Apr 25, 2014

சூழ்நிலை கைதியாக நீதிபதி சதாசிவம்

ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சூழ்நிலை கைதியானால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அரசியல் சூழ்நிலைகளுக்கு நீதிமன்றங்கள்  பயப்படுமானால் நீதிமன்றம் எதற்கு? எல்லா அதிகாரங்களையும் அரசியல்வாதிகளிடமே கொடுத்து விடலாமே!

ராசீவ் கொலை வழக்கில் சூழ்நிலை காரணமாக தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நீதிபதி கே.டி தாமசு பதவி ஓய்வுக்கு பின்னர் கூறுகிறார். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குற்றத்தின் மையத்தை தான் பார்த்தோமே தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தன்மையை பார்க்கவில்லை, என்று இன்று கூறுகிறார் கே.டி.தாமசு. இன்றாவது மனசாட்சியை வெளிப்படுத்தினாரே என்று ஆறுதல் பட்டுக்கொள்ளாமல் வெறு என்ன சொல்வது?


இதே போல இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் நிச்சயமாக பதவி ஓய்வுக்கு பின்னர் மனசாட்சியை வெளிப்படுத்தலாம். தேர்தல் நேரம் அரசியல் சூழ்நிலை அதனால் இப்பட்டிப்பட்ட தீர்ப்பை வழங்க நிர்பந்திக்கப்பட்டேன் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வழக்கு விசாரனையின் போது அரசியல் அமைப்பு சாசனத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற நீதிபதி சதாசிவம், இன்று அதே தீர்ப்பை வழங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது.

தேர்தல் நேரம், பதவி ஓய்பு பெறும் இறுதி நாள், தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட புகார். இந்த நிர்பந்தம் மாண்புமிகு நீதிபதி சதாசிவம் அவர்களை சூழ்நிலை கைதியாகக்கி இருக்கிறது. 

அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி தாமசு செய்த அதே தவறை இப்போதைய நீதிபதி சதாசிவம் செய்திருப்பது காலத்தின் கொடுமை.

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. நீதித்துறையை சீர்திருந்த இன்னும் புரட்சியாளர் தேவைப்படுகிறார்கள் என்று தான் முடிக்க வேண்டியுள்ளது. 

Apr 21, 2014

தமிழகம் 40ல் யார் யார்? - 2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்புகள் அகியவை எடுத்த கருத்துக் கணிப்புகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை வைத்து இறுதியாக கணிக்கப்பட்டுள்ளது. 

இடதுசாரி கட்சிகளை கழட்டி விட்டது தேசிய அளவிலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வாக்கு வங்கியை இழக்கிறது. தற்போது திடீர் என அதிகரித்துள்ள கடுமையான மின்வெட்டு அதிமுகவை அடியோடு சாய்க்கிறது.

அதிமுக. காங்கிரசு மீதான வெறுப்பு பாசக அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்கிறது. 

கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறுவதில் குறியாக இருந்த தேமுதிக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெற தவறி விட்டது. 

குறைந்த தொகுதிகளை பெற்றாலும் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெற்றுள்ளது பாமகவின் பலம். தேமுதிக பாமக முரண்பாடு இரு கட்சிகளுக்கும் இழப்பை தருகிறது. 

வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெற்றது, தென்மாவட்டங்களில் திமுக பிளவு, பெதிக, மே17, தமிழர் அமைப்புகள், தமிழ்புலிகள், நடுநிலை வாக்காளர்கள், இடதுசாரிகள் மறைமுக ஆதரவு, தேமுதிக பாமக, பாசக நேரடி ஆதரவு என மதிமுக 100% வெற்றிக்கொடியை நாட்டுகிறது. 

கன்யாகுமரியில் மட்டும் பாசக கரை சேர்கிறது. கோவை தென் சென்னையில் வெற்றியின் அருகில் உள்ளது. 

புதிய வேட்பாளர்கள், கட்சி பிளவு, கூட்டணி இன்மை, குழு சண்டை ஆகியவை திமுகவை பல இடங்களில் தோழ்விக்கு அழைத்து செல்கிறது. பாசக போட்டி இடாமை நீலகிரியில் ராசாவை தோற்கடிக்கிறது.  

மஞ்சள் பின்புலம் இழுபறியை குறிக்கிறது. 
  1. திருவள்ளூர் .....................................அதிமுக .............தேமுதிக
  2. வட சென்னை................................. அதிமுக ..............தேமுதிக 
  3. தென் சென்னை............................... பாசக................... அதிமுக
  4. மத்திய சென்னை........................... திமுக ..................அதிமுக 
  5. திருபெரும்புதூர்................................ மதிமுக ...............அதிமுக 
  6. காஞ்சிபுரம் (தனி) ..........................மதிமுக ...............அதிமுக 
  7. அரக்கோணம் ..................................பாமக....................அதிமுக 
  8. வேலூர்............................................ அதிமுக ..................புநீக
  9. கிருசுணகிரி ..................................பாமக ...................அதிமுக 
  10. தருமபுரி .............................................பாமக ................அதிமுக 
  11. திருவண்ணாமலை ....................அதிமுக ...............பாமக 
  12. ஆரணி ..............................................பாமக .................அதிமுக 
  13. விழுப்புரம் (தனி) ..........................அதிமுக ............தேமுதிக 
  14. கள்ளக்குறிச்சி.............................. அதிமுக..............தேமுதிக 
  15. சேலம் ..............................................தேமுதிக ...........அதிமுக 
  16. நாமக்கல்......................................... அதிமுக.............. தேமுதிக 
  17. ஈரோடு .............................................மதிமுக ...............அதிமுக
  18. திருப்பூர் ..........................................தேமுதிக.............. அதிமுக 
  19. நீலகிரி (தனி) .................................அதிமுக .................திமுக 
  20. கோயம்புத்தூர் ...............................அதிமுக ................பாசக 
  21. பொள்ளாச்சி ....................................அதிமுக .............கோமதேக 
  22. திண்டுக்கல் .....................................அதிமுக.............. தேமுதிக 
  23. திருச்சிராப்பள்ளி ...........................அதிமுக ............தேமுதிக 
  24. கரூர் ....................................................அதிமுக ...........தேமுதிக 
  25. பெரம்பலூர் .........................................இ.ச.க ..............அதிமுக 
  26. கடலூர்.............................................. அதிமுக ..............தேமுதிக 
  27. சிதம்பரம் (தனி) ..............................அதிமுக .............வி.சி
  28. மயிலாடுதுறை ..............................அதிமுக............. பாமக 
  29. நாகப்பட்டினம் (தனி) .....................அதிமுக........... பாமக 
  30. தஞ்சாவூர் ........................................அதிமுக............ திமுக 
  31. சிவகங்கை .......................................அதிமுக............ பாசக 
  32. மதுரை ................................................அதிமுக ...........தேமுதிக
  33. தேனி ...................................................மதிமுக .............அதிமுக 
  34. விருதுநகர் ........................................மதிமுக ..............அதிமுக 
  35. இராமநாதபுரம் ...............................அதிமுக ..............பாசக 
  36. தூத்துக்குடி...................................... மதிமுக ..............அதிமுக 
  37. தென்காசி (தனி) ............................மதிமுக................. பு.த 
  38. திருநெல்வேலி............................ அதிமுக .............தேமுதிக 
  39. கன்னியாகுமரி................................ பாசக ................அதிமுக
  40. புதுச்சேரி........................................... பாமக................ என்ஆர்.க
அதிமுக .........................16 - 22 
மதிமுக............................6 - 7
பாமக................................4  - 5
பாசக.................................1  - 2
தேமுதிக ........................6 - 2
இசக..................................1 - 1
கோமதேக .....................1- 0
திமுக ..............................3 - 1 
வி.சி ..................................1 - 0
என்ஆர்.க .......................1 - 0

அதிமுக ......................... 16 - 22 
பாசக அணி ................. 20 - 17
திமுக அணி ................ 4 - 1

இறுதிநாள் மக்கள் மனநிலை பாசக அணியை கூடுதல் வெற்றி தொகுதிகளுக்கு அழைத்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Apr 18, 2014

அதிமுகவை முந்தும் பாசக அணி - தேர்தல் கருத்து கணிப்பு

தமிழகத்தில் பல முனை போட்டி நிலவினாலும் அதிமுக திமுக பாசக கூட்டணி இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

காங்கிரசு, இடதுசாரி மற்றும் உதிரிகட்சிகள் ஓட்டை பிரிக்கும் பணியை முழு வீச்சில் செய்கின்றன. இத்தகு நிலையில் பொதுமக்களின் வாக்கு எந்த அணிக்கு அதிகம் கிடைக்கிறதோ அந்த அணியே வெற்றி அணியாகும்.

வாக்கு வங்கி அடிப்படையில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது என்றாலும் பாசக கூட்டணி வாக்கு வங்கியும் அதிமுக வாக்கு வங்கியும் ஏரத்தாள இணையாகவே உள்ளன.

அதிமுக வாக்கு வங்கி
கட்சி உறுப்பினர்கள் 7 %
கட்சி அனுதாபிகள்  10 %
ஆதரவு கட்சிகள் 2 %
மொத்தம் 19 %

திமுக வாக்கு வங்கி
கட்சி உறுப்பினர்கள் 5 %
கட்சி அனுதாபிகள்  8 %
வி.சி, + பு.த                         1 %
மமக + மு.லீ         1 %
மொத்தம் 15 %

பாரதிய சனதா கூட்டணி வாக்கு வங்கி
தேமுதிக கட்சி உறுப்பினர்கள்  2 %
தேமுதிக கட்சி அனுதாபிகள் 2 %
பாமக கட்சி உறுப்பினர்கள் 2 %
பாமக கட்சி அனுதாபிகள்         2 %
மதிமுக கட்சி உறுப்பினர்கள் 1 %
மதிமுக கட்சி அனுதாபிகள் 4 %
பாசக கட்சி உறுப்பினர்கள்         1 %
பாசக கட்சி அனுதாபிகள்         1.5 %
இ.ச.க + புநீக + கொமதேக        1.5 %
மொத்தம்                        17 %

அதிமுக 19 %
பாசக 17 %
திமுக 15 %

இடதுசாரி, காங்கிரசு, இதர கட்சிகள், சுயேட்சைகள் போன்றவை 4 % வாக்குகளை பிரித்து விடுகின்றன.  

அனுதாபிகள் போக மீதமுள்ள 45 % பொதுமக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதை பொருத்தே வெற்றி நிர்ணயிக்கப்பட உள்ளது.

காங்கிரசு அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பு, மின்வெட்டு, மத்தியில் அடுத்த ஆட்சி, புதிய மாற்றம், ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவை பாசக அணிக்கு பொதுமக்கள் வாக்குகளை 10% கொண்டு சேர்க்கிறது.

அடுத்த பிரதமர் வாய்ப்பு, துணிச்சலான நிர்வாகம், சிறுபான்மையினரின் பாசக எதிர்ப்பு வாக்கு ஆகியவை அதிமுகவுக்கு 7 % பொது மக்கள் வாக்கு வந்து சேர்கிறது. அதிமுகவுக்கு மாற்று திமுக என்ற விதத்தில் 3 % பொதுமக்கள் வாக்குகள் திமுகவுக்கு வருகிறது. 20-25 % வாக்குகள் வாக்குசாவடிக்கு வராதவர்கள் பக்கம் செல்கிறது.

75 % வாக்கு பதிவு நடந்தால் கீழ் கண்டபடி தேர்தல் வெற்றிகள் அமைய வாய்ப்பு உள்ளது.

பாசக            17 + 10 = 27%

அதிமுக      19 + 7 = 26%

திமுக        15 + 3 = 18%

பாசக கூட்டணியில் பாமக, கொமதேக, இசக, புநீக கட்சிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாக்கு வங்கியை பெற்றிருப்பது அந்த அணிக்கு கணிசமான தொகுதிகளை இழக்க வழி செய்கிறது. 

தனிப்பட்ட வேட்பாளர் செல்வாக்கு, தொகுதிக்கு உட்பட்ட வாக்கு வங்கி அடிப்படையில் பாசக அணியும் அதிமுகவும் சமநிலையில் உள்ளன

மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால்

பாசக அணி   18

அதிமுக 18

திமுக 4

இடங்களை பெற வாய்ப்புள்ளது.

Apr 17, 2014

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் யாருக்காக?

பெண் வன்கொடுமை சட்டத்தை எவ்வளவு உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு உச்சத்தில் வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள். பெண்கள் ஓட்டு முக்கியம் என்பது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் தெரியும். அதே நேரத்தில் ஆண்கள் ஓட்டை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. இங்கு வாக்கு அரசியலை தாண்டி இந்த சட்டத்தை ஆய்வு செய்வோம். 

ஒரு பெண் புகார் கொடுத்தாலே உடனடியாக ஆணை கைது செய்து சிறையில் அடைக்கலாம். முதலில் கைது, பின்பு தான் விசாரணை. முதல் இரண்டு வாய்தாக்களுக்கு பிணை கிடையாது. விசாரனையில் அந்த ஆண் நிரபராதியாக கூட இருக்கலாம். ஆனால் அதை பற்றி எல்லாம் சட்டத்திற்கு கவலை இல்லை. தன் நியாயத்தை குறைந்தபட்சம் சொல்ல கூட அந்த ஆணுக்கு வாய்ப்பு இல்லை. சிறைக்கு பின்பு தான் எல்லாமும். இது ஒரு சட்டமா? இந்த சட்டம் பெண்களை பாதுகாக்கவா அல்லது பேரம் பேசவா? 

ஆண்களை அடிமைப்படுத்த நினைத்த எந்த சட்டமும், ஆட்சியும் வென்றதாக சரித்திரம் இல்லை என்பது வரலாறு. சட்டம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்க வேண்டும். இதற்கு ஆதரவாக ஆண்கள் குரல்கொடுக்க தயங்குவது ஏன் என்பது தான் இப்போது வரை எனக்கு விசித்திரமாக உள்ளது.

ஆண்களே பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உடனடியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். எந்த தருணத்திலும் நீங்கள் பேரம் பேசப்படலாம்.  

பெண் வண்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

1. பெண்களுக்கு பாதுகாப்பானது
2 ஆண்களுக்கு ஆபத்தானது
3. பணம் பேரம்பேச போலீசாருக்கு கிடைத்த இன்னொரு வழி

Apr 15, 2014

தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் கருத்துகணிப்பு 2014

தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுவதால் அதிமுக திமுக கட்சிகளின் ஓட்டு வங்கி முக்கியமாகிறது. காங்கிரசின் மீதுள்ள வெறுப்பு பாசக கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்குகளை கொண்டு சேர்க்கிறது. 

14.4.2014 நிலவரப்படி அதிமுக பாசக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மின்வெட்டு மற்றும் மாநில அதிமுக அரசு மீது அதிருப்தி நிலவினால் பாசக கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது.

அதிமுக........... 20

திமுக ................8

மதிமுக............ 4

பாமக................ 4

தேமுதிக........ 3

பாசக................ 1

Apr 12, 2014

சனநாயகத்தை சாகடிக்க வந்த நோட்டோ

இந்தியாவில் படித்தவர்களிடம் ஒரு முட்டாள் தன அலை அவ்வப்போது வீசுவது உண்டு. ஊழலுக்கு எதிராக பணக்கார வர்க்கம் மெழுகுவர்த்தி ஏந்தியது, டெல்லி சம்பவத்திற்கு பின்னர் பெண் வன்முறைக்கு எதிரான சட்டத்தை கண்மூடித்தனமாக உச்சபடுத்தியது. இது எல்லாம் பணக்கார வர்க்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப படித்தவர்கள் ஆடும் ஆட்டம். 

தற்போது தேர்தல் என்பதால் நோட்டோ அலை. தேர்தல் ஆணையத்தை தலையில் தூக்கிவைத்து ஆடும் அலை. இதெல்லாம் யாருக்காக?

இலவசங்களை ஏழைகளுக்கு தந்தால் பணக்கார வர்கத்திற்கு ஏன் வயிற்றெரிச்சல்? தேர்தலில் ஏழைகளிடம் பணப்புழக்கம் அதிகமானால் தேர்தல் ஏந்தவிதத்தில் சீர்குலையும்? ஒட்டுக்கு பணம் கொடுத்தால் அதுவாவது மிஞ்சுமே? 

பணம் வாங்கமாட்டோம் என்று எந்த ஏழையும் சொல்லமாட்டான். குறைந்த பட்சம் 100 ரூபாய் கிடைத்தால் கூட வாங்கிக்கொள்ளும் ஏழ்மை நிலையில் தான் இந்தியர்கள் உள்ளனர். பணக்காரர்கள் எந்த விதத்தில் ஏழைக்கு பணம் கொடுத்தாலும் அது தப்பே இல்லை. 

பணம் வாங்குவது ஏழையின் உரிமை. ஒட்டு போட வேண்டுமா வேண்டாமா? யாருக்கு போடுவது என்பதை ஏழை தீர்மானித்துக் கொள்ளட்டும். அதில் தேர்தல் ஆணையமோ, பணக்கார வர்க்கமோ, மெத்தபடித்த மேதைகளோ தலையிட வேண்டியது இல்லை.

அதே போல தான் நோட்டோ அதாவது யாருக்கம் ஓட்டுப்போட விருப்பம் இல்லை என்ற வசதி. சனநாயக்தை இதை விட கேவலப்படுத்த வேண்டியது இல்லை. 

யாருக்கும் ஒட்டுபோட விரும்பம் இல்லை என்றால் தேர்தல் எதற்காக? போட்டியிடும் வேட்பாளர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க தான் தேர்தல். அதில் யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று சொல்ல எதற்கு தேர்தல் ஆணையம்? 

வேட்பாளர்கள் யாருமே சிறந்தவர்கள் இல்லை என்றால் நீங்கள் வேட்பாளராக நிற்க வேண்டியது தானே. அதை விட்டு எதற்கு இந்த கேலிக்கூத்து? 

யாருக்கும் ஒட்டுபோட விருப்பம் இல்லை என்பது அடி முட்டாள் தனம். அதற்கு ஓட்டுபோடவே விரும்பம் இல்லை என்று சொல்லி, நிம்மதியாக வீட்டில் இருங்கள். வேறு நல்ல பயனுள்ள வேலை எதாவது இருந்தால் செய்யுங்கள். 

நோட்டோ பட்டனை அமர்த்த வாக்குசாவடிக்கு சென்று சனநாயகத்தை சாகடிக்காதீர்கள்.

Popular Posts