Feb 13, 2012

அடுத்த முதல்வர் யார்-கருத்துகணிப்பு முடிவுகள்


கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரும் திறனும், பாக்கியமும் உள்ள அடுத்த தலைவர் யார் என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டோம். 

தமிழகம் முழவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்கள் மூலம் பொதுமக்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.  பின்னர் அரசியல் நோக்கர்கள் உதவியுடன் புள்ளியல் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

சுடாலின், வாசன், இளங்கோவன், வைகோ, விசயகாந்த், ராமதாசு(அன்புமணி)
ஆகியோர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

அதிமுகவுக்கு இணையான கட்சி என்ற பலம் இருந்தாலும் திமுகவில உள்ள பிளவு சுடாலினுக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. கருணாநிதியை போல கூட்டணி அமைக்கும் சாதுர்த்தியமும், தமிழ் திரவிடம் என்று தூசுதட்டும் கலையும் வாய்க்கப்பெற்றால் மட்டுமே சுடாலினுக்கு முதல்வர் யோகம் இருக்கிறது.

மது, தெளிவில்லாத பேச்சு, கிணற்று தவளையாக இருத்தல் போன்றவை விசயகாந்தை பின்னுக்கு தள்ளுகிறது. பாமர மக்கள் வரை மாற்று தலைவராக பிரபலமாகி இருப்பது விசயகாந்துக்கு இரட்டிப்பு பலம். அதிமுகவின் வாக்குவங்கியை மட்டுமே தேமுதிக பிரித்தெடுத்துள்ளது. எனவே அதிமுக பலம்பெற்று இருக்கும் காலம் வரை விசயகாந்துக்கு முதல்வர் நாற்காலி இரண்டாம் இடம் தான். 

வடமாவட்டங்களில் மட்டும் கணிசமான வாக்குவங்கி உள்ளதால் ராமதாசுக்கும் வாய்ப்புகள் பின்னிடங்களிலேயே உள்ளன.

தெளிவான பேச்சு, ஆங்கில அறிவு, டெல்லி மட்டுமல்ல சர்வதேச தலைவர்களையும் சந்திக்கும் திறன், கரைபடியாத கை, போன்றவை வைகோவை ஒரு படி முன்னேற்றுகின்றன. ஆனால் பாமர மக்களிடம் வைகோ இன்னும் தெரியாத நபராகவே இருக்கிறார். பல கிரம மக்களுக்கு வைகோ யார் என்று தெரிவதில்லை. மதிமுகவின் சின்னமும் அவ்வளவு பிரபலமாகவில்லை. இதெல்லாம் வைகோவுக்கு பாதகமாக உள்ளன.

காங்கிரசு கரை கண்டால் மட்டுமே வாசன், இளங்கோவன் போன்றவர்களுக்கு சிறிய வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் தலைவர்கள் ஓட்டத்தில் வைகோவே முதலிடத்தில் உள்ளார். ஆனால் மதிமுக என்ற சிறிய ஓடம் திமுக, தேமுதிக என்ற விசைப்படகுகள் முன்னிலையில் தோற்றுப்போகிறது.

விசயகாந்த சுடாலின், வைகோ மூவருக்குமே சம வாய்ப்புகள் உள்ளது. இதில் முந்துவது யார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அடுத்த முதல்வர் யார்?

வைகோ............. 28%
சுடாலின்............ 27%
விசயகாந்த் ..... 26%
ராமதாசு ............ 10%
காங்கிரசு .........  9%

No comments:

Post a Comment

Popular Posts