Jun 12, 2012

மரம் ‘வெட்டியான’ கோவை வலைபதிவர் சந்திப்பு

முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. 

வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்டியாக அரட்டை அடிக்கும் கூட்டமாக மட்டும் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வலைப்பதிவர் குழுமம் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட வேண்டும். அதற்கான அத்தனை தகுதிகளும் கோவை வலைப்பதிவர்களுக்கு இருக்கிறது. இங்கு பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கணிபொறியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள், வங்கியாளர்கள், தொழில்முனைவோர், அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் பதிவர்களாக உள்ளனர்.  

இவர்களை முறையாக இணைத்து, நிச்சயம் ஒரு மாற்று ஊடகமாக  கோவை வலைப்பதிவர் குழுமம் செயல்பட முடியும்.

ஒரு குழுமம் என்றால் முதலில் திட்டமிடுதல் வேண்டும். ஆனால் திட்டமிடுதலுக்கு முன்னர் சந்திப்பை முதன்மைப்படுத்தி இருக்க கூடாது. இருந்தாலும் சங்கவி மற்றும் சக பதிவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கோவை மண்ணின் வலைப்பதிவர் என்ற முறையில் எனது சில ஆலோசனைகளை இங்கு பகிர்கிறேன். ஏற்பதும் விலக்குவதும் பெரும்பாண்மை பதிவர்களின் விருப்பம்.

1. முதலில் கோவை வலைப்பதிவர் குழுமத்தின் வலைதளத்தை முறையாக பாராமறியுங்கள். ஏனெனில் அது தான் நமது தலைமை அலுவலகம்.

2. குழுவின் செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்து அரசாங்கத்தில் பதிவு செய்யுங்கள். (பதிவு செய்யாமல் செயல்படுவதும் கூடுவதும் சட்ட விரோதம்) பதிவு செய்வதால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும்.

3. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை நல்குங்கள் (மின்னனு மூலமாகவும் செய்யலாம்)

4. ஒட்டல் எடுத்து விவாதிப்பது எல்லாம் வீண். வலைப்பதிவிலோ, முகநூல் வாயிலாகவோ அனைத்து உறுப்பினரின் கருத்துக்களை கேட்டறியுங்கள். ( மாதம் ஒரு முறை இணையத்திலேயே தாராளம் விவாதிக்கலாம்)

5. குழுமத்திற்கான கொள்கை, செயல்திட்டங்கள், விதிமுறைகளை வகுத்து செயல்படுத்துங்கள்.

6. உறுப்பினர்களின் முழு விபரங்களையும் சேகரித்து பதிவு செய்யுங்கள்.

7. குழுமத்திற்கான செயல்பாட்டு நிதி ஆதாரத்திற்கான வழிமுறைகளை கண்டறியுங்கள்.

8. ஒரு சங்கம் எப்படி செயல்படவேண்டும் என விதிமுறைகள் இருக்கிறதோ அதை முழுமையாக பின்பற்றுங்கள்.

9. சேவை எல்லாம் அப்புறம் முதலில் நமது தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

10. ஆண்டுக்கு ஒரு முறை சரியாக திட்டமிட்டு ஆண்டுவிழா கொண்டாடுங்கள். இது தனிபட்ட வலைப்பதிவர் சந்திப்பாக மட்டும் இல்லாமல் குடும்பம் குழந்தைகளோடு கொண்டாடும் ஒரு திருவிழாவாக திட்டமிடப்படட்டும். 

இதுபோன்று ஒவ்வொருவருக்கும் பல கருத்துக்கள் இருக்கும் அவற்றை கேட்டறிய முதல்கட்டமாக கோவை வலைபதிவர் குழும தளத்தில் ஒரு விவாதம் வைக்கவும். 

நன்றி.

14 comments:

  1. உங்கள் கருத்துக்கள் நிச்சயம் பரிசீலிக்கப்படும்..

    குழுமத்திற்க்கு ஆலோசனை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  2. அதென்ன நண்பரே தலைப்பு மிக பிரமாதம் (????)

    உங்களின் மன நிலை தெளிவாக புரிந்து விட்டது.நன்றி

    ReplyDelete
  3. தேவையான கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் நன்றி நண்பரே.

    ம்.....உங்களுக்கு 'வெட்டி'யாகி விட்டது.

    ReplyDelete
  4. அன்பு நண்பரே

    உங்களது பிரச்சனைதான் என்ன? உங்களது கருத்துக்கள் எதுவாகினும் குழுமத்திலேயே சொல்லி முடிவு எடுக்கலாமே?

    இப்பொழுது இவ்வளவு விவரமாக பதிவு எழுதும் தாங்கள் குழுமத்தில் ஒருமுறை கூட வந்து கருத்து சொல்லாதது ஏன்?

    வீண் வம்பு வளர்ப்பது போலவே எதற்கு தேவையில்லாத இந்த தலைப்பு? உங்களின் சேவை மனப்பான்மையை யார் இங்கே குறை சொன்ன்னது?

    இவ்வளவு பொறுப்பானவராக இருந்திருந்தால் உங்களை திட்டக்குழு தலைவராக ஆக்கி இருக்கலாம், குழும நண்பர்கள் பரிசீலிக்கவும்

    ReplyDelete
  5. //வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்டியாக அரட்டை அடிக்கும் கூட்டமாக மட்டும் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை//

    எதையாவது செய்தால் அதையும் குறை கூறுகிறீர்கள், பேசினாலும் வெட்டி அரட்டை அடிக்கீறீர்கள் என்கிறீர்கள், என்னதான் செய்வது?

    இப்பொழுது இவ்வளவு கூறும் தாங்களே முன்நின்று ஒரு குழுமத்தையோ, நிகழ்வையோந் நடத்தி காட்டி இருக்கலாமே?

    சொல்வது எல்லோருக்கும் எளிது, செய்வதுதான் கடினம், வவ்வால் சொன்னது போல ஒப்பனிங் மேட்சிலேயே பேட்ஸ்மேன் சதம் அடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள், மெதுவாகத்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும்

    ReplyDelete
  6. /// முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. ///

    மன்னிக்கவும் நண்பரே..தெரியாமல் போய் விட்டது.தெரிந்திருந்தால் முன்னமே தாங்கள் திட்டம் தீட்ட அழைக்கப்பட்டு இருப்பீர்கள்..

    ReplyDelete
  7. /// முதலில் கோவை வலைப்பதிவர் குழுமத்தின் வலைதளத்தை முறையாக பாராமறியுங்கள். ஏனெனில் அது தான் நமது தலைமை அலுவலகம். ///

    தலைமை அலுவலகத்துக்க தாங்கள் எத்தனை முறை வந்து சென்ற கணக்கு ஏதும் உள்ளதா ? பராமரிக்க கொஞ்சம் கற்றுக்கொடுத்தால் பரவாயில்லை

    ReplyDelete
  8. திரு.சம்பத்குமார்

    குழும வலைதளத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். நிறைய குறைபாடுகள் உள்ளது. அதற்கான ஆலோசனைகள் தான் பகிர்ந்துள்ளேன். ஆலோசனைகளை பகிர்வதற்கு எனக்கு உரிமை என்பதை விட கடமை இருப்பதாகவே கருதுகிறேன். அதற்காக கணக்கு எல்லாம் கேட்கிறீர்கள். வருகை பதிவேடு ஏதேனும் வைத்துள்ளீர்களா?

    உறுப்பினருக்கு எப்படி வேண்டுமானாலும் கேட்க கூடிய உரிமை இருக்கிறது. ஆனால் பொருப்பாளருக்கு பொருப்பாக பதில்சொல்லவேண்டிய கடமை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    பராமரிக்க கற்றுக்கொடுப்பது என் பணி அல்ல. அது எனக்கு தெரியாத விடயமும் கூட. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறது.

    ReplyDelete
  9. திரு. தமிழ்மலர்

    உங்களது ஆலோசனைகள் சரிதான், ஆனால் அதனை நீங்கள் குழும மெயிலியே தெரிவிக்கலாமே, குழுமத்தை நடத்துபவர்கள் அங்கு அல்லவா இருக்கிரார்கள், இதனை பதிவிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியம் எங்கு வந்தது? அல்லது தமிழகத்தில் உள்ள அனைத்து குழுமங்களுக்கும் பொதுவாக தெரிவிக்க விரும்பினால் பதிவின் தலைப்பை இப்படி ஏன் வைத்தீர்கள்?
    உங்களின் தலைப்பும் பதிவும் கோவை பதிவர் குழ்வினை பெருமைபடுத்துவதாக இல்லாமல் தேவையில்லாமல் குழும பெயரை கெடுப்பதற்கென்றே செய்வது போலவே தோன்றுகிறது, எனவே சம்பத் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

    //பராமரிக்க கற்றுக்கொடுப்பது என் பணி அல்ல. அது எனக்கு தெரியாத விடயமும் கூட. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறது.//
    ஆலோசனை சொல்லும் உங்களுக்கே தெரியாது என்றால் புதிதாக குழும உறுப்பினர்களுக்கு மட்டும் உடனே தெரிந்துவிடுமா?
    மறுபடியும் சொல்கிறேன், உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை குழுமத்திலேயே கொட்டுங்கள், குழுமம் நடத்துபவர்கள் அங்குதான் உள்ளார்கள், பொதுவில் அல்ல

    ஒரு பத்திரிக்கையாளராக இருந்திறீர்கள், உங்கள் அறிமுகத்திலேயே குறிப்பிட்டும் இருக்கிறீர்கள், ஒத்த கருத்துடையவர்கள் வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என, ஒத்த கருத்துக்கு இல்லாதவர்களை வைத்துக் கொண்டு குழுமம நடத்துவது மட்டும் எப்படி எளிதாக இருக்குமா?

    ReplyDelete
  10. திரு. இரவு வானம்

    வலைபதிவு என்பது பொதுவில் விவாதிப்பதற்காக தான். குழுமம் தொடர்பான விவாதங்களை குழும வலைப்பதிவிலேயே விவாதிக்க குறிப்பிட்டுள்ளேன். கவனிக்க

    // இதுபோன்று ஒவ்வொருவருக்கும் பல கருத்துக்கள் இருக்கும் அவற்றை கேட்டறிய முதல்கட்டமாக கோவை வலைபதிவர் குழும தளத்தில் ஒரு விவாதம் வைக்கவும். //

    இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுத்தால் உறுப்பினர்கள் விவாதம் அதில் தொடரலாம்

    கோவை வலைப்பதிவர் குழுமம் முழுமைபட வேண்டும் என்பது தான் எல்லோருடை விருப்பமும்.

    முதல் பதிவில் நிறைகளை கூறினேன் இந்த பதில் சில ஆலோசணைகளை பகிர்ந்துள்ளேன் அதை குறைகளாக மட்டும் ஏன் பார்க்கிறீர்கள்?

    குழுமம் என்பது நீங்களும் நானும் சேர்ந்தது தான். நமக்குள் விவாதித்துக்கொள்வதால் குழமத்திற்கு இழுக்கு வரும் என நான் கருதவில்லை. பொதுவில் விவாதிப்பதால் குழுமம் இன்னும் மெருகேறுமே தவிர சிறுமைப்படாது.

    பதிவின் தலைப்பு என்பது சுவாரசியத்துக்காக கொங்குபாணியில் பீடிகையுடன் வைப்பது. அதை தயவு செய்து பெரிதுபடுத்த வேண்டாம்.

    குழும சந்திப்பு பற்றி வெருமனே ஆகோ ஓகோ என்றால் குழும வளர்ச்சி அந்த வட்டத்திற்குள்ளேயே நின்று விடும். அதை தான்டிய சிந்தனைகளையும், விமர்சனங்களையும் கோவை குழுமத்தினர் எதிர்கொள்வோம். அது ஆக்கப்பூர்வமானதாக அமையும்.

    நன்றி.

    ReplyDelete
  11. எப்படியோ...இந்த வெட்டியான பதிவர் சந்திப்புக்கு வந்து கலந்து கிட்டமைக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete
  12. ///குழும சந்திப்பு பற்றி வெருமனே ஆகோ ஓகோ என்றால் குழும வளர்ச்சி அந்த வட்டத்திற்குள்ளேயே நின்று விடும். அதை தான்டிய சிந்தனைகளையும், விமர்சனங்களையும் கோவை குழுமத்தினர் எதிர்கொள்வோம். அது ஆக்கப்பூர்வமானதாக அமையும். ///

    நிச்சயம் நண்பரே..சாதித்து காட்டுவோம்

    நன்றி

    ReplyDelete
  13. திரு. தமிழ்மலர்

    குழுவில் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது, தாங்கள்தான் இன்னும் கலந்து கொள்ளவில்லை, முதலில் அங்கு வந்து விவாதத்தை தொடங்குங்கள், உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள், நான் முதலில் இருந்தே சொல்லுவது இதுதான் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை வீட்டினில்தான் தீர்க்க வேண்டும் பிரச்சனைகளை பொதுவெளியில் கொண்டு சென்றால் நான்கு பேர் பார்க்க நேரிடும், வீட்டிற்கு கெட்ட பெயர் வீட்டிற்குதான் நேரிடும், ஆனால் பரவாயில்லை இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிறீர்கள், சரி அது உங்களது எண்ணம்.

    பதிவின் தலைப்பை சுவாரஸ்சியத்திற்காக வைத்தேன் என்கிறீர்கள், வெட்டியான என்பதற்கு கொங்குநாட்டில் என்ன அர்த்தம் என உங்களுக்கு தெரியாததா? சுவாரஸ்ஸியத்திற்காக இப்படி சிறுமைபடுத்தலாமா? மற்றபடி உங்கள் எண்ணங்கள், ஆலோசனைகள் அனைத்தும் நன்று, அடுத்த சந்திப்பில் அனைத்தும் சரி செய்யப்படும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  14. தமிழ் மலர்,
    உங்கள் கருத்துகள் அனைத்தும் என்னுடைய நிலைப்பாட்டிற்கு இயைந்து போகிறது. குழுமத்தில் சொல்லியிருக்கலாமே என்று சொல்பவர்கள் அதற்கு குழும சந்திப்பில் நேரம் ஒதுக்கினார்களா?

    ReplyDelete

Popular Posts