முல்லைபெரியாறு பிரச்சனை தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவை பத்திரிக்கையாளர் சங்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கிறோம்.
முல்லைபெரியாறு பிரச்சனை குறித்து இந்த வலைபதிவில் எழுதிவந்தோம். பலர் நல்ல ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டீர்கள். மிக்க நன்றி. தற்போது முல்லை பெரியாறு பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வலைப்பதிவில் எழுதிய தீர்வுகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.
முல்லைபெரியாறு பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடக்கிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்த கட்டுரைகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும் படி மனுவாக அளிக்க உள்ளோம்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு சுருக்கத்தை தந்துள்ளேன். மாற்று கருத்துக்கள் ஆலோசனைகள் இருந்தால் உடனியாக தெரியப்படுத்துங்கள்.
எம்.சி.ஆர் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட தீர்வுக்கு ஏன் புத்துயிர் அளிக்க கூடாது?
முல்லைபெரியாறு பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையில் தமிழகம் கட்டாயம் மாற்றை யோசித்தாக வேண்டும். அதற்கான சிறு முயற்சி தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு
தமிழகத்துக்கு இது உயிர் ஆதார பிரச்சனை. கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.
இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ, ஈகோ பிரச்சனையோ அல்ல.
இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.
அரசியலை கடத்து முல்லைபெரியாறு அணை போராட்ட குழுவினர் சில தீர்வுகளை முன் வைக்கின்றனர். இதை ஏன் தமிழக அரசு பரிசீலிக்க கூடாது.
1. தற்போது உள்ளதை விட தாழ்வாக சில கால்வாய்கள் வெட்டி அதிகப்படியான தண்ணீரை தமிழகம் கீழ்பகுதிக்கு எடுத்து வரலாம். இவ்வாறு கூடுதலாக வரும் தண்ணீரை வைகை அணையில் சேமிக்கலாம். அல்லது கூடலூர் பகுதியில் புதிய அணை கட்டலாம்.
2. ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை தமிழகம் எடுத்துச்செல்ல முடியும். இதனால் தற்போதைய அணை இல்லாமலும் தண்ணீர் தமிழகத்துக்கு முழுமையாக கிடைக்கும்.
3. பெரியாறு அணைகட்டில் இருந்து உட்புறமாக 12 மீட்டர் தொலைவில் தமிழக எல்லை( புதிய மாநில எல்லைகள் வரையறை படி) உள்ளது. இந்த பகுதியில் தமிழகம் புதிய அணை கட்டலாம். இந்த அணை கட்டுவதன் மூலம் தமிழகம் கேரளாவுக்கு எவ்வித பணமும் தர வேண்டியது இல்லை. ஒப்பந்தங்களும் தேவை இல்லை. இது முழுக்க முழுக்க தமிழகத்தில் இருக்கும் தமிழகத்துக்கு சொந்தமான அணையாக இருக்கும்.
( இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.சி.ஆர் ஆட்சி காலத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. 1979 ஆண்டுகளில் முல்லைபெரியாறு பிரச்சனை தீவிரமான போது இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் கேரளாவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அப்போதைய கேரள அரசு அணையை பலப்படுத்தினால் போதும் என்ற தீர்வை நோக்கி நழுவிக்கொண்டது).
பழமையான அணைக்கு மாற்று அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கை தீர்வைநோக்கி வந்துள்ள இந்த நிலையில், புதிய அணையை கேரள அரசு கட்டுவதை விட தமிழக அரசே தமது எல்லைக்குள் கட்டிக்கொள்வது கௌரவமானதும், நீண்டகால தண்ணீர் தேவைக்கு உறுதியான தீர்வுமாக அமையும். மேலும் அச்சத்தில் உள்ள 70 லட்சம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த மனிதநேய மாண்பும் தமிழகத்துக்கு கிடைக்கும்.
தமிழகம் அணை கட்டினால் தற்போது உள்ள முல்லைபெரியாறு அணையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் முழுமையாக பயன்பாட்டை தவிர்க்க வேண்டிய நிலையும் வராது. 104 அடிக்கு கீழ்நிலையில் உள்ள தண்ணீர் பென்னி குயின் விருப்பப்படி அப்பகுதி வனவிலங்குகளுக்கு கிடைக்க செய்யலாம். அணையும் பாரம்பரிய அணையாக நீடித்து நிற்கும்.
கேரளா அணை கட்டினால் இயற்கை ரீதியாக தமிழகத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் கூட கிடைக்காது. மேலும் மீண்டும் மீண்டும் இருமாநில தண்ணீர் பிரச்சனை தொடர்கதையாகும்.
தொடர்புக்கு : 9787678939,
9715833443.
No comments:
Post a Comment