Apr 12, 2014

சனநாயகத்தை சாகடிக்க வந்த நோட்டோ

இந்தியாவில் படித்தவர்களிடம் ஒரு முட்டாள் தன அலை அவ்வப்போது வீசுவது உண்டு. ஊழலுக்கு எதிராக பணக்கார வர்க்கம் மெழுகுவர்த்தி ஏந்தியது, டெல்லி சம்பவத்திற்கு பின்னர் பெண் வன்முறைக்கு எதிரான சட்டத்தை கண்மூடித்தனமாக உச்சபடுத்தியது. இது எல்லாம் பணக்கார வர்க்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப படித்தவர்கள் ஆடும் ஆட்டம். 

தற்போது தேர்தல் என்பதால் நோட்டோ அலை. தேர்தல் ஆணையத்தை தலையில் தூக்கிவைத்து ஆடும் அலை. இதெல்லாம் யாருக்காக?

இலவசங்களை ஏழைகளுக்கு தந்தால் பணக்கார வர்கத்திற்கு ஏன் வயிற்றெரிச்சல்? தேர்தலில் ஏழைகளிடம் பணப்புழக்கம் அதிகமானால் தேர்தல் ஏந்தவிதத்தில் சீர்குலையும்? ஒட்டுக்கு பணம் கொடுத்தால் அதுவாவது மிஞ்சுமே? 

பணம் வாங்கமாட்டோம் என்று எந்த ஏழையும் சொல்லமாட்டான். குறைந்த பட்சம் 100 ரூபாய் கிடைத்தால் கூட வாங்கிக்கொள்ளும் ஏழ்மை நிலையில் தான் இந்தியர்கள் உள்ளனர். பணக்காரர்கள் எந்த விதத்தில் ஏழைக்கு பணம் கொடுத்தாலும் அது தப்பே இல்லை. 

பணம் வாங்குவது ஏழையின் உரிமை. ஒட்டு போட வேண்டுமா வேண்டாமா? யாருக்கு போடுவது என்பதை ஏழை தீர்மானித்துக் கொள்ளட்டும். அதில் தேர்தல் ஆணையமோ, பணக்கார வர்க்கமோ, மெத்தபடித்த மேதைகளோ தலையிட வேண்டியது இல்லை.

அதே போல தான் நோட்டோ அதாவது யாருக்கம் ஓட்டுப்போட விருப்பம் இல்லை என்ற வசதி. சனநாயக்தை இதை விட கேவலப்படுத்த வேண்டியது இல்லை. 

யாருக்கும் ஒட்டுபோட விரும்பம் இல்லை என்றால் தேர்தல் எதற்காக? போட்டியிடும் வேட்பாளர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க தான் தேர்தல். அதில் யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று சொல்ல எதற்கு தேர்தல் ஆணையம்? 

வேட்பாளர்கள் யாருமே சிறந்தவர்கள் இல்லை என்றால் நீங்கள் வேட்பாளராக நிற்க வேண்டியது தானே. அதை விட்டு எதற்கு இந்த கேலிக்கூத்து? 

யாருக்கும் ஒட்டுபோட விருப்பம் இல்லை என்பது அடி முட்டாள் தனம். அதற்கு ஓட்டுபோடவே விரும்பம் இல்லை என்று சொல்லி, நிம்மதியாக வீட்டில் இருங்கள். வேறு நல்ல பயனுள்ள வேலை எதாவது இருந்தால் செய்யுங்கள். 

நோட்டோ பட்டனை அமர்த்த வாக்குசாவடிக்கு சென்று சனநாயகத்தை சாகடிக்காதீர்கள்.

4 comments:

  1. ஒரு முட்டாள் தன கட்டுரை என சொல்லவாவது எங்களுக்கு உரிமை உள்ளதா அல்லது அதுவும் உங்கள் பேரறிவுக்கு முட்டாள்தனமா? ஓட்டு போடாமல் வீட்டிலேயே இருந்துவிட்டால் யார் ஓட்டு போடுவார்கள் என்பதை இந்த 65 வருடங்களாக பார்த்துவிட்டோமே. இக்கட்டுரையை எழுதியவர் சிறிய வயதுக்காரரோ?

    ReplyDelete
  2. திரு அசோக ராசு & ஆனந்த ராசு தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி

    வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். உங்கள் ஓட்டை வேறு ஒருநபர் போடாமல் பார்த்துக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் வேலை.

    உங்கள் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிடுவார்கள் என்றால் அது உங்கள் தவறு அல்ல.

    இருப்பவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுங்கள் அதற்கு தான் தேர்தல்.
    எவருமே சிறந்தவர் இல்லை என்றால் நீங்கள் யார்?

    ReplyDelete
  3. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கவேண்டும்,
    பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வேண்டும்.
    அது தான் இந்தியா
    அதற்கு ஏற்ப தான் தேர்தல் கூட திட்டமிடப்படுகிறது என்பதுவே நிதர்சன உண்மை.

    ReplyDelete
  4. 30% ஒட்டு வாங்கி வெற்றி பெற்று 100% மக்களின்பிரதிநிதியாகும் கேலிக்கூத்து தான் இந்திய தேர்தல்.

    ReplyDelete

Popular Posts