எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர நிழ்வுடன் துவங்கியது கோவை வலைப்பதிவர் குழுமம். எப்படா முடியும் என்று மனதுக்குள் அளுத்துக்கொண்டேன். ஆனால் புரியாமல் 1.30 மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்துக்கு உலக சினிமா ரசிகன் தந்த 2 நிமிட விளக்கம் மிக அருமை. இப்போது மீண்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
மரம் வளர்ப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு உதவுதல் இந்த மூன்றும் தான் எந்த சந்திப்பிலும் விவாத பொருள். ஆனால் என்னை பொருத்தவரை இது அளுத்துபோய் விட்டது. கோவை சந்திப்பிலும் அதுதான் பேசப்பட்டது.
இரண்டாவதாக மைக் பிடித்த பேராசிரியர் திரு. பழனி கந்தசாமி அவர்கள் ரத்தின சுருக்கமாக தன் கருத்தை முன்வைத்தார். பதிவர்கள் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாது. பதிவு, இணையம் மூலமாக இயன்றதை செய்யலாம் என்றார்.
மீண்டும் மரம் வளர்ப்பு பாதுகாப்பு விவாதங்கள் தொடர்ந்தது. வின்செண்ட் ஐயா என் பக்கத்து தோட்டக்காரர் என்பது அப்போது தான் தெரிந்தது. இணையத்தில் 4 ஆண்டுகள் பின்னூட்டம் ஏழுதி பரசுபரம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். ஆனால் நேரில் சந்தித்தித்த இப்போது தான் இந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது.
சரியாக பெயர் தெரியவில்லை (மன்னிக்கவும்) முகநூல் தோழி ஒருவர் முகநூல் பயன்பாட்டில் பெண்களின் தயக்கத்தையும் பிரச்சனைகளையும் தெளிவாக பகிர்ந்து கொண்டார். பாராட்டுக்கள். அடுத்து கோவை மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் அறிமுகம் கிடைத்து.
அடுத்து பேசிய தோழியின் கருத்து எனக்குள் புது கருத்து தெளிவை தந்தது. தோழி அகிலா என்று நினைக்கிறேன். மாதம் ஒருமுறை பெரியார் பற்றி பதிவு எழுதுவேன். காரணம் அவர் இல்லாவிட்டால் இன்று இந்த அளவுக்கு நாம் சமுய ரீதியில் முன்னேறி இருப்போமா என்று தெரியாது.
கடவுள் மறுப்பு என்ற ஒற்றை வரியில் மட்டுமே பெரியார் அவர்களை பார்க்கக்கூடாது. கடவுள் மறுப்பை தாண்டி சமுதாய சீர்திருத்தத்திற்காக பெரியார் செய்த பணிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாமல் போவது வேதனை என்பதை பகிர்ந்துகொண்டார். ( பெயர் சரியாக தெரியவில்லை அகிலா என்றே நினைக்கிறேன்) பெரியார் அவர்ளை எனக்குள் மிகச்சரியாக புரிய வைத்த தோழி அகிலா அவர்களுக்கு மீண்டும் ஒரு தலைவணக்கம்.
அடுத்து பேசிய தோழி கோவை மு சரளா அவர்கள் அன்பை பற்றி பேசினார். மரங்களை பற்றி பேசாமல் மனிதர்களின் அன்பை பற்றி பேசியதற்கு பாராட்டுக்கள். அவரின் வலைப்பதிவு கவிதைகளிலும் அன்பு கொட்டிக்கிடக்கிறது. அடுத்து முக்கிய நபரான சங்கவி எந்த முக்கிய கருத்தையும் சொல்லவில்லை. மாற்றாக ஒவ்வவொரு பதிவரின் சிறப்பை அவ்வப்போது அறிமுகப்படுத்தினார். நன்று.
முகநூல் மூலம் மனிதர்களை பாதுகாக்கும் அரும்பணி செய்யும் ஒரு அன்பரின் பணி உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது. அவரது பணிகளை பற்றி தனிப்பதிவாக எழுத திட்டமிட்டுள்ளேன். அடுத்து மீண்டும் சில நண்பர்கள் மரங்கள் பாதுகாப்பு பற்றி பேசினார்கள்.
அடுத்து பின் வரிசையில் அமர்ந்திருந்த என் பக்கம் மைக் வந்ததும் முக்கிய அறிவிப்பு வந்தது. மசுகட்டில் இருந்து நண்பர் மனசாட்சி மைக்கை பிடிங்கிக்கொண்டார். கோவை வலைப்பதிவர் சந்திப்பு தித்திப்பாக செல்பேசி வழி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நன்றிகள் பல.
நான் என்ன பேசியிருப்பேன் என்று எனது வலைதளத்தை தொடர்ந்து படிப்பவர்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.
வேரென்ன? விதண்டாவாதம் தான்.
சாலை ஒர மரங்களையம், சிட்டுக்குருவிகளையும் பாதுகாப்பதாக கூறுபவர்கள் மீது கோபத்தை பகிர்ந்துகொண்டேன். நகரத்தில் உள்ள மரத்துக்காக போராடும் இவர்கள் வனத்திலும் கிராமங்களிலும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட முக்கிய காரணமாகின்றனர். சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. அதே போல செல்போன் டவர் தவிர்க்க முடியாதது. சிட்டுக்குருவிக்காக உச்சு கொட்டுகிறவர்கள் தயவு செய்து தங்கள் செல்போன்களை தூக்கி எறியுங்கள் என்றேன். யாரும் தயாரில்லை.
(செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது ஒரு கட்டுக்கதை. செல்போன் நிறுவனங்களிடம் பேரம்பேசி பணம்பறிப்பதற்காக எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்பதை புறிந்து கொள்ளுங்கள்.)
விரிவாக்கப்பணிகள் நடக்கும் சாலையில் வெட்டப்படும் 150 மரங்களுக்காக கண்ணீர் வடிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு வனத்தில் அதிகாரப்பூர்வமாக வெட்டப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் தெரியாதது வேடிக்கை.
சாலை ஓரங்களில் வெட்டப்படவேண்டிய மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும். அதை தடுக்க தயவு செய்து யாரும் நேரம் ஒதுக்க வேண்டாம். உங்களால் அது இயலாது.
அடுத்து மரக்கன்றுகளை தயவு செய்து விவசாயிகளுக்கு கொடுங்கள். சாலை ஓரத்தில் நட்டி வீணடிக்காதீர்கள். சாலை ஓரத்தில் மரத்தை நட்டினால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் பொருப்பு இருக்கிறது. அது உங்களால் முடியுமா?
வலைப்பதிவர்கள் நாம் பொருளாதார ரீதியாக யாருக்கும் உதவி செய்ய முடியாது. அதே போல மரங்களை நடவோ, பாதுகாக்கவோ நிச்சயமாக முடியாது. அதனால் இதுபோன்ற சேவைகளில் எனக்கு உடன்பாடில்லை.
வலைப்பதிவு, இணையம் மூலமாக என்ன உதவிகள் செய்ய முடியுமோ அவைகளை வலைப்பதிவர்களால் நிச்சயமாக செய்ய முடியும். எனது கருத்தாக மலைகிராமத்தில் உள்ள 8,&10, 12ம் வகுப்பு மாணவ&மாணவியருக்கு இணையம், வலைப்பதிவு குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தி தருவோம். அவர்களின் படைப்புகளை வலைப்பதிவுக்கு கொண்டு வருவோம் என்றுள்ளேன். அதற்கான அரசாங்க அனுமதியும் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளேன்.
விவசாயத்தை அரசாங்க பணியாக அறிவிக்க கோரி சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேம். அதற்கான ஆதரவை தரும்படி கேட்டுக்கொண்டேன்.
இறுதியில் பல நண்பர்களும் வந்தார்கள். குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நேரம் 6.30 கடந்துவிட்டது. இதற்கு மேலும் நான் வீட்டுக்கு புறப்படாவிட்டால் காட்டுயானைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் புறப்பட்டு விட்டேன்.
அனைவரையும் எங்க ஊரு அட்டப்பாடிக்கு சுற்றுலா வர அழைப்பு விடுத்துள்ளேன். வருக வருக....
மீதி அடுத்த பதிவில்...