என்பது இப்போது தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் புரிந்திருக்கும். 

இதே போல தான் சிறுவாணி அணை பித்தலாட்டங்களும். சிறுவாணியில் அணை கட்ட கேரளா எந்தவிதத்திலும் முற்படவில்லை. இது தெரியாத முட்டாள்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம், தந்தி, என்று பிரபலம் தேடி அலைகிறார்கள். பத்திரிக்கை செய்தி அடிப்படையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் செயலலிதாவின் செயல் ஆச்சரியப்பட வைக்கிறது. செயலலிதாவின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று.

பத்திரிக்கைகள் எழுதுவது எல்லாம் உண்மை அல்ல என்று நம்பும் ரசினி ரசிகர்கள் அறிவாளிகளா? பத்திரிக்கை எழுதுவதே வேத வாக்கியம் என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல்வாதிகள் அறிவாளிகளா?

ரசினியின் பிரபல வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

தினமலர் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. வாழ்க தினமலரின் தமிழ் சேவை, வளர்க தினமலரின் தமிழக விசுவாசம்.

அவசர செய்தி: சிறுவாணி ஆற்றை காக்க சீமான் ஆனைகட்டிக்கு வருகிறாராம். பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து பிரச்சனை நடப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்ப உத்தரவு. மீதியை வந்து எழுதுகிறேன்.

Jun 20, 2012

சிறுவாணி, பவானி சக்கீலா புவனேசுவரி பின்ன தினமலர்


ஆண்டுக்கு ஒரு முறை தினமலரும் தினகரனும் அட்டப்பாடியில் ஒரு அணையை கட்டுவார்கள். அப்புறம் என்ன வழக்கம் போல கோவையில் மதிமுகவின் 10 பேர் கூடி ஒரு ஆர்ப்பாட்டம், தொடர்ந்து மேட்டுபாளையம், ஈரோட்டில் மனித சங்கலி. தமிழ் அமைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மலையாளியை கண்டபடி திட்டி தீர்த்தல், இது போதும். இனி மீதியை அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம்.

முட்டாள் பயலுகளே சிறுவாணி ஆறு எங்கு இருக்கு, பவானி ஆறு எப்படி பாய்கிறது என்ற அடிப்படை அறிவாவது உங்களுக்கு இருக்கிறதா?


தமிழர் வரலாற்றில் நீங்கள் எல்லாம் ஒரு அவமான சின்னங்கள்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. கேரளாவுக்கு உரிமையான 6 டி.எம்.சி தண்ணீரை கேரளா அட்டப்பாடியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. அப்போது தமிழகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் முடியாது. 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் முதலில் அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

அட்டப்பபாடி புவியல் அமைப்பு ரீதியில் தமிழகத்தின் ஒரு பகுதியே. உங்கள் சுய லாபத்துக்காக கேரளாவுக்கு தாரைவார்த்தீர்கள். இப்போது எப்போதுமே அட்டப்பாடி முன்னேற கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்.

அட்டப்பாடியில் 90% இருப்பது தமிழர்களும் ஆதிவாசிகளும் தான். ஆனால் கோவையில் 50% தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையாவது கணக்கிட்டு பாருங்கள்.

அட்டப்பாடியில் கேரளா அணை கட்ட திட்டமிடவில்லை. தடுப்பணை தான் கட்ட திட்டமிடுகிறது. இந்த தடுப்பணையால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு வரப்போவது இல்லை.

சிறுவாணி, பவானி ஆறுகளின் குறுக்கே அட்டப்பாடியல் 64 இடங்களில் தடுப்பணை உள்ளது. இதனால் கூடுதல் பயனை அனுபவிப்பது தமிழக விவசாயிகள் தான். மலைப்பகுதியில் தேக்கும் தண்ணீர் கீழான சமவெளி பகுதிக்கு எவ்வளவு பயனை தரும் என்பது விவசாயிகளுக்கு தெரியும். 

அதனால் தினமலர் தினகரன் பத்திரிக்கைகளுக்கு சிறு ஆலோசணை.

பத்திரிக்கை பரபரப்புக்கு கேரளாவின் புனிதமான பவானி சிறுவாணியை விட சக்கீலா, அப்புறம் உங்க புவனேசுவரி, இன்னும் பலர் இருக்கிறார்கள். வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை ட்ரை பண்ணிப்பாருங்க.. தயவு செய்து எங்கள் மீது கல் எறியாதீர்கள். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு.

Aug 17, 2011

தமிழக அரசுக்கும் செயலலிதாவுக்கும் தலைவணக்கம்

இந்த துணிச்சலான செயலுக்கு நிச்சயம் முதலமைச்சர் செயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும். தவறு அது தேவையில்லை என்று தெரிந்தால் உடனே தைரியமாய் முடிவு எடுக்கும் ஒரு முதலமைச்சரை பெற்றுள்ளது தற்போதைய தமிழக அரசு.


என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தால் நிகழும் உயிர்கொல்லி கொடுமைகளை கடந்த 6 ஆண்டுகளாக பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன். கோவை அருகே எனது சொந்த ஊரான அட்டப்பாடியில் நிகழ்ந்த கொடுரங்களை படம்பிடித்து காட்டியிருந்தோம். 

இந்த பகுதிகளுக்கு என்டோசல்பான் மருந்தை தமிழக அரசு மானிய விலையில் அளித்தது தான் கொடுமையின் உச்சகட்டம். கேரள அரசு இந்த மருந்தை ஏற்கனவே தடை செய்திருந்தது. இதற்கு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று கேரள முன்னாள் முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்தது நினைவிருக்கும். 

என்டோ சல்பான் மருந்தின் உயிர்கொல்லி ஆபத்தை பல முறை தமிழகத்தின் கருணாநிதி அரசின் பார்வைக்கு கொண்டு சென்றும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான் மிச்சம். சுடாலின் ஈழப்பிரச்சனை போல இதும் ஒரு பெரிய விசயமே கிடையாது என்றுவிட்டார். பணம் பதவியை தவிர எதுவுமே தெரியாத இவர்களை நினைத்து நொந்துகொண்டேன். 

ஆனால் பதவி ஏற்ற மூன்று மாதத்தில் என்டோசல்பான் மருந்து குறித்த விசாரனைகளை துரிதப்படுத்தியது செயலலிதா தலைமையிலான அரசு.  இன்று தமிழகத்திலும் என்டோசல்பான் மருந்து தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் செயலலிதாவை மனதார பாராட்டுகிறேன். காரணம் என்டோசல்பான் கொடூரங்களை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். 

Jul 10, 2011

1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை

ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள் என்று தான் மெத்தபடித்த பலரும் நினைத்திருக்கின்றனர். ஆனால் நாகரீகத்தின் ஊற்று ஆதிவாசிகள் தான் என்பதை அவர்களுடன் நெருங்கி பழகும்போது தெரிந்துகொள்ளலாம்.


உலகின் முதல் மனிதர்களான அட்டப்பாடி ஆதிவாசிகளை குறித்து எழுத துவங்கியுள்ளேன். நான் ஏற்கனவே எழுதி பாதியில் நின்றிருக்கும் அறிவகம்(அறிபரிபூரணம்) கட்டுரைக்கு இந்த புத்தகம் முடிவுரையாக அமையலாம். பிரபஞ்சம் தோற்றம், மனித தோற்றம், வாழ்க்கைமுறை, கடவுள் என பல புலம்படாத ரகசியங்களுக்கு ஆதிவாசிகளிடம் விடைகண்டுகொண்டேன்.

காட்டில் வாழும் ஆதிவாசிகள் எவ்வளவு அரசியல் அறிவுக்கூர்மை உடையவர்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் இந்த பதிவு.

1947ல் நாங்கள் அடிமைகள் ஆனோம் என்று அட்டப்பாடி ஆதிவாசிகள் உறக்க சொன்னபோது நான் மட்டுமல்ல என்னோடு வந்த நிருபர் பட்டாளமே ஆடிப்போனது.

அட்டப்பாடி ஆதிவாசிகளின் கனத்த குரலை அப்படியே தருகிறேன்:

அறிவுக்கு எட்டிய நினைவு வரை நாங்கள் இந்த காட்டில் சுதந்திரமாக தான் வாழ்ந்துள்ளோம். ஆங்கிலேயர் கூட எங்களை ஆட்சி செய்ய முற்படவில்லை. மாறாக எங்களுக்கு உதவிகளை செய்தார்கள். எங்களிடம் இருந்து சட்டதிட்டங்களை கற்றார்கள். எங்கள் ஊர் மூப்பன்களை(ராசாக்கள்) சிறம்தாழ்ந்து வணங்கி விடைபெற்றார்கள். 

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. நீங்கள் எல்லாம் இனி இந்தியா என்ற நாட்டின் குடிமக்கள் என்ற பறைஓதினார்கள். எங்களுக்கு அப்போதைக்கு அது பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் வனபாதுகாப்பு ராணுவம் என்ற போர்வையில் எங்களை ஒடுக்க அடிக்க ஒடியன்கள் வரும்போது தான் திக்குதெரியமால் சிதறிப்போனோம்.

இன்று எங்கள் காடு எங்களிடம் இல்லை. எங்கள் வாழ்க்கைமுறை எங்களிடம் இல்லை. எங்களை நாகரிகம் அற்றவர்கள் என்ற முத்திரை குத்தி அடிமைத்தனத்தை நாகரிகமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

எங்களுக்கு தேவை காடு குறித்த கல்வி அறிவு, எங்களுக்கு தேவை வாழக்கையை செப்பனிடுவதற்கான கல்வி அறிவு. ஆனால் எங்கள் கல்விமுறையை பூண்டோடு அழிந்து இன்று புதிய மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். 
இன்று மழைபெய்யும், இங்கு விதைமுளைக்கும், இந்த செடி இந்த நோயுக்கு மருந்து, இந்த செடி உணவு, இந்த செடி விசம், இதுதான் கடவுள்நெறி, இதுதான் வாழ்க்கை என்றிருந்த எங்கள் வாழ்க்கைநெறியை முற்றிலும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மருதி, மருதன், வேலன், மத்தி, வள்ளி, விராலி, கூத்தாடி வெள்ளருக்கன், என்று தாவரங்களின் பெயர்களை சூடிமுடித்த எங்கள் குலத்தில் இன்று சோசப், சூசை, பீட்டர், அகமது, அன்வர், அசின் மீனா, நயன்தாரா என்ற பெயர்களின் குழந்தைகள் வளர்கின்றனர். 

நாங்கள் 1947 முதல் சுதந்திரம் பறிபோன அடிமைகளாகியுள்ளோம். எங்கள் இனம் தோன்றியது முதல் 1947 வரை சுதந்திர இனமாக தான் இருந்தது. இன்று எங்களை இந்தியர் ஆட்சிசெய்கிறார்களாம். எங்களுக்கு ராசா இந்தியர்கள் தானாம். நாங்கள் இந்தியர்களின் சட்டதிட்டத்தை மதித்து காடுகளுக்குள் செல்ல கூடாதாம். ரேசன் கடையில் அரிசியை வாங்கி தான் உண்ண வேண்டுமாம். காடுகளில் விவசாயம் செய்யகூடாதாம். விறகு முறித்தாலும் குற்றமாம்.

இயேசு உங்கள் பாவங்களை கழுவி ரட்சிக்க வருகிறார். அல்லா அழைக்கிறார் என்று தினமும் ஒரு குழு வருகிறது. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? இவர்களின் வாகனங்களை எல்லாம் காட்டுக்கள் அனுமதிக்கும் வனத்துறை உணவுபொருட்களை கொண்டு செல்லும் எங்கள் மாட்டுவண்டியை கூட அனுமதிப்பது இல்லை.

எங்கள் கிராமங்களில் நாங்கள் தன்னாட்சி நடத்துவதில் இந்தியர்களுக்கு அப்படி என்ன எதிர்ப்பு? யார் இந்த இந்தியார்கள்? 

இந்தியர்களால் எங்கள் மொழியை காப்பாற்ற முடியுமா? எங்கள் கலையை காப்பாற்ற முடியுமா? எங்கள் கல்வியை காப்பாற்ற முடியுமா? எங்கள் வாழ்க்கை முறையை காப்பாற்ற முடியுமா? எங்கள் மருத்துவத்தை காப்பாற்ற முடியுமா? எங்கள் ஆட்சிநெறிகளை காப்பாற்ற முடியுமா? எங்கள் கடவுள்நெறிகளை காப்பாற்ற முடியுமா? 

ஆதிவாசிகளின் இந்த உணர்ச்சிமிகு வாதத்தில் நியாயம் இருக்கிறது.  இந்த உணர்வு ஏன் தமிழனுக்கு இல்லை? 

Jun 16, 2011

புற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை

மனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற்கும் அடிப்படை மூலிகை மருத்துவம் தான்.  
பல்லாண்டு காலமாக அட்டப்பாடியில் ஆதிவாசிகள் ஒற்றை மூலிகை வைத்தியம் செய்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி, வெள்ளிங்கிரி, மல்லீசுவரன், ஆட்டுமுடி, சஞ்சீவினி ஆகிய மலைகளின் நடுவே அட்டப்பாடியும், சைலன் வேலி தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. இங்குள்ள பவானி, சிறுவாணி ஆற்றுபடுகைகளிலும், மலைகளிலும் பல அறிய மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகைகளை பாரம்பரிய வைத்திய மந்திரங்கள் மூலம் ஆதிவாசிகள் கண்டறிகின்றனர். 


மல்லன்(சிவன்) மல்லி (பார்வாதி) இவர்கள் தான் ஒற்றை மூலிகை வைத்தியத்தின் முதல் தலைமுறை. இவர்கள் இறைவனாக போற்றபட்டவர்கள். இவர்களிடம் இருந்து சீங்கப்பாட்டன் மருத்துவம் கற்றுக்கொண்டார். சீங்கப்பாட்டன் சஞ்சீவினி முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர். சீங்கப்பாட்டனுக்கு பின்னர் வந்த பல தலைமுறையினரின் பெயர்கள் அறிய கிடைக்கவில்லை.

சீங்கப்பாட்டன் பரம்பரையில் அறியப்பட்டவர்கள் வெள்ளப்பாட்டன் முதலான தலை முறையினர் மட்டுமே. கக்கி மூப்பன், பட்டி மூப்பன், சின்ன கக்கி மூப்பன், இவரது மனைவி வள்ளியம்மாள் தொடங்கி தற்போது வள்ளியம்மாளின் மகன் ரவீந்திரன் என்கிற சீங்கப்பாட்டன் வரை ஒற்றைமூலிகை வைத்தியம் செய்கிறார்கள். 
ஒற்றை மூலிகை வைத்தியம் இன்று பிரபலமாக பேசப்படுவதற்கு காரணம் வைத்தியர் வள்ளியம்மாள். இந்தியாவின் பிரபலங்களுக்கு இவர் அளித்த புற்று நோய் வைத்தியம் தான் இவரை உலகறியச் செய்தது. வள்ளியம்மாளின் வைத்தியமுறையை பாராட்டி இவருக்கு பாரம்பரிய வைத்தியரத்னா விருதை அரசு வழங்கியது.
  தற்போது வள்ளியம்மாள் நினைவாக வள்ளியம்மாள் குருகுலம் என்ற மருத்துவ மனையை கட்டியுள்ளனர். மல்லீசுவரன் மலைமுகடின் தரிசனம் கிடைக்கும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை மட்டுமே தெய்வமாக வணங்கி இங்கிருந்து மருந்து கொடுக்கப்படுகிறது.

பலர் வியாபாரத்துக்காக நகரப்பகுதிகளில் ஒற்றை மூலிகை வைத்தியம் செய்கின்றனர். இதனால் ஆதிவாசிகளின் பாரம்பரிய வைத்தியத்திற்கே உள்ள பக்குவம் போய்விடும் எனவே தான் அடர்ந்த வனமானாலும் மல்லீசுவரன் மலையிலேயே மருத்துமனை அமைத்துள்ளனர்.
பல்வேறு வகை புற்றுநோய், வாத நோய்கள், சர்க்கரை, தோல்நோய்கள், ரத்த அழுத்தம், ஆசுத்துமா உட்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஒற்றை மூலிகையில் தீர்வு உள்ளது. வள்ளியம்மாள் ரவீந்திரன் ஆகியோரின் வைத்தியத்தில் ரத்த புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குணமாடைந்துள்ளனர்.

வள்ளியம்மாள் ஒற்றை மூலிகை வைத்தியம் குறித்து தமிழ், மலையாளம், ஆங்கில பத்திரிக்கைகளில் சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சன் தொலைகாட்சியின் நிசம் நிகழ்ச்சியில் வைத்தியர் ரவீந்திரனின் ஒற்றை மூலிகை சிகிச்சை முறைகள் குறித்த நிகழ்ச்சி 12.05.2011 அன்று இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பானது. 
 ஒற்றை மூலிகை குறித்த சன் தொலைகாட்சியின் நிசம் நிகழ்ச்சியை www.arivakam.in  என்ற இணையதளங்களில் பார்வையிடலாம்.

Apr 25, 2011

மனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்?


ஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி காலத்தை கடத்தி வருகிறது. உலகில் சீனா, இந்தியா தவிர்த்து 60 நாடுகளில் உயிர்கொல்லி என்டோசல்பான் மருந்துக்கு தடைவிதித்துள்ளார்கள்.

இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தமிழக அரசு சிபாரிசு செய்வது தான் அதிர்ச்சியாக உள்ளது. இந்த மருந்தின் அபாயத்தை வெளிக்கொண்டுவந்த பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன். தினமலர், தினகரன், தமிழ்முரசு என பல பத்திரிக்கைகளில் எழுதிவிட்டேன். ஆனால் எல்லாம் 10தோடு 11 தான். 

இந்த மருந்தின் கொடூரத்தை எப்படி தமிழகத்துக்கு புரியவைப்பது என்று தெரியவில்லை. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் சிபாரிசு செய்து மானியம் தருவது தான் உச்சகட்ட கொடுமை.

என்டோசல்பான் மருந்தால் அட்டப்பாடி, வயநாடு மற்றும் காசர்கோடு பகுதிகளில் வாழ்க்கையை தொலைத்தவர்கள்...







மனித உயிர்களை விட சர்வதேச மருந்துகம்பனிகளுடனான ஒப்பந்தம் தான் பெரிது என்றிருக்கும் மயிரு அரசியல்வாதிகளை கொண்ட இந்திய சனநாயகம் வாழ்க.

Popular Posts