Jul 10, 2011

1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை

ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள் என்று தான் மெத்தபடித்த பலரும் நினைத்திருக்கின்றனர். ஆனால் நாகரீகத்தின் ஊற்று ஆதிவாசிகள் தான் என்பதை அவர்களுடன் நெருங்கி பழகும்போது தெரிந்துகொள்ளலாம்.


உலகின் முதல் மனிதர்களான அட்டப்பாடி ஆதிவாசிகளை குறித்து எழுத துவங்கியுள்ளேன். நான் ஏற்கனவே எழுதி பாதியில் நின்றிருக்கும் அறிவகம்(அறிபரிபூரணம்) கட்டுரைக்கு இந்த புத்தகம் முடிவுரையாக அமையலாம். பிரபஞ்சம் தோற்றம், மனித தோற்றம், வாழ்க்கைமுறை, கடவுள் என பல புலம்படாத ரகசியங்களுக்கு ஆதிவாசிகளிடம் விடைகண்டுகொண்டேன்.

காட்டில் வாழும் ஆதிவாசிகள் எவ்வளவு அரசியல் அறிவுக்கூர்மை உடையவர்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் இந்த பதிவு.

1947ல் நாங்கள் அடிமைகள் ஆனோம் என்று அட்டப்பாடி ஆதிவாசிகள் உறக்க சொன்னபோது நான் மட்டுமல்ல என்னோடு வந்த நிருபர் பட்டாளமே ஆடிப்போனது.

அட்டப்பாடி ஆதிவாசிகளின் கனத்த குரலை அப்படியே தருகிறேன்:

அறிவுக்கு எட்டிய நினைவு வரை நாங்கள் இந்த காட்டில் சுதந்திரமாக தான் வாழ்ந்துள்ளோம். ஆங்கிலேயர் கூட எங்களை ஆட்சி செய்ய முற்படவில்லை. மாறாக எங்களுக்கு உதவிகளை செய்தார்கள். எங்களிடம் இருந்து சட்டதிட்டங்களை கற்றார்கள். எங்கள் ஊர் மூப்பன்களை(ராசாக்கள்) சிறம்தாழ்ந்து வணங்கி விடைபெற்றார்கள். 

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. நீங்கள் எல்லாம் இனி இந்தியா என்ற நாட்டின் குடிமக்கள் என்ற பறைஓதினார்கள். எங்களுக்கு அப்போதைக்கு அது பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் வனபாதுகாப்பு ராணுவம் என்ற போர்வையில் எங்களை ஒடுக்க அடிக்க ஒடியன்கள் வரும்போது தான் திக்குதெரியமால் சிதறிப்போனோம்.

இன்று எங்கள் காடு எங்களிடம் இல்லை. எங்கள் வாழ்க்கைமுறை எங்களிடம் இல்லை. எங்களை நாகரிகம் அற்றவர்கள் என்ற முத்திரை குத்தி அடிமைத்தனத்தை நாகரிகமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

எங்களுக்கு தேவை காடு குறித்த கல்வி அறிவு, எங்களுக்கு தேவை வாழக்கையை செப்பனிடுவதற்கான கல்வி அறிவு. ஆனால் எங்கள் கல்விமுறையை பூண்டோடு அழிந்து இன்று புதிய மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். 
இன்று மழைபெய்யும், இங்கு விதைமுளைக்கும், இந்த செடி இந்த நோயுக்கு மருந்து, இந்த செடி உணவு, இந்த செடி விசம், இதுதான் கடவுள்நெறி, இதுதான் வாழ்க்கை என்றிருந்த எங்கள் வாழ்க்கைநெறியை முற்றிலும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மருதி, மருதன், வேலன், மத்தி, வள்ளி, விராலி, கூத்தாடி வெள்ளருக்கன், என்று தாவரங்களின் பெயர்களை சூடிமுடித்த எங்கள் குலத்தில் இன்று சோசப், சூசை, பீட்டர், அகமது, அன்வர், அசின் மீனா, நயன்தாரா என்ற பெயர்களின் குழந்தைகள் வளர்கின்றனர். 

நாங்கள் 1947 முதல் சுதந்திரம் பறிபோன அடிமைகளாகியுள்ளோம். எங்கள் இனம் தோன்றியது முதல் 1947 வரை சுதந்திர இனமாக தான் இருந்தது. இன்று எங்களை இந்தியர் ஆட்சிசெய்கிறார்களாம். எங்களுக்கு ராசா இந்தியர்கள் தானாம். நாங்கள் இந்தியர்களின் சட்டதிட்டத்தை மதித்து காடுகளுக்குள் செல்ல கூடாதாம். ரேசன் கடையில் அரிசியை வாங்கி தான் உண்ண வேண்டுமாம். காடுகளில் விவசாயம் செய்யகூடாதாம். விறகு முறித்தாலும் குற்றமாம்.

இயேசு உங்கள் பாவங்களை கழுவி ரட்சிக்க வருகிறார். அல்லா அழைக்கிறார் என்று தினமும் ஒரு குழு வருகிறது. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? இவர்களின் வாகனங்களை எல்லாம் காட்டுக்கள் அனுமதிக்கும் வனத்துறை உணவுபொருட்களை கொண்டு செல்லும் எங்கள் மாட்டுவண்டியை கூட அனுமதிப்பது இல்லை.

எங்கள் கிராமங்களில் நாங்கள் தன்னாட்சி நடத்துவதில் இந்தியர்களுக்கு அப்படி என்ன எதிர்ப்பு? யார் இந்த இந்தியார்கள்? 

இந்தியர்களால் எங்கள் மொழியை காப்பாற்ற முடியுமா? எங்கள் கலையை காப்பாற்ற முடியுமா? எங்கள் கல்வியை காப்பாற்ற முடியுமா? எங்கள் வாழ்க்கை முறையை காப்பாற்ற முடியுமா? எங்கள் மருத்துவத்தை காப்பாற்ற முடியுமா? எங்கள் ஆட்சிநெறிகளை காப்பாற்ற முடியுமா? எங்கள் கடவுள்நெறிகளை காப்பாற்ற முடியுமா? 

ஆதிவாசிகளின் இந்த உணர்ச்சிமிகு வாதத்தில் நியாயம் இருக்கிறது.  இந்த உணர்வு ஏன் தமிழனுக்கு இல்லை? 

7 comments:

  1. /இந்தியர்களால் எங்கள் மொழியை காப்பாற்ற முடியுமா? எங்கள் கலையை காப்பாற்ற முடியுமா? எங்கள் கல்வியை காப்பாற்ற முடியுமா? எங்கள் வாழ்க்கை முறையை காப்பாற்ற முடியுமா? எங்கள் மருத்துவத்தை காப்பாற்ற முடியுமா? எங்கள் ஆட்சிநெறிகளை காப்பாற்ற முடியுமா? எங்கள் கடவுள்நெறிகளை காப்பாற்ற முடியுமா?
    // எதுவும் அழிந்து போவதில்லை, ஆனால் மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்திற்கேற்ப மாறாதது எதுவும் நிலைப்பதில்லை. நாகரீகமும் அறிவியலும் வளர வளர மனிதனும் தன்னை கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். இன்னமும் நான் காட்டுக்குள்தான் கஷ்டப்படுவேன் வெளி உலகத்திற்கு வந்து அங்கு நடக்கும் சம்பவங்களையும் தெரிந்து கொள்ளமாட்டேன், கற்றுக் கொள்ள மாட்டேன் என்றால் அறிவு வளர்ச்சி எப்படி ஏற்படும்?

    ReplyDelete
  2. திரு ராபின் உங்களை போல தான் எனக்கும் தோன்றியது உலகம்போற போக்கில் மாறிதானே ஆகவேண்டும் என்று. ஆனால் உண்மை அது அல்ல.

    உதாரணத்திற்கு இன்று எல்லோரும் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லொரும் கணிணி பொறியாளர் ஆகிவிட்டால் விவசாயத்தை யார் செய்வது? எல்லோரும் நகரவாசியாகிவிட்டால் கிராமங்களை காடுகளை பராமறிப்பது யார்? சாக்கடையை சுத்தம் செய்வது முதல்கொண்டு வயலில களை பறிப்பது வரை மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்களை பயன்படுத்திவிட முடியாது. இந்த வேலைகளை எல்லாம் யார் செய்வார்கள்.

    ஆதிவாசிகள் பிரசவம் முதல் கொடிய ரத்த புற்றுநோய், எயிட்சு வரை மருத்துவம் பார்த்து குணமடைய செய்கிறார்கள். இந்த மருத்துவத்தை யார் காப்பது? மழை பெய்வது, நிலநடுக்கம் வருவது, காட்டுவிலங்குகளின் அசைவு, மரங்களின் தன்மை, தாவர எரிபொருள்(பெட்ரோல்) என அத்தனையும் கற்று வைத்திருக்கிறார்கள்.

    மந்திரம், தந்திரம், எந்திரம் என்ற மூன்று கலைகளுக்குள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கைக்கு தேவையான அத்தனைக்கும் தீர்வை வைத்திருக்கிறார்கள்.

    நமது நவீன கண்டுபிடிப்புகளில் பலதிலும் இல்லாததை அவர்கள் பலநூறு ஆணடுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

    உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

    ரத்தசூரி என்ற ஒரு தாவர வேரை காண்பித்தார்கள். அந்த வேரின் அருகே எங்கள் காரின் சாவியை கொண்டு சென்றோம் சாவி தெரித்து கீழே விழுந்துவிட்டது. இரும்பு, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள் அந்த வேரின் அருகில் செல்வது இல்லை. அணுவை பிளக்கும் ஆற்றல் ரத்தசூரி வேருக்கு உண்டு என்று ஒரு ஆதிவாசி செய்து காட்டியபோது ஐன்சுடீனை கற்ற நான் வாயடைத்து போனேன்.

    இந்த அறிவு அழிவது ஆதிவாசிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் இழப்பு தான்.

    நாட்டுவாசிகள் மட்டுமல்ல நம்மோடு காட்டுவாசிகளும் சகமனிதர்களாய் வாழ்வது தான் இயற்கைக்கு நல்லது.

    ஆங்கில மொழியோடு ஆதிவாசி மொழிகளும் வாழ்வது தான் எக்காலத்துக்கும் நல்லது. மொழிகள் எல்லாம் அழிந்து ஆங்கில மொழிமட்டும் இருந்தால், மனிதவாழ்க்கை போரடித்துபோகும். எல்லோரும் பணக்காரராகிவிட்டால் மதம்பிடித்து ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு மடிவார்களே தவிர இயற்கை சமநிலை இருக்காது.

    ReplyDelete
  3. //தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை//

    உங்களுடைய இந்த பதிவை விட அதிகமானோர் படித்தது தொப்பிதொப்பி, சவுக்கு சம்பந்தமான பதிவுகளை தான். இத்துணைக்கும் நீங்கள் மேலே குறிப்பிட்ட பதிவை எழுதியதில் இருந்து முகப்பில் வைத்து விளம்பரம் செய்துவருகிறீர்கள் ஆனால் அந்த தலைப்பை பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது இந்த பதிவை படிப்பது வீண் என்று.

    உங்கள் உளறலை இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள். பிரிவினையை உருவாக்கி தீவிரவாதிகளிடம் கையூட்டு வாங்க நினைக்காதீர்கள். எங்கள் ஒற்றுமையை எந்த தீவிராவாதிகளாலும், உங்களைப்போன்ற பணத்துக்காக எழுதும் எச்சைகளும் பிரித்துவிட முடியாது.

    ReplyDelete
  4. முதல் பின்னூட்டம் மட்டுமே என்னுடையது. மற்றதெல்லாம் ஏதோ ஒரு புறம்போக்குடையது.

    ReplyDelete
  5. //உதாரணத்திற்கு இன்று எல்லோரும் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லொரும் கணிணி பொறியாளர் ஆகிவிட்டால் விவசாயத்தை யார் செய்வது? எல்லோரும் நகரவாசியாகிவிட்டால் கிராமங்களை காடுகளை பராமறிப்பது யார்? சாக்கடையை சுத்தம் செய்வது முதல்கொண்டு வயலில களை பறிப்பது வரை மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்களை பயன்படுத்திவிட முடியாது. இந்த வேலைகளை எல்லாம் யார் செய்வார்கள்.// நீங்கள் ராஜாஜியின் கொள்கையைப் பின்பற்றுவது போலத் தெரிகிறது. அவரவர் திறமைக்கு ஏற்ற வேலைகளை செய்வதே சிறந்தது. நம்முடைய வசதிக்காக ஒரு கூட்டம் மக்கள் அப்படியே கீழ் நிலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

    //ரத்தசூரி என்ற ஒரு தாவர வேரை காண்பித்தார்கள். அந்த வேரின் அருகே எங்கள் காரின் சாவியை கொண்டு சென்றோம் சாவி தெரித்து கீழே விழுந்துவிட்டது. இரும்பு, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள் அந்த வேரின் அருகில் செல்வது இல்லை. அணுவை பிளக்கும் ஆற்றல் ரத்தசூரி வேருக்கு உண்டு என்று ஒரு ஆதிவாசி செய்து காட்டியபோது ஐன்சுடீனை கற்ற நான் வாயடைத்து போனேன். // ஆதிவாசிகளுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லவில்லை. அவர்கள் அனுபவத்தால் அறிந்து கொண்டதை நாமும் எடுத்துக்கொள்ளலாம். அதற்காக ஆதிவாசிகள் காடுகளுக்குள்லேயே வாழட்டும் என்று நினைப்பது மனிதாபிமானமாகாது.

    ReplyDelete
  6. ada maanaga mandayanugala... unna unoda sontha orula valakudathunu soldrathu gnayamada?

    ReplyDelete
  7. தனி நாடு வேண்டுமென்கிறீர்கள். நாடில்லாது மக்கள் சொல்லொனாத்துன்பம் அனுபவிக்க, இன்றைக்கு ஈழத் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஒரு பொதுக் கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். சரி. உங்களது கோரிக்கைக்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமெங்கிறீர்கள். சரி. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள தமிழனை உசுப்பேற்றி பிரிவினை கிளப்பி அவன் ஒரு இந்தியன் என்கிற உணர்வே இல்லாது செய்ய பல சதி செய்கிறீர்களே.. இது நியாயமா..? நாட்டின் பெருமையை அவன் உணர வேண்டாமா. நாடிழந்த உங்களது கதை அவனுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டாமா.. அண்ட வந்த வீட்டிலே அண்ணன் தம்பியரிடையே கலகமூட்டி ஆதாயம் காண்பது முறையா..?எல்லா பிரிவினைகளையும் மீறி நாட்டுப் பற்றைக் காட்டிய அப்துல் கலாமை ஒரு துரோகியாக சித்தரிப்பது அடுக்குமா..? வைகோ வாய் கிழிய பேசலாம் ஆனால் மக்களது ஆதரவு அவருக்கு கிடைக்காது. அவர் ஒரு துரோகி..இந்தியத் தலைவனை அவனது மண்ணிலேயே சாய்த்த ஒரு இயக்கத்திற்கு துணை போகும் ஒரு தீவிர வாதியே ஒழிய மணிதனே அல்ல..

    இந்திய மண்ணில் மண்ணின் தலைவனைச் சாய்த்தது மாபெரும் மண்ணிக்க முடியாத குற்றம். அதுவும் தமிழ்நாட்டில் சாய்த்தது அதைவிடப் பெரும் குற்றம். உங்களால் ராச பக்சேவை நெருங்க முடியவில்லை மாறாக எங்களது நாட்டின் அமைதியையும் ஒவ்வொரு தமிழனில் ஒரு குற்ற உணர்வையும் உண்டாக்கி விட்டீர்கள். இதனை சரித்திரம் மண்ணிக்காது..இன்னமும் அதே தொணியில்தான் பிரிவினை வாதம் பேசிக்கொண்டிருகிறீர்கள்..இது அடுக்காது..

    ReplyDelete

Popular Posts