Apr 29, 2011

திமுகவுக்கு வாய்ப்பு: கெட்லைன்டுடே கருத்துகணிப்பு

ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க நூலிலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 48% வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அதிமுக கூட்டணி 47% வாக்குகள் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணி 115 முதல் 130 இடங்கள் வரை கைபற்றும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 இடங்கள் வரை கைபற்றும் எனவும் கெட்லைன்சு டுடே கணித்துள்ளது.

வாக்குபதிவுக்கு முந்தைய கருத்து கணிப்பில் அதிமுக அணி 164 இடங்கள் வரை கைபற்றும் என கெட்லைன்சு டுடே அறிவித்திருந்தது. வாக்குபதிவுக்கு பிந்தைய அலசலில் திமுக கூட்டணி 130 இடங்கள் வரை கைபற்றும் என தெரிவித்துள்ளது. 

Apr 28, 2011

ராசபட்சேவுக்கான உச்சகட்ட தண்டனை தனிஈழம்

போர்குற்றம் புரிந்த ராசபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் ஒலித்துள்ளது.

திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இ.கம்யூனிசுட்டு, வி.சி, கொமுக, பாரதிய சனதா உட்பட சிறிய பெரிய என அனைத்து கட்சிகளும் தனிஈழம் தான் தீர்வு என்பதை வலியுறுத்த துவங்கியுள்ளன.


காங்கிரசு, மா.கம்யூனிசுட்டு ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பழைய பாடலையே இன்னும் இழுந்துப்பாடி வருகின்றன.  இந்த கட்சிகளும் தங்கள் நிலையை மாற்றியாக வேண்டும்.

இலங்கை என்ற குட்டி நாட்டின் அரசியலில் தலையிட இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தார்மீக உரிமை உள்ளது. 

தமிழருக்கும் சிங்களருக்கும் சமஉரிமை என்ற ஒற்றை கோட்பாடில் தான் இலங்கைக்கு பிரிட்டீசு அரசாங்கம் சுதந்திரத்தை தந்தது. அதே பாணியில் தான் இந்தியாவும் இலங்கையை செல்லப்பிள்ளையாக வளர்த்தது.

ஆனால் இலங்கையோ இனப்படுகொலையில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது. 


சிங்களருக்கு தேவை ஏக சிங்கள நாடு. அதற்காக தமிழகர்கள் சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக இருக்க முடியுமா? 

தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள் உரக்க சொல்கிறார்கள். இதை இன்றைய காங்கிரசாருக்கும் மா.கம்யூனிசுட்டுகளுக்கும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்கள் போரில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படித்துள்ளோம். ஆனால் இன்றைய 21நூற்றாண்டு தலைமுறையினர் நாம் நேரடியாக அதை பார்க்கிறோம். 

மனிதஉரிமைகளை பற்றி பெருமைபேசும் சர்வதேச சமுதாயம் இலங்கை என்ற குட்டி நாட்டில் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்தது. 

போரில் லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த பின்னர் மனித உரிமைகள் பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

சர்வதேச சமதாயத்திற்கு உண்மையில் மனிதஉரிமைகள் குறித்த அக்கறை இருக்குமானால் பழிக்குபழி அல்ல நிரந்தர தீர்வை தான் வலியுறுத்த வேண்டும். 

தனிஈழம் ஒன்று தான் மனித உயிர்களை குடித்த ராசபட்சேவுக்கு கொடுக்கும் உச்சகட்ட தண்டனையாக இருக்க முடியும். அதே தனிஈழம் தான் விடுதலைப்புலிகளின் ஆன்மாக்களை சாந்தியடையச்செய்யும் கருவாகவும் அமையும்.

தனிஈழம் தமிழக அரசியல்கட்சிகள் நிலை


திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இ.கம்யூனிசுட்டு, வி.சி, கொமுக, பாரதிய சனதா இத்தனை கட்சிகளும் தனிஈழம் அமைக்கவேண்டும் என்று சொல்கின்றன. 

காங்கிரசு, மா.கம்யூனிசுட்டு ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பழைய பாடலையே இன்னும் இழுந்துப்பாடி வருகின்றன.  

இலங்கை என்ற குட்டி நாட்டின் அரசியலில் தலையிட இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தார்மீக உரிமை உள்ளது. 

தமிழருக்கும் சிங்களருக்கும் சமஉரிமை என்ற ஒற்றை கோட்பாடில் தான் இலங்கைக்கு பிரிட்டீசு அரசாங்கம் சுதந்திரத்தை தந்தது. அதே பாணியில் தான் இந்தியாவும் இலங்கையை செல்லப்பிள்ளையாக வளர்த்தது.

ஆனால் இலங்கையோ இனப்படுகொலையில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது.

இலங்கையில் தனிஈழம் தான் தீர்வு என்று கம்பீரமாய் முழங்கினார் இந்திராகாந்தி. இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்ததை மறந்துவிடக்கூடாது.

தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள் உரக்க சொல்கிறார்கள். இதை இன்றைய காங்கிரசாருக்கும் மா.கம்யூனிசுட்டுகளுக்கும் புரிந்துகொள்ள மறுப்பது தான் வேதனையாக உள்ளது.

மிச்சம் இருக்கும் மனிதஉயிர்களை காக்கவாவது தனிஈழத்துக்கு ஒருமித்த குரல்கொடுங்கள்.

Apr 27, 2011

உப்பு சப்பு இல்லாத திமுக உயர்நிலை கூட்டம்


திமுக உயர்நிலை கூட்டம் என்றால் இந்தியா முழுவதும் அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு ஊடகங்ளும் முன்பின் அரசியலை அலசிக்கொண்டிருக்கும். இதற்கு காரணம் அவ்வவு சக்திவாய்ந்தது திமுக உயர்நிலை குழு கூட்டத்தால் விளையும் அரசியல் மாற்றம் . 

ஆனால் இன்றோ உப்புசப்பு இல்லாத குப்பையாகி நிற்கிறது திமுக உயர்நிலை குழு. எந்த ஊடகமும் இதை கண்டுகொள்வதில்லை. அரசியல் மட்டத்திலும் கவனிப்பார் இல்லை. 

அலைகற்றை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறதாம் திமுக. நல்லது. ஆனால் எதிர்க்கட்சியானால் இதே நிலைபாட்டை கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறி.

திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க அலைகற்றை ஊழல் வழக்கு பயன்படுத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றசாட்டு யார் மிதானது என்று தான் தெரியவில்லை.

இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். கொடூரன் ராசபட்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த இந்தியா முன்வரவேண்டும் என்று தீர்மானம் போட திமுகவுக்கு தைரியம் அற்றுபோனதுதான் கேவலத்தின் உச்சம்.

மே 6 தேதி கனிமொழி நீதிமன்ற கூண்யல் ஏற வேண்டும். அது முடியாது என்று சிப்பாலிக்காக சொல்லியுள்ளார் கருணாநிதி. கனிமொழியை கைது செய்ய நீதிமன்ற ஆணை வந்தால் மீண்டும் கூடும் திமுக உயர்நிலை குழு.

அன்றும் இதே உப்பு சப்பு இல்லாத கூட்டம் தானா?

ஆம் என்பது தான் பதில்..... 

ஒரு வேளை மே.13 க்கு பின் திமுக எதிர்க்கட்சியானால் நிலைமை தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது.

Apr 25, 2011

மனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்?


ஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி காலத்தை கடத்தி வருகிறது. உலகில் சீனா, இந்தியா தவிர்த்து 60 நாடுகளில் உயிர்கொல்லி என்டோசல்பான் மருந்துக்கு தடைவிதித்துள்ளார்கள்.

இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தமிழக அரசு சிபாரிசு செய்வது தான் அதிர்ச்சியாக உள்ளது. இந்த மருந்தின் அபாயத்தை வெளிக்கொண்டுவந்த பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன். தினமலர், தினகரன், தமிழ்முரசு என பல பத்திரிக்கைகளில் எழுதிவிட்டேன். ஆனால் எல்லாம் 10தோடு 11 தான். 

இந்த மருந்தின் கொடூரத்தை எப்படி தமிழகத்துக்கு புரியவைப்பது என்று தெரியவில்லை. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் சிபாரிசு செய்து மானியம் தருவது தான் உச்சகட்ட கொடுமை.

என்டோசல்பான் மருந்தால் அட்டப்பாடி, வயநாடு மற்றும் காசர்கோடு பகுதிகளில் வாழ்க்கையை தொலைத்தவர்கள்...







மனித உயிர்களை விட சர்வதேச மருந்துகம்பனிகளுடனான ஒப்பந்தம் தான் பெரிது என்றிருக்கும் மயிரு அரசியல்வாதிகளை கொண்ட இந்திய சனநாயகம் வாழ்க.

Apr 22, 2011

ஈழம் எட்டாக்கனியாகுமா? மலையாள ஊடகங்கள்


இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் கசப்பான உண்மையாகவே தெரிகிறது. 

ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது உலக தமிழர்கள் சக்திக்கு மீறி போரட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் ஒன்றுபட்ட போராட்டம் இல்லை என்பதால் அத்தனை போராட்டங்களும் வீணாக முடிந்தது.

ஆளுக்கு ஒரு போராட்டம். தமிழகத்தில் ஒன்றுக்கு ஒன்றான போட்டி போராட்டங்களே உண்மையான நோக்கத்தை சீர்குலைத்தது. 

பத்திரிக்கையாளர்கள் நடத்திய போராட்டத்தில் கூட சங்கத்துக்கொரு போராட்டம் நடத்தினரே தவிர ஒன்றுபட்டு ஒட்டுமொத்தமாக யாரும் போராடவில்லை. இது ஈழத்துக்கான போராட்டமே தவிர நம்மில் யார் பெரியர் என்பதற்கான போராட்டம் அல்ல என்று யாரும் நினைக்கவில்லை.

தமிழகத்தில் போராட்டம் தோற்றதற்கு ஒற்றுமை இல்லை என்பது தான் கராணம். அதுதான் ஈழத்திலும் நடந்தது.

இலங்கை அரசாங்கத்தின் போர்குற்றத்திற்கான ஐ.நா அறிக்கையை எதிர்த்து ஈழத்தமிழர்களே(கருணா குழு)போராடுகிறார்கள் என்றால் எங்கே தனிஈழம் அமையும்?

நேரடியாக சம்மந்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரே நாங்கள் பாதிக்கப்படவில்லை, விடுதலை அடைந்துள்ளோம் என்று உரக்க கூவுவது கொஞ்சம் யோசிக்க வைக்கிறதே.

விடுதலைப்புலிகளின் தோல்வியை விரும்புகிறவர்கள் தனிஈழத்தின் தோல்வியையும் ஊக்குவிக்கலாமா? அப்படியானால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

மலையாள தொலைகாட்சி ஏசியனெட் செய்திகள் இப்படி முடித்திருந்தது

ராசபட்சேவின் நோக்கம் விடுதலைபுலிகளை ஒழிப்பது அல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிப்பது தான். அதற்கு இலங்கை தமிழர்களே துணை நிற்பது தான் சர்வதேச சமுதாயத்தின் மவுனத்திற்கு காரணம். என்று கூறி வாழ்க ஈழ தமிழகம் என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். 

கேரளாவில் பெரிய மக்கள் ஊடங்களில் தனிஈழம் பாடல்கள் கம்பீரமாக ஒலிக்கின்றன. ஆனால் நமது தமிழக ஊடகங்களோ விடுதலைபுலிகள், தனிஈழம் குறித்து பேசவே பயப்படுகின்றன. 

மலையாள ஊடகத்திற்கு தெரிகிறது தனிஈழத்தின் அவசியம்.  நாமோ ?

Apr 20, 2011

என்ன வேண்டுதலோ... இப்படியும் ஒரு பக்தி


புற்றுக்கு பால் வார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் இங்கு ஒருபடி பக்தி முற்றிபோய் பால்பாக்கெட்டையே வைத்திருக்கிறார்கள். இடம் இருட்டுப்பள்ளம், கோவை - பூண்டி சாலை.

 

Apr 18, 2011

தமிழர்கள் முட்டாள்கள்-தங்கபாலுவின் நினைப்பு


இலங்கை அரசை கண்டித்து காங்கிரசு இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறதாம். இதை தமிழக மீனவர்களும், இன்னபிற தமிழர்களும் நம்ப வேண்டுமாம்.

இவர்கள் உட்கட்சி சண்டையை அடக்க இவர்களுக்கு வேறுவழியே இல்லையா? தினம் தினம் செத்துமடியும் தமிழக மீனவர்கள் அவலத்திலா இப்படி ஆதாயம் தேடுவது?


கடந்த சில நாட்களாக தங்கபாலுவுக்கு எதிராக காங்கிராசாரின் போராட்டம் வலுத்துள்ளது. நேற்று தமிழகத்தின் பல இடங்களில் தங்கபாலு உருவபொம்பையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில் இருந்து தப்பிக்க தங்கபாலு போட்ட படு மட்டமான திட்டம் தான் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தமிழர்களை இவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறானுகளே இந்த சோனியா தாசன்கள்...

2 மாதத்திற்கு முன்னாடி கனிமொழியின் கைது தோசம் நீங்க திமுக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதே பாணியில் இப்ப தங்கபாலு. இப்படிபட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகளை கொண்டுள்ளது தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. அதை தவிர வேறு என்ன சொல்ல...

Apr 17, 2011

கேரளா சட்டசபை தேர்தல்-கருத்துகணிப்பு


கேரள மாநிலத்தில் ஏப்.13ல் வாக்குபதிவு நடந்துமுடிந்துள்ளது. கேரள தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மிக எளிது. கண்ணை மூடிவிட்டு சொல்லிவிடலாம் எதிர்கட்சி தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என. 50 ஆண்டு கால வரலாற்றில் அது தான் நடந்து வருகிறது.

ஆளும் கம்யூனிசுட்டு கூட்டணி அடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்பது வழக்கமான அரசியல் ஆருடம். ஆனால் இம்முறை இதற்கு மாற்றம் வரும் என்கின்றனர் பல அரசியல் நோக்கர்கள். 

தென்னிந்தியாவில் அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது கேரளா. இலவச வண்ண தொலைகாட்சி தவிர தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் கேரளாவில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 

கேரளாவை பொருத்தவரை கூட்டணி வெற்றிக்கு அவ்வளவாக உதவாது. பொதுமக்கள் வாக்களிப்பே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.

விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் கொலைகள் இடதுசாரி ஆட்சிமீது எதிர்ப்பை பதிவு செய்கிறது. இதை ஈடுகட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்ற தேர்ந்த பிரச்சாரத்தை விதைத்துள்ளது இடதுசாரி கூட்டணி.

இம்முறை தங்களுடைய சுற்று என்ற தைரியத்தில் காங்கிரசார் தேர்தல் வேலையில் சுனக்கம் காட்டியது  யோசிக்க வைக்கிறது. பெரிய அதிருப்தி இல்லை, நலதிட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரலாற்றை மாற்ற இடதுசாரி தீவிரம் காட்டியுள்ளது. தேர்தல் யுக்தியாக அச்சுதானந்தன் என்ற ஒற்றை மனிதரை வைத்து கொஞ்சம் ஆதரவை திரட்டியது கம்யூனசுட்டுக்கு கூடுதல் பலம் 

பாலக்காடு, திருவனந்தபுரம், ஆழப்புழா, வயநாடு, உட்பட மாவட்டங்களில் இடதுசாரி கொடி உயர பறக்கிறது.  

மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் வெற்றிபெற வேண்டும். 

இடதுசாரி கூட்டணி ....60-71
காங்கிரசு கூட்டணி .....69-80

என்ற இழுபறி நிலையிலேயே வெற்றிவாய்ப்பு அமையக்கூடும் என்று கணிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

Apr 16, 2011

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு-தமிழ்நாடு


தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை வாக்கு சதவீதம் கூடியுள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது. 

வாக்குசதவீதம் அதிகமாகும் பொது திமுக வெற்றிபெற்றது என்பதைவிட எதிர்கட்சி வெற்றிபெற்றது என்பது தான் உண்மை. வாக்குசதவீதம் அதிகமாகும்போது ஆளும்கட்சி மீதான எதிர்ப்பே அதிகமாக பதிவாகியுள்ளது. வாக்குசதவீதம் அதிகமான தேர்தல்களில் திமுக எதிர்கட்சியாகவே களம் கண்டு வெற்றிபெற்றுள்ளது. ஆதனால் தான் இந்த முறை திமுகவுக்கு கிலிபிடித்துள்ளது.

 இந்த தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், மேல்மட்டத்தினர் வழக்கத்தை விட அதிகளவில் வாக்குசெலுத்தியுள்ளனர். நலத்திட்டங்களை தாண்டி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் போன்றவை பெரிதாக பேசப்படுகிறது இந்த வாக்குவங்கியில்.

கட்சி வாக்குவங்கியை பொருத்தவரை திமுக அதிமுக இரு கூட்டணியும் சமநிலையிலேயே உள்ளன. மதிமுக போட்டியிடாமை, திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தல் இந்த இரு காரணங்களால் இந்த சமநிலை வருகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் திமுக கூட்டணி கட்சி வாக்குவங்கியில் தோல்வியை பதிவுசெய்கிறது.

பொதுமக்கள் வாக்குவங்கியை பொருத்தவரை இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகவே உள்ளது. 70% பொதுமக்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பணபுழக்கம் இன்மையால் ஆளும் கட்சிமீது அதிருப்தியை பதிவுசெய்கின்றனர். 

2001 தேர்தலில் டைடல் பார்க், சமத்துவபுரம், உழவர்சந்தை, மேம்பாலம், சிமென்ட்சாலை, மினிபேருந்து போன்ற எண்ணற்ற திட்டங்களை முன்னிருந்தியது திமுக. மீண்டும் கலைஞரின் பொற்கால ஆட்சி என்று முழங்கப்பட்டது. ஆனால் பணம்புழக்கம் இல்லை என்ற ஒற்றை சூழலில் திமுக படுதோழ்வி அடைந்தது. 

அதே நிலை தான் இந்த தேர்தலிலும். இலவசங்கள், நலதிட்டங்கள், ஊடக பிரச்சாரங்களை தாண்டி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தொழில் முடக்கம் என்ற காரணங்களில் திமுக சரிவை சந்திக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்போடு இந்த காரணிகளே கருத்தாய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தொலைகாட்சி மற்றும் கருத்துகணிப்பு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பை மே 10 தேதியே வெளியிட காத்திருக்கின்றன. ஆனாலும் அரசல்புரசலாக வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கசியதுவங்கியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை போலவே 90 தொகுதிகள் வரை மட்டுமே திமுக கூட்டணி கைபற்றும் என்றே வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளும் கூறுகின்றன.

அதிமுக கூட்டணி...... 144 - 184
திமுக கூட்டணி............. 50 - 90 

என்ற ரீதியிலேயே வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் உள்ளன.

Apr 12, 2011

இறுதிகட்ட தேர்தல் கருத்துகணிப்பு தமிழ்நாடு சட்டசபை 2011


தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே முடிவுகளை வெளியிட்டுள்ளன. 

ஏ.சி நில்சன் உட்பட தனியார் கருத்துகணிப்பு நிறுவனங்கள் பல அரசியல் கட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கு கருத்து கணிப்புகள் நடத்தி கொடுத்துள்ளன. லயோலா கல்லூரி உட்பட பல தனியார் கல்லூரிகளின் புள்ளியல் துறையும் கருத்துகணிப்புகள் நடத்தின.

பல்வேறு கருத்துகணிப்புகளின் அலசலோடு உளவுத்துறையின் இன்றைய புள்ளிவிபரங்களையும் சேர்த்து இறுதிகட்ட முடிவை எடுத்துள்ளோம்.

இன்று(12.4.2011) மாலை 6 மணி வரை நிலவிய அதே சூழல் நாளை மாலை 4 மணிவரை நிலவும்பட்சத்தில் இந்த கருத்துக்கணிப்பே இறுதியாக இருக்கும்.

விலைவாசி, மின்வெட்டு, எதிர்பார்த்தபடி பணத்தை இறக்காமை, கூட்டணியில் உட்கட்சி பிளவுகள் போன்றவையால் திமுக அணி தோழ்வியை நோக்கி நகர்கிறது. பரவலான கூட்டணி கட்சி பலம் இன்மை திமுகவுக்கு பெரிய பாதகமாக உள்ளது. சென்னை நீங்கலாக வடமாவட்டங்களில் மட்டுமே திமுக அணி கரைகாண்கிறது. மதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்தால் மட்டுமே திமுக கணிசமான தொகுதிகளில் வெல்லக்கூடும். 

மதிமுக வெளியேற்றம் ஒன்று மட்டுமே அதிமுகவுக்கு பாதகமாக அமைந்தது. மற்றபடி அதிமுகவுக்கு வெற்றி அருகிலேயே உள்ளது.

அதிமுக அணி: 
அதிமுக........... 129
தேமுதிக..........18
மா.கம்யூ...........10
இ.கம்யூ ............6
மமக...................2
கொ.இ.பே.......1
பு. தமிழகம் ....1
சமக ..................1
இதரம்.............. 2

மொத்தம் .....170

திமுக அணி :
திமுக........... 40
காங்கிரசு ....12
பாமக ............8
விசி................1
இதரம் ..........1

மொத்தம்......62

இதரம் ..........................2 

சுடாலின், அன்பழகன், பொங்கலூர் பழனிசாசி, பூங்கோதை உட்பட பல திமுக அமைச்சர்கள் தோழ்வியின் விளிம்பில் உள்ளதாக தெரிகிறது.

பேராசிரியர் க. அன்பழகன், பூங்கோதை ஆகியோரை தோற்கடிக்கவேண்டும் என்பது திமுகவின் மேல்மட்ட உத்தரவு என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

கோவை மாவட்ட 10 தொகுதிகள் கருத்துகணிப்பு

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகள் உள்ளன.

கட்சிகளின் வாக்குவங்கி, பொதுமக்கள் கருத்து, களஆய்வு ஆகியவை கணிப்பில் கொள்ளப்பட்டுள்ளது.

கோவை தெற்கு 
திமுக சார்பில் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக சார்பில் சேலங்சர் துரை ஆகியோர் போட்டியிடுகிறார்

காந்திபுரம் மேம்பாலம் கட்டுதல் தொடர்பாக மலையாள மக்கள் வாக்குவங்கியை இழப்பு, சிறுவர்கள் கொலை தொடர்பாக வடஇந்தியர்கள் வாக்குவங்கி இழப்பு, உட்கட்சி பூசல், மகன் பாரியின் வாரிசு அரசியல் என பொங்கலூர் பழனிசாமிக்கு அடுக்கடுக்கான எதிர்ப்புகள் உள்ளது. இதோடு கடுமையான மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்றவையும் எதிர்ப்பு அலையில் சேர்கிறது. இந்த எதிர்ப்பு அலைகளை சாதகமாக்கி வெற்றிக்கு முந்துகிறார் அதிமுக வேட்பாளர்.

அதிமுக 45%
திமுக 40%

கோவை வடக்கு
மின்வெட்டு, விலைவாசி இவற்றோடு, திமுக வேட்பாளர் வீரகோபலுக்கு உட்கட்சி பூசல் ஆழ குழிபறிக்கிறது. சிரிப்பு புண்ணகையுடன் எதார்த்த பழக்கத்தால் அதிமுக வேட்பாளர் மலரவன் வெற்றியை உறுதிசெய்கிறார்.

அதிமுக 48%
திமுக 38%


சிங்காநல்லூர்
பஞ்சாலைகள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுக்கள் தான் வெற்றி தோழ்வியை நிர்ணயிக்கின்றன. அதிமுக வேட்பாளர் சின்னராசு மீது கடும் அதிர்ப்தி நிலவுகிறது.

காங்கிரசு வாசன், பிரபு, தங்கபாலு என ஒட்டுமொத்த பிரிவும் சேர்ந்து போட்டி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. திமுகவினர் ஒத்துழைப்பும் இல்லை. மின்வெட்டு முக்கிய எதிரி. இதனால் உறுதியான தோழ்வியை அடைகிறார் காங்கிரசு வேட்பாளர் மயூரா செயக்குமார்.

அதிமுக 46%
காங்கிரசு 32%

கவுண்டம்பாளையம்
கூட்டணி பலம் இல்லாமல் தவிக்கிறது திமுக. இங்கு திமுக ஏரத்தாள தனிகட்சியாக தான் நிற்கிறது. பேருக்கு கூட காங்கிரசு கட்சியினர் இல்லை. பாமக,விசி சுத்தமாக இல்லை. கொமுக மட்டுமே அதிகபட்சம் 1200 ஓட்டுக்களை வைத்துள்ளது. இதனால் அதிமுக வேட்பாளர் கூட்டணி பலத்திலேயே வெற்றியை பறித்துவிடுகிறார்.

அதிமுக 50%
திமுக 38%

தொண்டாமுத்தூர்
தேமுதிக ஆதரவுடன் காங்கிரசு வேட்பாளர் கந்தசாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கிறர் அதிமுக வேட்பாளர் வேலுமணி.

அதிமுக 52%
காங்கிரசு 32%

கிணத்துக்கடவு
கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் மதிமுக, தேமுதிக ஆதரவுடன் திமுக வேட்பாளர் கண்ணப்பனை அதிமுக வேட்பாளர் தாமோதிரன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கலாம்

அதிமுக 44%
திமுக 42%

சூலூர்
இங்கும் கடும் போட்டி நிலவுகிறது. கொமுக வேட்பாளர் ஈசுவரன், தேமுதிக வேட்பாளர் தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். உள்ளூர்காரர், அனைத்து சாதியினர் வாக்கும் கிடைக்கும் என்பது தினகரனுக்கு கூடுதல் பலம். கொமுகவில் பிளவு, திமுக ஒத்துழையாமை, மின்வெட்டு காரணமாக விசைதறி பணிகள் முடக்கம் போன்றவை தேமுதிக பக்கம் வெற்றியை கொண்டுவருகிறது.

தேமுதிக 46%
கொமுக 40%


மேட்டுபாளையம்
தற்போதைய எம்.எல்.ஏவான அதிமுக வேட்பாளர் மீது அதிர்ப்த்தி அலை உள்ளது. ஆனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக ஆளும் கட்சி திமுக வேட்பாளர் அருண்குமார் அதே அளவு எதிர்ப்பு அலையில் சிக்கியுள்ளார். கூடவே திமுகவின் ராசா ஒரு குழுவினர் ஒத்துழைப்பு இல்லை. இதை சாதகமாக்கி கொண்டு கூட்டணி பலத்தில் வெற்றிக்கோட்டை கடக்கிறார் அதிமுக வேட்பாளர்

அதிமுக 45%
திமுக 41%


பொள்ளாச்சி
அதிமுக கோட்டையான இங்கு மீண்டும் அதிமுக வெற்றிகொடியே பறக்கிறது.

அதிமுக 50%
கொமுக 40%

வால்பாறை
கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் வெற்றியை கணிப்பது கடினமே. ஆனாலும் காங்கிரசு வேட்பாளர் கோவை தங்கத்திற்கு வால்பாறையில் 70% வாக்குகள் உள்ளது. அதே நேரத்தில் கிழ்பகுதியான ஆனைமலையில் கம்யூனிசுட்டு மற்றும் அதிமுக கொடி பறக்கிறது. 

இழுபறி

மொத்த தொகுதி 10
அதிமுக 8
தேமுதிக 1
காங் (அ) கம்யூ 1

Apr 11, 2011

ஈழத்தமிழர்களுக்கு வாக்காளர் காட்டும் சிறு அக்கறை


வாக்களிக்கும் முன்னர் இந்த படங்களை எப்படியாவது ஒருமுறையேனும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு காண்பியுங்கள்....

படங்களை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்


http://thamizhaathamizhaa.weebly.com/

Apr 10, 2011

இந்தியில் வாக்குகேட்கும் திமுக அமைச்சர்


விரைவில் காங்கிரசுடன் திமுக இணைப்பு விழா நடத்தும் என்பதற்கு இதெல்லாம் அறிகுறிகள். இந்தியை எதிர்த்த திமுக இன்று வாக்குக்காக இந்தியை கையில் எடுத்துள்ளது. அரசியலில் இதெல்லாம் சகசம் என்கின்றனர் கோவை திமுகவினர். 

கோவையில் 30 ஆயிரம் மார்வாடி ஓட்டுக்களை கவரத்தான் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கொள்கை மறந்து களத்தில் இறங்கியுள்ளார்.



எங்களுக்கு தமிழ் தெரியும். தமிழிலேயே துண்டரிக்கை அச்சடித்திருக்கலாம். இப்படி தப்பு தப்பாய் இந்தியை திணிக்கவேண்டியது இல்லை. எங்கள் மொழி இந்தி அல்ல மராத்தி என்று நச்பதில் அளிக்கின்றனர் கோவை மார்வாடிகள். 

அப்புறம் கோவையில் உள்ள 600 சிங்குகள் வாக்குகளை கவர பிரதமர் மன்மோகன் சிங்கை இறக்குமதி செய்ததெல்லாம் கொஞ்சம் அதீத நம்பிக்கை.

Apr 9, 2011

விலைவாசி உயர்வு திமுக 0 அதிர்ச்சி சர்வே


விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு காரணமாக திமுகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்ற அதிர்ச்சி சர்வே திமுவை கலங்கவைத்துள்ளது.

பிரபலமான ஒரு தனியார் கருத்துகணிப்பு நிறுவனம் மூலம் விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு என்ற இரு காரணிகளை மட்டும் கொண்டு ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளனர் மாறன் தரப்பு. திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைப்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தைரியமாக தந்துள்ளது அந்த நிறுவனம்.

அதிமுகவாலேயே நம்ப முடியாத இந்த கருத்துகணிப்பை நம்பாமலும் இருக்க முடியவில்லை என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளது மாறன் தரப்பு.

திமுக தலைவர் கருணாநிதி, சுடாலின், அன்பழகன், ஆவுடையப்பன், நேரு, பூங்கோதை, என்ற நீண்ட திமுக நட்சத்திர படைகள். தங்கபாலு, வசந்தகுமார், யுவராசா, கோவை தங்கம், விடியல் சேகர் கொமுக ஈசுவரன் என்ற கூட்டணி நட்சத்திரங்கள். இவர்களின் வெற்றி வாய்ப்பும் உறுதியில்லை, இழுபறிதான் என்றுள்ளதாம் அந்த கருத்து கணிப்பு.

பெரிய சர்வெ நிர்வனம் என்பதால் வேறு வழிஇல்லாமல் ஒப்பந்த பணத்தை கொடுத்து சர்வே விபரங்களை வாங்கி பெட்டியில் பூட்டிவிட்டனர் மாறன் தரப்பு. 

தங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்கள் மூலம் கருத்துகணிப்பை நடத்தினர். நடுநிலையான தகவல்களை தரவேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதுமம் இருந்த செய்தியாளர்கள் தந்த புள்ளி விபரங்களும் அதிர்ச்சியையே தந்துள்ளது.

திமுக கூட்டணி 32 இடங்களை மட்டுமே வெற்றிபெரும் என்ற நிலையில் தான் உள்ளதாம் இதுவரை உள்ள தேர்தல் நிலவரம்.

Apr 7, 2011

நக்கீரன் கருத்து கணிப்பு திமுக அதிர்ச்சி


விலைவாசி உயர்வு, மின்வெட்டு இந்த இரண்டு பிரச்சனைகள் தான் மக்களை சட்டென முடிவு எடுக்க வைக்கிறது. நலதிட்டங்களுக்கான டோக்கன், பணம், இவைகளை கடந்து விலைவாசி மற்றும் மின்வெட்டு திமுகவுக்கு எதிராக வாக்குகளை திருப்புகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் நேரடியாக கருத்துகணிப்பு நடத்தினோம். பல பத்திரிக்கை நிருபர்களின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்கள் கருத்துகணிப்பு ஆய்வாளர்களிடம் கொடுக்கப்பட்டு புள்ளியில் ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக...............142
தேமுதிக.............12
மா.கம்யூ.............10
இ. கம்யூ..............8
இதரம்..................6

மொத்தம்...................178

திமுக................32
காங்கிரசு.........10
பா.ம.க..............10
வி.சி..................1
கொமுக..........1

மொத்தம்........ 52

பாரதிய சனதா....1
இதரம் ....................1

இதுவரை வெளிவந்த கருத்துகணிப்புகளில் நக்கீரன் பத்தரிக்கையின் முதற்கட்ட கணிப்பு மட்டுமே திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற ரீதியில் அமைந்துள்ளது. நக்கிரன் பத்திரிக்கையின் இரண்டாம் கட்ட கருத்து கணிப்பும்  வெற்றியை அதிமுக பக்கத்துக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடதக்கது.

கடந்த நக்கீரன் இதழில் 117 தொகுதிகளில் திமுக கூட்டணி.69,  அதிமுக  கூட்டணி.48 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமநிலையில் இருந்த 20 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக சேர்க்கப்பட்டுள்ளது. 

திமுக.45, அதிமுக.38 தொகுதிகளில் வெற்றி பெரும் என நக்கீரன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. 

இதனால் நக்கீரன் கருத்துகணிப்பை கண்டு திமுகவினரே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

Apr 2, 2011

தோல்வி பயம்: வேலூரில் கண்கலங்கிய கருணாநிதி


சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார்.

நான் முதலமைச்சர் தானா? தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தம்பிமார்கள் எவ்வளவு காலம் பொருத்துக்கொள்வார்கள்? கேரளாவில் மகாபலி மன்னன் போல என்னை துரத்த பார்க்கிறார்கள், பூணூல் கும்பல் என்து ஆட்சியை அகற்ற துடிக்கிறது. இப்படி எல்லாம் பேசிக்கொண்டு போன கருணாநிதி இறுதியில் எங்களை தோல்வியடைய செய்தாலும் உங்களை மறக்க மாட்டேன் என்று உருக தொடர்ங்கினார். பேச்சு குழைய சற்று கண்கலங்கி விட்டார். அப்படியே அமைதியாக பேச்சையும் முடித்துக்கொண்டார். 

வழக்கமாக 10 மணிக்கு மேலும் பேச்சை தொடரும் கருணாநிதி சேலம் கூட்டத்தில் 10 நிமிடம் முன்பே பேச்சை முடித்தார். இன்றைய வேலூர் கூட்டத்தில் 45 நிமிடம் முன்னரே பேச்சை முடித்துக்கொண்டார்.

வெளியான நான்கு கருத்துக்கணிப்புக்கே இப்படி தோல்வி பயம் தொற்றிக்கொண்டதே. இன்று வெளியாகும் அடுக்கடுக்கான கருத்துக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? அதை எல்லாம் விட மே 13 தோல்வியை எப்படி தாக்கிக்கொள்வார் தாத்தா?

Apr 1, 2011

எப்படி எல்லாம் கருத்துகணிப்பு வருது பாருங்க


எப்படி எல்லாம் கருத்துகணிப்பு வருது பாருங்க

வைகோ: தினமலரின் கீழ்த்தரமான விளம்பரம்

பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை தருவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளார்கள். ஆனால் 30 கி.மீ மட்டுமே இடைவெளியுள்ள தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறை படுகேவலமாக உள்ளது.

திறமை, தைரியம், தெளிவு, நுண்ணறிவு, நேர்மை என எதுவுமே இன்றி அரசியல் பணம் வியாபாரம் பரபரப்பு இதை மட்டுமே கொண்டுள்ள கேவலமான நிலையில் உள்ளது தமிழக பத்திரிக்கை துறை. 

நெம்.1 என்று பீற்றிக்கொள்ளும் சன் தொலைகாட்சி மற்றும் அதன் குழும ஊடகங்களை பற்றி விளக்கி சொல்லவேண்டியது இல்லை. திமுகவுக்காக, திமுகவால் வளர்க்கப்பட்ட ஊடகம். இடையில் ஒரு 8 மாதம் மோதிக்கொண்டார்கள். என்னமா நடுநிலை தெரித்தது.

இதழியலில் எவ்வளவு தரைமட்டத்திற்கு இறங்கி வேலை செய்யமுடியுமோ அந்த அளவுக்கு சன் குழும ஊடகங்கள் வேலை செய்யும்.

கடந்த தேர்தலில் வைகோவின் பிரச்சார கூட்டத்தில் திமுகவினரை விட்டு 40 கோடி வாங்கிக்கொண்டு தான் அதிமுக பக்கம் போனீர்களா என்று கேட்க வைத்தார்கள். அதை திரும்ப திரும்ப காட்டி வைகோ மீதான நன்மதிப்பை கெடுத்தார்கள்.

தயாநிதிமாறனின் மட்டமான புத்தியில் விளைந்த மட்டமான தேர்தல் யுக்தி அது. 

அதே பாணியில் இன்று களம் இறங்கி இருக்கிறது தினமலர்.

ஏப்.1ல் வாசகர்களை ஏமாற்ற வேண்டுமாம். அதற்காக செய்தியில் இப்படி அரசியல் செய்திருப்பது எவ்வளவு தரம்தாழ்ந்த செயல்.

தினமும் தான் ஏமாற்று செய்தி வெளியிடுகிறீர்கள் இன்று மட்டும் அப்படி என்ன புதிதாய் சாதித்துவிட இப்படி ஒரு கிழ்தரமான செயல்?

மதுரையை தலைமையிடமாக வைத்துக்கொண்டு அழகிரியை பற்றி எழுத தைரியம் இல்லாத தினமலர், ஊருக்கு இளைத்தவர்களிடம் விளையாடுவது இது புதிதல்ல

ஏற்கனவே ஈழம் விவகாரத்தில் தமிழ் இன உணர்வாளர்களை இளக்காரமாகவே வைத்துள்ளது. அதே நேரத்தில் இசுலாமியர்களிடம் மண்டியிட்டு மண்ணை கவ்வுகிறது காரணம் அவர்கள் ரோசக்காரர்கள். இவர்கள் இளிச்சவாயர்கள்.

அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் நிர்வாகிகளின் நிர்வாண படங்களை வெளியிட மதிமுகவினருக்கு அதிக நேரம் ஆகிவிடாது. தினமலர் நிர்வாகி ரமேசு குற்றாலம் ஓட்டல் அறையில் விபச்சாரியுடன் இருந்த ஆபாசமான படங்களை ஏற்கனவே பல பத்திரிக்கைகள் வெளியிட்டு இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

தினமலரின் அவதூறு வைகோவுக்கு இன்னும் ஒரு படிகல்லாகவே அமையட்டும்.


( தினமலர் நிர்வாகி ரமேசு மற்றும் மகேசு ஆகியோர் குற்றாலம் ஓட்டலில் கேரள விபச்சாரிகளுடன் உள்ள ஆபாச புகைப்படங்களை இந்த தளத்தில் வெளியிடாலாமா என்ற முடிவை வாசகர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)

Popular Posts