Feb 24, 2012

என்கவுண்டரும் ஈழப்போரும் என்ன வேறுபாடு


உலகிலேயே மிகவும் கோழைத்தனமான காவல்துறை என்ற பெயரை எடுத்துள்ளது தமிழக காவல்துறை. சாதாரண வங்கிக்கொள்ளையர்களை சுட்டு தான் பிடிக்கவேண்டும் என்ற பயந்தாங்கோலிகளா தமிழர்கள். தமிழ்நாடு என்பது மனிதநேயம் உள்ள மக்கள் வாழும் நாடா இல்லை காட்டுமிராண்டிகள் வாழும் நாடா? 

என்கவுண்டர் செய்தால் தமிழக மக்கள் ஆகா ஓகோ என்பார்கள் என்ற தைரியத்தில் தானே இத்தனை அக்கிரமத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஒருவனை கூட விட்டுவைக்ககூடாது என்ற கொலைவெறி தமிழக போலீசாருக்கு எங்கிருந்து வந்தது? கொலைவெறி பாடலை தமிழர்கள் உள்ளூர ரசித்திருக்கிறார்கள் என்பதை இப்படி தான் வெளிக்காட்ட வேண்டுமா? 

தமிழக போலீசார் யார்? சைகோவா?, கொலைகார எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்தவர்களா? கொடூர கொலைகாரர்களுக்கும் தமிழக போலீசாருக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. அதிகாரம், ஆயுதம், தொழில்நுட்பம் இத்தனையும் கொடுத்தும், கொன்று தான் பிடிக்க வேண்டும் என்றால் இந்த கொலைகார காவல்துறை தமிழர்களுக்கு தேவையா? 
இங்கு என்கவுண்டரை ஆதரித்து பேச சிலர் முன்வரலாம். ஒரு வருடத்திற்கு முன்னர் கோவையில் நடந்த என்கவுண்டரை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட மோகன்ராசு தான் குற்றவாளி என போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. 

என்கவுண்டரை ஆதரித்து பேசும் தமிழர்களே உலக அரங்கில் இரக்க குணம் அற்ற மிருகங்கள் தான் தமிழர்கள் என்ற பெயரை எடுத்து விடாதீர்கள். மனித உரிமைகள் பற்றி பேச உங்களுக்கு துளியும் யோக்கியதை இல்லை. உங்கள் தலைசிறந்த காவல்துறையால் இன்று நீங்கள் தலைகுனித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்கவுண்டர் என்பது வீரம் என்று யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. கோழைகளே இனியாவது திருந்துங்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?

இலங்கையின் மனித உரிமை பற்றி பேச உங்களுக்கு என்னடா யோக்கியதை இருக்கிறது? 

என்கவுண்டர் நடந்த இடத்துக்கு 10 மணி நேரம் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. எதற்காக? எதை மூடி மறைக்க? உங்கள் துக்கடா போலீசுக்கே இந்த புத்தி இருக்கும்போது இலங்கை ராணுவத்துக்கு எவ்வளவு புத்தி இருக்கும். நீங்கள் பேசுகிறீர்கள் இலங்கை ராணுவம் மனிதஉரிமைகளை மீறியது என்று. 

தமிழ் நாட்டினரே இனியும் என்கவுண்டரை ஆதரித்து தமிழரின் பாரம்பரிய நற்குணத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

Feb 22, 2012

முல்லைப்பெரியாறு கொலைநடுங்க வைக்கும் படுபாதகம்


மிகவும் வருத்தத்துடனும், பீதியுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை புதிய கால்வாய் என்ற திட்டத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக கேரள தமிழக மக்கள், அரசியல்வாதிகள், நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து பேசி வருகிறோம். பல மகிழ்சியான கருத்துரைகளை கடந்து சில வேதனையான கருத்துக்களையும் பகிராமல் இருக்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு என்ற பிரச்சணைக்கு சிலர் மறுமுகம் கொடுத்து வருகின்றனர். இதை இருமாநில மக்களும் எப்படி முறியடிப்பார்கள் என்ற பீதி இப்போதே கொலைநடுங்க வைக்கிறது.

தங்கள் இலக்கை அடைய உயிர்பலிக்கும் தாயாரக இருக்கும் சில குரூர எண்ணக்காரர்களை பற்றி தான் இங்கு எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் சில இனவெறியர்கள் ஒரு இலக்கை சாதிக்க துடிக்கின்றனர். 

திருவிதாங்கூர் அரசர் செய்த வரலாற்று பிழையை திருத்துகிறோம் என்ற பேரில் எந்த பிரச்சனைக்கும் தாயர் என்ற மனநிலையில் உள்ளனர்.

பெரியாறு முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆங்கிலேய அரசு திரவிதாங்கூர் மன்னரை மிரட்டி நதியை அணை கட்டி திருப்பி விட்டது. அதை நாங்கள் மீட்டெடுபோம் என்று விசமத்தை பரப்பி வருகிறார்கள். இதற்கு கேரளாவின் முக்கிய பத்திரிக்கையும் உடந்தையாக கொம்பு சீவி வருகிறது. எவ்வளவு உயரிபலி கொடுத்தேனும் நதியை மீட்பது ஒன்று எங்கள் குறிக்கோள் என்கின்றனர். 

அதே பாணியில் தமிழகத்திலும் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உள்ளன. பீர்மேடு, தேவிகுளம் பகுதியை மீட்டுவிட வேண்டும் என கொலைவெறி பிடித்து அலைகிறார்கள். இதற்காக இன கலவரத்தை ஏற்படுத்தவும் தயாராகி வருகிறார்கள். (அபாயகரமான உண்மை என்பதால் அந்த அரசியல்வாதிகள், பத்திரிக்கைகள் பெயரை குறிப்பிடவில்லை)  

கேரள ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்து ஒற்றை கேள்வியை முன் வைத்தோம்.

2006ல் தண்ணீரை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் அதை கேரளா மதிக்கவில்லை. அதே போல 2012 ல் கேரளாவுக்கு சாதகமாக புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தால் அதை தமிழகம் ஏற்றுக்கொள்ளுமா? 

ஒருவர் சட்டென உச்சசநீதின்றம் தீர்ப்பளித்தால் மதித்து தானே ஆக வேண்டும் என்றார். பின்னர் ஏன் 2006ல் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு மவுனம் மட்டுமே பதில்.

நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிக்கப்போவதில்லை பின்னர் எதற்கு இவ்வளவு பொருட்செலவில் விவாதங்கள்?    நிபுணர் குழுவையும் பத்திரிக்கைகளையும் வாழ வைக்கவா?

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னனியில் ஒரு இனக்கலவரத்தை தூண்டி தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள இரு பிரிவினரும் தயாராக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொம்பு சீவிக்கொண்டு இருக்கிறார்கள். 

தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் கலவரம் வெடிக்க காத்திருக்கிறது. இரு பிரிவினரும் வரலாற்று பிழையை திருத்தி தங்கள் ஆற்றையும், பகுதியையும் மீட்டெடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த போருக்கு துவக்கம் இட நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வரும் நாள் போருக்கான மணி அடித்துவிடும். ( எத்தனை மக்களுக்கு மரண மணியோ?) 

பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகம் மீட்கப்போவதும் இல்லை, பெரியாற்றை கேரளம் மீட்கப்போவதும் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை கலவரக்காரர்களும் இராணுவமும் கொன்று குவிப்பது மட்டும் உண்மை. 

கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப்பெரியாறு, பீர்மேடு, மூணாறு பகுதியில் வாழும் அப்பாவி மக்களுக்கு சமாதி கட்டும் அந்த கோரத்தை அரங்கேற்ற நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதை மானுடம் பேசும் நல்லுலகம் எப்படி முறியடிக்கும் என்று தெரியவில்லை....

வருத்தங்களுடன்...

Feb 21, 2012

மீனவனாக இறந்தாலும் கேரளாவில் இருக்க வேண்டும்.


தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்படுவது இது புதிது அல்ல. ஆனால் இந்தமுறை ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஆம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை சுட்டுக்கொன்றனர் இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள். சம்பவத்தை அறிந்ததும் இந்திய கடற்படைக்கு காத்திருக்காமல் விரைந்து செயல்பட்டனர் கேரள போலீசார்.  கப்பலை சுற்றி வளைத்து கொச்சிதுறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். 

சர்வதேச சட்டம், இந்திய கடற்படை என தப்பிக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் கேர ள அரசும், போலீசாரும் குற்றவாளிகளை தங்கள் மாநில சட்டப்படி கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு கேரள ஊடகங்களும், மக்களும் ஒருமித்த குரலில் உறுதுணையாக இருந்தன. 

இரண்டே நாளில் கப்பல் கேப்டன் உட்பட 7 பேரையும் விசாரனை வட்டத்துக்குள் கொண்டு வந்தனர். மீனவர்கள் அடையாளம் காட்டிய இந்தாலி கப்பல் காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கேரள சட்டப்படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, போலீசு காவலிலும் எடுத்து விட்டனர். விசாரனையை இரு வாரத்துக்குள் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கித்தருவோம் என்கின்றனர் கேரள போலீசார்.  

இது ஒரு சாதாரன நிகழ்வு தான். கேரள போலீசார் பெரிய சாதனை ஒன்றும் செய்திடவில்லை. ஆனால் பக்கத்து மாநிலம் தமிழகத்தை ஒப்பிடும் போது இது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே தெரிகிறது. இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மீனவர்கள் எத்தனை பேர்? 

இம்முறை தமிழ்மீனவர்களாக இருந்தாலும் கேரள மீனவர்களாக இறந்துள்ளனர். இதற்கு முன்னர் தமிழ்மீனவர்கள் தான் ஆனால் தமிழக மீனவர்களாக இறந்துள்ளனர் அவ்வளவு தான் வேறுபாடு. 

தமிழக மீனவரும் சுட்டுக்கொல்லப்பட்ட போது மீனவர்களுக்கு பேராசை என்று அறிக்கை விட்டார்கள் தமிழக அரசியல்வாதிகள். தமிழக மீனவர்களை சுட்ட குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்பட்டதாக கேள்விப்பட்டதில்லை. 

மிருகத்தனமாக நடந்துகொண்ட இத்தாலியர்களை கொடூரர்கள் என கேரள ஊடகங்கள் எழுதின. சோனியாக காந்தியை விமர்சித்தன. இங்கு எந்த காங்கிரசாரும் இறையான்மை என்று வாய்சவடால் விடலில்லை. ஆனால் தமிழகத்தில் சோனியாகாந்தி என்றாலே எதோ மாரியாத்தாவையும், மரியன்னையையும் பேசியது போல தமிழக காங்கிரசார் குதிக்கின்றனர். உங்களுக்கு மட்டும் அப்படி எப்படிடா சோனியா தெய்வமானார்?

தமிழக போலீசாருக்கு இது ஒரு நல்ல வழிகாட்டுதல். இந்திய இறையாண்மை, இலங்கை நற்புறவு என மீனவர்படுகொலையை நியாயப்படுத்தாமல்  இனிமேலாவது தமிழக மீனவர்கள் காக்கப்படட்டும்.

Feb 16, 2012

சுடாலின், விசயகாந்த், வைகோ ஓர் ஒப்பீடு



கருணாநிதிக்கு பின்னர் செயலலிதாவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அடுத்து முதல்வர் நாற்காலியில் அமரும் திறனும் யோகமும் யாருக்கு இருக்கிறது என்ற ஆய்வை சென்ற பதிவில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி தான் இந்த பதிவு


யோகம்(பாக்கியம்) என்று பார்த்தால் அது சுடாலின் மற்றும் விசயகாந்த் கதவை தான் தட்டுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த திறன் பெற்ற தகுதியானவர் யார் என்றால் பட்டென சொல்லிவிடலாம் வைகோ என்று. 

தமிழகம் ழுழுவதும் உள்ள மக்கள் மன ஓட்டமும் அப்படியே இருக்கிறது. 

எம்.எல்.ஏ., தேர்தலில் சுடாலினும் விசயகாந்தும் வெற்றிபெருவார்கள் வைகோ தோற்றுவிடுவார். அதே நேரத்தில் எம்.பி தேர்தலில் சுடாலினும் விசயகாந்தும் தோற்றுவிடுவார்கள் வைகோ வெற்றிபெற்றுவிடுவார். இதை அனைத்து அரசியல் நோக்கர்களும் சரிவைக்கிறார்கள்.

டெல்லியில் தமிழகத்துக்காக குரல்கொடுக்கும் கம்பீரம் வைகோவிடம் மட்டுமே உள்ளது. இந்த விசயத்தில் விசயகாந்த் 0 வாகவே உள்ளார். 

பிரதமரை நேரடியாக சந்திக்கும் திறனும், உடனே அனுமதி கிடைக்கும் கம்பீரமும் வைகோவிடம் மட்டுமே உள்ள என்பது ஊர் அறித்த விசயம்.

தமிழ்நாடு தோன்றி 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. இனி வரும் தலைமுறைக்கு கம்பீரமும் திறமையும் உள்ள முதல்வர் தான் தேவை என்பதில் இளம் தலைமுறை தெளிவாக உள்ளது.

இதன் அடிப்படையில் இளைஞர்கள் மத்தியில் எடுத்த ஆய்வு தான் அடுத்து நீங்கள் படிக்க இருப்பது. மறக்காமல் உங்கள் கருத்தையும் பதிவு செய்து செல்லுங்கள்

1. அரசியல் அனுபவம்

சுடாலின் ...........30%
விசயகாந்த் ......10%
வைகோ............ 60%

2. கல்வி அறிவு


சுடாலின்.......... 35%
விசயகாந்த்...... 05%
வைகோ........... 60%

3. அரசியல் அறிவு


சுடாலின் ................. 40%
விசயகாந்த் ............. 05%
வைகோ .................  55%


4. நிர்வாக திறன்


சுடாலின் ................. 45%
விசயகாந்த் ............. 10%
வைகோ .................  45%




5. மக்கள் தொடர்பு


சுடாலின் .............. 40%
விசயகாந்த் ...........15%
வைகோ ............... 45%


6. வெளியுலக தொடர்பு


சுடாலின் ................... 38%
விசயகாந்த் ............... 02%
வைகோ .................... 65%


7. சட்ட அறிவு


சுடாலின் ......................  24%
விசயகாந்த் ................... 01%
வைகோ ........................ 75%


8. தமிழகம் குறித்த அறிவு


சுடாலின்...............  25%
விசயகாந்த் ........... 05%
வைகோ ...............  70%


9 டெல்லி செல்வாக்கு


சுடாலின் .............. 20%
விசயகாந்த் .......... 01%
வைகோ ............... 74%


10 உலகளாவிய தமிழர் பார்வை


சுடாலின் ................. 15%
விசயகாந்த் .............. 01%
வைகோ ................... 86%


11. திராவிட கோட்பாடு


சுடாலின் ................. 25%
விசயகாந்த் ............. 10%
வைகோ .................. 65%


12. இறையாண்மை


சுடாலின் .................... 40%
விசயகாந்த் ................ 35%
வைகோ ..................... 25%


13. மேடை பேச்சு


சுடாலின் ............ 15%
விசயகாந்த் ........ 25%
வைகோ ............  60%


14. மக்கள் செல்வாக்கு


சுடாலின் ........... 35%
விசயகாந்த் ....... 45%
வைகோ............ 20%


15. கம்பீரம்


சுடாலின் .......... 30%
விசயகாந்த் .......15%
வைகோ............ 55%


16. சமையோசித புத்தி


சுடாலின்...............  30%
விசயகாந்த் ........... 10%
வைகோ................. 60%


17. ஆளுமை திறன்


சுடாலின் ............... 30%
விசயகாந்த் ........... 10%
வைகோ ................ 60%


18. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு


சுடாலின் ................ 30%
விசயகாந்த் ............ 10%
வைகோ ................. 60%


19.செயலலிதாவை எதிர்கொள்ளும் திறன்


சுடாலின் .............. 30%
விசயகாந்த்........... 30%
வைகோ............... 40%


20. கட்சி, கூட்டணி செல்வாக்கு


சுடாலின்................ 35%
விசயகாந்த்............ 35%
வைகோ ................ 30%


Feb 13, 2012

அடுத்த முதல்வர் யார்-கருத்துகணிப்பு முடிவுகள்


கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரும் திறனும், பாக்கியமும் உள்ள அடுத்த தலைவர் யார் என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டோம். 

தமிழகம் முழவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்கள் மூலம் பொதுமக்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.  பின்னர் அரசியல் நோக்கர்கள் உதவியுடன் புள்ளியல் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

சுடாலின், வாசன், இளங்கோவன், வைகோ, விசயகாந்த், ராமதாசு(அன்புமணி)
ஆகியோர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

அதிமுகவுக்கு இணையான கட்சி என்ற பலம் இருந்தாலும் திமுகவில உள்ள பிளவு சுடாலினுக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. கருணாநிதியை போல கூட்டணி அமைக்கும் சாதுர்த்தியமும், தமிழ் திரவிடம் என்று தூசுதட்டும் கலையும் வாய்க்கப்பெற்றால் மட்டுமே சுடாலினுக்கு முதல்வர் யோகம் இருக்கிறது.

மது, தெளிவில்லாத பேச்சு, கிணற்று தவளையாக இருத்தல் போன்றவை விசயகாந்தை பின்னுக்கு தள்ளுகிறது. பாமர மக்கள் வரை மாற்று தலைவராக பிரபலமாகி இருப்பது விசயகாந்துக்கு இரட்டிப்பு பலம். அதிமுகவின் வாக்குவங்கியை மட்டுமே தேமுதிக பிரித்தெடுத்துள்ளது. எனவே அதிமுக பலம்பெற்று இருக்கும் காலம் வரை விசயகாந்துக்கு முதல்வர் நாற்காலி இரண்டாம் இடம் தான். 

வடமாவட்டங்களில் மட்டும் கணிசமான வாக்குவங்கி உள்ளதால் ராமதாசுக்கும் வாய்ப்புகள் பின்னிடங்களிலேயே உள்ளன.

தெளிவான பேச்சு, ஆங்கில அறிவு, டெல்லி மட்டுமல்ல சர்வதேச தலைவர்களையும் சந்திக்கும் திறன், கரைபடியாத கை, போன்றவை வைகோவை ஒரு படி முன்னேற்றுகின்றன. ஆனால் பாமர மக்களிடம் வைகோ இன்னும் தெரியாத நபராகவே இருக்கிறார். பல கிரம மக்களுக்கு வைகோ யார் என்று தெரிவதில்லை. மதிமுகவின் சின்னமும் அவ்வளவு பிரபலமாகவில்லை. இதெல்லாம் வைகோவுக்கு பாதகமாக உள்ளன.

காங்கிரசு கரை கண்டால் மட்டுமே வாசன், இளங்கோவன் போன்றவர்களுக்கு சிறிய வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் தலைவர்கள் ஓட்டத்தில் வைகோவே முதலிடத்தில் உள்ளார். ஆனால் மதிமுக என்ற சிறிய ஓடம் திமுக, தேமுதிக என்ற விசைப்படகுகள் முன்னிலையில் தோற்றுப்போகிறது.

விசயகாந்த சுடாலின், வைகோ மூவருக்குமே சம வாய்ப்புகள் உள்ளது. இதில் முந்துவது யார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அடுத்த முதல்வர் யார்?

வைகோ............. 28%
சுடாலின்............ 27%
விசயகாந்த் ..... 26%
ராமதாசு ............ 10%
காங்கிரசு .........  9%

Popular Posts