Jan 25, 2012

தினமலரில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது.


முழு பூசணிக்காயை எவ்வளவு நாள் தான் சோற்றில் மறைக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப தினமலரில் தமிழ்மலரின் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகி உள்ளது.  

புதிய அணைக்கு மாற்றாக புதிய காழ்வாய்கள் வெட்டி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழ்மலரில் தொடர்ந்து எழுதிவருகிறோம்.

தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு மற்றும் கேரள முல்லைப்பெரியாறு போராட்டக்குழு தலைவர் சி.பி.ரோய் ஆகியோர் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் பேட்டி அடங்கிய சி.டியை வெளியிட்டிருந்தோம். 

கேரள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தினத்தந்தியில் மட்டும் சிறு செய்தி வந்திருந்தது. தி இந்து ஆங்கில பத்திரிக்கை இரண்டுமுறை விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. 

தினமலர் பத்திரிக்கைக்கு இப்போது ஏனொ சிறு நல்ல புத்தி வந்துள்ளது. புதிய அணை வேண்டாம் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

தினமலர் செய்தி :-
புதிய அணை தேவையில்லை
 போராட்டக் குழு முன்னாள் தலைவர் அறிவிப்பு

கோட்டயம்: "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை விட, அங்கு புதிய சுரங்கக் கால்வாய் அமைத்து, அணை நீர்மட்டத்தைக் குறைக்கலாம்' என, முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவின் முன்னாள் தலைவர் சி.பி.ராய் தெரிவித்தார். 

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தற்போதுள்ள அணைக்குப் பதிலாக, அங்கு புதிய அணை அமைப்போம் என, கேரள அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து, முல்லைப் பெரியாறு போராட்டக் குழு முன்னாள் தலைவர் சி.பி.ராய் கூறியதாவது: 

முல்லைப் பெரியாறு அணையை இடிப்பது அல்லது தற்போதுள்ள அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் புதிய அணை கட்டுவது எல்லாம் தேவையற்றது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தாலே, அணைக்கு பாதுகாப்பு கிடைத்து விடும். அதற்காக, தற்போதுள்ள அணையில் 104 அடி சுரங்கக் கால்வாய்க்குப் பதிலாக, 50 அடி உயரத்தில், புதிய சுரங்க கால்வாய் அமைத்து, அதன் மூலம் நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியாகவே இருக்கும். அதற்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தாலும், தானாகவே சுரங்க கால்வாய் வழியாக வெளியேறி விடும்.

அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க, ஏற்கனவே தமிழக அரசு ஒப்புக் கொண்டு உயர்மட்ட குழுவிடம் தெரிவித்துள்ளது. எனவே, புதிய சுரங்க கால்வாய் அமைக்க தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. மேலும், இது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் தரும். 

இவ்விஷயத்தில் கேரள அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். பின்னர், இவ்விஷயத்தை நீதிபதி கே.டி.தாமசிடம் அளிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசு ஆயுதமாக கருதக் கூடாது. அதற்கு பதிலாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயல வேண்டும். இவ்வாறு, சி.பி.ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இவர், இதே கருத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தான், அவரை போராட்டக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் செய்தி :-  http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html

கேரள அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை கொடுத்துள்ளோம். தமிழக அரசும் இப்போது இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

Jan 23, 2012

சி.சி.எல் கேரளா கலாதிமாறன் ரகசிய உத்தரவு

சி.சி.எல் கிரிக்கெட் முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என கலாதிமாறன் செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சி.சி.எல் எனப்படும் சினிமா நடிகர்கள் பங்குபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதன் முக்கிய பங்குதாரராக சன்டிவி நெட்வொர்க் தலைவர் கலாதிமாறன் உள்ளார். போட்டிகள் அனைத்தும் சன், சூரியா, உதயா, போன்ற இவரது சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு பிரச்சனை வெடித்தவுடன் என்ன ªச்ய்வது என்று தெரியவில்லை. சென்னை, கேரளா அணிகள் மோதும் போட்டியை சென்னை அல்லது கொச்சியில் நடத்தினால் மட்டுமே பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை வேறு வழியில்லாமல் ஆந்திராவில் நடத்தினார்கள். 100 பார்வையாளர்கள் கூட இல்லாததால் ஆட்டம் ஆடும் பெண்கள் கூட சோர்ந்து போனார்கள். 

இந்நிலையில் வரும் 28ம் தேதி கேரள&பெங்கால் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக கேரள நடிகர்கள் அணி சென்னை வர உள்ளது. இந்த நேரத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சனை பூதகரமாக்கப் பட்டுவிடக்கூடாது என்பதில் சன் குழுமம் முனைப்புடன் செயல்படுகிறது. இதற்காக தினகரன், சூரியன் எஃப் எம், சன் டிவி உட்பட செய்தியாளர்களுக்கு புது உத்தரவு வந்துள்ளது. சி.சி.எல் போட்டி முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

அதே போல பாசமலர் நக்கீரனுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை கொதிக்கும் தண்ணீரில் கொல்லப்பட்ட தமிழன் என்று செய்தி வெளியிட்ட நக்கீரன், இப்போது கேரள சென்னை அணிகள் மோதிய படங்களை எக்சுகுளூசீவ் படங்களாக வெளியிட்டுள்ளது.

கேரள நடிகைகள் நடிக்ககூடாது என விரட்டியடித்தனர். மலையாள விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகளின் படங்களை போட்டு எச்சரித்தனர். இப்போது அணி அணியாய் நடிகர்கள் கேரள செல்கிறார்கள். இதில் எல்லாம் உங்கள் தமிழ் உணர்வு விதிவிலக்கா? அல்லது தமிழ்பற்று நடிகைகளுக்கு மாட்டும் தானா? நடிகர்களுக்கு இல்லையா? இதில் கூட உங்கள் ஆணாதிக்கம் தானே தெரிகிறது.

கலாநிதிமாறனுக்கும், நக்கீரன் கோபாலுக்கும், தினமலர் மகேசுக்கும் வியாபாரத்துக்காக முல்லைப்பெரியாறு, தமிழ்பற்று இவைகளை ஓதுகிறார்கள். இதை புறிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.

ஈழப்போர் உச்சகட்டத்தின் போது குழந்தைகளையாவது மீட்க குரல்கொடுங்கள் என்று கெஞ்சியபோது மவுனம் சாதித்த அப்துல்கலாம் இப்போது சாமாதனாம் நிலைநாட்ட இலங்கை சென்றுள்ளார். சத்தியமா சொல்ரேங்க அப்துல்கலாம் இப்ப பணத்துக்காக மட்டும் இலங்கை போகலை தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட சென்றுள்ளார்.

என் பாட்டி பாணியில் வயிர்எரிந்து சொல்கிறேன் ஈழக்குழந்தைகளின் ஆன்மா அப்துல்கலாமை சும்மா விடாது. போலிகளின் முகத்திரை நிச்சயம் ஒருநாள் கிழியும். அன்றாவது அவன் அயோக்கியன் என்பதை இந்த உலகம் நம்பட்டும்.

Jan 22, 2012

கேரளா அரசின் ரகசிய தகவல் சேகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் தரை மட்டத்தில் இருந்து 34, 50, 84 அடிகளில் சுரங்கம் அமைத்து பெரியாற்று நீரை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியும். இந்த எளிமையான தீர்வை வலியுறுத்தி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். 

முதற்கட்டமாக இருமாநில போராட்ட குழுவினரிடம் இந்த திட்டத்தை விளக்கினோம். திட்டத்தின் கூர்மையை புரிந்து கொண்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 

தமிழகத்தின் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கம்பம் அப்பாசு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் திட்டத்தை வரவேற்றார். அவரது பேட்டியை தமிழ்மலர் இணைய தளத்தில் ஒளிப்பரப்பினோம். தொடர்ந்து கேரளாவின் இந்தியாவிசன், ரிப்போர்ட்டர், ஏசியா நெட் உட்பட செய்தி சேனல்கள் ஒளிபரப்பின.

கேரளாவில் முல்லைப்பெரியாறு பாதுகாப்பு குழு தலைவர் சி.பி.ரோய் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் கொண்டு வந்தார். அதை கேரள முதல்வர், இந்திய பிரதமர் ஆகியோருக்ரு அனுப்பி வைத்தார். இதனால் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வின்போது கேரள அரசு மிகவும் மவுனம் சாதித்தது. 

கேரளாவில் தமிழகத்துக்கு ஆதரவான குரல் ஒலித்ததை தமிழக ஊடகங்கள் பெயருக்கு கூட கண்டுகொள்ளவில்லை.

மனம் தளராமல் தொடர்ந்து எங்கள் முயற்சி பாதையில் பயனித்தோம்.

கேரள எழுத்தாளர்களின் ஆதரவை திரட்டினோம். திட்டத்தை புரிந்துகொண்ட அத்தனைபேரும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். சி.ஆர்.நீலகண்டன், சிவிச்சந்திரன், லதா, நாயர் உட்பட பல பிரபல எழுத்தாளர்களும் ஆதரவு குரல் தந்தனர்.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் அதிகமாக பேசப்பட்ட கேரளாவின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பிரேசமசந்திரனை சந்தித்து பேசினோம். திட்டத்தின் கூ;ர்மையை புரிந்துகொண்ட அவர் சில சந்தேகங்களை முன்வைத்தார். தேக்கடி சுற்றுலாமையம் காணாமல் போய்விடும் என்பது தான் அவரது சந்தேகம். அந்த சந்தேகத்தை போக்கும் விதமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, மூணாறு போன்ற இடங்களை குறிப்பிட்டோம்.

உண்மையை புரிந்துகொண்ட அவர் இந்த திட்டத்தை கேரள அரசு பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் ஜனவரி 24 தேதியில் நடக்கும் உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு பரிசீலனைக்கு பின்னர் முழுமையான ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திட்டத்தின் தீவிரத்தை புரிந்துகொண்ட கேரள அரசு எங்களிடம் முழுமையான திட்ட மாதிரி வடிவத்தை தயாரித்து தர கோரியுள்ளது.  

பாதி கிணறு தாண்டிவிட்ட மகிழ்ச்சில் அடுத்து தமிழகம் பக்கம் எங்கள் திட்டத்தை திருப்பி உள்ளோம்.

எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழக மக்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.

Jan 7, 2012

தமிழ் பெண்களின் கற்பு காவல் தெய்வத்துக்கு அடி

நான் தான் தமிழ் பெண்களின் ‘‘கற்பு காவல் தெய்வம்’’ என்று நடிகைகளின் பாவாடைக்கு அடியில் கேமராவோடு சுற்றிய மாமாவுக்கு சரியான அடி விழுந்துள்ளது.


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பலான சம்பவங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் தவறாது இருக்கும் பத்திரிக்கை நக்கீரன். இவர்களுடையே வேலையே எந்த நடிகை எங்க போகிறாள், அது தமிழன் கூடவா, மலையாளி கூடவா, சிங்களன் கூடவா என்று விளக்கு பிடிப்பது தான்.
அதிமுகவினரின் கோபத்திற்கு காரணம்

கற்பு என்ற ஒற்றை சொல் அடிபட்டால் போதும் அந்த செய்தி விலாவாரியாக வர்ணனையுடன் நக்கீரனில் இருக்கும். ஏனென்றால் தமிழினத்தின் கற்பை முழுமையாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். அதற்கு எதிராக யார் நடந்தாலும் விடமாட்டார்கள். 

வாரம் ஒரு நடிகையின் கற்பு நக்கீரனின் காவல் வட்டத்திற்குள் வரும். எதுவும் கிடைக்காத வாரத்தில் நடிகைகளின் பாவாடைக்கு அடியில் படுத்திருப்பார்கள். அதுவும் இல்லை என்றால் வெளிநாட்டுக்கு செல்லும் நடிகை கருணா குழுவுக்கு தூது போகிறாள் என்பார்கள். 

ஒரு நடிகை நேரடியாகவே கேட்டார் என் உடலை நான் காட்டி சம்பாதிப்பதை விட என்னை காட்டி அதிகமாக சம்பாதித்தவன் மாமா நக்கீரன் தான் என்று. இது நூறு சதவீதம் உண்மை.

ஈழத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்த போது அதில் கூட வியாபார யுக்தியை கையாண்ட கருமம்பிடித்த பத்திரிக்கை தான் நக்கீரன்.
இப்படிப்பட்ட கற்பு காவல் தெய்வத்தின்
 பத்திரிக்கையில்
இந்த மாதிரி படங்கள் வெளிவரும்
.

தமிழ் தமிழ் என்று தமிழை காக்க ஒருவர் வாழ்கிறார். தமிழ் நடிகைகளின் கற்பை காக்கவே வாழ்வை அர்ப்பணித்துள்ளார் இந்த நக்கீரன்

நக்கீரன் போன்ற சிவப்பு இதழியல் நடத்தும் பத்திரிக்கைகள் பத்திரிக்கை உலகுக்கே ஒரு பெரும் அவமானம். அதிமுக கோபம் ஒட்டுமொத்த நக்கீரனுக்கு எதிரானதாக அமையட்டும். 

நக்கீரன் என்ற உன்னத புலவனின் பெயரில் ஒரு மாமா பத்திரிக்கை தமிழுக்கே ஒரு கரும்புள்ளி தான்.

நீ யோக்கியன் என்றால் எந்த நடிகையின் படத்தையும் போடாமல் ஒரு வாராம் பத்திரிக்கையை வெளியிடு. கற்பு என்பது ஊரானுக்கு மட்டுமல்ல உனக்கும் தான். உன் குடும்பத்துக்கும் தான் என்பதை நக்கீரன் கோபால் ஒருநாளாவது சிந்திக்கட்டும்.

Jan 5, 2012

முல்லைப்பெரியாறு அணைக்கு சிறுவாணி ஒப்பந்தமா?


முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது. 

புதிய அணையின் உரிமை முழுக்கமுழுக்க கேரளாவுக்கு தான். ஆனால் பராமரிப்பு பணியை கேரளா-தமிழகம்-மத்தியஅரசு ஆகியவை இணைந்து செயல்படுத்த தயார் என கூறியுள்ளார் கேரள முதலமைச்சர். இதே கருத்தையே உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய உள்ளனர்.

புதிய அணை குறித்த தமிழகத்தின் பதிலில் தான் இருக்கிறது கேரள கனவுக்கான பிடிப்பு. புதிய அணை பராமரிப்பு குறித்த நீதிபதி ஆனந்தின் கேள்விக்கு தமிழகம் ஒரு வாரத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய அணை பலமாக உள்ள நிலையில் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தமிழக வழக்கறிஞர் உடனடியாக தெரிவித்தார். ஆனால் இது குறித்து அரசின் நிலைபாட்டை தெரிந்து அறிவிக்கும்படி கூறியுள்ளது உயர்மட்ட குழு. இது தான் கேரள மகிழ்ச்சியின் காரணம்.

சிறுவாணி அணை போன்ற ஒரு ஒப்பந்தத்தை ஏற்க தாயர் என்றுள்ளது கேரளா. ஆனால் சிறுவாணிக்கும் பெரியாற்றுக்கும் பெயரிலேயே வேறுபாடு உள்ளது என்பதை தமிழக&கேரள அரசுகள் கவனிக்க வேண்டும்.

சிறுவாணி அணை என்பது குடிநீருக்காக மட்டும் கட்டப்பட்ட ஒரு சிற்றணை. இங்கிருந்து கோவை மாநகராட்சி பம்பு &குழாய் வாயிலாக மிகச்சிறிய அளிவில் மட்டுமே தண்ணீரை எடுக்க முடியும். 

இந்த அணை ஒப்பந்தப்படி சிறவாணி அணையின் முழு உரிமை கேரளாவுக்கு உரியது. அணை பராமரிப்பு, பாதுகாப்பு, நீர்மட்டம் நிர்ணயித்தல், சுற்றுலா அனுமதி என அத்தனை உரிமையும் கேரளாவுக்கே உள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகம் தண்ணீரை குடிநீர் தேவைக்காக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு விலைநிர்ணயமும் இருக்கிறது. மேலும் பராமரிப்பு செலவாக ஆண்டுதோறும் கேரளா கோடிக்கணக்கில் வாங்கிக்கொள்கிறது. சிறுவாணி அணைநீரால் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்கர் கூட விவசாம் செய்யபடுவதில்லை. 

ஆனால் பெரியாறு என்பது நேர் தழைகீழானது. சிறுவாணியை காட்டிலும் பலமடங்கு பெரியது பெரியாறு. குடிநீர், விவசாயம், மின்உற்பத்தி என பல்முறை பயன்பாடுகள் பெரியாறு அணையால் சாத்தியப்படுகிறது. தற்போது இதன் உரிமை, பராமரிப்பு நீர்பயன்பாடு அனைத்தும் தமிழகத்தின் கையில் உள்ளது. தமிழகம் எப்போது வேண்டுமானாலும் நீரை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. 

ஆனால் கேரளா வலியுறுத்தும் சிறுவாணி மாதிரி ஒப்பந்தத்தில் கட்டப்படும் புதிய பெரியாறு அணையில் தமிழகத்துக்கு எந்தத உரிமையும் இருக்காது. சிறுவாணியில் எப்படி தண்ணீரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறதோ அதே நிலை பெரியாறு அணையிலும் ஏற்படும். 16 டி.எம்.சி தண்ணீருக்கு வாடிக்கையாளர் உரிமை மட்டும் என்ற பரிதாப நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். 

சிறுவாணி என்பது ஒரு மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் உள்ள ஒரு சிற்றணை. இந்த அணையின் ஒப்பந்த மாதிரியை 5 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், மின்தேவையை பூர்த்தி செய்யும் பெரியாறு அணையோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. 

மேலும் ஆயுள் காலம் முழுவதும் உரிமை உள்ள ஒரு அணையை தமிழகம் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? 999 குத்தகை ஒப்பந்தம் அணைக்கு அல்ல அணையின் நீர்பிடிப்பு இடத்துக்கு தான் என்பதை கேரளா தெளிவு படுத்திக்கொள்ளட்டும்.

எந்த நிலையிலும் தற்போதைய அணையை இழப்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஈடு செய்யமுடியாத இழப்பாகவே இருக்கும். பென்னிக்குயிக்கை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இந்த இழப்புக்கு எந்தவிதத்திலும் தயாராக மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

இறதியாக சிறுவாணி அணைக்கு அருகில் நதிக்கரையில் வசிப்பவர் என்ற பெருமையோடு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 

சிறுவாணி அணைக்கு உரிமையாளர் கேரளாவாக இருந்தாலும், கட்டுமானத்தின் போது கூலி ஆட்களுக்கு தமிழகம் இலவசமாக தந்த அரிசியை மூட்டைகளாக அடிக்கினால் அது சிறுவாணி அணையை விட உயரமாக வரும். இதற்காக வாழ்நாள் முழுவதும் நாங்கள் தமிழகத்துக்கு கடமை பட்டுள்ளளோம் என்றார் ஒரு மலையாள கூலித்தொழிலாளி. அடித்தட்டு மக்களிடம் உள்ள இந்த உயரிய எண்ணம் அரசியல்வாதிகளிடமும் ஊடகங்களிடமும் இல்லையே ?

Jan 3, 2012

முல்லைப்பெரியாறு தமிழகம் தோற்றுவிடுமா?


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் நேற்றைய தினம் தமிழகத்துக்கு ஒரு எச்சரிக்கை தினமாக அமைந்துள்ளது. கேரளாவுக்கு ஒரு படி முன்னேற்றத்தின் தெம்பு கிடைத்துள்ளது.

புதிய அணை கட்டி அதை இருமாநில அரசுகளும் பராமரித்துக்கொள்ளுமா? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி தான் இப்போது தமிழகத்தை முள்முனையில் நிறுத்தியுள்ளது.

இந்த தருணத்தில் தமிழகம் தனது உரிமையை எந்தவிதத்திலும் இழந்துவிடக்கூடாது. புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்ற சம்மதம் தெரிவித்தாலே தமிழகத்தின் முழு உரிமையும் ஒட்டுமொத்தமாக பரிக்கப்பட்டுவிடும்.

இப்போது இன்னும் 884 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு தமிழகத்தின் முழு பராமரிப்பில் இருக்கிறது. தண்ணீர் திறந்துவிடும் சாவியும் தமிழகத்திடம் தான் இருக்கிறது. புதிய அணையில் இது தமிழகத்துக்கு சாத்தியப்படாது. மேலும் ஒரு காவிரிப்பிரச்சனைக்கு தமிழகம் தள்ளப்படும்.

கம்பம் அப்பாசு
காவிரிப்பிரச்சனையில் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அதிகாரம் கர்நாடகா கையில் உள்ளது, அணையும் கர்நாடகா கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தமிழகத்தால் ஏமாந்து நிற்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் முல்லைப்பெரியாற்றில் அணை கட்டுப்பாடு தற்போது நமது கையில் உள்ளது. இதை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.

சுண்ணாம்புகல்லால் கட்டப்பட்ட அணை பலவீனமாக உள்ளது. இதனால் அணைக்கு கீழ்பகுதியில் உள்ள மக்கள் பயப்பீதியில் உள்ளனர் என்ற கேரளாவின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு கேரளா கூறுவது போல அணையை டீகமிசன் செய்யவேண்டும் என்பதை மனிதாபிமான அடிப்படையில் தமிழகம் செவிசாய்க்கலாம். ஆனால் அதற்காக புதிய அணை கட்டி புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொண்டால் மிகப்பெரிய இழப்பு தமிழகத்துக்கு தான்.

ஒரு அணையை டீகமிசன் செய்வது என்றால் கேரளாவின் கனவு போல அணையை உடைப்பது அல்ல. அணையின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக்கொள்வது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை தமிழகம் 5 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. 

வைகை அருகே ராயப்பட்டி என்ற இடத்தில் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை தமிழகம் தயார்படுத்தி உள்ளது.  மலை உச்சியில் முல்லைப்பெரியாறு அணையில் தேக்க வேண்டிய கூடுதல் தண்ணீரை நேரடியாக கீழே கொண்டுவந்து ராயப்பட்டியில் தமிழகம் தேக்கிக்கொள்ளும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 110 அடிக்கும் குறைவாக தண்ணீரை நிலைநிறுத்தலாம். எவ்வளவு தண்ணீரை நிலைநிறுத்தலாம் என்பதை தாராளமாக கேரளாவே முடிவு செய்யலாம். அணையே இல்லாமலும் பெரியாற்றை தமிழகத்துக்கு திருப்பிக்கொண்டுவரும் வழிமுறைகளையும் தமிழகம் தயார்நிலையில் வைத்துள்ளது.

இதற்கு தற்போது உள்ள 104 அடி சுரங்கத்தை வெறும் 34, அல்லது 50 அடியாக தாழ்த்தினால் போதுமானதாகும்.

இந்த திட்டத்தை கேரளாவில் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவிசன், ரிப்போர்ட்டர், மாத்ருபூமி, மாத்யமம் போன்ற பத்திரிக்கைகளும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளன. கேரள படைப்பாளிகள் சங்கமும் ஆதரவளித்துள்ளது. 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். தமிழகத்தில் 5 மாவட்ட பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

மக்களிடையே மட்டும் எட்டியுள்ள இந்த திட்டத்தை தமிழக ஊடகங்களிடமும், கேரள தமிழக அரசிடமும் கொண்டு சேர்க்கும் எங்கள் முயற்சி தொடர்கிறது.

புதிய அணையை விட புதிய காழ்வாய் என்ற எளிமையான திட்டத்துக்கு கேரள தமிழக அரசுகள் முன்வர வேண்டும். இன்றல்ல என்றானாலும் அது தான் நிரந்தர தீர்வு.

Popular Posts