Jul 13, 2011

வைகோ உண்மையில் ஒரு கோ தான்

தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவுக்கு நேரகதான் இருக்கும். அரசியல் என்றால் தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்றில்லாமல் சர்வதேச சமுதாயத்தில் தமிழரின் நிலையை எடுத்து சொல்லும் வைகோவின் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலை வணக்கம்.

ஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகளை ஒரு சி.டியாக தயாரிந்துள்ளார் வைகோ. அதை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று தன் கைபட  மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இளம் சமுதாயம் ஈழத்தின் ஈரத்தை மறந்தவிடக்கூடாது. ஈழத்தாகம் என்பது தேசிய தலைவர் பிரபாகரனோடு முடிந்துபோவது அல்ல. ஈழம் அமைந்தே தீரும் என்ற உரத்த குரலை வைகோ தொடர்ந்து பதிவுசெய்வது நிச்சயம் வீனாகாது. 

கோ என்றால் தலைவன் என்று பொருள். நிச்சயம் தமிழர்களின் தலைமகனுக்கான அத்தனை தகுதிகளும் வைகோவுக்கு உள்ளது. வைகோ உண்மையிலுமே ஒரு கோ தான்.

தெற்கு சூடான் அமைந்தது போல நிச்சயம் ஒருநாள் தமிழ்ஈழமும் அமையும். அதற்காக பல்வேறு ரீதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். 

கோவையின் தென்கோடி முதல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து இலங்கை என தற்போது உதித்த தென் சூடான் வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்கள் ஈழத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரும் பணியில் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தூற்றாதீர்கள்...

2 comments:

  1. தமிழ்மலரே, உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. தொடர்ந்து உங்களுடைய ஆக்கப்பூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கிறேன. நீங்கள் வைகோவை தலைவராக பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஈழத் தமிழருக்காக போராடும் வைகோவை வாழ்த்தும் அதே நேரத்தில், அவர் உண்மையாக என்ன செய்ய வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் எடுத்துக்கூற வேண்டும். அதேபோல் தன்னுடைய புத்தகத்திற்காக ஒபாமாவிடம் கையெழுத்து பெற அமெரிக்க போன அவர், இலங்கைத் தமிழர்களுக்காக அவரிடம் வைகோ வலியுறுத்த வேண்டும். அன்புடன் பாலமுருகன்.

    ReplyDelete
  2. திரு.பாலமுருகன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

Popular Posts