Feb 24, 2012

என்கவுண்டரும் ஈழப்போரும் என்ன வேறுபாடு


உலகிலேயே மிகவும் கோழைத்தனமான காவல்துறை என்ற பெயரை எடுத்துள்ளது தமிழக காவல்துறை. சாதாரண வங்கிக்கொள்ளையர்களை சுட்டு தான் பிடிக்கவேண்டும் என்ற பயந்தாங்கோலிகளா தமிழர்கள். தமிழ்நாடு என்பது மனிதநேயம் உள்ள மக்கள் வாழும் நாடா இல்லை காட்டுமிராண்டிகள் வாழும் நாடா? 

என்கவுண்டர் செய்தால் தமிழக மக்கள் ஆகா ஓகோ என்பார்கள் என்ற தைரியத்தில் தானே இத்தனை அக்கிரமத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஒருவனை கூட விட்டுவைக்ககூடாது என்ற கொலைவெறி தமிழக போலீசாருக்கு எங்கிருந்து வந்தது? கொலைவெறி பாடலை தமிழர்கள் உள்ளூர ரசித்திருக்கிறார்கள் என்பதை இப்படி தான் வெளிக்காட்ட வேண்டுமா? 

தமிழக போலீசார் யார்? சைகோவா?, கொலைகார எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்தவர்களா? கொடூர கொலைகாரர்களுக்கும் தமிழக போலீசாருக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. அதிகாரம், ஆயுதம், தொழில்நுட்பம் இத்தனையும் கொடுத்தும், கொன்று தான் பிடிக்க வேண்டும் என்றால் இந்த கொலைகார காவல்துறை தமிழர்களுக்கு தேவையா? 
இங்கு என்கவுண்டரை ஆதரித்து பேச சிலர் முன்வரலாம். ஒரு வருடத்திற்கு முன்னர் கோவையில் நடந்த என்கவுண்டரை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட மோகன்ராசு தான் குற்றவாளி என போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. 

என்கவுண்டரை ஆதரித்து பேசும் தமிழர்களே உலக அரங்கில் இரக்க குணம் அற்ற மிருகங்கள் தான் தமிழர்கள் என்ற பெயரை எடுத்து விடாதீர்கள். மனித உரிமைகள் பற்றி பேச உங்களுக்கு துளியும் யோக்கியதை இல்லை. உங்கள் தலைசிறந்த காவல்துறையால் இன்று நீங்கள் தலைகுனித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்கவுண்டர் என்பது வீரம் என்று யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. கோழைகளே இனியாவது திருந்துங்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?

இலங்கையின் மனித உரிமை பற்றி பேச உங்களுக்கு என்னடா யோக்கியதை இருக்கிறது? 

என்கவுண்டர் நடந்த இடத்துக்கு 10 மணி நேரம் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. எதற்காக? எதை மூடி மறைக்க? உங்கள் துக்கடா போலீசுக்கே இந்த புத்தி இருக்கும்போது இலங்கை ராணுவத்துக்கு எவ்வளவு புத்தி இருக்கும். நீங்கள் பேசுகிறீர்கள் இலங்கை ராணுவம் மனிதஉரிமைகளை மீறியது என்று. 

தமிழ் நாட்டினரே இனியும் என்கவுண்டரை ஆதரித்து தமிழரின் பாரம்பரிய நற்குணத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

3 comments:

 1. தண்டனைகள் கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது.தவறில் என்ன சிறியது,பெரியது.பனியன் சைஸா பார்ப்பதற்கு.இதற்கும்,இலங்கைப் பிரச்சினைக்கும் எள் முனையளவேனும் தொடர்பே கிடையாது.இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பவேண்டாம்.தவறு செய்யாதவனைத் தண்டிப்பதற்கும்,தவறு செய்தவனைத் தண்டிப்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களைப் போன்ற ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கே தெரியவில்லையா?. இது மட்டும் நடக்கவில்லையெனில் இன்னும் எத்தனை வங்கிகளில் கொள்ளையடித்திருப்பர்,அப்போது இதே ஊடகங்கள் சொல்லும் சட்டம்,ஒழுங்கு கெட்டுவிட்டது.காவல்துறை என்ன தூங்குகிறதா?.என கொட்டை எழுத்தில் தலையங்கத்தில் வெளியிடுவீர்கள்.

  ReplyDelete
 2. திரு. ராசாராம்

  என்கவுன்டரை எதிர்த்தால் உடனே குற்றவாளிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. கண்மூடிதனமாக சுட்டுத்தல்லுவதை தான் எதிர்க்கிறோம்.

  அலைகற்றை வழக்கில் பல லட்சம் கோடி கொள்ளை அடித்த ராசா, கனிமொழி, உள்ளிட்டவரை கண்டதும் சுட்டுதள்ள வேண்டியது தானே. எதற்காக விட்டுவைத்திருக்கிறார்கள்.

  இதே தமிழ் இளைஞர்களை பீகாரில் சுட்டுக்கொன்றிருந்தால் தமிழகத்தில் ஒரு இனமான போராட்டமே வெடித்திருக்கும்.

  ஈழத்தில் ராணுவம் கண்மூடித்தனமாக விடுதலைப்புலிகள் என கூறி மக்களை சுட்டுக்கொன்றது. ஆதாரங்களை அழிப்பதற்காக 10 மாதங்கள் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க வில்லை. அதே போல தான் சென்னையிலும்.

  குற்றத்தை சிறிது பெரிது என பிரித்து பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். அதையே தான் சொல்கிறோம். மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?

  ReplyDelete
 3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete

Popular Posts