Oct 31, 2009

நடிகைள் மீது வழக்கு - நிருபர்களின் தரம் தாழ்ந்த செயல்

பத்திரிக்கையாளர்களின் ஒட்டு மொத்த குடும்பம் மீது நடிகைகள் அவதூறாக பேசிவிட்டார்கள், இதனால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது எவ்வளவு தரம்தாழ்ந்த செயல்?

தினமலரில் வந்த செய்தி நூற்றுக்கு நூறு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட செய்தி என்பது எல்லோருக்கும் தெரியும்.
நடிககைள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று நடுநிலையாக நின்று யோசித்து பாருங்கள்.

நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள் செய்யவில்லை என்பது முக்கியமில்லை. அப்படி செய்வதை துணிச்சலுடன் சமுதாய அக்கரையுடன் சொல்ல நினைக்கும் பத்திரிக்கை முழு ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். அதே போல அரசியல்வாதிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டும்.
செய்தியில் நடிகைகளின் படத்தை வெளியிட்ட தினமலர் ஏன் அந்த மூத்த அரசியல்வாதி மற்றும் மகன்களின் படத்தை வெளியிடவில்லை என்பது தான் முக்கிய கேள்வி?

ஆதாரமில்லாமல் அவதூறாக செய்தி வெளியிட்ட சில பத்திரிகையை பற்றி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்களே தவிர, ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையை பற்றி எந்த நடிகர் நடிகையும் பேசவில்லை என்பது தான் உண்மை.
நடிகைகள் பேச்சை தவறு என்று சொல்பவர்களை பார்த்து ஓரு கேள்வி? நமது தாய், மனைவி, தங்கையை இவர்களை பற்றி அவதூறாக பத்திரிக்கையில் வந்தால் நாம் என்ன பேசுவோமோ, அதையே தானே அவர்களும் பேசியுள்ளார்கள். தன் மனைவி மீது செய்திதாளில் ஆதாரமற்ற ஒரு அவதூறு செய்தி வந்தால் நிச்சயமாக நான் அந்த பத்திரிக்கை ஆலுவலகத்தையே தீவைத்து கொழுத்துவேன் என்று தான் ஆத்திரத்தில் சொல்வான். இது சராசரி மனிதனின் இயல்பு.
விபச்சாரிகளின் படங்களை பத்திரிக்கையில் போடாதீர்கள் அப்படியே போட்டால் விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்த ஆணின் படத்தையும் சேர்த்து போடுங்கள். என்று பேசிய ரஜினியின் பேச்சில் எங்கு ஆபாசம் இருக்கிறது?
தன்னை விபச்சாரி என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை பாஸ்ட்டட் என பேசிய ஸ்ரீபிரியாவின் பேச்சால் ஒட்டுமொத்த பத்தரிக்கையாளர்களும் எப்படி மனஉளைச்சலுக்கு உள்ளாவார்கள்?

விவேக் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. நடிகைகளின் படத்தை கிராப்பிக்ஸ் செய்து வெளியிடும் பத்திரிக்கைகளை தானே திட்டியுள்ளார். அதற்காக எல்லா பத்திரிக்கையாளர்களும் கொதித்தெழுவதன் காரணம் என்ன?
உங்கள் வீட்டு பிள்ளை ஓடும்போது உங்களுக்கு வலி தெரியும் என பேசிய சேரன் பேச்சில் என்ன தவறு இருக்கிறது?

கோட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் என விவேக் பேசியதை தான் பல பத்திரிக்கையாளர்களும் விமர்சிக்கிறார்கள். உண்மையில் அந்த அளவுக்கு பத்தரிக்கையாளர்கள் தரம் தாழ்ததால் தானே அந்த பேச்சு வந்திருக்கிறது.
பத்திரிக்கை நிருபர் என்றால் எவ்வளவு கம்பீரமாக இருக்க வேண்டும்? சமுதாயத்தின் தலைச்சிறந்த பணியை எவ்வளவு நேர்த்தியாக செய்யவேண்டும்? ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய கவுரவத்துடன் எத்தனை பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்? நச்சத்திர ஒட்டலில் தண்ணிப் பார்ட்டியுடன் (கோட்டர் & கோழிபிரியாணி) நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்வு நிகழ்ச்சிகளை ஏன் பத்திரிக்கையாளர்கள் புறக்கணிப்பது இல்லை. அது குறித்து ஏன் விமர்சித்து எழுதுவதில்லை.
பத்திரிக்கையாளர்களின் தரம் தாழ்ந்த செயல்கள் குறித்து இன்னும் விரிவாக சொன்னால் உண்மை அதிகமாகவே கசக்கும். அது குறித்து பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

நடிகைகள் பேச்சை உண்மையான எந்த பத்திரிக்கையாளரும் தவறு என்று சொல்லவில்லை என்பது தான் உண்மை.ஆனால் தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கிக்கொண்ட தினமலர், தப்பிக விரித்த வலையில் தமிழக பத்திரிக்கையாளர்கள் சிலர் விழுந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.
தினமலர் விவகாரம் நீதிமன்றம், பிரஸ் கவுன்சில் வரை சென்றுள்ளது. அங்கு செய்திக்கான ஆதாரங்களை கொடுங்கவேண்டிய நெருக்கடியில் தினமலர் உள்ளது. இதை எதிர்கொள்ளவே தமிழகத்தில் உள்ள சிறு பத்திரிக்கையாளர்களை ஆர்பாட்டம், வழக்கு என துண்டி விட்டுள்ளது தினமலர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும்., நடிகர் நடிகைளை அலைகளிக்க வேண்டும், ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையும் தனக்கு சாதகமாக உள்ளது என்பதை அரசுக்கு காண்பித்து லெனின் கைது வழக்கை வலுவிலக்க செய்யவேண்டும். இது தான் தினமலரின் திட்டம்.
தினமலர் முதலாளிகளுக்கு சிக்கல் வந்தவுடன் மட்டும், இன்று வீதிக்கு வந்து போராடும் தினமலர் ஏன் ஈழப்பிரச்சனைக்காக அனைத்து பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்ட போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை?
தினமலர் நிருபர்கள் எங்காவது அடி வாங்கினால் அதற்காக பத்திரிக்கையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இந்த ஆர்பாட்டத்திற்கு தினமலர் நிருபர்கள் கலந்துகொள்ள கூடாது என்பது தான் தினமலரின் கட்டளை. எங்களுக்கு வேதனையாக இருக்கும். அடிபட்ட தினமலர் நிருபருக்காக தான் இந்த ஆர்ப்பாட்டமே நடத்துகிறோம். ஆனால் சம்மந்தபட்ட நிருபரை கூட ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள தடை விதித்துள்ளதே தினமலர் நிர்வாகம் என் ஆத்திரம் வரும்.

ஆனால் இன்று தினமலர் முதலாளிக்கு பிரச்சனை என்றதும், நிருபர்கள் ஆர்பாட்டம் என்ற பெயரில் நிருபர் அல்லாத தினமலர் மேலாளர் முதல் விளம்பர பிரிவினர் வரை வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
தினமலர் நிருபர்களுடன் மேலாளர்களும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்
ஈழப்போரை நிருத்த பத்திரிக்கையாளர்கள் நடத்திய உண்ணாவிரம், போராட்டங்களில் கலந்துகொள்ள தினமலர் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று முதலாளிக்கு பிரச்சனை என்றதும் மற்ற நிருபர்களின் உதவியை கேட்கிறது தினமலர்.
உண்மையில் தினமலர் தன் பத்திரிக்கையை தவிர மற்ற எல்லா பத்திரிக்கை நிருபர்களுக்கும் டுபாக்கூர் என பட்டம் சூட்டி செய்தி வெளியிட்ட பத்திரிக்கை தான் இந்த தினமலர்.

நிருபர்களுக்கு முறையான சம்பளமோ, அடையாள அட்டைகளோ, அங்கீகாரமோ தினமலர் நிர்வாகம் தருவதில்லை, பிரஸ் கிளப்பில் உறுப்பினராக கூடாது, உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு சார்பில் தரப்படும் எந்த சலுகைகளையும் பெற்று தர தினமலர் தயாராக இல்லை. பிரஸ்கிளப்பே தேவையில்லை என்று சொன்ன தினமலர் தான்., இன்று முதலாளிக்கு ஆபத்து என்றதும் பத்திரிக்கையாளர் சங்கங்கள் காலில் விழுந்துள்ளது.

தினமலரின் சூழ்ச்சியில் விழுந்துவிடக்கூடாது என்பதில் முன்னனி பத்திரிக்கை நிருபர்கள் எச்சரிக்கையுடனேயே இருக்கிறார்கள். ஆனால் சில சின்ன பத்திரிக்கை நிருபர்கள் மட்டும் தினமலரின் தூண்டுதலோடு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதற்கு தினமலரே அனைத்து உபயங்களையும் செய்கிறது.

உண்மையில் லெனின் தினமலரின் உதவி ஆசிரியர் தான். லெனின் மதிக்க தக்க ஒரு மனிதர். அவருக்காக தான் பல நிருபர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்களே தவிர, தினமலருக்காக அல்ல. தினமலரின் உண்மையான ஆசிரியர், பப்லிசரை கைது செய்ய வேண்டும் என்பது தான் ஒரு நடுநிலையான பத்திரிக்கையாளனின் எண்ணம்.
லெனின் கைது விவகாரம் வலுவிழக்கக்கூடாது என நான் இங்கு சொல்வதற்கான மற்றொரு காரணம் போலீஸ் வாக்குமூலம்.
போலீஸ் வாக்குமூலம் ஐயத்திற்கு உரியது. நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னால் கூறப்படும் வாக்குமூலம் தான் உண்மையானது என்பது எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். அப்படி இருக்க உணர்வு சம்மந்தபட்ட நிகழ்வுகளில் விற்பனை, கவர்ச்சி, பரபரப்புக்காக மட்டும் தெரிந்தே போலீஸ் வாக்குமூலத்தை பெரிதுபடித்தி வெளியிடுகிறார்கள். இத்தகு உண்மைக்கு மாறான செய்திகளாலால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
அந்த அதிர்ச்சி சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். - விராலி.

மறுபக்கம் : அதிர்ச்சியூட்டும் உண்மை நிலவரம்








இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன?
ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம்

ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...

Oct 30, 2009

போதும் அடுத்த பிரச்சனையை கிளப்புங்கள் தாங்காது திமுக

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, மதுரையில், 1ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க., அறிவித்திருந்து.

ஒரு சில தினங்களுக்கு முன்பு, அந்தக் கூட்டம், கேரளா அரசைக் கண்டித்து என மாற்றப்பட்டது. தற்போது, கூட்டமே ஒத்திவைக்கப்பட்டு விட்டதாக திமுக அறிவித்துள்ளது.

வாசகர் வசைமொழி : போதும் அடுத்த பிரச்சனையை கிளப்புங்களப்பா இதற்கு மேல் தாங்காது.

Oct 29, 2009

மலபார் அணில்


தமிழக பத்திரிக்கை துறை குறித்த உங்கள் கருத்துக்கள்





தமிழக பத்திரிக்கை துறை குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

தினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்

உலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வு. ஆனால் இந்த பிரச்சனை குறித்து தமிழக பத்திரிக்கைகள் பெரிதும் கண்டுகொள்ளவில்லை.

இலங்கை பத்திரிக்கையாளர் திசாநாயகத்துக்கு கடுங்காவல் தண்டனை விதித்தபோது உலக பத்திரிக்கையாளர்களே கொதித்தெழுந்தார்கள். பல நாடுகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் மட்டும் முன்னனி பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் நடிகை புவனேசுவரி விவகாரத்தில் தினமலர் ஆசிரியர் லெனின் கைதுக்கு மட்டும் பத்திரிக்கை சுதந்திரம் பரிபோவதாக தமிழகத்தில் சில பத்திரிக்கை ஆசிரியர்கள், அதிபர்கள் குதிக்கிறார்கள்.காரணம் அவதூறு செய்திக்காக பெண் கொடுமை சட்டத்தின் கீழ் ஒரு பிரபல பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.
இந்த கைது நியாமனாதா? இதனால் பத்திரிக்கை துறையின் சுதந்திரம் பரிபோகிறதா? அல்லது பத்திரிக்கைகள் எல்லை மீறியதற்கு தக்க பாடமா என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.
இது மட்டுமல்ல அன்றாடம் பத்திரிக்கைகளில் அவசரக்கோலத்தில் வரும் பல செய்திகளும் பலரை பாதிக்கிறது. நடிகைகள் என்பதால் புவனேசுவரி, லெனின் கைது விடயம் பரபரப்பாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பரபரப்பே இல்லாமல் பத்திரிக்கை செய்திகளால் மனநலம், உடல்நலம் ஏன் உயிரரையே இழந்தவர்கள் எத்தனை பேர்?
இது போன்ற நிழ்வுகள் பற்றி பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களை முன்வைப்பதே இந்த கட்டுரை தொடர்.
பொதுவாக பத்திரிக்கை துறையில் நடக்கும் பிரச்சனைகள் வெளியுலகுக்கு தெரிவதில்லை. காரணம் அதை வெளிக்கொண்டுவர எந்த பத்திரிக்கையும் இல்லாதது தான்.
நடிகைகள் - தினமலர் பிரச்சனை மட்டுமல்லாது எந்த பிரச்சனையானாலும் பொதுமக்களின் நிலை எப்போதும் நடுநிலை மற்றும் நியாத்தின் பக்கம் தான். ஆனால் பத்திரிக்கைகள் பொதுமக்களின் நிலையை தங்கள் சொந்த கருத்துக்களாளோடு திணித்து சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

உதாரணத்திற்கு இந்த கட்டுரையில் தினமலர் செய்தியையே விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

நடிகை புவனேசுவரி கைதுக்கு அடுத்த நாள் தினமலரில் வந்த செய்தி:
இந்த செய்தி குறித்து தினமலர் தரப்பில் தரும் விளக்கம். சமுதாய அவலங்களை துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் உரிமை பத்திரிக்கைக்கு உண்டு. அதை தான் தினமலர் செய்திருக்கிறது. புவனேசுவரியின் வாக்குமூலம் தான் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர தங்கள் சொந்த கருத்து அல்ல என்கிறது தினமலர்.

உண்மையில் அது தினமலரின் சொந்த கருத்து தான் என்பது செய்தியிலேயே தெரிகிறது.மேலும் அப்படி ஒரு வாக்குமூலம் காவல்துறை தரப்பில் பத்திரிக்கைகளுக்கும் கொடுக்கப்படவில்லை.

பொதுவாக நிருபர்களும் காவல்துறையினரும் சகசமாக பேசுவது வழக்கம், அதனடிப்படையிலேயே செய்திகளும் சேகரிக்கப்படுகிறது. எந்த நிருபரும் முதல் தகவல் அறிக்கையை முழுமையாக படித்து பின்னர் ஆய்வு செய்து செய்திகள் எழுதுவதில்லை. நாளிதழ்களை பொருத்தவரை அதற்கு கால அவகாசமும் இல்லை. இதனால் காவல் துறையினர் வாய்மொழியாக சொல்வதை நம்பியே செய்திகள் எழுதப்படுகிறது. இப்படி தான் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் வாய்மொழியாக புவனேசுவரி கூறியதாக சொன்னது தான் அடுத்த நாள் அத்தனை பத்திரிக்கைளிலும் புவனேசுவரியின் வாக்குமூலமாக வந்துள்ளது.

இதில் தினமலர் தவிர எல்லா பத்திரிக்கைகளும் வழக்கம்போல, ஐயத்திற்கு இடமான தகவல்களை தவிர்த்துவிட்டு செய்தியை வெளியிட்டுள்ளன.
ஆனால் தினமலர் மட்டும் நடிகைகளின் பெயர், புகைப்படங்களை உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளது. இது செய்தியிலேயே தெரிகிறது. அடைப்புக்குறிக்குள் நடிகைகளின் பெயரை இட்டு, அதற்கு ஏற்ப புகைப்படத்தை வெளியிட்டதில் தினமலர் எதிர்பார்த்தது ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை.

அந்த செய்திக்கான உள்நோக்கம் சம்மந்தப்பட்ட நடிகைகளுக்கோ, அரசுக்கோ, காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோ தெரியாது. ஆனால் பத்திரிக்கை துறையில் உள்ள கடைநிலை நிருபருக்கு கூட தெரியும்.

அந்த உள்நோக்கம்: செய்தி வெளியான வாரத்தில் தினத்தந்தியும், தினகரனும் மாறி மாறி தாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. ஏ.பி.சி ஆய்வு அறிக்கையிலும் கூட தினகரனும் , தினத்தந்தியும் தான் 10 லட்சம் பிரதிகளை தாண்டி விற்பனையாகும் தமிழ் நாளிதாழ்கள் என்ற தகுதியும் பெற்றிருந்தன. ஆனால் இந்த பட்டியலில் தினமலர் இல்லை. மேலும் ஒவ்வொரு முறை ஏ.பி.சி அறிக்கை வரும்போதும் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொன்றை மையப்படுத்தி தாங்கள் தான் முதலிடம் என விளம்பரப்படுத்தும். இந்த முறை எந்த பதிப்பிலும் முதலிடம் என விளம்பரப்படுத்தும் வாய்ப்பு தினமலருக்கு கிடைக்கவில்லை.
எனவே ஏ.பி.சி அறிக்கையை தாண்டி தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள தினமலர் நிர்வாகம் எடுத்த அதிரடி ஆயுதம் தான் புவனேசுவரி செய்தி. எதிர்பார்த்ததை போல தினமலர் விற்பனை கூடி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பிரச்சனை தினமலரை தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கலில் கொண்டுவிடும் என்பது எதிர்பாராதது.

தினமலர் உள்நோக்கம் இல்லாமல் துணிச்சலோடு, சமுதாய அக்கறையோடு அந்த செய்தியை வெளியிட்டிருந்தால்

‘‘ புவனேசுவரியை விபச்சார துடுப்பு போலீசார் கைது செய்வதற்காக வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அவரது வரவேற்பரையில் மூத்த அரசியல்வாதி மற்றும் அவரது மகனுடன் புவனேசுவரி தனித்தனியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.’’
அடைப்புக்குறிக்குள் நடிகைகளின் பெயர் படத்தை போட்ட அவ்வளவு துணிச்சலான பத்திரிக்கை அந்த மூத்த அரசியல்வாதி மற்றும் மகனின் பெயர் படத்தை போடாதது ஏன்?

இது தினமலரின் கோழைத்தனம் தான் என்றாலும், நடிகைகளின் பெயரை அடைப்பு குறிக்குள் போட்டு அந்த அரசியல்வாதியை மிரட்டும் தொனியில் செய்தி வெளியிட்ட மற்றொரு உள்நோக்கத்தின் விளைவு எல்லோருக்கும் தெரிந்தது தானே.

இன்னும் தினகரன், தினத்தந்தி, சன்டிவி உட்பட அனைத்து தமிழக ஊடகங்களின் பொறுப்பற்ற செய்திகள் குறித்து அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து விவாதிப்போம்.
இது தினமலருக்காக மட்டும் எழுதப்படும் கட்டுரை தொடர் அல்ல. தமிழக பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து அலசும் ஆய்வு கட்டுரை. இதில் வாசகர்களும் பத்திரிக்கைகளால் தங்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளை எழுதலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

அடுத்த பதிப்பில்:- லெனின் கைது., தினமலர் தடை செய்யபடுமா?

Oct 26, 2009

தமிழ் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் விருது


குமரி : நாகர்கோவில் ஆசிரியை மற்றும் வேலூர் நாட்றம்பள்ளி ஆசிரியர்கள் மைக்ரோ சாப்ட் புதுமை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் Ôமைக்ரோ சாப்ட் புதுமை ஆசிரியர் விருதுÕ வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்து சிறந்த முறையில் பாடங்களை தயாரித்தல் போட்டியில் வெற்றிபெறும் ஆசிரியர்களுக்கு மைக்ரோ சாப்ட் புதுமை ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு மைக்ரோ சாப்ட் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து 80429 ஆசிரியர்கள் பதிவு செய்திருந்தனர். 15 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுரைகளை ஆய்வு செய்த கல்வியாளர்கள் குழு, இந்தியாவில் இருந்து 6 சிறந்த ஆய்வுகளை விருதுக்கு தேர்ந்தெடுத்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கோகிலா, வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, ராமநாயக்கன்பட்டி கிராம அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் சங்கர், மின்காந்தவியல் குறித்த பாடமும், ஆசிரியை கோகிலா உணவு செரிமானம் குறித்த பாடத்தையும் தயாரித்துள்ளனர்.


பிரேசில் நாட்டின் சால்வேடார் நகரத்தில் நவம்பர் 3-ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கும் மைக்ரோ சாப்ட் புதுமை மண்டல ஆசிரியர்கள் மாநாட்டில் இவர்கள் கலந்துகொள்கின்றனர். அங்கு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் 110 நாடுகளைச் சேர்ந்த சிறந்த 150 ஆசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.

Oct 24, 2009

தமிழகத்தில் தமிழ் ஈழம் அமைப்போம். - தங்கபாலுவுக்கு மிரட்டல் வந்ததாம்.

சென்னை: தமிழகத்தில் தமிழ் ஈழம் அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு பேக்ஸ் மூலம் மிரட்டல் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தங்கபாலு இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று குண்டுமிரட்டல் வந்தது. எனக்கு வந்த பேக்ஸ் செய்தியில், ‘தமிழ்நாட்டில் தமிழ் ஈழம் அமைப்போம்’ என்று கூறப்பட்டிருந்தது. தமிழகத்தை சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள், இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பேக்ஸ் செய்தி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறில்லை - தங்கபாலு

சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது:

முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை. கண்டன கூட்டம் நடத்த திமுகவினருக்கு உரிமை உள்ளது. முல்லை பெரியாறு பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒரு சுமுகமான தீர்வை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

Popular Posts