பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு.
சென்னை தீவுதிடலில் தில்சன் என்ற சிறுவன் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாப்படுத்தி எழுதியிருக்கிறார். காரணம் இவர் தேசபற்று முற்றியவர் என்பதை நிரூபிக்க தக்கதருணம் அமைந்ததை பயன்படுத்தி இருக்கிறார்.
தொப்பிதொப்பியின் மனிதநேயமற்ற பதிவு : சூப்பர் ஸ்டார் தில்சன் சுட்டுக்கொலை
தேசபற்று என்பது ராணுவம், ஆட்சியாளர்கள், அரசுஅதிகாரிகள் இவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அல்ல. இவர்கள் மட்டுமே தேசமும் அல்ல. நாட்டுமக்கள் தான் ஒரு நாடு என்பதை மனிதநேயம் அற்ற ராசபட்சே போன்ற குரூரர்களுக்கு எப்படி புரியவைப்பது?
இந்திய வரிபணத்தில் பாதிக்குமேல் ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. எதற்காக இந்த ராணுவம்? நிலநடுக்கம், பூகம்பம், கடல்சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மக்களை மீட்பதற்காக தான் இந்த ராணுவம் தேவைப்படுகிறது.
ஆனால் இந்திய ராணுவத்திலோ அணுகுண்டுகள் தயாரிக்க, அபாகரமான ஆயுதங்கள் தயாரிக்க, பீரங்கிகள் வாங்க என ஆயுதக்குவியலுக்காக தான் ராணுவ செலவினங்கள் செய்யப்படுகிறது. பேரிடர் வந்தால் வேகமாக செயல்பட தேவையான ஆயுதங்கள் வாங்க சல்லி பைசா செலவிடுவதில்லை. அதே போல பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.
காசுமீர் எல்லையில், அசாம் எல்லையில், வங்கம் எல்லையில், ஈழம் எல்லையில் இந்திய ராணுவம் செய்வது என்ன என்று தயவு செய்து தொப்பிதொப்பி போன்றவர்களிடம் கேட்டுதெரிந்து விடாதீர்கள்.
காசுமீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து காசுமீர் மக்களிடம் கேளுங்கள், சென்னையில் ஏசி அறையில் உக்கார்ந்துகொண்டு வலைபதிவு எழுதும் தொப்பி தொப்பியிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்.
அசாம் எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் தொப்பிதொப்பியை விட அசாம் மக்களுக்கு தானே நன்றாக தெரியும். தமிழக & இலங்கை கடலில் உள்ள இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் மீனர்வர்களை விட அதிகம் தெரிந்தவரா தொப்பி தொப்பி.
சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் தொப்பிதொப்பியின் தம்பியாக இருந்தால் தொப்பிதொப்பியின் உண்மையான தேசபற்று தெரிந்திருக்கும்.
அதே ஒரு ராணுவ அதிகாரியின் மகளை தொப்பிதொப்பி தெரியமால் இடித்திருந்தால் தன் தேசபற்றுக்கு பாலே ஊற்றியிருப்பார்.
தொப்பி தொப்பி மீண்டும் நினைவூட்டுகிறேன் தேசபற்று என்பது ராணுவத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் வக்காலத்து வாங்குவதல்ல. கடைகுடிமகனின் உணர்வுக்கு கூட மதிப்பளிப்பது தான் உண்மையான தேசபற்று.
முட்டாள்தனமான பதிவு
ReplyDelete[[பேரிடர் வந்தால் வேகமாக செயல்பட தேவையான ஆயுதங்கள் வாங்க சல்லி பைசா செலவிடுவதில்லை. அதே போல பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.]]
ReplyDeleteதமிழ்மலர் என்பது செய்தித்தாள் என்றுத்தான் நினைக்கிறேன். இப்படி முட்டாள்தனமாக எழுதும் உங்களுகெல்லாம் எதற்கு செய்தித்தாள். இதுப்போன்று செய்தித்தாள்களிலும் எழுதிவிடாதீர்கள் பத்திரிகை துறைக்கே கேவலம்.
க்ர்ர்ர்ர்ர்ர்........... த்ப்பு..........
தொப்பிதொப்பி எழுதுனது இருக்கட்டும் இந்த மாதிரி பிக்காலி உதாரணம் எல்லாம் சொல்லி பதிவு எழுதுன உன்ன குனிய வெச்சி குத்துவேண்டா நாயே. என்னடா பதிவு எழுதி இருக்கே. உனக்கு தொப்பி தொப்பி மேல கோபம்னா அவன மட்டும் திட்டி எழுது இப்படி பொரம்போக்குத்தனம்மா இந்திய ரானுவத்த எழுதாதடா புண்ணாக்கு பயலே.
ReplyDeleteஉனக்கு இந்தியா புடிக்கலைனா இங்க எதுக்குடா இருக்க ஓடவேண்டியதுதானே பாக்கிச்த்தானுக்கு. பொறம்போக்கு பயலே.
தனி நாடு வேண்டுமென்கிறீர்கள். நாடில்லாது மக்கள் சொல்லொனாத்துன்பம் அனுபவிக்க, இன்றைக்கு ஈழத் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஒரு பொதுக் கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். சரி. உங்களது கோரிக்கைக்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமெங்கிறீர்கள். சரி. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள தமிழனை உசுப்பேற்றி பிரிவினை கிளப்பி அவன் ஒரு இந்தியன் என்கிற உணர்வே இல்லாது செய்ய பல சதி செய்கிறீர்களே.. இது நியாயமா..? நாட்டின் பெருமையை அவன் உணர வேண்டாமா. நாடிழந்த உங்களது கதை அவனுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டாமா.. அண்ட வந்த வீட்டிலே அண்ணன் தம்பியரிடையே கலகமூட்டி ஆதாயம் காண்பது முறையா..?எல்லா பிரிவினைகளையும் மீறி நாட்டுப் பற்றைக் காட்டிய அப்துல் கலாமை ஒரு துரோகியாக சித்தரிப்பது அடுக்குமா..? வைகோ வாய் கிழிய பேசலாம் ஆனால் மக்களது ஆதரவு அவருக்கு கிடைக்காது. அவர் ஒரு துரோகி..இந்தியத் தலைவனை அவனது மண்ணிலேயே சாய்த்த ஒரு இயக்கத்திற்கு துணை போகும் ஒரு தீவிர வாதியே ஒழிய மணிதனே அல்ல..
ReplyDeleteஇந்திய மண்ணில் மண்ணின் தலைவனைச் சாய்த்தது மாபெரும் மண்ணிக்க முடியாத குற்றம். அதுவும் தமிழ்நாட்டில் சாய்த்தது அதைவிடப் பெரும் குற்றம். உங்களால் ராச பக்சேவை நெருங்க முடியவில்லை மாறாக எங்களது நாட்டின் அமைதியையும் ஒவ்வொரு தமிழனில் ஒரு குற்ற உணர்வையும் உண்டாக்கி விட்டீர்கள். இதனை சரித்திரம் மண்ணிக்காது..இன்னமும் அதே தொணியில்தான் பிரிவினை வாதம் பேசிக்கொண்டிருகிறீர்கள்..இது அடுக்காது..