இலங்கை பத்திரிக்கையாளர் திசாநாயகத்துக்கு கடுங்காவல் தண்டனை விதித்தபோது உலக பத்திரிக்கையாளர்களே கொதித்தெழுந்தார்கள். பல நாடுகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் மட்டும் முன்னனி பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் நடிகை புவனேசுவரி விவகாரத்தில் தினமலர் ஆசிரியர் லெனின் கைதுக்கு மட்டும் பத்திரிக்கை சுதந்திரம் பரிபோவதாக தமிழகத்தில் சில பத்திரிக்கை ஆசிரியர்கள், அதிபர்கள் குதிக்கிறார்கள்.காரணம் அவதூறு செய்திக்காக பெண் கொடுமை சட்டத்தின் கீழ் ஒரு பிரபல பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.
இந்த கைது நியாமனாதா? இதனால் பத்திரிக்கை துறையின் சுதந்திரம் பரிபோகிறதா? அல்லது பத்திரிக்கைகள் எல்லை மீறியதற்கு தக்க பாடமா என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.
இது மட்டுமல்ல அன்றாடம் பத்திரிக்கைகளில் அவசரக்கோலத்தில் வரும் பல செய்திகளும் பலரை பாதிக்கிறது. நடிகைகள் என்பதால் புவனேசுவரி, லெனின் கைது விடயம் பரபரப்பாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பரபரப்பே இல்லாமல் பத்திரிக்கை செய்திகளால் மனநலம், உடல்நலம் ஏன் உயிரரையே இழந்தவர்கள் எத்தனை பேர்?
இது போன்ற நிழ்வுகள் பற்றி பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களை முன்வைப்பதே இந்த கட்டுரை தொடர்.
பொதுவாக பத்திரிக்கை துறையில் நடக்கும் பிரச்சனைகள் வெளியுலகுக்கு தெரிவதில்லை. காரணம் அதை வெளிக்கொண்டுவர எந்த பத்திரிக்கையும் இல்லாதது தான்.
நடிகைகள் - தினமலர் பிரச்சனை மட்டுமல்லாது எந்த பிரச்சனையானாலும் பொதுமக்களின் நிலை எப்போதும் நடுநிலை மற்றும் நியாத்தின் பக்கம் தான். ஆனால் பத்திரிக்கைகள் பொதுமக்களின் நிலையை தங்கள் சொந்த கருத்துக்களாளோடு திணித்து சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
உதாரணத்திற்கு இந்த கட்டுரையில் தினமலர் செய்தியையே விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
நடிகை புவனேசுவரி கைதுக்கு அடுத்த நாள் தினமலரில் வந்த செய்தி:
இந்த செய்தி குறித்து தினமலர் தரப்பில் தரும் விளக்கம். சமுதாய அவலங்களை துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் உரிமை பத்திரிக்கைக்கு உண்டு. அதை தான் தினமலர் செய்திருக்கிறது. புவனேசுவரியின் வாக்குமூலம் தான் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர தங்கள் சொந்த கருத்து அல்ல என்கிறது தினமலர்.
உண்மையில் அது தினமலரின் சொந்த கருத்து தான் என்பது செய்தியிலேயே தெரிகிறது.மேலும் அப்படி ஒரு வாக்குமூலம் காவல்துறை தரப்பில் பத்திரிக்கைகளுக்கும் கொடுக்கப்படவில்லை.
பொதுவாக நிருபர்களும் காவல்துறையினரும் சகசமாக பேசுவது வழக்கம், அதனடிப்படையிலேயே செய்திகளும் சேகரிக்கப்படுகிறது. எந்த நிருபரும் முதல் தகவல் அறிக்கையை முழுமையாக படித்து பின்னர் ஆய்வு செய்து செய்திகள் எழுதுவதில்லை. நாளிதழ்களை பொருத்தவரை அதற்கு கால அவகாசமும் இல்லை. இதனால் காவல் துறையினர் வாய்மொழியாக சொல்வதை நம்பியே செய்திகள் எழுதப்படுகிறது. இப்படி தான் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் வாய்மொழியாக புவனேசுவரி கூறியதாக சொன்னது தான் அடுத்த நாள் அத்தனை பத்திரிக்கைளிலும் புவனேசுவரியின் வாக்குமூலமாக வந்துள்ளது.
இதில் தினமலர் தவிர எல்லா பத்திரிக்கைகளும் வழக்கம்போல, ஐயத்திற்கு இடமான தகவல்களை தவிர்த்துவிட்டு செய்தியை வெளியிட்டுள்ளன.
ஆனால் தினமலர் மட்டும் நடிகைகளின் பெயர், புகைப்படங்களை உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளது. இது செய்தியிலேயே தெரிகிறது. அடைப்புக்குறிக்குள் நடிகைகளின் பெயரை இட்டு, அதற்கு ஏற்ப புகைப்படத்தை வெளியிட்டதில் தினமலர் எதிர்பார்த்தது ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை.
அந்த செய்திக்கான உள்நோக்கம் சம்மந்தப்பட்ட நடிகைகளுக்கோ, அரசுக்கோ, காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோ தெரியாது. ஆனால் பத்திரிக்கை துறையில் உள்ள கடைநிலை நிருபருக்கு கூட தெரியும்.
அந்த உள்நோக்கம்: செய்தி வெளியான வாரத்தில் தினத்தந்தியும், தினகரனும் மாறி மாறி தாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. ஏ.பி.சி ஆய்வு அறிக்கையிலும் கூட தினகரனும் , தினத்தந்தியும் தான் 10 லட்சம் பிரதிகளை தாண்டி விற்பனையாகும் தமிழ் நாளிதாழ்கள் என்ற தகுதியும் பெற்றிருந்தன. ஆனால் இந்த பட்டியலில் தினமலர் இல்லை. மேலும் ஒவ்வொரு முறை ஏ.பி.சி அறிக்கை வரும்போதும் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொன்றை மையப்படுத்தி தாங்கள் தான் முதலிடம் என விளம்பரப்படுத்தும். இந்த முறை எந்த பதிப்பிலும் முதலிடம் என விளம்பரப்படுத்தும் வாய்ப்பு தினமலருக்கு கிடைக்கவில்லை.
எனவே ஏ.பி.சி அறிக்கையை தாண்டி தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள தினமலர் நிர்வாகம் எடுத்த அதிரடி ஆயுதம் தான் புவனேசுவரி செய்தி. எதிர்பார்த்ததை போல தினமலர் விற்பனை கூடி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பிரச்சனை தினமலரை தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கலில் கொண்டுவிடும் என்பது எதிர்பாராதது.
தினமலர் உள்நோக்கம் இல்லாமல் துணிச்சலோடு, சமுதாய அக்கறையோடு அந்த செய்தியை வெளியிட்டிருந்தால்
‘‘ புவனேசுவரியை விபச்சார துடுப்பு போலீசார் கைது செய்வதற்காக வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அவரது வரவேற்பரையில் மூத்த அரசியல்வாதி மற்றும் அவரது மகனுடன் புவனேசுவரி தனித்தனியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.’’
அடைப்புக்குறிக்குள் நடிகைகளின் பெயர் படத்தை போட்ட அவ்வளவு துணிச்சலான பத்திரிக்கை அந்த மூத்த அரசியல்வாதி மற்றும் மகனின் பெயர் படத்தை போடாதது ஏன்?
இது தினமலரின் கோழைத்தனம் தான் என்றாலும், நடிகைகளின் பெயரை அடைப்பு குறிக்குள் போட்டு அந்த அரசியல்வாதியை மிரட்டும் தொனியில் செய்தி வெளியிட்ட மற்றொரு உள்நோக்கத்தின் விளைவு எல்லோருக்கும் தெரிந்தது தானே.
இன்னும் தினகரன், தினத்தந்தி, சன்டிவி உட்பட அனைத்து தமிழக ஊடகங்களின் பொறுப்பற்ற செய்திகள் குறித்து அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து விவாதிப்போம்.
இது தினமலருக்காக மட்டும் எழுதப்படும் கட்டுரை தொடர் அல்ல. தமிழக பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து அலசும் ஆய்வு கட்டுரை. இதில் வாசகர்களும் பத்திரிக்கைகளால் தங்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளை எழுதலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
அடுத்த பதிப்பில்:- லெனின் கைது., தினமலர் தடை செய்யபடுமா?
dinamalarai arabu nadukal thadai seaitullana
ReplyDeleteதினமலர் அல்ல தின மலம் .
ReplyDeleteநியாமான பத்திரிக்கையாக இருந்துதிருந்தால் தினமலர் சுரேஷ் பற்றிய செய்தியும் அதே பத்திரிக்கையில் வந்து இருக்கவேண்டும் .
ReplyDeleteகுட்லடம்பட்டி சமத்துவபுரத்திலிருது கரடிகல் செல்லும்
ReplyDeleteவலிஇல் கரன்டு கம்பம் சாய்து வாகனகள் செல
முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு உல்லகின்றன