Jun 16, 2011

புற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை

மனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற்கும் அடிப்படை மூலிகை மருத்துவம் தான்.  
பல்லாண்டு காலமாக அட்டப்பாடியில் ஆதிவாசிகள் ஒற்றை மூலிகை வைத்தியம் செய்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி, வெள்ளிங்கிரி, மல்லீசுவரன், ஆட்டுமுடி, சஞ்சீவினி ஆகிய மலைகளின் நடுவே அட்டப்பாடியும், சைலன் வேலி தேசிய பூங்காவும் அமைந்துள்ளது. இங்குள்ள பவானி, சிறுவாணி ஆற்றுபடுகைகளிலும், மலைகளிலும் பல அறிய மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகைகளை பாரம்பரிய வைத்திய மந்திரங்கள் மூலம் ஆதிவாசிகள் கண்டறிகின்றனர். 


மல்லன்(சிவன்) மல்லி (பார்வாதி) இவர்கள் தான் ஒற்றை மூலிகை வைத்தியத்தின் முதல் தலைமுறை. இவர்கள் இறைவனாக போற்றபட்டவர்கள். இவர்களிடம் இருந்து சீங்கப்பாட்டன் மருத்துவம் கற்றுக்கொண்டார். சீங்கப்பாட்டன் சஞ்சீவினி முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர். சீங்கப்பாட்டனுக்கு பின்னர் வந்த பல தலைமுறையினரின் பெயர்கள் அறிய கிடைக்கவில்லை.

சீங்கப்பாட்டன் பரம்பரையில் அறியப்பட்டவர்கள் வெள்ளப்பாட்டன் முதலான தலை முறையினர் மட்டுமே. கக்கி மூப்பன், பட்டி மூப்பன், சின்ன கக்கி மூப்பன், இவரது மனைவி வள்ளியம்மாள் தொடங்கி தற்போது வள்ளியம்மாளின் மகன் ரவீந்திரன் என்கிற சீங்கப்பாட்டன் வரை ஒற்றைமூலிகை வைத்தியம் செய்கிறார்கள். 
ஒற்றை மூலிகை வைத்தியம் இன்று பிரபலமாக பேசப்படுவதற்கு காரணம் வைத்தியர் வள்ளியம்மாள். இந்தியாவின் பிரபலங்களுக்கு இவர் அளித்த புற்று நோய் வைத்தியம் தான் இவரை உலகறியச் செய்தது. வள்ளியம்மாளின் வைத்தியமுறையை பாராட்டி இவருக்கு பாரம்பரிய வைத்தியரத்னா விருதை அரசு வழங்கியது.
  தற்போது வள்ளியம்மாள் நினைவாக வள்ளியம்மாள் குருகுலம் என்ற மருத்துவ மனையை கட்டியுள்ளனர். மல்லீசுவரன் மலைமுகடின் தரிசனம் கிடைக்கும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை மட்டுமே தெய்வமாக வணங்கி இங்கிருந்து மருந்து கொடுக்கப்படுகிறது.

பலர் வியாபாரத்துக்காக நகரப்பகுதிகளில் ஒற்றை மூலிகை வைத்தியம் செய்கின்றனர். இதனால் ஆதிவாசிகளின் பாரம்பரிய வைத்தியத்திற்கே உள்ள பக்குவம் போய்விடும் எனவே தான் அடர்ந்த வனமானாலும் மல்லீசுவரன் மலையிலேயே மருத்துமனை அமைத்துள்ளனர்.
பல்வேறு வகை புற்றுநோய், வாத நோய்கள், சர்க்கரை, தோல்நோய்கள், ரத்த அழுத்தம், ஆசுத்துமா உட்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஒற்றை மூலிகையில் தீர்வு உள்ளது. வள்ளியம்மாள் ரவீந்திரன் ஆகியோரின் வைத்தியத்தில் ரத்த புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குணமாடைந்துள்ளனர்.

வள்ளியம்மாள் ஒற்றை மூலிகை வைத்தியம் குறித்து தமிழ், மலையாளம், ஆங்கில பத்திரிக்கைகளில் சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சன் தொலைகாட்சியின் நிசம் நிகழ்ச்சியில் வைத்தியர் ரவீந்திரனின் ஒற்றை மூலிகை சிகிச்சை முறைகள் குறித்த நிகழ்ச்சி 12.05.2011 அன்று இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பானது. 
 ஒற்றை மூலிகை குறித்த சன் தொலைகாட்சியின் நிசம் நிகழ்ச்சியை www.arivakam.in  என்ற இணையதளங்களில் பார்வையிடலாம்.

5 comments:

 1. ஆச்சரியம். அவஸ்யமான பகிர்வு.

  புகைப்படத்தில் இருப்பது நீங்களா?

  ReplyDelete
 2. படத்தில் இருப்பது நான் அல்ல. என் சக தோழி திலகவதி. நன்றி.

  ReplyDelete
 3. சட்டை, பேண்ட்டு, கைல வலையல் இல்லை, நெத்தில பொட்டு இல்லை .... ம்ம்ம்ம்.................. ரை.. ரைட்.....

  ReplyDelete
 4. வாருங்கள் திரு தொப்பி தொப்பி. உங்களுக்காக தான் அடுத்த பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. பணி நெருக்கடி காரணமாக முன்னைபோல பதிவு எழுத முடியவில்லை. நன்றி.

  ReplyDelete
 5. உடனே எனக்கு இந்த முகவரி தேவை 22வயதுள்ள பெண்ணை காப்பாற்ற யாரேனும் உதவுங்கள் மூளையில் இந்த கட்டி உள்ளது

  ReplyDelete

Popular Posts