Jan 22, 2012

கேரளா அரசின் ரகசிய தகவல் சேகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் தரை மட்டத்தில் இருந்து 34, 50, 84 அடிகளில் சுரங்கம் அமைத்து பெரியாற்று நீரை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியும். இந்த எளிமையான தீர்வை வலியுறுத்தி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். 

முதற்கட்டமாக இருமாநில போராட்ட குழுவினரிடம் இந்த திட்டத்தை விளக்கினோம். திட்டத்தின் கூர்மையை புரிந்து கொண்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 

தமிழகத்தின் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கம்பம் அப்பாசு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் திட்டத்தை வரவேற்றார். அவரது பேட்டியை தமிழ்மலர் இணைய தளத்தில் ஒளிப்பரப்பினோம். தொடர்ந்து கேரளாவின் இந்தியாவிசன், ரிப்போர்ட்டர், ஏசியா நெட் உட்பட செய்தி சேனல்கள் ஒளிபரப்பின.

கேரளாவில் முல்லைப்பெரியாறு பாதுகாப்பு குழு தலைவர் சி.பி.ரோய் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் கொண்டு வந்தார். அதை கேரள முதல்வர், இந்திய பிரதமர் ஆகியோருக்ரு அனுப்பி வைத்தார். இதனால் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வின்போது கேரள அரசு மிகவும் மவுனம் சாதித்தது. 

கேரளாவில் தமிழகத்துக்கு ஆதரவான குரல் ஒலித்ததை தமிழக ஊடகங்கள் பெயருக்கு கூட கண்டுகொள்ளவில்லை.

மனம் தளராமல் தொடர்ந்து எங்கள் முயற்சி பாதையில் பயனித்தோம்.

கேரள எழுத்தாளர்களின் ஆதரவை திரட்டினோம். திட்டத்தை புரிந்துகொண்ட அத்தனைபேரும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். சி.ஆர்.நீலகண்டன், சிவிச்சந்திரன், லதா, நாயர் உட்பட பல பிரபல எழுத்தாளர்களும் ஆதரவு குரல் தந்தனர்.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் அதிகமாக பேசப்பட்ட கேரளாவின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பிரேசமசந்திரனை சந்தித்து பேசினோம். திட்டத்தின் கூ;ர்மையை புரிந்துகொண்ட அவர் சில சந்தேகங்களை முன்வைத்தார். தேக்கடி சுற்றுலாமையம் காணாமல் போய்விடும் என்பது தான் அவரது சந்தேகம். அந்த சந்தேகத்தை போக்கும் விதமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, மூணாறு போன்ற இடங்களை குறிப்பிட்டோம்.

உண்மையை புரிந்துகொண்ட அவர் இந்த திட்டத்தை கேரள அரசு பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் ஜனவரி 24 தேதியில் நடக்கும் உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு பரிசீலனைக்கு பின்னர் முழுமையான ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திட்டத்தின் தீவிரத்தை புரிந்துகொண்ட கேரள அரசு எங்களிடம் முழுமையான திட்ட மாதிரி வடிவத்தை தயாரித்து தர கோரியுள்ளது.  

பாதி கிணறு தாண்டிவிட்ட மகிழ்ச்சில் அடுத்து தமிழகம் பக்கம் எங்கள் திட்டத்தை திருப்பி உள்ளோம்.

எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழக மக்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.

2 comments:

  1. Nallathe Nadakkattum!

    Nallathe Nadakkum endra nambikkayil...............,

    nalla theervai ethir nokki..,,,

    ReplyDelete
  2. Pl share all the Project report on post and create an awareness about a solution, spread it by blog posts, email campaign and other media.

    If possible forward that to 5 member supreme court committee and let them to realize.

    ReplyDelete

Popular Posts