Aug 18, 2011

வைகோ, அப்துல்கலாம் தமிழரின் தலைஎழுத்து

ஒரு புதிய பத்திரிக்கையின் துவக்க விழாவில் பேச அழைத்திருந்தார்கள். கல்லூரி மாணவ&மாணவிகளுடனான கலந்துரையாடல் நடந்தது. பல விசயங்களை சுவாரசியமாக அலசினார்கள். அரசியல் குறித்து தெளிவான கருத்துக்களை பேசினார்கள். விவதத்தின் இடையே வைகோ பற்றிய பேச்சு வந்தது. 

வைகோ ஒரு துரோகி, ஈழத்தை எதிர்த்த, போடா சட்டத்தில் சிறையில் அடைத்த செயலலிதாவுடன் கூட்டனி வைத்துக்கொண்டதுடன் வைகோ மீதிருந்த மதிப்பே போய்விட்டது எனறார் அந்த பத்திரிக்கை ஆசிரியர். அதை அனைவரும் அமோதித்தார்கள்.

நான் குறுக்கிட்டேன். வைகோ செயலிதாவுடன் கூட்டணி வைத்தது காலத்தின் கட்டாயம். கருணாநிதி என்ற நயவஞ்சக நண்பனுடன் இருப்பதை விட எதிரி செயலலிதாவே மேல் என்பது தான் வைகோவின் முடிவு. மேலும் செயலலிதாவுடனான 5 ஆண்டு கூட்டணியில் ஈழம் குறித்த கொள்கையை செயலலிதா தான் மாற்றிக் கொண்டாரே தவிர வைகோ மாறவில்லை. ஈழத்தை எதிர்த்த செயலலிதா வாயில் இருந்தே தனி ஈழம் அமைத்தே தீருவோம் என்ற தீர்க்கமான சொல்லை வரவைத்தவர் வைகோ. இது மிகப்பெரிய சாதனை. 

செயலலிதா & வைகோ கூட்டணியில் செயலலிதாவுக்காக இம்மி அளவும் வைகோ ஈழம் உட்பட கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக செயலலிதாவை திருத்தியிருக்கிறார். கருணாநிதியால் முடியாததை வைகோ சாதித்திருக்கிறார் என்றேன். ஒரு கனம் சித்தித்த அனைவரும் ஆமாம் நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு சரிதான் என்றார்கள்.

அடுத்து அப்துல்கலாம் பற்றிய விவாதம் வந்தது. இப்போதைய தலைவர்களில் தமிழர்களுக்காக சுயநலம் இன்றி உழைக்கும் ஒரே தலைவர் அப்துல்கலாம் தான் என்றனர் மாணவியர். அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

அப்துல்கலாம் எதனால் பிரபலமானார் ?

கனவுகாணுங்கள் கனவு காணுங்கள் என்று பள்ளிகளில் சென்று குழந்தைகளுக்கு உத்வேகம் கொடுத்தார். இளைஞர்களை சாதிக்க தன்னப்பிக்கை ஊட்டினார் என்றார்கள்.

குழந்தைகளுக்காக அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட அப்துல்கலாம். தன் வீட்டில் இருந்து 7 மைல் தொலைவில் 30 ஆயிரம் குழந்தைகள் இறந்ததை பார்த்து கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன் என்றேன். புறியாமல் விழித்தார்கள்.

ஈழம் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருக்கும் போது, அங்குள்ள குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும். அதற்காக குரல் கொடுங்ங்கள். உங்கள் தலைமையில் பல இளைஞர்கள் அணிவகுக்க தாயராக உள்ளனர். நீங்கள் ஒரு நாட்டின் குடியரசு தலைவராக இருந்துள்ளீர்கள், சர்வதேச தலைவர்களை தெரியும். இந்தியா முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல், ஏக்களை தெரியும், கட்சி தலைவர்களை தெரியும், அவர்களை அழைத்து பேசுங்கள். குழந்தைகளை, பெண்களை மீட்கும் வரையாவது போரை நிருத்த நிர்பந்தியுங்கள். நீங்கள் குரல்கொடுத்தால் நிச்சயம் இந்தியா முழுவதும் எழுர்ச்சி வரும் என்று பல அமைப்புகள் அப்துல்கலாமை நாடின. ஆனால் இன்று வரை ஈழக்குழந்தைகளுக்காக வாய் திறக்கவில்லை அப்துல்கலாம். அவரா குழந்தைகளை சுயநலமின்றி நேசிக்கிறார்.
இந்திய குழந்தைகள் தான் குழந்தைகளா? 5 மைலுக்கு அப்பால் ஈழத்தில் இருப்பது குழந்தைகள் இல்லை¬யா? அவர்கள் தீவிரவாத குழந்தைகளா? எதற்காக அப்துல்கலாம் ஓடி ஒளிந்தார்? 

ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கே ஈழக்குழந்தைகளின் வேதனை தெரியாவில்லை என்றால் வடஇந்தியாவில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்?   

எல்லோரும் தங்களுக்கு என ஒரு சுயநல வட்டத்தை போட்டுக்கொண்டு பிரபலத்துக்காக அடும் சுயநலவாதிகள் தானே தவிர யாரும் அப்பழுக்கற்றவர்கள் அல்ல என்றேன்.

அத்தனை மாணவ& மாணவியரும் ஆழமாகவே சிந்தித்தனர். இத்தனை நாள் கலாம் நல்லவர் என்றல்லவா எண்ணியிருந்தோம் என்று வெட்கப்பட்டனர்.

அப்துல்கலாம் குறித்து நான் மனதுல் உயர்ந்த எண்ணங்களை வைத்திருந்தேன். ஈழப்போரில் குழந்தைகளை மீட்க குரல்கொடுங்கள் என்று கலாமிடம் நேரடியாக கேட்டேன், பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்தார். அன்று தூக்கி எறிந்தேன் அப்துல்காலம் ஒரு சுயநலமற்ற தலைவர் என்ற எண்ணங்களை. இன்று அத்தனை மாணவ&மாணவிகளும் அதை செய்தார்கள். தங்கள் நண்பர்களுக்குள்ளும் இதை பரப்ப துவங்கிவிட்டார்கள்.

கூட்டம் முடிந்ததும் மாலையில் அந்த பத்திரிக்கை ஆசிரியர் அழைத்தார்.

எங்கள் எண்ணங்களில் இருந்த 2 விசயங்களை தலைகீழாக மாற்றிவிட்டீர்கள் என்றார்.

1. வைகோ குறித்த தவறான எண்ணம், 
2. அப்துல்கலாம் குறித்த உயர்வான எண்ணம்.  

4 comments:

 1. APJ so far met only convent students only NOT goverment tamil students

  ReplyDelete
 2. superb one sir... i also dont like apj from the beginning.. he is a selfish man

  ReplyDelete
 3. APJ is 90% bad guy. but vaiko is not 100% good. he is 50 - 50 according to me. still cant trust him.- Michael pravin

  ReplyDelete
 4. தனி நாடு வேண்டுமென்கிறீர்கள். நாடில்லாது மக்கள் சொல்லொனாத்துன்பம் அனுபவிக்க, இன்றைக்கு ஈழத் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஒரு பொதுக் கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். சரி. உங்களது கோரிக்கைக்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமெங்கிறீர்கள். சரி. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள தமிழனை உசுப்பேற்றி பிரிவினை கிளப்பி அவன் ஒரு இந்தியன் என்கிற உணர்வே இல்லாது செய்ய பல சதி செய்கிறீர்களே.. இது நியாயமா..? நாட்டின் பெருமையை அவன் உணர வேண்டாமா. நாடிழந்த உங்களது கதை அவனுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டாமா.. அண்ட வந்த வீட்டிலே அண்ணன் தம்பியரிடையே கலகமூட்டி ஆதாயம் காண்பது முறையா..?எல்லா பிரிவினைகளையும் மீறி நாட்டுப் பற்றைக் காட்டிய அப்துல் கலாமை ஒரு துரோகியாக சித்தரிப்பது அடுக்குமா..? வைகோ வாய் கிழிய பேசலாம் ஆனால் மக்களது ஆதரவு அவருக்கு கிடைக்காது. அவர் ஒரு துரோகி..இந்தியத் தலைவனை அவனது மண்ணிலேயே சாய்த்த ஒரு இயக்கத்திற்கு துணை போகும் ஒரு தீவிர வாதியே ஒழிய மணிதனே அல்ல..

  இந்திய மண்ணில் மண்ணின் தலைவனைச் சாய்த்தது மாபெரும் மண்ணிக்க முடியாத குற்றம். அதுவும் தமிழ்நாட்டில் சாய்த்தது அதைவிடப் பெரும் குற்றம். உங்களால் ராச பக்சேவை நெருங்க முடியவில்லை மாறாக எங்களது நாட்டின் அமைதியையும் ஒவ்வொரு தமிழனில் ஒரு குற்ற உணர்வையும் உண்டாக்கி விட்டீர்கள். இதனை சரித்திரம் மண்ணிக்காது..இன்னமும் அதே தொணியில்தான் பிரிவினை வாதம் பேசிக்கொண்டிருகிறீர்கள்..இது அடுக்காது..

  ReplyDelete

Popular Posts