தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்படுவது இது புதிது அல்ல. ஆனால் இந்தமுறை ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஆம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை சுட்டுக்கொன்றனர் இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள். சம்பவத்தை அறிந்ததும் இந்திய கடற்படைக்கு காத்திருக்காமல் விரைந்து செயல்பட்டனர் கேரள போலீசார். கப்பலை சுற்றி வளைத்து கொச்சிதுறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
சர்வதேச சட்டம், இந்திய கடற்படை என தப்பிக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் கேர ள அரசும், போலீசாரும் குற்றவாளிகளை தங்கள் மாநில சட்டப்படி கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு கேரள ஊடகங்களும், மக்களும் ஒருமித்த குரலில் உறுதுணையாக இருந்தன.
இரண்டே நாளில் கப்பல் கேப்டன் உட்பட 7 பேரையும் விசாரனை வட்டத்துக்குள் கொண்டு வந்தனர். மீனவர்கள் அடையாளம் காட்டிய இந்தாலி கப்பல் காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கேரள சட்டப்படி கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, போலீசு காவலிலும் எடுத்து விட்டனர். விசாரனையை இரு வாரத்துக்குள் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கித்தருவோம் என்கின்றனர் கேரள போலீசார்.
இது ஒரு சாதாரன நிகழ்வு தான். கேரள போலீசார் பெரிய சாதனை ஒன்றும் செய்திடவில்லை. ஆனால் பக்கத்து மாநிலம் தமிழகத்தை ஒப்பிடும் போது இது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே தெரிகிறது. இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மீனவர்கள் எத்தனை பேர்?
இம்முறை தமிழ்மீனவர்களாக இருந்தாலும் கேரள மீனவர்களாக இறந்துள்ளனர். இதற்கு முன்னர் தமிழ்மீனவர்கள் தான் ஆனால் தமிழக மீனவர்களாக இறந்துள்ளனர் அவ்வளவு தான் வேறுபாடு.
தமிழக மீனவரும் சுட்டுக்கொல்லப்பட்ட போது மீனவர்களுக்கு பேராசை என்று அறிக்கை விட்டார்கள் தமிழக அரசியல்வாதிகள். தமிழக மீனவர்களை சுட்ட குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்பட்டதாக கேள்விப்பட்டதில்லை.
மிருகத்தனமாக நடந்துகொண்ட இத்தாலியர்களை கொடூரர்கள் என கேரள ஊடகங்கள் எழுதின. சோனியாக காந்தியை விமர்சித்தன. இங்கு எந்த காங்கிரசாரும் இறையான்மை என்று வாய்சவடால் விடலில்லை. ஆனால் தமிழகத்தில் சோனியாகாந்தி என்றாலே எதோ மாரியாத்தாவையும், மரியன்னையையும் பேசியது போல தமிழக காங்கிரசார் குதிக்கின்றனர். உங்களுக்கு மட்டும் அப்படி எப்படிடா சோனியா தெய்வமானார்?
தமிழக போலீசாருக்கு இது ஒரு நல்ல வழிகாட்டுதல். இந்திய இறையாண்மை, இலங்கை நற்புறவு என மீனவர்படுகொலையை நியாயப்படுத்தாமல் இனிமேலாவது தமிழக மீனவர்கள் காக்கப்படட்டும்.
யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
ReplyDeleteNaam enna seiya vendum... ethaiyen enntha tamil news channel yum sollala ../
ReplyDeleteஅட அவர்கள் கேரளத்தான்கள். நாங்கள் வெட்கம் கெட்ட தமிழர்கள் இது தான் வித்தியாசம். தன் இனததை அழிக்கும் போதே பார்த்துக் கொண்டிருப்பவன் தான் சண்டாளத் தறுதலைத் தமிழன்.
ReplyDelete