குமரி : நாகர்கோவில் ஆசிரியை மற்றும் வேலூர் நாட்றம்பள்ளி ஆசிரியர்கள் மைக்ரோ சாப்ட் புதுமை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் Ôமைக்ரோ சாப்ட் புதுமை ஆசிரியர் விருதுÕ வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்து சிறந்த முறையில் பாடங்களை தயாரித்தல் போட்டியில் வெற்றிபெறும் ஆசிரியர்களுக்கு மைக்ரோ சாப்ட் புதுமை ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மைக்ரோ சாப்ட் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து 80429 ஆசிரியர்கள் பதிவு செய்திருந்தனர். 15 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுரைகளை ஆய்வு செய்த கல்வியாளர்கள் குழு, இந்தியாவில் இருந்து 6 சிறந்த ஆய்வுகளை விருதுக்கு தேர்ந்தெடுத்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கோகிலா, வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, ராமநாயக்கன்பட்டி கிராம அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் சங்கர், மின்காந்தவியல் குறித்த பாடமும், ஆசிரியை கோகிலா உணவு செரிமானம் குறித்த பாடத்தையும் தயாரித்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் சால்வேடார் நகரத்தில் நவம்பர் 3-ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கும் மைக்ரோ சாப்ட் புதுமை மண்டல ஆசிரியர்கள் மாநாட்டில் இவர்கள் கலந்துகொள்கின்றனர். அங்கு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் 110 நாடுகளைச் சேர்ந்த சிறந்த 150 ஆசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.
மிகவும் பெருமையாக இருக்கு
ReplyDeleteவிருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.